Monday, May 22, 2017

ஊர்காடு அமர்ந்த என் குல தெய்வமே

உ

ஊர்காடு அமர்ந்த என் குல தெய்வமே, உன் பாதம் சரணம் நரசிங்கமே

(உனை) தாமிரபரணி  வலம் வர
காமித பலமதை எமக்கருள....

பாலனைக் காக்க வந்தவனே,
சீலமுள்ளோர் உள்ள அரங்கனே,
கல்பக வ்ருக்ஷ கருணா மூர்த்தே l
"ஸ்வாதீ"னமாய் நாங்கள் செழித்து வாழ.....

மாண்டவ்ய ரிஷி தொழும் மாதவனே,
மனம் உறைபவளை மடி வைத்தோனே,
கஜேந்த்ர வரத கருட வாஹனா,
அஞ்ஜனை செல்வனை அருகில் வைத்தே.....

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:

Post a Comment