Sunday, August 19, 2018

ஒரு பாமரனின் பரமாச்சார்ய பதிகம் (Mahaperiyavaa Dasakam)



 ஒரு பாமரனின் பரமாச்சார்ய பதிகம்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

1. அனுஷத் துதித்த தெய்வம் ஆதிரையன் மறுவடிவம்
அவனி சிறக்க வந்த அனுக்ரஹ மகா தேவம்
மறை பொருள் உரைக்க வந்த மானுட  சிவம்
குறை விலக்கி நிறை வாழ்வு அருள்கின்ற தெய்வம் 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

2. காவி பூண்டு வந்த கயிலாய தெய்வம்.
கால்  பதித்து புவி அளந்த காருண்ய தெய்வம்.
சர்வக்ஞ்ய சங்கரர் வழி வந்த தெய்வம்
ஷண்மத சனாதன சன்மார்க்க தெய்வம் 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

3. ஆகம சாஸ்த்ர புராண நிபுணம்
அகயிருள் நீக்கும் ஆதவ கிரணம்.
தர்ம நெறி வழுவா த்யாகச்  சிகரம்
கர்ம பக்தி ஞான ப்ரவாக சாகரம்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

4. கருத்திலே கலந்து நிற்கும் காமகோடி தெய்வம்.
விருப்பு வெறுப்பற்ற வேதாந்த தெய்வம் 
தவறே செய்தாலும் தயை புரியும் தெய்வம்.
அவம் போக்கி சுபம் அருளும் ஆனந்த தெய்வம்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

5. ஆகம வேதங்களை பாலித்த தெய்வம் .
ஆழ்வார் நாயன்மாரை இணைத்திட்ட தெய்வம்
தானே அதுவான தன்னிகரில் தெய்வம்
"தான்" அகன்றோர் உள்ளத்தே  தங்கிடும்  தெய்வம்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

6. பிடி அரிசி திட்ட பெருங்கருணை தெய்வம்.
வறியவர்  பசி தீர்க்கும் அன்னபூர்ண தெய்வம்,
நாதியற்ற வறியோரும் நற்கதி பெற்றுய்ய
நல்லடக்க மரியாதை பரிந்துரைத்த தெய்வம்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

7. த்வைதாத்வைத சேது ராம  தெய்வம்
அந்நிய மதத்தோரும் ஆச்ரயிக்கும் தெய்வம்
பாமரர்க்கும் பண்டிதர்க்கும் பரிந்தருளும் தெய்வம்
பரத கண்டம்  கண்ட பரமாச்சார்ய தெய்வம்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

8. அன்னை காமாக்ஷியாய்  அருள் பொழி  தெய்வம்
அய்யன் ஏகனாய் வழி நடத்தும் தெய்வம்
குமரக் கோட்ட  (குருகுஹ) சுவாமிநாத தெய்வம் 
அத்தி வரதனாய் அகமணைக்கும் தெய்வம் 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

9. ஜெய விஜயேந்திரரை அளித்திட்ட தெய்வம்
ஜெகமெலாம் புகழும் ஜெகதகுருவாம் தெய்வம்
நாராயண ஸ்ம்ருதி என்று ஒப்பமிடும் தெய்வம்
பதமலர் பிடித்தோர்க்கு  கரமருளும் தெய்வம் 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

10. நடமாடும் தெய்வம் நமசிவாய தெய்வம்
ப்ரதோஷ சேவகர் வலம் வந்த தெய்வம் 
சிவ-சுபத் தாயின் மனம் கவர்ந்த தெய்வம்
ஓரிக்கையில் வாழுகின்ற தெய்வமதே தெய்வம் 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர

சிவம் சுபம்

No comments:

Post a Comment