Monday, May 22, 2017

Sri Mahaperiyavaa Astakam



ஸ்ரீ மஹா பெரியவா சரண அட்டகம்

அருளே, அமுதே சரணம் சரணம்
ஆலடி காலடி மறுவுருவே சரணம்
இம்மையில் கண் கண்ட தெய்வமே சரணம்
ஈச்சங்குடி அன்னையின் தவமே சரணம்
l

உயர் காமகோடி இறையே சரணம்
ஊழ்வினை மாற்றும் மா மறையோய் சரணம்
எம்மிடை நடமாடும் தெய்வமே சரணம்
ஏகனே அனேகனே சரணம் சரணம்

ஐந்தையும் எட்டையும் இணைத்தோய் சரணம்
ஒன்றியோர் உள்ளம் உறைவோய் சரணம்
ஓங்காரத் தொளிர் ஜோதியே சரணம்
ஔவையின் அகவலில் லயித்தோய் சரணம்

காமாக்ஷி அன்னையின் கருணையே சரணம்
சந்திர சேகர ஸரஸ்வதி சரணம்.
ஞாலம் போற்றும் ஞானமே சரணம்
டமருகம் சூலம் மறைத்தோய் சரணம்

த்வைதாத்வைத சேதுவே சரணம்
நாதியற்றோர்க்கும் நற்கதியே சரணம்
பிடி அரிசி அன்னபூரணமே சரணம்
மண்பட நடந்த பாதமே சரணம்

யாக யக்ய போஷகரே சரணம்
ரம்ய தெய்வக் குரலோய் சரணம்
லக்ஷியம் வழுவா லக்ஷணமே சரணம்
வரத "நாராயண ஸ்ம்ருதி"யே சரணம்

அமிழ்தினும் இனிய மொழியோய் சரணம்
அதிஷ்டானத்துறை அற்புதா சரணம், (எம்)
அன்னை தந்தை குரு தெய்வமே சரணம்
ஆச்சார்ய ஆதி சிவமே சரணம்

ஜெய ஜெய சங்கரா சரணம் சரணம்
ஹர ஹர சங்கரா சரணம் சரணம்
சரணம் சரணம் சந்திர சேகரா
தரணும் தரணும் பதகமலமே .

தரணும் தரணும் (உம்) பத கமலமே.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:

Post a Comment