Monday, May 22, 2017

செந்தழலில் தோன்றிய (Bairavi)

Bairavi

செந்தழலில் தோன்றிய செந்தமிழ் தாயே
செம்மை நலமருளும் மீனாக்ஷி உமையே

ஆலமுண்டோனைக் காத்த அமுதே, அவன் கரம் பிடித்து அகிலம் ஆளும் அழகே

முத்தமிழ் சங்கத் தலைவியே, இப் பிள்ளைத் தமிழையும் ஏற்பவளே,
கலி வெண்பா கொண்ட கயற்கண்ணி, மனக் களிப்புடன் வாழ்வேன் உனை எண்ணி

என்னுள் ஒளிர்பவள் நீ தானம்மா, என் துணை யென்றுமுன் நாதனம்மா,
பவ பயம் போக்கும் பைரவித் தாயே, உன் பத மலர் என் சிரம் வைத்தாள்வாயே.

(அம்மா) மாதம் மும்மாரி பொழிந்திட வேண்டும்,
(மக்கள்) பஞ்சம் பிணியின்றி வாழ்ந்திடவேண்டும்,
உலகெங்கும் உன் நாமம் ஒலித்திட வேண்டும், உன்னருளால் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்

சிவம் சுபம்

No comments:

Post a Comment