Sunday, August 19, 2018

பயம் போக்கும் மருந்து



பயம் போக்கும் மருந்து
பலம் சேர்க்கும் மருந்து
நரசிம்ம மருந்து, அதை
தினம் தினம் அருந்து.

அரக்கர்க்கு ஆலம்.
அன்பருக்கு அமுதம்.
மனத்துள் லயிக்கும்.
மரணத்தை வெல்லும்

காலம் தாழ்த்தாது
கர்பத்தில் புகாது
தூணுள் ஒளிர்ந்தது
தூயனைக் காத்தது.

அவசரத் திருக்கோலம்.
ஜ்வாலா முகம்  சிம்மம்
மேனி புருக்ஷோத்தமம்
அகோபிலத்தே வாஸம்.

கருடனின்றி பறந்தான்
ஆயுதமின்றி விரைந்தான்.
(நகத்தால்) கிள்ளிக் களைந்தான்.
நல்லோனைக் காத்தான்

சக்கரத்தில் அமர்ந்தான்
சங்கடம் களை யோகன்.
சுதர்சனத்துறை அய்யன்
சுமங்கள நரசிம்மன்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment