Sunday, August 19, 2018

கல்லினுள் விளைந்த தெய்வக் கனி (Bilahari)


பிலஹரி

கல்லினுள் விளைந்த தெய்வக் கனி,
கருதிப் பணிந்தோனைக் காத்த தனி.

தூணிலிருந்து வந்த தூயவன்.
துஷ்டனையும் ஆட்கொண்ட மாயவன்.

(அன்பர்) நினைக்குமுன் தோன்றும் ஸ்ரீ ஹரி.
 (அவர்) நினைத்ததெல்லாம் அருளும் நரஹரி.
ஸ்வாதியில் உதித்த நர சிம்ஹம். (நம்மை)
ஸ்வாதினமாய் வாழவைக்கும்
மா-லோலம்

(மெய்)  அன்பருள்ளமே அஹோபிலம்,
அடிபணிந்தோரைக் காக்கும் தெய்வ பலம். (அன்பருள்ளமே)
நவ நரசிம்மனின் உறைவிடம்,
பவம் களைந்தாட்கொள்ளும் பரம பதம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment