Monday, May 22, 2017

குருவே வாரும்



குருவே வாரும், இது குரு வாரம்.
ஸத்குருவே வாரும், ஸத்கதி தாரும்.

தமியேனோ ஞான சூனியன்,
தாமோ ஞான சூரியன்,
அடியேன் கரை கடந்திட வேண்டும்
அதற்கருள் அய்யன் புரிந்திட வேண்டும்

த்வைதாத்வைதம் நான் அறியேன்
வேதம் ஆகமம் நான் அறியேன்
அறிவேன் ஒன்றே உம் பாதம்,
அய்யன் தந்தால் அதுவே பரம பதம்.... எனக்கதுவே பரம பதம்.

குருவரும் வாரம் குருவாரம்
திருவருள் பொழியும் குருவாரம்
வாரம் முழுதும் குரு வாரம்
சாகா வரம் தரும் ஸத்-குரு வாரம்

சிவம் சுபம்

No comments:

Post a Comment