Monday, May 22, 2017

பிறப்பிறப்பில்லா பெம்மானே (Gowla)



Gowla

பிறப்பிறப்பில்லா பெம்மானே நமக்காய் புவியில் அவதரித்தாரே

ஆதி யந்தம் இல்லா அருட் பெருஞ் ஜோதியே, ஆதி சங்கரராய் அவனி வந்தாரே

தந்தை தாய் இல்லா எந்தையே,
சிவ குரு ஆர்யாம்பாள் மகவானாரே,
ஆலடி நிழல்  விட்டு காலடி  வந்தாரே,
அருமறை யளித்த ஐயனே அத்வைத சாரம் உறைத்தாரே

ஷண்முகனை ஈன்ற தேவனே ஷண்மத ஸ்தாபனம் செய்தாரே
தன்னை தொழுதிடும் தேவர்களைத்,
தானே ஸ்தோத்திரம் செய்தாரே,
தானே அதுவாகும் வழி நெறியை உலகிற் குபதேசம் செய்தாரே

நம் தாயுமான சங்கரன்  தன்   தாய்க்கும் பஞ்சகம் புனைந்தாரே, நான் மடங்களை நிருவி, தானே காமகோடி  அமர்ந்தாரே

முற்பது வயதில் கயிலை
மீண்டவர்,
முழு நூறு வாழ நினைந்தாரே,
விழுப்புரத்தில் மீண்டும் தோன்றிய பரம்பொருள்
சந்திர சேகர ஸரஸ்வதி யாய்
நம்மிடை,  நம்முள்ளே வாழ்கின்றாரே

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய சந்த்ர சேகர ஹர சந்த்ர சேகர
ஹர சந்த்ர சேகர ஜெய சந்த்ர சேகர

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:

Post a Comment