Monday, May 22, 2017

Chithra Thiruvizha Special



சித்திரைத் திருவிழா  ஸ்பெஷல் 1

"மதுரைத் தல மாண்பு"

திரு ஆலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர், செல்வம் ஓங்கும்.

திரு ஆலவாய் என்று நினைத்துவரே பொருள் அடைவர்.

தேவ தேவன் திரு ஆலவாய் அதனைக் கண்டவரே
இன்ப நலம் சேர்வர்  -

என்றும்
திரு ஆலவாயிடத்து வதிந்தவரே
பரவீடு சேர்வர் அன்றே.

-- ஸ்ரீ பரஞ்ஜோதி முனிவர்

சிவம் சுபம்

audio1
audio2




சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் - 2

மதுரை மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ்

பெருந் தேனிறைக்கும் நறை கூந்தற் பிடியே வருக

முழு ஞான பெருக்கே வருக

பிறை மௌலிப் பெம்மான் முக்கட் சுடர்க்கிடு
நல் விருந்தே வருக

மும்முதற்க்கும் வித்தே வருக
வித்தின்றி விளைந்த பரமானந்த்தின்
விளைவே வருக

பழ மறையின் குறுந்தே வருக
அருள் பழுத்த கொம்பே வருக

திருக்கடைக்கண் கொழித்த கருணைப்
பெரு வெள்ளம் குடைவார் பிறவிப்  பெரும் பிணிக்கோர் மருந்தே வருக

பசுங் குதலை மழலைக் கிளியே வருகவே
மலையத்துவசன் பெற்ற பெரு வாழ்வே
வருக வருகவே

- ஸ்ரீ குமரகுருபரர்

சிவம் சுபம்

சித்திரைத் திருவிழா  ஸ்பெஷல்  - 3

 திருவாசகத் தேனமுதம்

சதுரை மறந்து அறிமால் கொள்வர்
சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்துக் குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி கேடு கண்டீர்,  மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே

(சதுரை - ஆற்றலை; அறிமால் - ஞான மையல்;  குடிகேடு - பிறவிப் பிணி ஒழியும்;
கழுக்கடை - ஈட்டி திரிசூலம்; ஓட மறித்திடுமே  - ஒட்டி மீண்டும் வராது தடுக்கும்)

காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்,
கருது அரிய ஞாலம் உண்டானோடு நான்முகன்
வானவர் நண் அரிய ஆலம் உண்டான் எங்கள்
பாண்டிப் பிரான் தன அடியவர்க்கு மூலப்
பண்டாரம் வழங்குகின்றான், வந்து முந்துமினே

(காலம் உண்டாகவே - ஆயுள் கைவசம் உள்ளபோதே;
ஞாலம் உண்டானோடு - உலகளந்த மாலொடு
நண் அறிய - அணுக முடியாத; ஆலம்  - விஷம்/விடம்
மூலப் பண்டாரம் - பேரின்பச் செல்வம், வீடு)

கூற்றை வென்று அங்கு ஐவர் கோக்களையும் வென்று, இருந்து அழகால் வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஓர் மீனவன் பால் ஏற்று வந்து ஆர் உயிர் ஆண்ட
திறல் ஒற்றைச் சேவகனே, தேற்றம் இலாதவர்
சேவடி சிக்கெனச்  சேர்மின்களே

(கூற்றை - யமனை/காலனை/விதியை; ஐவர் கோக்களையும் - புலன்களாகிய
ஐந்து அரசர்களையும்; மீனவன் - பாண்டி மன்னவன்; ஏற்று - இரந்து;
திறல் - ஆற்றல்; ஒற்றைச் சேவகன் - ஒரே/தனிப்பட்ட வீரன், சிவபெருமான்

--- அருள் திரு மாணிக்கவாசகப் பெருமான்

சிவம் சுபம்



No comments:

Post a Comment