உ
audio1
audio2
விருத்தம் - திரு அருட் பா
என்னுயிர் நீ, என்னுயிர்க்கோர் உயிரும் நீ, என் இன்னுயிர்க்குத் துணைவன் நீ, என்னை ஈன்ற அன்னை நீ, என்னுடைய அப்பன் நீ, என் அரும் பொருள் நீ, என் இதயத் தன்பு நீ, என் நன்னெறி நீ, எனக்குறிய உறவு நீ, என் நற்குரு நீ, எனைக் கலந்த நட்பு நீ, என் தன்னுடைய வாழ்வு நீ, என்னைக் காக்கும் தலைவன் நீ, கண் மூன்று தழைத்த தேவே
- வள்ளல் பெருமான்
சிவன் வேறு இவர் வேறு அல்ல, மஹாதேவனே மஹா பெரியவரானார்
சடை மறைத்து மறை தாங்கி வந்தார், மதியொளியாம் ஸ்ரீ சந்திர சேகரனார்
புலித்தோல் அகற்றி காஷாயம் புனைந்தார், சூலத்தை விடுத்து தண்டம் ஏந்தினார், நடமாடும் தெய்வம் நம்மிடை நடந்தார், ஆலடியாரே காமகோடி அமர்ந்தார்
மௌனமாய் அன்று அரு மறை ஈந்தவர், திருவாய் மலர்ந்தின்று திருவருள் பொழிந்தார், அங்கையில் கனிபோல் ஆறாம் வேதம் உறைத்தார், அம்மையப்பனாய் அன்பர் உள்ளம் நிறைந்தார்
அஞ்சும் எட்டும் ஒன்றென்றார், அனைவரும் இறைக் குடும்ப மென்றார், தானே அதுவான தவவேந்தர், நம் பரமாச்சார்யராம் பரமேஸ்வரர்.
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:
Post a Comment