Monday, May 22, 2017

என்ன கரிசனம் நம் (Sahaana)

சஹான

என்ன கரிசனம் நம் அன்னைக்கு,
ஆனந்த தரிசனம் தருகிறாள் உலகிற்கு

 (அன்னை) சற்றே விழி மலர்ந்தால் போதும்,
நல் வழி பிறக்கும் அனைத் துலகியிற்கும்

வேதாகம ஸாஸ்த்ர சாரதை அவளே - சங்-கீத நாத ஒலி வடிவினளே, நல்
இச்சை க்ரியை ஞான பிக்ஷை இடுவளே,  மன சஞ்சல மின்றி வாழ அருள்வாளே

ச்ருங்க கிரி வாழ் மலை மகளே,
அலை பாயா மனமருள் திரு மகளே,
திட ஞானமருள் கலை மகளே, நின்
திருவடி தந்தாள் ஸ்ரீ புரத்தாளே.

சிவம் சுபம்

No comments:

Post a Comment