Monday, May 22, 2017

தூணைத் தாயாய் கொண்டவா போற்றி



தூணைத் தாயாய் கொண்டவா  போற்றி 
தூயவன் வேண்ட தோன்றினை  போற்றி

ஸ்வாதியில் உதித்த முத்தே போற்றி
ப்ரதோஷக் காலப் பேரருளே போற்றி

அரக்கனை(யும் ) மடி வைத்த ஆண்டவா போற்றி, அவன் சந்ததி காத்த சத்வமே போற்றி
அஹோபிலத் துறை அரியே போற்றி, (அரனாம்)
சரபனுள் கலந்த நரஹரியே போற்றி

பிஞ்சுக் குழந்தை மனத்தாய் போற்றி
செஞ்சு லட்சுமி நாதா போற்றி
கானகத்தில் வாழ் நவமே போற்றி
பானகத்திற்கிரங்கும் பரமே  போற்றி

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


No comments:

Post a Comment