Monday, May 22, 2017

பதினாறும் பெற்று பெறு வாழ்வு (Thillang)


 திலங்

பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழலாம், பதியின் கரம் பிடித்து, மதுரை யம்பதி அமர்ந்து, பதி நாலு லோகமும் அளும் சதியாள்,
மங்கையற்கரசி, மனோன்மணி, கயற்கண்ணி கழலிணை தொழுதக்கால் (பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழலாம்).

சோம சுந்தரா - சொக்க நாதா - ஆடலில் வல்லானே - அருள் புரி ஈசனே

கால்மாறி ஆடிடும் வெள்ளி யம்பலேசனே, கல்யாண சுந்தரா, கயற்கண்ணி நாதா

சங்கத் தமிழ் இறைவனே, சந்தத் தமிழ் புலவனே, திரு நீற்று மேனியனே, திருமணக் கோலனே, ஆலவாய் அழகனே, ஆதி யந்தம் இல்லானே,n கல்யானைக்கும் கரும்பு ஊட்டிய வள்ளலே

சிவம் சுபம்

No comments:

Post a Comment