Monday, May 22, 2017

MS Amma Stuthi



இசைக்கவென்றே அவதரித்"தாய்"
ஈவதற்கென்றே இசைத்"தாய்"
ஷண்முக வடிவத்"தாய்"
சதாசிவனை மணந்"தாய்"
சந்திரசேகரரைக் கவர்ந்"தாய்"
சத்யசாயியை உள் வைத்"தாய்"
கண்டத்தால் கண்டங்களை இணைத்"தாய்".
படியளப்போனுக்கே படியளந்"தாய்".
பாரை வலம் வந்"தாய்".
பக்தியில் திளைத்"தாய்".
சுபம் பொழிந்"தாய்".
இறையுள் கலந்"தாய்".
இசையாய் எம்மிடை வாழும் தாய்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment