Sunday, August 19, 2018

குருவே சரணம் குருவே சரணம்

ஓம் 

குருவே சரணம் குருவே சரணம் 
பதமே தரணும் குருவே  சரணம்

மன இருளதனை நீக்கிட வேணும்
நினதருளைப் பெருக்கிட வேண்டும்
கனவிலும் உன்னை மறவா வரமும், உன்
கழல் இணை பிரியா திடமும் வேண்டும்

செல்லும் வழியது காட்டிட வேண்டும்,  என்
சொல்லும் செயலும் சிறந்திட வேண்டும்
உன்னில் இறையைக் கண்டிட வேண்டும்
உன்னுள் கலந்து சுகித்திட வேண்டும்

பேதமில்லா நெறியதனை
போதித்தென்னை ஆண்டிட வேண்டும்
சத் சங்கத்தில் லயித்திட வேண்டும்
சாகாதென்றும் வாழ்ந்திட வேண்டும்

சிவம் சுபம்

No comments:

Post a Comment