Monday, May 22, 2017

பால ஸ்வாமி நாதனாய் (Keeravani)


கீரவாணி

பால ஸ்வாமி நாதனாய் அவதரித்தீர்,
சீல மஹா ஸ்வாமியாய் நெடி துயர்ந்தீர்

திருமகள் தவத்தால் புவி வந்தீர்
மலைமகள் காமாக்ஷியாய் அருள் பொழிந்தீர்

வேதமே உருவாய் (அன்று) ஆலடி அமர்ந்தீர்
வேதக் கரு உறைக்க பின் காலடி உதித்தீர்
வேத நெறி தழைக்க காமகோடி மீண்டீர்
எங்கள் குருவே, இறையே, உமக் கிணையே இலையே

எளிமையின் வடிவாய் எம்மிடை நடந்தீர், தூய
துறவற இமயமாய் தவத்தில் லயித்தீர்,
தருமமே லக்ஷ்யமென வாழ்ந்து ஜ்வலிக்கும்
எங்கள் பரமாச்சார்ய பரப்ரஹ்மமே  சரணம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment