Sunday, August 19, 2018

பசித்திருக்கேன் அம்மா



பசித்திருக்கேன் அம்மா.. உன் அருளமுதை அள்ளிப் பருக

விழித்திருக்கேன் அம்மா, உன் பதமலர் தரிசனம் பெற்று உய்ய..

ஆயிரம் சுற்றும் எனைச் சூழந்திருந்தாலும், தனித்திருக்கேன் அம்மா, உன் மெய் அடியாருடன் எனைக் கூட்டிடுவாய் எனத் திடச் சித்தமுடன்..... அங்கயற் கண்ணியே, ஆதிசிவ சக்தி உமையே...

என் பசியதைத் தீர்த்து, திரை விலக்கி ஞான விளக்கமளித்து, உன்னுள்ளே ஒன்றி ஏகாந்தமாய் நிலைத்திட அருள்வாய், இச்சை க்ரியை ஞான பராசக்தி தாயே

சிவம் சுபம்

No comments:

Post a Comment