Sunday, August 19, 2018

உடன் இருப்பவள் நீயே (Reeti Gowlai)


ரீதி கௌள

உடன் இருப்பவள் நீயே, என் உள்ளொளிர்பவள் நீயே

சிவ மனோண்மணியே
சுப சிந்தாமணியே

சிவ சங்கரியே, சுப நாரணியே, பவ தாரணியே,  புவனேஸ்வரியே, அன்பரைப் பிரியா விடைத்தாய் நீயே, துன்பமிலாத் துரிய வாழ்வளிப்பாயே.

பார்வையாலேயே என் பவம் தீர்த்திடுவாயே, நலம் சேர்த்திடுவாயே,
(என்னை) உன் வழி நடத்தி, உன்னடி
சேர்ப்பாயே

சிவம் சுபம்.

No comments:

Post a Comment