Sunday, August 19, 2018

என்ன கரிசனம் என் அன்னைக்கு



என்ன கரிசனம் என் அன்னைக்கு, ஏகாந்த தரிசனம் தந்தாளே இன்றெனக்கு...

கன்றழைக்கும் முன் கருதி வரும் ஆ போலே, கடையன் எனக்கும் காட்சி தந்தாள், முத்தங்கி அணிந்து முறுவல் பூத்தாள்.

தலைமகன் கணேசன் அருகமர்ந்தேன், விலை மதிக்க வொண்ணா (அன்னை) பாதம் கண்டேன், சிம்ஹ வாஹினி மந்த ஹாஸினி  ஆனந்த பைரவி அருள் பொழிந்தாள்,   அன்புடன் பூதி குங்குமம்  தந்தாள்

பிறிந்தவர் கூடினால் பேச முடியுமோ, பிடித்தவர் இணைந்தால் பிரிய முடியுமோ, (என்)  உள்ள ஏக்கமெல்லாம் இசையாகி அன்னைமுன் அருவியாய் பொங்கியதே, அன்னையின் சிரமலர் ஒன்றென்னை வாழ்த்தியதே.

வாழிய மதுர காளி யம்மா,  வாழிய சிறுவாச்சூர் தேவியம்மா, வாழிய த்ரிபுர சுந்தரி அம்மா, வாழிய வற்றாத உன் கருணை யம்மா 

சிவம் சுபம்

ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.



ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.

ஷண்முகனின் ப்ரிய மாமன், ஸ்வாதியில் 
ஸ்தம்பத்தைப் பிளந்து  வந்தான

நிந்தனை செய்தோனை மடி  வைத்தாட் கொண்டான்.  வந்தனை செய்தோனை வாழ்வாங்கு வாழ் என்றான். அஹோபிலத்தில் தோன்றியவன் அகிலமெங்கும் வ்யாபித்தான்.

சங்கரர்க்கு கரம் கொடுத்தான், மத்வரின் முக்ய ப்ராணன் ஆனான்.  உடையவரின் உடமை ஆனான், தேசிகர் கவியில் சிம்ஹமாய்  ஜ்வலித்தான்,

ஆழ்வார்கள் தமிழ் மாலையும் ஏற்றான், அன்னை லக்ஷ்மியை மடி வைத்தான்,
மரண பயமதைப் போக்கிடுவான். கனக மழையே  பொழிந்திடுவான்.

 சிவம் சுபம்

உம்மடி மலர் துணை போதுமே

file


உம்மடி மலர் துணை போதுமே, மூவுலகும் என் வசமாமே

திருமகள் அளித்த பெரும் கொடையே, மலை மகள் காமாக்ஷி மறுவுறுவே..

கலைகளாம் ஞான ஸரஸ்வதியே, அலை பாயா மனமருளும் பெருநிதியே, இந்திரர்க்கும் கிட்டா அருட் குருவே,  ஸ்ரீ சந்திரசேகராராம் சதாசிவமே....

சிவம் சுபம்.



காக்க வச்சு காக்க வச்சு காட்சி தந்தானே - என்னை திட்ட வச்சு திட்ட வச்சு கருணை செய்தானே

அங்கு இங்கும் அலய விட்டு சோதனை  செய்தான், அப்பப்பா பட்ட அசதி என்ன சொல்லுவேன், 

அடுத்த நாளு காலையிலே மனம் இளகி, எளிதாக இனிமையாகக் காட்சி தந்தானே, பைசாக் காசு செலவில்லாம, (அந்த) வட்டிக்காரனை கிட்டப் போயி கண்டு உள்ளம் பூரித்தேனே..

இடையில் காளஹஸ்தீக்கு சென்று வந்தேனே, அந்த ஈஸ்வரனே சிபாரிசு செய்திருப்பானோ, அம்மையப்பனை பார்த்து வந்தவுடனே, என் அருமை மாமனும்
தர்சனம் தந்து விட்டானே.

காளஹஸ்தீஸ்வரா
கபிலேஸ்வரா
திருமலேஸ்வரா ஸ்ரீ
வேங்கடேஸ்வரா..

சிவம் சுபம்.


அனுஷமளித்த ஆதிரையா போற்றி (Mahaperiyavaa Bhajan)



அனுஷமளித்த ஆதிரையா போற்றி.
ஆறாம் வேதம் உரைத்தாய் போற்றி.
இம்மையில் கண் கண்ட தெய்வமே போற்றி.
ஈடில்லாத் தவசீலமே போற்றி.
உலகை உய்விக்கும் ஜெகத் குருவே போற்றி.
ஊழ்வினை மாய்க்கும் மருந்தே போற்றி.
எட்டையும் ஐந்தையும் இணைத்தாய் போற்றி
ஏகனாம் சந்திர சேகர போற்றி.
ஐயமில்லாதருளும் அருட் சுனையே போற்றி.
ஒன்றி அதுவே ஆனாய் போற்றி.
ஓங்கி ஒளிர் ஞான ஸரஸ்வதியே போற்றி
ஔஷதாம்ருதமாம் உம் நாமமே போற்றி.

ஜெய ஜெய சந்திர சேகர போற்றி
ஹர ஹர சந்திர சேகர போற்றி.

சிவம் சுபம்

மூவுலகும் ஒரு குடும்பமே



மூவுலகும் ஒரு குடும்பமே, அதுவே சிவ குடும்பமாம் சத்யமே

அங்கயற்கண்ணியே நம் அன்னை - ஆலவாய் சுந்தரனே நம் அய்யன்.

முக்குறுணியோனும் மூவிரண்டு முக குன்றக் குமரனும் (நம்)  அருமை சோதரர் ஆவாரே, பல்லாண்டு கொண்ட கூடல் அழகனே அருள் வடிவான நம் தாய் மாமனே 

மதுரவல்லியாம் திருமகளே நம் அருமை மாமி ஆவளே, ,
அஞ்சனை செல்வனாம் அசகாய தீரனே நமை காக்கும் அரண் ஆவானே.
அறுவத்து மூவரும் ஆழ்வார்களும் நம் சுற்றமும் நட்பும் ஆவாரே.. 

சிவம் சுபம்

Sri Hanuman Song


File 

மூலத் துதித்த முத்து.
முக்கண்ணன் அம்ஸ வித்து.
அன்னை சீதையைக் காத்த சித்து.
இராம நாமப் பித்து.
அடியவர் குல சொத்து.

மந்தியாய்த் தோன்றி விந்தை பல புரி வித்தகன்...  சூரியனாரின் சீடன், சுந்தர ரகுராம பத்தன்.

அஞ்சனை இவனை ஈன்றாள், இவனோ புவி மகளைத் தாயாய் பெற்றான்.

செயற்கரிய செய்யும் ஜித்தன், செத்தவரையும் மீட்கும் சித்தன்,
காலனைக் காமனை வென்றவன்,   
அண்ணலை உள் வைத்த ஆலயன்.

தரும ராமனுடன் வாழ்ந்தான், அத் தருமம் உரைத்த கண்ணன் கொடி பறந்தான்,
 அவதார ராமனும் கண்ணனும் மறைந்தார்
இவனோ இன்றும் நம்மிடை வாழ்கிறான்.

சிவம் சுபம்

உன்னை எண்ணி நாளைத் துவக்குவேன் (Vasanta)

உ (வசந்தா)

உன்னை எண்ணி நாளைத் துவக்குவேன். உன்னைப் பணிந்தென் நாளை நடத்துவேன்

 (என்)  கண்ணின் கருமணியே, கற்பகமே மீனாளே

என்னால் ஆவதொன்றுமில்லை, உன் அருளிக்க கவலை எனக் கில்லை, ஆலத்தை அமுதாக்கும் அன்னை நீ அருகிருக்க, வேதனை என்னை அணுகுமோ, வேழனை யீன்ற மாயே

ஆடலில் வல்லானையே ஆட்டுவிப்பாயே, அரவணை துயில்வோனை அவதாரம் செய்ய பணிப்பாயே, வேதன் மனையாளின் வீணையை பழிக்கும் குரலாளே,   உன் பாதம் பிடித்த எனக்கு எல்லாமே ஜெயமே...

சிவம் சுபம்.

Sivarathri Pradosha Songs Series - 1 to 6

Song 6-1
Song 6-2
Song 5-1
Song 5-2
Song 4
Song 3
Song 2
Song 1
Song 0




சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டு ப்ர்ர்த்தனை 6

வள்ளல் பெருமானின் "நடேசர் கும்மி"

காமம் அகற்றிய தூயனடி - சிவ காம சவுந்தரி நேயனடி
மா மறை ஒது செவ்வாயானடி - மணிமன்றமெனும் ஞானாகாயனடி

ஆனந்த் தாண்டவ ராஜனடி - நம்மை ஆட்கொண்டருளிய தேஜனடி
கல்லைக் கனிவிக்கும் சுத்தனடி - முடி கங்கைக் கருளிய கர்த்தனடி

தில்லைச் சிதம்பர கூத்தனடி - தேவ சிங்கமடி உயர் தங்க மடி
பெண்ணொரு பால்வைத்த மத்தனடி - சிறு பிள்ளைக் கறி கொண்ட பித்தனடி

அம்பலத் தாடல் செய் ஐயனடி - அன்பர் அன்புக் கெளிதரும் மெய்யனடி
தும்பை முடிக்கனி தூயனடி - சுயஞ் ஜோதியடி பரஞ்சோதியடி

சிவம் சுபம்



சிவராத்ரி - கூட்டுப்ரார்த்தனை - 5
திருவாசகம் - மணிவாசகப் பெருமான்

கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி!
விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி!
உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி!
சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!

பாட வேண்டும் நான் போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு
ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்
வீட வேண்டும் நான் போற்றி வீடு தந்து
அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே !

சிவம் சுபம்.



சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டு ப்ரார்த்தனை

தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார்....

பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன் -  திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் -
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் -
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் -
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் -
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…

சிவம் சுபம்



சிவராத்திரி/ப்ரதோஷ கூட்டுப் ப்ரார்த்தனை - 3

தேவாரம் - திருநாவுக்கரசர் பெருமான்

தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத் தலையே நீ  வணங்காய்

கண் காள்  காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை
என் தோள்  வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்  காள்  காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவம் எம் இறை செம்பவள
எரிப் போல்  மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ

நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்

கைகாள்  கூப்பித் தொழீர், கடி மா மலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த  பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்

ஆக்கையாற்  பயனென் - அரன்  கோயில் வலம்  வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத இவ் யாக்கையாற்  பயனென்

உற்றார் யாருளரோ - உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்
துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளரோ

தேடிக் கண்டு கொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கொண்டு கொண்டேன்.

சிவம் சுபம்.


சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டு ப்ராரத்தனை - 2

தேவாரம் - சம்பந்தப் பெருமான் -

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் தேட ஆங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

சிவம் சுபம்.

(ப்ரார்த்தனை தொடரும்)



அரி தேடும் மலர் பாதன்.
அயன் காணா சிர முடியன். 

மரகத பவள மேனியன்,
ஆலமுண்ட கண்டன், அம்மை யப்பன்.

மான் மழு  சூலம் ஏந்தும் கையன், தான் அகன்றோர்க் கருளும் வலக்கையன்,  புலித் தோலணி இடையன், புனித கங்கை தாங்கும் சடையன்.

ஐந்து சபா நாதன்,
ஐம்பூதத் தலைவன்,  ஐந்தொழில் புரியும் ஈசன், ஐந்து முகம் கொண்ட இறைவன், ஐந்தெழுத்து நாம நமசிவாயன்.

சிவம் சுபம்

ஓம்

சிவராத்திரி/ப்ரதோஷ கூட்டு ப்ரார்த்தனை  -

1.   திருமந்திரம்   - திருமூலர் -

ஐந்து கரத்தனை ஆனை  முகத்தனை  - இந்தின்  இளம் பிறை போலும்  எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

அப்பனை நந்தியை ஆரா அமுதினை , ஒப்பிலி வள்ளலை ...ஊழி முதல்வனை
எப்பரிசாயினும்  ஏத்துமின் ஏத்தினால், அப்பரிசு ஈசன் அருள்  பெறலாமே

அரகர  என்ன அரியது ஒன்றில்லை  அரகர என்ன  அறிகிலர் மாந்தர்
அரகர  என்ன அமரரும் ஆவார் ..அரகர என்ன அறும்  பிறப்பன்றே

உள்ளம் பெரும் கோயில் ஊனுடம் பாலயம், வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே

சிவாய நம என  சித்தம்  ஒருக்கி, அவாயம் அறவே அடிமையதாகிச்
சிவாய சிவ சிவ  என்றென்றே சிந்தை ...அவாயம் கெட நிற்க  ஆனந்தம் ஆமே

சிவம் சுபம்

(ப்ரார்த்தனை தொடரும்)


எல்லாம் தருவார் ஈசனே (Pradosha Song)

[4:40 PM, 2/12/2018] Appa: சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டுப்ரார்த்தனை - 7

ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.

நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

சிவம் சுபம்


சிவராத்திரி / பிரதோஷ கூட்டு பிரார்த்தனை 7

வடலூர் வள்ளல்  பெருமான்  -
திருவருட்பா - சிவா த்யான/திருநீற்று மஹிமை - அன்பே சிவம்

எல்லாம் தருவார் ஈசனே 

ஊர் தருவார்  நல்ல ஊண்  தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற் கேர் தருவார் பொன் பணந்தருவார்
சோர் தருவார் உள்  ளறிவு கெடாமல் சுகிப்பதற்கிங்(கு)
கார் தருவார் அம்மையார் தரு பாகனை யன்றி நெஞ்சே

எல்லாம் அளிக்கும் திருநீறு

பாடற்  கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய  அடியவர் தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என் ஆணை கண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே

அன்பே இறை

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும்  வலைக்கு உட்படு பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி  அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே

சிவம் சுபம் 

Sri Guru Bhajan



சரணம் சரணம் குரு தேவா
சரணம் தரணும் சத் குரு  தேவா

அத்வைத சங்கர சரணம் சரணம்
த்வைத மத்வ சரணம் சரணம்
விசிஷ்டாதவைத ராமனுஜ சரணம்
விரைநதருள் புரிவீர் குருதேவா

ப்ருந்தாவன ராயரே சரணம்
பகவான் ராம க்ருஷ்ணரே சரணம்.
மாதா ஸாரதே சரணம் சரணம்.
மஹனீய விவேகானந்த சரணம்.

மீனாக்ஷி ஸுத குழந்தை சரணம்
காமாக்ஷி ஸுத சேஷாத்ரி  சரணம் 
ஷண்முக பகவன் ரமணா சரணம்.
ஷண்மத சந்திர சேகர சரணம்.

சன்மார்க்க ராம லிங்கா சரணம்
பரம பாவன ஞானானந்தா சரணம்.
ஷீரடி நாத சாயி சரணம்.
பரப்ரஹ்ம பர்த்தி பகவன்  சரணம்.

சரணம் சரணம் குரு தேவா
சரணம் தரணும் சத் குரு  தேவா

சிவம் சுபம்

Childrens' Daily Bhajan 2 Mooshiga vaaahana Namosthuthae

Childrens' Daily Bhajan 2

Mooshiga vaaahana Namosthuthae
Moolaadhaaraa Namosthuthae

Mothaga Hasthaa Namosthuthae
Moksha Pradhaayaga Namosthuthae

Chamaara KarNa Namosthuthae
Chathur Veda priya Namosthuthae

ViLambitha Soothra Namosthuthae
Vyaasa Poojitha Namosthuthae

Vaamana Roopa Namosthuthae
Vaathsalya Dhaaraa Namosthuthae

Vigna Vinaayaga Namosthuthae
Vidyaa Pradhaayaga Namosthuthae

Naaga Booshanaa Namosthuthae
Navagraha vandhitha Namosthuthae

Mahaa Ganapathi Namosthuthae
MangaLa Mooruthi Namosthuthae.

Sivam Subam

எத்தனையோ கோயில் கண்டு வந்தேன்



எத்தனையோ கோயில் கண்டு வந்தேன்....நான் குடியிருந்த கோயிலை  காணவில்லை

உலகன்னையை தினம் தொழுகினறேன், (என்ககு) உயிரளித்த  அன்னையைக் காணத் துதிக்கின்றேன், துடிக்கின்றேன்

மறைந்தவளை நான் மறக்கவில்லை, அவள் நினைவென்னை விட்டு விலகவில்லை,    (ஒரே) ஒரு முறை அவளைக் கண்டுவிட்டால், அவள் கரம் பிடித்து என் கண்ணில் ஒற்றிடுவேன், வரும் கண்ணீரால் பதம் நனைத்து
பிணைந்திருப்பேன், மீண்டும் பிறவாமல் சுகித்திருப்பேன்.

"அம்மா அம்மா" வென்று அர்ச்சிப்பேன், அவள் மடி தலைவைத்து என்னை இழப்பேன், (தன்) நெற்றிக் குங்குமத்தை எனக்கிட்டு இனிப் பிரியேன் எனறென்னை அணைத்திடுவாள்..... தன்னுள் என்னை இணைத்திடுவாள்.

சிவம் சுபம்.

Children daily Bhajan 3 தாயே நம் முதல் தெய்வம்

Children daily Bhajan 3

தாயே நம் முதல் தெய்வம், தந்தை அவள் அறிவித்த தெய்வம்.

தந்தை காட்டிய ஆசானே குருவாம் நம் ஆண்டவன்....இம் மூவரே நம் கண் கண்ட தெய்வம்.

தாயே நாம் ஆலயம்.
தந்தை சொல்லே மந்திரம்.
குருவே நம் வழிகாட்டி, இம்மூவரே நமை காப்பார் ..  வினை ஓட்டி.

உருவெடுத்து வந்த  கடவுளரை கருத்தினில் வைத்துப் போற்றினால்,
அருவான தெய்வமும் அகம் நெகிழும், இச்செகம் போற்றும் வாழ்வும் தந்தருளும்.

சிவம் சுபம்.

Song on Sri Ramakrishna



ராமரை மிஞ்சிய தர்ம பாலனர்
கண்ணனிலும் எளிய தர்ம போதகர்.

வங்காளம் கண்ட கதாதரர்
வானோரும் வணங்கும்
ராம க்ருஷ்ணர்.

அல்லா ஏசுவையும் கண்ட அகண்ட மனம்.
மதங்களை இணைத்த
விசால(அ)த்வைதம்

மனையாளுள்
மஹேஸ்வரியைக் கண்ட ஞானத்தவம்.
மஹிதலம் உய்ய அளித்த விவேக ஆனந்தம்

ஜெய ஜெய சாரதானந்தா
ஜெய ஜெய நரேந்திர வந்திதா
ஜெய ஜெய
பரமஹம்ஸா
ஜெய ஜெய 
பகவத் ஸ்வரூபா

சிவம் சுபம்

நரசிம்மன் அருளாலே விடுகிறோம் மூச்சு



நரசிம்மன் அருளாலே விடுகிறோம் மூச்சு,
அவன் பேச்சன்றி நமக்கெதற்கு வேறு பேச்சு.

நரமேனி கொண்ட புருஷோத்தமன், சிம்ம முகத்து சுகுணோத்தமன்.

அகலமெங்கும் வ்யாபித்த அஹோபிலத்தான், அன்பனுக்காய் ஒரு தூணுள் நின்றான்.
அரக்கனையும் தன் மடிவைத்த நாரணன்.
இரக்கமே வடிவான இதய "கமல"ன்.

வந்தான், நின்றான், ஜ்வலித்தான், ஆட்கொண்டான், அருள் பொழிந்தான், மறைந்தான், நிந்தித்து நினைந்தவர்க்கே காட்சி என்றால் சிந்தித்து தொழுவோற்கு தாரானோ மாட்சி. 

ஜெய தருண சிம்மா!
ஜெய கருண சிம்மா!
ஜெய சுகுண சிம்மா!
 ஜெய ஜெய நரசிம்மா!
ஜெய சுப நரசிம்மா!

சிவம் சுபம்

கணபதி என்றிட தடைகள் விலகும்.

Children special 3

கணபதி என்றிட தடைகள் விலகும்.
சாஸ்தா என்றிட தவம் சிறக்கும்.
கந்தா என்றிட வெற்றிகள் குவியும்,
பைரவா என்றிட பயம் விலகும்.

நாரணா என்றிட நற்பலன் கிட்டும்
நாரணி என்றிட கனகம் பொழியும்.
ராமா என்றிட நந்நெறி தழைக்கும்
கண்ணா என்றிட ஞானம் சுரக்கும்

நரசிங்கா என்றால் எதிர்ப்புகள் மாயும்,
நா-மகள் என்றிட கலைகள் மலரும்
சக்தி என்றிட ஊக்கம் பெருகும்
சிவ சிவ என்றிட சுபம் நிலைக்கும்.

அனுமனை நினைத்திட
மரணம் விலகும்.
குருவை நினைக்க திருவருள் பொழியும்.
தந்தையை நினைக்க
விந்தைகள் நடக்கும்.
தாயை நினைக்க அனைவரும் அருள்வர், அனைத்தும் கிட்டும்.

சிவம் சுபம்.

அன்பு தெய்வம் மீனாக்ஷி

ஓம்

அன்பு தெய்வம் மீனாக்ஷி - (என்)
ஆசைத் தெய்வம் மீனாக்ஷி

இதய தெய்வம் மீனாக்ஷி
ஈடில்லா தெய்வம் மீனாக்ஷி

உண்மைத் தெய்வம் மீனாக்ஷி (என்)
ஊணுள் கலந்த தெய்வம் மீனாக்ஷி 
என் இட்ட தெய்வம் மீனாக்ஷி
ஏக தெய்வம் மீனாக்ஷி

ஐமுக தெய்வம் மீனாக்ஷி -  (மனம்)
ஒன்றும் தெய்வம் மீனாக்ஷி
ஓங்கார ப்ரணவம் மீனாக்ஷி.
ஔஷத அம்ருதம் மீனாக்ஷி.

சிவம் சுபம்

Paranjyothi Munivar Paattu



விருத்தம் - திருவிளையாடல் புராணம்

செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து
செங்கோலோச்சி முழுதுலகுஞ் சயங் கொண்டு திறைகொண்டுந்தி
கண முனைப்போர் சாய்த்துத் தொழுகணவற்கு  அணி மணமாலிகை சூட்டித் தன்மகுடஞ் சூட்டிச் செல்வந் தழைவுறு
தன்னரசளித்த பெண்ணரசி அடிக் கமலம் தலைமேல் வைப்பாம்

ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்

சோம சுந்தரா சொக்கநாதா... ஆலவாய் வள்ளலே, அருள் புரி ஈசரே

ஆண்டி வேடம் களைந்து அங்கயற் கண்ணியை மணந்து,  செங்கோலேந்தி மூவுலகாளும்......

புதன் தொழும் அற்புதரே, வலது பதம் தூக்கி யாடும்  ஆனந்தரே, வந்திக்கு ஊழியம் செய்த வாணரே, ஏழைத் தருமிக்கு பொற்கிழிப் பாட்டளித்த புலவரே.

(நீர்) ஆடாத ஆட்டம் உண்டோ அய்யா, நீர் போடாத வேடமுண்டோ மெய்யா, எல்லாம் வல்ல சித்தரே, கள்ளம் தவிர்த்தோர் உள்ளப் பித்தரே....

சிவம் சுபம்

Sabari Sabari endru kooru.



Sabari Sabari endru kooru...  abarimithak karuNai pozhiyum paaru...

SaraNam koovip paadu... Divya darisanam kidaikkum joru..   

Kaaththidu mandala nonbu, thaanae siranthidumae un maaNbu, Irumudi thaangi yaathirai thuvanga, inbamae pongum un thunbam neenga. 

Malaiyaeri sendraal pothum, Ayyan manam paagaai urugi irangum (iLagum), (Ayyan) nei Abhushekam kaaNa, (un) mei silirkkum, manam niraiyum, MangaLam nilaikkum.

Sivam Subam

ஜெய் ஸ்ரீ குருராயா



ஜெய் ஸ்ரீ குருராயா!

வைகைக் கரைக்கு வாருங்கள், வானவரும் போற்றும் (குரு) ராயரைக் காணுங்கள்.

புவனகிரி தந்த புண்ணியர், பேச்சியம்மன் படித்துறையிலே பேரருளுள் பொழிகிறார், (அருள் பெற்று) உய்யுங்கள்.

மா மதுரை வந்த மஹனீயர் மரகத மீனாளைக் கண்டாரே, அவள் கர ஔஷதம் உண்டாரே, அய்யன் வேண்ட அன்னையும் துங்கைக் கரையில் அமர்ந்தாளே, மாஞ்சோலை அம்மனாய் நிலை கொண்டாளே.

ஆலவாயில் ஒரு மந்தராலயம் - ஆனந்தமருளும் குரு ஆலயம், வலம் வந்தால் போதும், (தெய்வ) பலம் பெருவோம், பணிந்தெழுந்தால் போதும், ப்ரஹ்லாதன் ஆவோம்.

சிவம் சுபம்.


(SwamigaL is the Avathaara roopam of Sri Prahlaathaa, the Siranjeevi. By offering PraNams to Swami we will also live for ever,  as another Siranjeevi,viz. Prahlaathar).

Sivam Subam


குருராயா குருராயா (Sivaranjani)



Children's Bhajan 5
சிவரஞ்சனி

குருராயா குருராயா
குருராயா - குவலயம் போற்றும் எங்கள் குருராயா.

என்ன புண்யம் செய்தோமோ குருராயா - குருவாரம் உமைத் தொழுது தன்யரானோம்.

முன்பு ப்ரஹ்லாதனாய்
நர சிம்மரைக் கொணர்ந்தீர் - இன்று ராகவேந்திரராய் எம் பவம் களைந்தீர் -
என்றும் வாழும் தேவா உம் மந்த்ராலயமே, பூவி வாழும் நல்லோரின் சரணாலயமே

கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவே, கெட்டதை விலக்கிடும் எங்கள் காவல் தெய்வமே,
என்றும் உம்மை மறவா மனமருளி,  உம் ப்ருந்தாவன நிழலில் தஞ்சம் தாரும்.

சிவம் சுபம்.

கனகம் பொழியும் துர்கை (Suddha Dhanyaasi)

உ (சுத்த தன்யாசி)

கனகம் பொழியும் துர்கை, இக்ககனம்  காக்கும் துர்கை

க்ருஷ்ணா நதி தீர  துர்கை
க்ருஷ்ண சோதரி துர்கை

வெற்றிச் செல்வி துர்கை
விஜயவாடா ஒளிர் துர்கை
பாதம் பற்றி பணிவோம்,
பவம் களைந்து சுகிப்போம்.

நள்ளிரவிலும் ஜ்வலிக்கும் துர்க்கை,
நாற்கரம் கொண்டருளும் துர்கை,
மங்கலம் பொழியும் துர்கை,
மாதா கனக துர்கை,
மாதா கனக துர்கை.

ஸர்வமும் எனக்கு நீரே ஸ்வாமி,



ஸர்வமும் எனக்கு நீரே ஸ்வாமி,
விழுப்புரம் அளித்த மெய்ப்பொருளாம் மஹா ஸ்வாமி.

உம் நிழலன்றி வேறு புகல்  தேடேன்.
உம் தாளன்றி வேறொரு பாதம்  நாடேன்.

காஞ்சி வாழ் கனகமே,  காமகோடி ஸ்ரீ சந்தர சேகரமே,
கலியில் எம்மிடை நடமாடும் தெய்வமே, சலிக்காதெம் குறை களையும் இறையே.

(தெய்வமே) உம் குரலே எமக்கு வேதம்,
உம் நாமமே எமக்கமுதம், உம் தர்சனமே பாப விமோசனம், உம் ப்ருந்தா வனமே கைலாய வைகுண்டம்.

சிவம் சுபம்

செவ்வேளுக்கு செவப்பு சாத்தி அலங்காரம் (No Audio)



செவ்வேளுக்கு செவப்பு சாத்தி அலங்காரம்.
வெற்றிவேலரு வெட்டிவேரு சப்பரத்தில் அனுக்ரஹம்.

செந்துர் கடற்கரையிலே ஒரு சன-சமுத்திரம், காந்தமா இழுத்திடும் நம்ம கந்தப் பெருமானின்  திரு   மேனி சந்தனம்.

சூரனை ஆட்கொண்ட தேவரை, சுத்தி சுத்தி வந்து பாதம் தொட்டு பணிவோம், (பால) சுப்பிரமணிய தேவரை
"கப்"புன்னு பிடிச்சிகிட்டா போதும், எதிரிக ளெல்லாம் கப்பு-சிப்புன்னு அடங்கிப் போவாக... 

அப்பன் தோளமந்த சாமி அவரு தப்பாம காட்சி தருவாரு, அம்மைக் கர வேலைக் கொண்டு நம்மைக் காத்து ரட்சிப்பாரு.

அரோகரா...அரோகரா...
ஆறுமுக சாமிக்கு அரோகரா..
அரோகரா...அரோகரா...
அரோகரா...அரோகரா...

சிவம் சுபம்

நந்தகுமாரா நந்தகுமாரா லீலைகள் புரிய வந்த குமாரா



நந்தகுமாரா நந்தகுமாரா லீலைகள் புரிய வந்த குமாரா -
நந்தகுமாரா பந்தம் அராயா, பாதம் தாராயோ நந்தகுமாரா

சிறையில் பிறந்த லீலாவதாரா - கோகுலத் தொளிர்நத பூர்ணாவதாரா - கீதாச்சார்ய ஞானாவதாரா, பீஷ்மரும் தொழுத க்ருஷ்ணாவதாரா

ஒரு தாய் மடியில் பிறந்தவனே, மறுதாய் மடியில் மறைந்தவனே,
எத்தனை அரக்கரை அழித்தாய் அய்யா, எண்ணற்ற அன்பரைக் காத்தாய் மெய்யா   

அக்ருர விதுரரின் மனம் கவர்நதாய்,   சகா தேவனால் கட்டுண்டாய், கள்ளமில் கர்ணனை ஆட்கொண்டாய், உள்ளத்தால் உயர்நதோனின் உரிமை மீட்டாய்.

த்வாரகை ஆண்டாய் நீரில் மிதந்தாய்,
குரு வாயூர் புரம் சேர்ந்தாய்,  நாராயணீய நாயகனே, உன் மென் மலர் மாதமே என் புகலே.

க்ருஷ்ண கோவிந்த வாஸுதேவா, ருக்மிணி நாதா பரந்தாமா,
நாராயணா ஸ்ரீமந் நாராயணா,  பக்த வத்ஸல பரம தயாளா!

சிவம் சுபம்

எத்தனை நாளு ஓடுமோ இந்த வண்டி (With Vallalar Virtuhham)

Om

கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே 
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே

- வள்ளல் பெருமான்.

எத்தனை நாளு ஓடுமோ இந்த வண்டி மனமே தெரியாது... எத்தனை நாளு எஞ்சியிருக்கோ, (மனமே) சொல்லிக் கடத்து சிவ நாமம்.

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி, (அவன்) ஆலடி அமர்ந்த தக்ஷிணா முர்த்தி,
ஆலத்தை உண்டு அகிலம் காத்தவன், அன்பு செய்வோரைக் கைவிடானே.

அரியும் அயனும் தேடும் மூர்த்தி, அறுபத்தி மூவரு கண்ட மூர்த்தி, அங்கத்தில் அன்னையை வைத்த மூர்த்தி, அளப்பறியா கருணா மூர்த்தி. 

கால் தூக்கி ஆடுவான், கை கொடுத் தருள்வான்,
விடைமேலமர்ந்து வலம் வருவான், கடையனானாலும் கை கூப்பித் தொழுதா உடனே அருள்வான் உள்ளம் புகுவான்.

சிவம் சுபம்

கண் பாரைய்யா.... நரசய்யா (Bhoopalam)

உ பூபாளம்

கண் பாரைய்யா.... நரசய்யா.... என் கலி தீரய்யா ... லக்ஷ்மீ நரசய்யா...

வேகமே உந்தன் மாண்பல்லவோ ..... வேண்டுமுன் அருளுவதுன் பெருங் குணமல்லவோ

கனகனுக்கும் காட்சி தந்த வள்ளலலே, அவனை மடிதாங்கிய ஸ்ரீ நரஹரியே, நானந்த ப்ரஹ்லாதன் இல்லை யாயினும், உன்  நாமம் நவிலும் பாமரனன்றோ?

உடனே எனக்குன் முகம் காட்டு, உன் பாதம் என் சிரம் வைத்து அருள் கூட்டு.

சிவம் சுபம்.

திட பக்தி தருவாய் நரசிம்மா (Revati)

உ ரேவதி

திட பக்தி தருவாய் நரசிம்மா,
திட சித்தம் அருள்வாய் நரசிம்மா

அலைபாயா மனமருள் நரசிம்மா - அதனுள் அமர்ந்தருள் பொழி வா நரசிம்மா.

தேகாபிமானம் நீக்கிடு நரசிம்மா,
தெய்வாபிமானம் ஊட்டிடு நரசிம்மா,
மூர்க்கரைப் புகழாது காத்திடு நரசிம்மா,
முக்தி மார்க்கம் காட்டிடு நரசிம்மா 

இருக்கும் வரை உனைப் பாடணும் நரசிம்மா
இறந்தால் உனை சேரணும் நரசிம்மா
கனகனுக் கருளிய நரசிம்மா, இக் கடயனைக்
கைவிடாதே நரசிம்மா

சிவம் சுபம்

தணலாய் தோன்றித் தண்ணருள் (Yemen Kalyaani)

உ  யமன் கல்யாணி 

தணலாய் தோன்றித் தண்ணருள் பொழிந்த தேவன் - தன்னை நிகரில்லா நர ஹரி ரூபன்.

தூண் பிளந்து வந்த அஹோபிலன்
"தான்" அகன்றோர் உள்ள வாசஸ்தலன்

அன்னயே பயந்த உக்ர சிம்மன், அன்பன் நயந்த சாந்த சிம்மன், அத்புத அவதார நரசிம்மன், அதி அத்புத ப்ரஹ்லாதன் அழைக்க வந்தவன்.

நினைந்தாலே போதும் நிம்மதி பெறலாம்,
துதித்தால் போதும்,
எதிர்ப்புகள் மாயும், (அவனை) வலம் வந்தால் பலம் சேரும்,
சந்ததியும் சாகா வரம பெற்றுய்யும்.

சிவம் சுபம்.

Thaayum neeyae thanthaiyum neeyae (Hindholam)

Hintholam

Thaayum neeyae thanthaiyum neeyae Narasingaa... sotharan neeyae.. sakaa neeyae Narasingaa.. (sakalamum neeyae Narasingaa) 

Vidyai-yum neeyae, gnanamum  neeyae en selvamum neeyae Narasingaa...

uLLum neeyae, puramum neeyae Narasingaa, naan engengu sendraalum angelaam neeyae Narasingaa , unai-yandri or(u) Deivam naan ariyanae Narasingaa, athanaal unnai-yae nambi un saraN pugunthaen Narasingaa.

Sivam Subam

Mantha-haasa vadhanan avanae



Mantha-haasa vadhanan avanae
Malar-magaLai madi vaiththavan,
Simma mugaththu Sundaran avanae
Nandavanathurai Narasimhanaam

ThooNilum thurumbilum iruppavan avanae thooyavar uLLaththil nilaith-thiruppaan, yaeno andha Kanaganuk-kintha uNmai pulappada villayae. 

Eththanaiyo avathaarangaL iruppinum Narasimha rooparkku iNai undo,
Arakkarai azhikka pala Avathaaram, Anban azhaikku-mun vanthathu ithuvae.

Paanagam padaiththu azhaiththaal pothum, nam agam avan pugunthiduvaanae,  Paatha Kamalam paNinthaal pothum nam paathaga malamathai vaeraruppaan.

Jaya Jaya Simhaa
Jaya Narasimhaa
Jaya Jaya Jaya Jaya
 Nara-Simhaa.
Jaya Jaya Simhaa
Jaya Narasimhaa
Jaya Lakshmi Nara-Simhaa

Sivam Subam

ஆலத்தை அமுதாக்குவாள்


file1
file2

ஆலத்தை அமுதாக்குவாள்,
ஆண்டியை அரசேற்றுவாள்

நாரணன் முகத்தில் பல் விலங்கேற்றுவாள், காரண காரியம் அறிந்தருள் பொழிவாள்.

ஊமையைப் பாட வைப்பாள், யானையைப் பிள்ளை யென்பாள். சிறுவனை வேலனாக்கி சூரனை சம்ஹரிப்பாள். ஐந்தொழில் புரிவாள், ஐயமில்லா தருள்வாள்.

அன்பர் பணி ஏற்பவள்,
அன்பரைக் கைவிடாள்
நளபாகம் படைத்திடுவாள், நால் வேதம் மொழிந்திடுவாள் கும்மிருட்டில் குளிர் நிலவாய் காட்சியும் தந்திடுவாள்,  குவலயம் போற்றிடும் மதுரை மீனாள்.

சிவம் சுபம்

ஜெயேந்த்ர தேசிகமே சரணம்



ஜெயேந்த்ர தேசிகமே சரணம்,  ஸ்ரீ ஜெயேந்திர   தேசிகமே சரணம்.

இருள்நீக்கி  அளித்த  மன யிருள் நீக்கியே, அருள் மழை பொழியும் அம்ருத வாரிதியே

நடமாடும் தெய்வம் தந்த நற்குருவே, நலிந்தோர் குறை களையும் சத்குருவே, சந்த்ரமௌலீச பக்தியுடன் சமரச சன்மார்க்க நெறியையும் போதித்த வள்ளலே, சாதித்த செம்மலே

கல்விச் சாலைகள் அமைத்தீர், நோயகற்றும் வழி சமைத்தீர், எண்ணற்ற ஏழைகளின் இதயம் கவர்ந்தீர், வேதாகம புராண உபதேசம் செய்தே வேற்றுமை களைந்தீர்
உலகுயிரை இணைத்தீர்

கடலும் வானும் உள்ளவரை, சூரிய சந்திரர் ஜ்வலிக்கும் வரை உம் புகழ் நிலைக்கும், உமதருள் எமை காக்கும்.

ஜெய ஜயேந்த்ர சங்கரா
ஜெய ஜயேந்த்ர பெரியவா
ஜெய ஜயேந்த்ர தேசிகா
ஜெய ஜயேந்த்ர க்ருபாகரா.

சிவம் சுபம்

ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா

ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா அருளிய குரு வந்தன ஸாஹித்யம்

எப்படிப் பாடினரோ - குரு நாதனை  அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் குருவே

தோடகரும் பத்மபாதரும் சுரேஸ்வராச்சார்யரும் ஹஸ்தாகமச் சார்யரும் சங்கர குருநாதனை

காலடியில் உதித்து கால்நடையாய் நடந்து
காசிவரை காமகோடி பீடமமைத்து,
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன வேதாந்த வித்தகரை, வேதனைகளை தீர்த்து வைக்கும் சத்குருநாதனை

சிவம் சுபம்.

என்னுள்ளே இருப்பவளே (Saaveri)



சாவேரி

என்னுள்ளே இருப்பவளே, என்னை வழி நடத்துபவளே... என் தாயே, என் தாயே.

 (என்னை உன்) கண்ணுள்ளே  வைத்து காப்பவளே... கயற்கண்ணியாம் அன்னை மீனாளே..

விண்ணை யளந்தோன் தேடும் பாதமதில் ஒன்று நினதல்லவோ தாயே, (வெள்ளி)  அம்பலத்தாடுவோன் ஊன்றி நிற்கும் பாதம் நினதல்லவோ மாயே, உன்னிரு பாதம் என் சிரம் வைப்பாயே,  மீண்டும் பிறவாதென்னை ஆட்கொள்வாயே...

சிவம் சுபம்

சிவனை நினைந்திட அவம் விலகும், சுபம் பெருகும்.



சிவனை நினைந்திட அவம் விலகும், சுபம் பெருகும்.

காமனை எரித்தவன், காலனை உதைத்தவன்,  ஆலஹாலம் உண்டு அகிலம் காத்த...

இருவர் தேடிக் காண பாதமதை கண்டு தொழலாம் வாரீர், த்வாதசாந்த பெருவெளியாம் மாமதுரை நகருக்கே, வெள்ளியம்பலத்தாடும் கூத்தனின் அழகை அள்ளிப் பருகலாம், அருளை உண்டு நெகிழலாம்.

நவ கோள்களும் நம் வசமாகும், நட்சத்திரங்களும் பக்க துணையாகும்,  கரணங்களும் உப காரணமாகும், எதிர்ப்புகள் மாயும், எண்ணம் நிறைவேறும்.

சிவம் சுபம்.

இறையிடம் நம் அன்பே பக்தி (No audio)



இறையிடம் நம் அன்பே பக்தி,
இறை நமக்கருள்வதே சக்தி

இறைவனை வணங்க வேண்டும் பக்தி, பக்தி செய்தால் கிட்டுமே முக்தி.

இறையே நம் ஜீவனாவார், இறையே நம்மை வழி நடத்துவார், இறையே நம்மை பாதுகாப்பார், இறையே நம்மை ஆட்கொள்வார்.

சிவம் சுபம்

Vigneswaram Vigna nivaaraNam (Aarabhi)

Aarabi

Vigneswaram
Vigna nivaaraNam
Skantham
Gnana prathaayagam

Saasthaaram
Sath guna dhaayagam
Bairavam
Baya nivaaraNam

NaaraayaNam
Natha Jana paalanam
Sakthim
Sakala kaarya Siddhim
Aanjaneyam
Asaadya saathagam
Sadhaa Sivam
Sarva MangaLam

Sivam Subam

Sanchalam pokkiduvaai (Suruti)



Suruti

Sanchalam pokkiduvaai, en mana sankatam theerthiduvaai

Kaamanaik Kaalanai vendra Maaruthi, Kariyavanai idhayaththuL vaiththa (Aanjaneya)     Murthi...

Raamanaiyae ninainthu,
Raamanaik kandurugi,
Raaman kulam kaaththu
Raaman adi thaangi
Indrum vaazhum Siranjeevi, endrum emakkaruLum samaya Sanjeevi..

Sivam  Subam

மாசியும் பங்குனியும் கூடும் நேரம்



மாசியும் பங்குனியும் கூடும் நேரம், மங்கையற்கரசியை தொழுதிடும் நேரம்.

சாவித்ரி அன்னையாம் முக்கண்ணியை நேமத்துடன் போற்றி நோன்பு சரடணியும் நேரம்.

கார் அரிசியும் காராமணியும் கலந்தடை செய்து படைத்திடுவோம். உருகா வெண்ணையை உள்ளன்புடன் வைத்து அன்னையின் அடிமலர் பணிந்திடுவோம். யமனும் நம் வசம் ஆகிடுவான், சாகா வரத்துடன்  சந்ததியும் அளிப்பான்.

நோயகலும், எதிர்ப்பு விலகும், ராஜ வாழ்வும் தானே சேரும். பதினாறும் பெற்று பெரு வாழ்வுறலாம், பரா சக்தியும் நம் பக்க துணையாவாள்.

சிவம் சுபம்

Hari Hara Bhajan


ஓம்

அரி அரன் தனயா
சரணம் ஐய்யப்பா
ஆனந்த ரூபா
சரணம் ஐய்யப்பா
இருமுடி ப்ரியனே
சரணம் ஐய்யப்பா
ஈடில்லா தேவா
சரணம் ஐய்யப்பா

உயர் நைஷ்டீகா
சரணம் ஐய்யப்பா
ஊழ்வினை அறுப்பாய்
சரணம் ஐய்யப்பா
எழில் மணிகண்டா
சரணம் ஐய்யப்பா
ஏற்றம் அளிப்போய்
சரணம் ஐய்யப்பா

ஐந்து மலை அரசே
சரணம் ஐய்யப்பா
ஒப்பிலா வீரா
சரணம் ஐய்யப்பா
ஓங்கார ஜோதி
சரணம் ஐய்யப்பா
ஔஷத தன்வந்தரீ
சரணம் ஐய்யப்பா

கலியுக வரதா
சரணம் ஐய்யப்பா
கங்கணம் அணிவோய்
சரணம் ஐய்யப்பா
சபரி நிவாஸா
சரணம் ஐய்யப்பா
ஞான ஸ்வரூபா
சரணம் ஐய்யப்பா

த்யான நிலையா
சரணம் ஐய்யப்பா
ந்யாய நேமமே
சரணம் ஐய்யப்பா
பந்தள குமார
சரணம் ஐய்யப்பா

மஹிஷி சம்ஹாரா
 சரணம் ஐய்யப்பா

அய்யப்ப கீதம் (தேசீய கீத மெட்டு) - Bhajan

அய்யப்ப கீதம்   (தேசீய கீத மெட்டு)

சத்ய ஸ்வரூபனே ..... சபரி கிரீச ..... நித்ய ... ப்ரஹ்மசாரி
பந்தள ராஜ குமாரா.....எங்கள் பந்தம் அறுத்திட வா வா
வல்வினை தீர்த்திடும் வீரா ..  .. வா வா.... வன்புலிமேல் அமர்ந்தே வா

மஹிஷி சம்ஹாரனே வா வா..... மணிகண்ட தேவனே வா வா
மங்கலம் பொழியவே வா வா

ஜெய ஜெய சங்கர நாரண சுதனே..... ஜெய ஜெய தர்ம சாஸ்தா. ...
சரணம் சரணம் சரணம்....... அய்யப்ப தேவனே.... சரணம்.

சிவம் சுபம்



கண்டு கண்டு கண்கள் பனிக்குதே, மீண்டும் காண வேண்டி அவை துடிக்குதே

ஹரிஹர தனயனை, சுப்ர சபரிகிரீசனை...

எண்ணி எண்ணி மனம் களிக்குதே, சரணம் கூவி கூவி நா இனிக்குதே, அய்யன் ப்ரசாதம் உண்டு பிணி
அகலுதே, சந்நிதி விட்டகல மனம்  மறுக்குதே, 

சிவம் சுபம்

எல்லாம் ஐய்யப்பன் எனக்கெல்லாம் ஐய்யப்பன் (Maandu)

உ folk (Maandu)

எல்லாம் ஐய்யப்பன் எனக்கெல்லாம் ஐய்யப்பன்-   தன் கண்ணுள் என்னை வைத்துக் காக்கும் தெய்வம் ஐய்யப்பன்

நினைந்தாலே போதும் நிம்மதி தருவான் - பணிந்தாலோ விண்ணையும்  (நம்) வசமாக்குவான்

பந்தளத்தின் செல்லப் பிள்ளை மணிகண்டன்,
பரமேச பத்மநாப சுகுமாரனாம், பூதநாதன் அவனே சதானந்தனாம்,    வேத கீத நாதமய ஜோதி ஸ்வரூபன்.

ஐயனாராய் காட்டு மேட்டில் குடி யிருப்பான், காத்துக் கருப்பை விரட்டி காவல் இருப்பான், சாஸ்தாவாய் காமாக்ஷி தவம் காப்பான்,  ஐய்யப்பனாய் சபரியில் (தவ) சீலர்க் கருள்வான்

ஸ்வாமியே சரணம் சரணமைய்யப்பா
ஸ்வாமியே சரணம் தரணுமைய்யப்பா.

சிவம் சுபம்

அம்மையப்பனை நினைந்துருகிடுவோம்



அம்மையப்பனை நினைந்துருகிடுவோம், அவர் அபி மலர் நிழலில் சுகித்திருப்போம்.

இம்மையில் நாம் கண்ட தெய்வம் அவரே, மறுமையிலாது வாழவைப்பாரே

ஈன்றவளினும் பெரிய தெய்வமுண்டோ, அவளே மீனாக்ஷியின் மறுஉருவமன்றோ,
தந்தை சொல்லே நமக்கு வேதமன்றோ, இதை உணர்ந்தால் நமக்கு எதிலும் எங்கும் ஜெயம் தானே

இராம பிரானே வாழ்ந்து காட்டினார், அரக்கர் கோனையும் வென்று காட்டீனார், புண்டலீகன் கதை நாம் அறிவோமே, பாண்டுரங்கனே இதனை பரிந்துரைப்பானே

சிவம் சுபம்

ஆதாரம் உந்தன் பாதாரவிந்தமே (Chaarukesi)


சாருகேசி 

ஆதாரம் உந்தன் பாதாரவிந்தமே..
அன்னையே உன்னையே அடைந்தேன் அடைக்கலமே....

ஐங்கார....ஹ்ரீம்கார...
ஓம்கார..ரூபிணியே
ஸ்ரிங்கார லலிதா த்ரிபுரசுந்தரியே.....

பத்து...அவதார பரமனும்....நீயே...
பாதி...உமை.பாகனாம்...சிவனும்..நீயே...
பாமரனுக்கும்..அருளும்.பரம...தயாகரியே...
பணிந்தேன்...உன்னை..கனிந்தருள்வாயே...

சிவம் சுபம்

அதிகாலை வேளையில் (Bhooplam)


பூபாளம்

அதிகாலை வேளையில்
அன்னை காமாக்ஷியின்
எழில் முகம் கண்டேன்
அளப்பில்லா அருளமுதம் உண்டேன்.

மன யிருள் அகன்றது
சுப நாள் உதித்தது

மலர்ச்செண்டு தாங்கிய
தளிர் கரத்தாள்,
மங்கையர்கரசி அவள்
சிவ-பாகத்தாள்,
செந்தாமரை தாங்கும் தன் இரு பதத்தால்
என் இருவினை, மும்மலத்தை களைந் தெறிந்தாள்,  இனி இறவாது வாழ் என ஆசிர்வதித்தாள்
 
சிவம் சுபம்

கனிவேண்டிப் பறந்த ஞானக் கனியே



விசாகத்துதித்த
கார்த்திகேயா -
குன்றுதோறாடும் 
குமரேசா

கனிவேண்டிப் பறந்த ஞானக் கனியே - எம்
கருத்தில் கலந்த குருகுஹ ஸ்வாமியே

சிக்கல் சிங்கார வேலனே
சஷ்டியின் நாயக சூர சம்ஹாரா, சுப்பிரமணியா மயில் வாஹனா
சேவற்கொடியோனே செந்தமிழ் இளவலே

உத்திரத் திருமணக் கோலனே -
தெய்வானையின் நாதனே, (குற)
வள்ளியின் மனம் கவர் வள்ளலே
பள்ளிகொண்டோனின் மருகோனே

இரு கரம் கூப்பித் தொழுவோர்ர்க்கு
ஈறாறு கரம் கொண்டு அருள்வோனே
பன்னிருகண்ணனே கண் மலரந்தருள்வாய்
பரசிவ ஞானம் தந்தருளவாய்

சிவம் சுபம்.

நினைந்தாலே போதும் நேரில் தோன்றுவான் பணிந்தாலே போதும் (Mohanam)

உ மோஹனம்

நினைந்தாலே போதும் நேரில் தோன்றுவான் பணிந்தாலே போதும், (பரம) பதம் அருளுவான்

பரதேவி அமரும் மடி யதனையே (பெரும்) பாவிக்கு  அருளிய கருணாகரன்,
சந்ததிக்கோ சாகா வரமும் தந்தான்.  நாம் சந்ததம் சிந்தித்தால்  என்ன செய்யான்.

இராமனாய் அவதரித்து கானகம் சென்று பதினான்கு வருடத் தவத்தின் பின்னே,  பத்து தலை ராவணனை வாகை சூடினான், கண்ணனாய் லீலைகள் பல புரிந்து தூது சென்று கீதை உறைத்து ஐவரைக் காத்தான்,

நினைக்கு முன்னே நரசிங்கனாய் தோன்றினனே, நொடிப் பொழுதில் கனகனைப் பொடிப் பொடியாக்கி பாலனைக் காத்த இவனுக்கிணை யாருண்டு,  இவன் நாமமே சுப நாமம்
ஜெபித்திடுவோமே,
ஜெயித்திடுவோமே

நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
நரசிம்மா நரசிம்மா நவசிம்மா
நரசிம்மா நரசிம்மா நரசிம்மா... லக்ஷ்மீ நரசிம்மா.

சிவம் சுபம்

இராமனை நினைந்து வாழ்ந்திருப்போம் (Behaag)


பெஹாக் 

இராமனை நினைந்து வாழ்ந்திருப்போம் 
ரக்ஷகன் அவன் கழல் பணிந்திருப்போம்

அன்னை தந்தையை மதித்து நடப்போம்
அருட்குரு சொல்லை சிரமேற் கொள்வோம்

தாரம் ஒன்றென்று வாழ்ந்திடுவோம்
உலகுயிர் அனைத்தையும் நேசிப்போம்
மாருதியைப் போலே பக்தி செய்வோம்
மரணத்தை வென்று நிலைத்திருப்போம்

இராமாயண சாரம் இதுதானே
இரகு குலத்தான் மனம் களிப்பானே
அன்னை சீதை அகம் நெகிழ்வாளே
அஞ்சனை செல்வன் நம்மை விட்டகலானே

சிவம் சுபம் 

Simple Tamil Slokams (No Audio)



சூர்ய குல மணி
சுந்தர ராம மணி
தசரதக் கண்மணி
கோசலை ஈன்ற மணி
சீதா நாத மணி
பரத ப்ராண மணி
லக்ஷ்மணன் தொழு மணி
ராவண க்ஷமா மணி
அனுமன் ஹ்ருதய மணி
அடியவரின் அன்பு மணி

அடி பணி மனமே.

சிவம் சுபம்




தசரதன் வரத்தின் படி
கானகம் புகுந்து
கனக மான் கண்டு
ஜனகன் மகளைப் பிரிந்து
அனுமன் துணை கொண்டு
அகன்ற கடல் தாண்டி
சிறையெடுத்தான் குழாமழித்து
அக்கினியைப் புனிதமாக்கி
பரதனை ஆட்கொண்டு
அயோத்தி மீண்டு, அன்னையுடன்., தம்பியருடன்,
அருளாட்சி செய்
அண்ணல் இராமன் கோசலை மணி வயிற்றினின்று உலகம் உய்ய உதித்த உன்னத நந்நாள் வாழ்த்துக்களுடன்,

"சுந்தர" த்யாகராஜன்.

கண்ணொளி யாகிடுவான் கவலைகள் தீர்த்திடுவான் (Kaanada)

உ த/கானடா
(நம்)  கண்ணொளி யாகிடுவான் கவலைகள் தீர்த்திடுவான்....ஞானக்

சூரிய குலத்து சந்திரனாம், சுந்தர சீதா ரகு ராமன்.

கயற்கண்ணியின் சோதரன், கண் மூன்றுடையோனின் மைத்துனன், பன்னிரு கண்ணனின் தாய் மாமன், துல்லிய பார்வை கருட வாஹனன்...

சிவம் சுபம்

அதி அமானுஷ்ய சைதன்யம்



 ஸ்ரீ ராமன்   -

அதி அமானுஷ்ய சைதன்யம் -
களங்கமிலா (சூர்ய குல) சந்தரன்

தந்தை பட்டாபிஷேகம் என்றார் - எனக்கா என்றார் ?
மாற்றான் தாய் கானகம் செல் என்றார் - இதோ செல்கிறேன் என்றார்.
ஈன்றவளைக் கேட்டு செல்கிறேன் எனாது புறப்பட்டு விட்டார்.

பாதம்/பாதுகை -
கல்லை உயிர்ப்பித்தது.
பரதனுக்கு ராஜ்யம் ஆளும் ப்ரதிநிதித்வம்.
ஜெயந்தனுக்கு உயிர் பிச்சை
சுக்ரீவனுக்கு அரசு
வீடணனுக்கு அரசு 

மனம் -  தயா சாகரம்.
தன் மனையாளை சிறையெடுத்து துன்புறுத்திய கொடியவனை அடுத்த பாணம் செலுத்தினால் மரணம் என்ற நிலையில், "இன்று போய் நாளை திருந்தி வா" என்ற வாய்ப்பளித்த மானுட தெய்வம்.
கூனி கைகேயியை மதித்து வணங்கிய பரந்த நோக்கு.
சாதி மத மிருக பக்ஷி பேதம் கடந்த சன்மார்க்கம்

ரூபம் -தர்மஸ்வருபம்

உறைவிடம்

ஆன்ம நேய ஹ்ருதயம் (ஆஞ்சநேய ஹ்ருதயம்).

சிவம் சுபம்

Jaya Vijayee Bhava Raaja Mathangee

OM

Jaya Vijayee Bhava Raaja Mathangee
Jaya Vijayee Bhava
Simhaasa-neswari

Jaya Vijayee Bhava
Dwaathasasntha puree
Vaasini
Jaya Vijayee Bhava
Dharmarakshaamani

Jaya Vijayee Bhava
Naari SironmaNi
Jaya Vijayee Bhava
Nithya KalyaaNi
Jaya Vijayee Bhava
Panchaa-bootheswari
Jaya Vijayee Bhava
Pancha-kruthyeswari

Jaya Vijayee Bhava
Meena lochani
Jaya Vijayee Bhava
Mathura baashiNi
Jaya Vijayee Bhava
Siva-saktheeswari
Jaya Vijayee Bhava
Sri Chakreswari

Sivam Subam

Karunai-kadalae Kaarthikaeyaaa

OM

Karunai-kadalae Kaarthikaeyaaa
Kazhal-iNai paNinthaen
Kadugi aruLvaai

Vithi maatri aruLum Visaakanae,
Vibuthi Sundara ShaNmuganae

Piramanum thozhithidum
PraNava Guruguhanae,
PraNadhaarthi-haran thoL amarnthavanae,
Pancha-amrutha Pazhani Aandavanae
Panniru KaNNanae enniru KaNmaniyae...

Ichchai Kriyai Gnana Sakthi Velanae,
Pachchai Mayil vaahana
Baala Muruganae
Sanchlam theerththidum
Sa-ra-va-Na-bha-va-nae
(un) SaraNa-kamalamae sathamendru pidiththanae.

Sivam Subam

ஏதேது செய்தாலும்


விருத்தம்

ஏதேது செய்தாலும்
ஏதேது சொன்ன்னாலும்
ஏதேது சிந்தித்தாலும், மாதேவா!  நின் செயலே என்று நினதருளாலே உணரின், என் செயலே காண்கிலேன்

- தருமை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகளின் "சிவபோக சாரம்". 

மனமெனும் கோயிலில் உனையே வைத்தேன், மதியணி  சேகரனே, மஹேஸ்வரனே

கணமும் மறவாதுன் கழலிணை பிடித்தேன், கண் மூன்றுடையோனே, கயற்கண்ணி நாதனே

(என்)  விழிநீர் சொரிந் துனக்கு அபிக்ஷேகம் செய்தேன்,  நீ எனக்களித்த உணவை உனக்கர்ப்பணித்தேன், என்னை நான் சுற்றியே உன்னை வலம் வந்தேன்,  என்னை இழந்தேன், உன்னுள் கலந்தேன்

சிவம் சுபம்

வேலும் மயிலும் துணை



வேலும் மயிலும் துணை என்று நம்பி வேல் முருகா உன் கால் பிடித்தேன் - பாலும் பழமும் பஞ்சாம்ருதமும் படைத்து உன்னை வலம் வந்தேன்.

அருணகிரியின் ஞானமில்லேன்,
பாம்பன் ஸ்வாமியின் தவமும் இல்லேன்,
வடலூராரின் எளிமை யிலேன்,
வள்ளல் உன்னருள் வேண்டுகிறேன்.

குருபரரைப் போல் தமிழறியேன்,
அவ்வையின் ஆழ்ந்த அறிவுமில்லேன்,
கச்சியப்பரின் பக்தி யிலேன், உன் கழலிணை மலர் நிழல் வேண்டுகிறேன்

நக்கீரன் பாடும் படை வீரா,
குருகுஹ ஸ்வாமி நாத தீரா,
தேவராய சஷ்டி கவசா,
பாமரன் எனக்கும்
பரிந்தருள்வா(ய்)

சிவம் சுபம்

என்ன அழகு என்ன அழகு (Mohanam)

உ மோஹனம்

என்ன அழகு என்ன அழகு எந்தை முருகன் என்ன அழகு

 (அய்யன் அழகைப்)  பருக பல்லாயிரம் கண்கள் போதுமோ, உருகிப் பாட அந்த ஆதி சேடனால் முடியுமோ

பார்த்திருந்தால் போதும், பாவம் விலகும்,
பணிந்தெழுந்தால் நம் அழகும் கூடும்.
வலம் வந்தால் போதும் நலமெல்லாம் சேரும்,
நம் இதயமே அவன் ஆலயமாகும்.

சிவம் சுபம்

Sri Lalithae Bhavanai

OM


Sri Lalithae Bhavaani
Thripurasundari Paavani

(Samashti charanam)

Maayammaa.. Mathuraapuri Meenammaa,  manchi samayamithamma, nannu brochutagu

(Duritha kaalam)

Sath-chith-aananda roopiNi, sarvaanga Sundaresuni manolaasini, Saama Gaana vinodhini, Sakala-kalaa vallee,  ninnae sathamami nammithini

Sivam Subam 

மனத்தில் இருப்பவளை மடி வைத்தருள்வான்,



மனத்தில் இருப்பவளை மடி வைத்தருள்வான், க்ஷணத்தில் வந்தன்பர் குறை களைவான்

அன்னைக் கரு புகுந்தால் தாமதமாகு மென்று, கல் தூணுள் புகுந்து நின்றானே

அரக்கனை அழிக்க பல அவதாரம், அன்பனைக் காக்க ஒரே அவதாரம்,
கண்களில் கருணைத் ததும்பும் சிம்மன், தன்னை நிகரில்லா அழகிய சிங்கன்

சிவம் சுபம்

குருநாதன் திருவடியை சரணடைவோம்,



குருநாதன் திருவடியை சரணடைவோம்,
குறைவில்லா வாழ்வுற்று நிறைவடைவோம்.

குருநாதன் வாய்மொழியே நமக்கு கீதை,
அவ்வழி நடந்து நாம்
அடைவோம் இகபர மேன்மை

குருநாதன் ரூபமதை சிந்தித்திருப்போம்,
காலனைக் காமனை வென்று வாழ்வோம்.

குருபாத கமலதை சிரமேற்போம்,
நம் பாதக மலமெல்லாம்
களைந்துய்வோம்.
   
சிவம் சுபம்.

கயிலை வாசனே (Saaveri)

உ சாவரி

கயிலை வாசனே
மயிலை வாசன்
கா-பாலீசன்
கருணா சாகரன்.

நமக்காய் அன்னை மயிலாகி
வேண்டி அழைக்க ஓடி வந்தவன்.

சம்பந்தர் பாட உள்ளம் நெகழ்ந்தவன்
பூம்பாவையின் உயிர் மீட்டவன்
அதிகார நந்தி வாகனன்,
அரி அயன் தேடும்
அற்புதன்

அறுபத்து மூவர் வலம் வரும் ஈசன்,
அன்னை கற்பக நாயகி நேசன்
பன்னிரு திருமுறை போற்றும் தேவன்,
தன்னிரு கண்மணியாய் நம்மை காப்பான்.

சிவம் சுபம்.

நான்முகன் காண சிரமே போற்றி



நான்முகன் காண சிரமே போற்றி
அவன் தந்தை தேடும் பதமே போற்றி

ஆலம் உண்ட வாயனே போற்றி
 அகிலம் காத்த பரனே போற்றி

நந்தி மேல் வலம் வரும் நாதா போற்றி
நான்மறை சார நாதா போற்றி

சிவையை  உள் வைத்த சிவமே போற்றி
சிறந்ததை அருளும் குருவே போற்றி 

கா பாலி ஈசா போற்றி
கற்பகாம்பிகை நேசா போற்றி 

அறுபத்து மூவர் வலம் வரும் தேவா
அடிமலர் தந்தாள் அய்யா போற்றி

சிவம் சுபம்

ஐய்யப்பன் அட்டகம் Ayyappan Astakham



ஐய்யப்பன் அட்டகம்
("கருடகமன" மெட்டு)**

கலியுக வரதன்
கலிமல நாசனன்
கருணாசாகரன்
ஐய்யப்பன் - கருணாசாகரன் (1)

திருமலையான் அன்னை
திருக்கயிலையான் தந்தை
பந்தள செல்லப் ள்ளை
ஐய்யப்பன் - பந்த மறுக்கும் பிள்ளை (2)

உத்திரத் துதித்த
மணிகண்ட மூர்த்தி
தீமையை அழித்திடுவான்
ஐய்யப்பன் - நல்லோரைக் காத்திடுவான்  - (3)

வில்லாளி வீரன்
மஹிஷி சம்ஹாரன்
வன்புலி வாஹனன்
ஐய்யப்பன் - வானோரைக் காத்தவன் - (4)

ராஜ்யம் துறந்தவன்
கானகம் புகுந்தவன்
நைஷ்டீக ப்ரஹ்மசாரி
ஐய்யப்பன் - நந்தா மகர ஜோதி (5)

பதினெட்டுப் படிமேல்
கோயில் கொண்டவன்
யோகாசனத்து
த்யான மனோஹரன்
சபரிகிரீஸன் - ஐய்யப்பன்
ஸர்வ மங்களன் (6)

நோன்பிருந்த அன்பர்
இருமுடி நெய்யிலே
உடல் நனைந்திருப்பானே
ஐய்யப்பன் - உள்ளம் குளிர்ந் தருள்வான். (7)

சரணகோஷ ப்ரியன்
தருணமறிந்தருள்
தீன சரண்யன
ஐய்யப்பன்-  ஞான மகேஸ்வரன்
ஐய்யப்பன்-  ஞான மகேஸ்வரன் (8)

ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா

ஸ்ரீ ச்ருங்கேரி மஹா ஸ்வாமிகள் பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்.  தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

சிவம் சுபம்.

அன்னேயே ! உன்னை வாழ்த்திப் பாட நாவளித்தாய்



அன்னேயே ! உன்னை வாழ்த்திப் பாட நாவளித்தாய்,
வணங்கித் தொழ இரு கரம் கொடுத்தாய்.
வலம் வந்திடவே இரு கால் இணைத்தாய்.   
உன் பதம் தாங்கவே எனக்கு சிரம் வைத்தாய். மயிலாகித் தவமியற்றி கயிலைநாதனை இங்கு வரவழைத்தாய்,  உன் கருணை என் சொல்வேன், புன்னை நிழலமர்ந்து தன்னையே தரும் கற்பகமே !

நான்முகன் காண சிரமே போற்றி
அவன் தந்தை தேடும் பதமே போற்றி

ஆலம் உண்ட வாயனே போற்றி
 அகிலம் காத்த பரனே போற்றி

நந்தி மேல் வலம் வரும் நாதா போற்றி
நான்மறை சார நாதா போற்றி

சிவையை  உள் வைத்த சிவமே போற்றி
சிறந்ததை அருளும் குருவே போற்றி 

கா பாலி ஈசா போற்றி
கற்பகாம்பிகை நேசா போற்றி 

அறுபத்து மூவர் வலம் வரும் தேவா
அடிமலர் தந்தாள் அய்யா போற்றி

சிவம் சுபம்

உ குருவருளும் திருவருளும் பொழிகின்ற தெய்வம்,



குருவருளும் திருவருளும் பொழிகின்ற தெய்வம், குழந்தையானந்தராம் மீனாக்ஷி புத்ரம்

சேஷாத்ரி நாதரின் பராமரிப்பில் க்ஷேமம் அருளும் குரு, தெய்வம் - லோக க்ஷேமம் அருளும் குருவாம் தெய்வம்.

சரணடைந்தால் போதும்,
சஞ்சலம் நீங்கும் சங்கடம் தீரும், சந்ததி அளிக்கும், சௌபாக்யம்  பொழியும், மரணத்தை வெல்லும்,  (அன்பர்)  மனத்துள் நிலைக்கும்

அரசரடிக்கு வாருங்கள், அரச வாழ்வு பெற்றிடுங்கள்,  ஸ்ரீ சக்ர தேவியையும், ச்ருத ஜன பாலனரையும் ஒருங்கே வலம் வந்து ஓங்கி ஒளிருங்கள்

சிவம் சுபம்

5 + 8 = 1 (அஞ்சும் எட்டும் ஒண்ணு)

உ 

5 + 8 = 1 (அஞ்சும் எட்டும் ஒண்ணு) 

பவளனுக்கு அரூப லிங்கத் திருமேனி
கரியனுக்கு ஸ்வரூப
அழகுத் திருமேனி     

பவளனுக்கு அஞ்செழுத்துத் திருநாமம்
கரியனுக்கு
எட்டெழுத்துத் திருநாமம்

பவளனுக்கு பனிமலை
கரியனுக்கு பாற்கடல்

பவளனுக்கு அபிஷேகம்
கரியனுக்கு அலங்காரம்

பவளனுக்கு புலித்தோலாடை
கரியனுக்கு பட்டாடை

பவளனுக்கு வில்வமாலை
கரியனுக்கு துளசி மாலை

பவளனுக்கு திருமுறை கீதம்
கரியனுக்கு திவ்ய ப்ரபந்தம்

பவளனுக்கு அறுவத்துமுவர்
கரியனுக்கு ஆரிரண்டு ஆழ்வார்

பவளனுக்கு ஆடல் முத்திரை
கரியனுக்கு யோக நித்திரை

பவளனுக்கு நாகம் ஆபரணம்
கரியனுக்கு நாகம் ஆசனம்

பவளனுக்கு நந்தி வாகனம்.
கரியனுக்கு கருடன் வாகனம்.

பவளனுக்கு ஆலின் நிழல்
கரியனுக்கு ஆலிலை மடல்.   

பவளனுக்கு வேதம் உரு உயிர் மூச்சு
கரியனுக்கு கீதை குரல் வழி பேச்சு

பவளனுக்கு திருநீறு மகிமை
கரியனுக்கு திருமண் பெருமை

பவளனுள் பாதி கருமை - அக் கருமையே அன்னையாம் உமை.

இந்த ஒருமை  உணர்ந்தவர் நாவில் தேன் - இல்லையேல் வாயில் மண்.

சிவம்  சுபம் 

காவி யணியும் கயிலேசன்


File 1
File 2
ஸத்குரு பாதம் துணை

அமர்ஜோதி குருபாதம்.
அழிவொன்றில்லாத பாதம்.
அமரர்களும் அடைந்தறியா ஆனந்த குரு பாதம்
பெருவாரி மதங்களெல்லாம் போற்றும் குரு பாதம்
வேதாந்த ஸாரமதாய் விளங்கும் குரு பாதம்.

From the Train :

காவி  யணியும் கயிலேசன்
காஞ்சி வாழும் காம கோடீசன்.

பிறை மறைத்து வந்த சந்திர சேகரன்,
பிழை பொறுத்தருளும் சாந்த மனோஹரன்.

மறை காக்க வந்த மா தேவன் - (மனத்) திறையகற்றும்  ஞான ஆதவன்,
தண்டம் ஏந்தும் தர்ம தயாநிதி, அண்டரும் போற்றும் அத்வைத ஸரஸ்வதி.

வில்வம் சூடும் விஸ்வ குருநாதன்,
திருநீற்றில் ஒளிரும் ஞான சம்பந்தன்
"நமசிவாய" நடமாடும் தெய்வம்
"நாராயண" என்றருளும் நம் குல தெய்வம்.

ஜயேந்த்ரர் தொழுதிடும் ஜெய ஜெய சங்கரன்,
விஜயேந்த்ரர் வலம் வரும் ஹர  ஹர சங்கரன்
ஷண்மத சங்கர பரமாச்சார்யன்
சகலரும் வணங்கும் பரம க்ருபாகரன் 

சிவம் சுபம்

(விருத்தம் - எனக்கு கிடைத்த பொக்கிஷம்)

Om Sakthi Om Sakthi Om Sakthi Om Shakthi Bhajan

https://drive.google.com/open?id=15LY_8X8ax7bkUWBkuFRm16xUVmYPElio



Annai NaamaavaLi



Om Sakthi Om Sakthi Om Sakthi Om
Om Sakthi Om Sakthi Om Sakthi Om

Sundareswari Meenaakshi
Yaekaambareswari Kaamaakshi
Visweswari Visaalaakshi
Neeyae enthan Mana-saakshi

Kaapaleeswari Karpagaambaa
Marundheeswari Thripuraambaa
Otri-pureeswari Vadivaambaa
Karunaasaagari Jagathambaa

Raameswari Parvathavardhini
Rangapureeswari Padmaasani
Sringapureeswari Saaradhae
Sritha Jana Palini Sri Lalithae

Sankara NaaraNi Gomathi
Saalivateeswari Kaanthimathi
Samudra thateswari Kanyaakumaari
Himaachaleswari Paarvathi

Siruvaachoor Mathura KaaLi
Samayapura Mahamaayi
Patham paNinthaen Karumaari
Pozhivaai maatham mum-naari

Om Sakthi Om Sakthi Om Sakthi Om
Om Sakthi Om Sakthi Om Sakthi Om

Sivam Subam 

Jaya Jaya Chandrasekara Sivamae SaraNam (Mahaperiyavaa Bhajan)

OM

Jaya Jaya Chandrasekara Sivamae SaraNam.
Hara  Hara
Sankaraacharya Sivamae  SaraNam

Jaya Jaya
Veda Paalana Sivamae SaraNam
Hara Hara
Dharma Swaroopa Sivamae SaraNam 

Jaya Jaya Sankara Naraayana Sivamae SaraNam
Hara Hara
Sarva mantra thantra
Sivamae SaraNam

Jaya  Jaya Sarva sammathaachaarya Sivamae SaraNam
Hara Hara Paramaachaarya
Para brahma Sivamae SaraNam

Jaya Jaya Kaanchi vaazh Kaamakoti Sivamae SaraNam
Hara Hara Kammakshi Hrudaya Subamae SaraNam

Sivam Subam

நீயே எனதுயிர் (Abheri)

உ  

ஆபேரி

நீயே எனதுயிர், நீயே என் உணர்வு, நீயே என் இயக்கம், என் தாயே

நீயே என் உறவு,  நீயே என் நட்பு, நீயே என் வழிகாட்டி, தடாதகையே

(என்) கனவும் நீயே, நனவும் நீயே, காணும் அனைத்தும் நீயே தாயே, (நான்)   உன்னடி மலரன்றி வேறொன்றை நாடேனே, உன்னடிமை என் கரம் பிடித்தருள்வாயே.....

சிவம் சுபம்

யசோதை அளித்த செல்வமே

உ 

யசோதை அளித்த செல்வமே, என் குல தேவி துர்கே...

கம்சனை நடுங்க வைத்தாயே, கண்ணனை மறைத்த மாயே

சங்க சக்ர தாரிணி
சதாசிவையாம் சூலினி
ப்ரத்யங்கீரா பவானி,
ரேணுகையாம் கருமாரி

மஞ்சள் நீரில் குளிர்வாய்,
மங்கல குங்குமத் தொளிர்வாய்,
செவ்வாடையில் நீ மிளிர்வாய்,
செம்மலர் சூடி மகிழ்வாய்.

அஷ்டமியில் அவதரித்தாய்,
சிஷ்டரைக் காக்கும் தேவி, (உனை)
செவ்வாயில் வலம் வந்தேன், செம்மை நலம் எமக்கருள்வாய்.

சிவம் சுபம்

படைத்தவள் நம்மை மீனாக்ஷி (Mohanam Bhajan Maya Bazaar Tune)



(ப்ருந்தாவனமும்....tune)

படைத்தவள் நம்மை மீனாக்ஷி
பாலித்தருள்பவள் மீனாக்ஷி
கடம்ப வனத்தாள் மீனாக்ஷி
கமல மலர்த்தாள் மீனாக்ஷி

கயற்கண்ணாள் மீனாக்ஷி
கயிலைநாதனை கவர்ந்திழுத்தாள்
சுடலை சுற்றும் ஆண்டி யப்பனை
சுந்தரானாக்கி கரம் பிடித்தாள்

மதுரையை சிவராஜதானியாய்
மாற்றிய  மீன லோசனி,
தன் கர செங்கோலை  அய்யனுக்களித்து,
பச்சைக் கிளி ஏந்தும் தளிர் கரத்தாள்

சித்தரைத் திருவிழாக் கண்டவர்க்கு,
இத்தரையில் இனிப் பிறவி இல்லை,
மாற்று குறையா மரகதம் அவளே
வற்றாக் கருணை வான்முகிலே.

நம்முள் இருப்பது மீனாக்ஷியே
நற்றுணையாவது சுந்தரமே
நற்றுணையாவது சுந்தரமே
நம்முள் இருப்பது மீனாக்ஷி.

சிவம் சுபம்

Kamala Mugaththaarae saraNam saraNam (Bhajan)

OM

Kamala Mugaththaarae saraNam saraNam
Kanagak karaththaarae saraNam saraNam

Kadavul Manaththaarae saraNam saraNam 
Kavalai theerppaarae saraNam  saraNam.

Kaamakoti-yaarae saraNam saraNam
Kaamaskshi samaanarae
saraNam saraNam
Kaal pathithu nadanthaarae  saraNam saraNam
Kaalaththai vendraarae
saraNam saraNam

Chandirasekarare saraNam saraNam
Chathur vedharae
saraNam saraNam
Paramaachaaryarae
saraNam saraNam
Parameswararae
saraNam saraNam

Sivam Subam

Bhajan (Audio only Sing Along)

https://drive.google.com/open?id=1ccUHojfN5YlHL09VWwnHfXzLE7AITw4n

கர்ஜனை செய்து வருவான் (Ataana)



அடாணா

கர்ஜனை செய்து வருவான் -  கருணை மழை பொழிவான்

நரசிம்ஹ புருஷோத்தமன்
சங்க சக்ர தரன், திரி நேத்ரன்

துஷ்டருக்கவன் சிம்ம ஸ்வப்பனம்,, சிஷ்டருக்கு இஷ்ட வரதம்,
இரணியனுக்கு இருண்ட நரகம் , அவன்
இனிய பாலனுக் கிறவா
வரம்

தணிகாசலனின் தாய் மாமன்
அருணாசலனின் ப்ராண மித்ரன்,
கடிகாசலத் தவ யோகன்,
அருளாசல அஹோபிலன்.

சிவம் சுபம்

முருகா என்றிட உருகி அருள்வான் (Thillang)

உ  திலங்

முருகா என்றிட உருகி அருள்வான், கந்தா என்றிட கவலைகள் மாய்ப்பான்

சரவணா என்றிட பகை விலகும்,  கார்த்தி கேயா என்றிட உறவுகள் சிறக்கும்.

குமார என்றிட குறைகள் களைவான், அறுமுகா என்றிட ஆறுதல் அளிப்பான்,   ஸ்வாமி நாதா என்றிட ஞானம் சுரக்கும்,  இருவருடன் இணைந்த  (அய்யன்) காட்சியும் கிடைக்கும்.

வேலுண்டு பயமில்லை மனமே... (முருகன் வரும்) மயிலுண்டு வெற்றியே ... மனமே..

சிவம் சுபம்

Kaamaskshi Puthraayaa, KaruNaa kataakshaaya Seshaadri naadhaaya namasthae

OM

Kaamaskshi Puthraayaa, KaruNaa kataakshaaya Seshaadri naadhaaya namasthae

Kara kanaga kamalaaya, Siva Raama Hrudayaaya, (aa)sritha jana paalanaaya Namasthae

Skanda mantra ubadaesaaya, Sarva roha Nivaaraanaaya, Dhanvanthri Vaidyanaathaaya Namasthae

Arunnaachala vaasaayaa, Sri Ramana Prasaadaagaya, Chinmaya roopaaya Namasthae

Kuzhanthaiyaananda mithraaya, kuvalaya prasidhdhaaya Guru Naadha Moorthae Namasthae

Chandrasekara Priyaaya Sanmaaga Rakshagaaya Sath Chith Aananda Moorthae (Namo) Namasthae

Unjaluru Vaasaayaa, unnatha Kaaveri (thata vaasaaya) vandhithaaya (Sri) Seshadri Naathaaya (Namo) Namasthae

Sri Sehaadri Naadhaaya Namo Namasthae.

Sivam Subam 

Bharathae Rakshamaam Sankara Paahimaam (Mahaperiyavaa Bhajan)

OM

Bharathae Rakshamaam
Sankara Paahimaam
Sankara Paahimaam
Saaradhae Rakshamaam

Chandrasekara Paahimaam
Chathur Veda Paahimaam
Abhinava  Rakshsmaam
Aathma naatha Paahimaam

Bhaarathi Paahimaam
Para Siva Rakshamaam
Vithu Sekara Paahimaam
Vidyaa Saagara Rakshamaam

Bharathae Rakshamaam
Sankara Paahimaam
Sankara Paahimaam
Saaradhae Rakshamaam

Sivam Subam


சிவனுக்கொரு காளை,



சிவனுக்கொரு காளை, சிவைக் கொரு சிம்மம், அரிக் கொரு கருடன், அண்ணலுக் கொரு அனுமன்.

கலைமகளுக்கொரு அன்னம்,  குமரனுக் கொரு மயில், சாஸ்தா விற் கொரு புலி, சங்கட ஹரனுக் கொரு எலி.

இறையைத் தாங்கும் இந்த உயிரினங்களின் தவம் என் சொல்வேன், இறையன்பிலா மனிதன் என்னால் என்ன பயன் ?

சிவம் சுபம்

சஞ்சலம் தீர்த்திடுவாயே (Sarasvati)

உ ஸரஸ்வதி


Saraswathi

Sanchalam theerthiduvaayae, thaayae, en sankatam pokkiduvaayae .. thaayae

Manath thirai vilakkiduvaayae.. athan-uL amarnth-aruL pozhinthiduvaayae.. thaayae

Ninaippathellaam nee aaga-vendum, (naan) uRaippathellaam un pugazh aaga-vendum
En siram un Patham yaenthida vaendum,
AthanuL kalanthu nilaiththida vaendum

Analil thondriya Kayal vizhiyaaLae,
Aalam undonai kaaththa karaththaaLae,
Vezha mugaththonai yeendra UmaiyaaLae,
Gyaalam aLanthonin Sothari MeenaaLae..

Sivam Subam

சஞ்சலம் தீர்த்திடுவாயே, தாயே, என் சங்கடம் போக்கிடுவாயே, தாயே

மனத்திரை விலக்கிடுவாயே... அதனுள் ளமர்ந்தருள் பொழிந்திடுவாயே, தாயே

நினைப்பதெல்லாம் நீயாக வேண்டும், (நான்) உரைப்ப தெல்லாம் உன் புகழாக வேண்டும், (என்றும்)   என் சிரம் உன் பதம்  ஏந்திட வேண்டும், (நான்) அதனுள் கலந்து நிலைத்திட வேண்டும், தாயே

அனலில் தோன்றிய கயல் விழியாளே,
ஆலம் உண்டோனைக் காத்த கரத்தாளே,
வேழ முகத்தோனை ஈன்ற உமையாளே,
ஞாலம் அளந்தோனின் சோதரி மீனாளே

சிவம் சுபம்

Vaalmeeki Raama PuraaNa purushaa


OM

Vaalmeeki Raama PuraaNa Purushaa
Kamba Raamaa Dharma Swaroopaa
Thulasi Raamaa Hanumath Hrudaya
Purandara Raamaa Vittala Raayaa

Annamayya Raama Venkata Vaikunda
Badraachala Raamaa Bhaktha RakshaNaa
Bhattadri Raamaa Roha NivaaraNaa
Thiaga Raamaa Naadha Swaroopa

Azhvaar Raamaa Ananatha Sayanaa
AandaaL Raamaa Aathmaa Nilaya
Swaathi Raama Paduma Naabhaa
Guruguha Raama Pattaabhi Raama

Sankara Raamaa  Shanmatha Raamaa
Madhava Raama Mukya Praanaa
Udayavar Raama Unnatha Varathaa
Sri Siva Raama Thaaraga Naamaa

Sivam Subam

பகவான் தரிசனமே பக்தி செய்வோர்க்கு



பகவான் தரிசனமே பக்தி செய்வோர்க்கு அய்யன் கரிசனமே

திருச்சுழி தந்த திருவாளர், நம் தலைவிதி மாற்றும் பேரருளாளர்.

ஆலவாய் விட்டு அண்ணாமலை வந்தார்,
அருட் ஜோதி ருபனைக் கண்ணாரக் கண்டார்,
ரம்யமாய் அதனுள் லயித்து கலந்தார், தானே அதுவாகி தண்ணருள் பொழிகின்றார்.

அருணாசல ரமணா
அவ்யாஜ கருணா
அஞ்ஞான த்வாந்த ஜோதி ரமணா

சிவம் சுபம்

Vaidyanaadhaaya Namasthae



Vaidyanaadhaaya Namasthae - Vaadhaathi roha nivaaraNaaya  Namasthae... Sri

Baalaambikaa samaethaaya Namasthae
Bava baya Haraaya Namo Namasthae

MangaLa Kuja vandhithaaya Namasthae
Mahaa Mruthyun-jayaaya Namasthae
Muthkumaara Janakaaya Namasthae
Maadhava Dhanvanthri sevithaaya Namo Namasthae.

Sivam Subam 

தையல் நாயகி (viruthham on Thayal Naayagi)

விருத்தம்

தையல் நாயகி
தண்ணருள் பொழி நாயகி
பொய்யிருள் நீக்கும் நாயகி
புவன நாயகி
புவன வைத்ய நாயகி
புவன சௌக்ய நாயகி
புவன சௌபாக்ய நாயகி
பதம் பணிந்து பவம் வெல்வாம்.

சிவம் சுபம்

முத்துக் குமரய்யனே (Sankarabharanam)



Sri Vaitheeswara Thaiyal Naayagi udanurai Muthukumaarar ThuNai

உ  சங்கராபரணம்

முத்துக் குமரய்யனே -  (ஆறு) முகம் மலர்ந்தருளும் மெய்யனே

வைத்யநாதன் கண்மணியே - அன்னை தையல் நாயகி கர வேலு மணியே

(நினக்கு) திருப்புகழ் மாலை சூட்டிடுவேன், (கந்தா) நின் திரு வலங்காரத்தில் நெகிழ்ந்திடுவேன்,
திருவருட்பா அமுது படைத்திடுவேன், (நின்)
நின் திரு நீறணிந் தனுபூதி பெற்றுய்வேன்

சிவம் சுபம்

முத்துக்குமரா வேலா வா வா (Bhajan in Temple)



முத்துக்குமரா வேலா வா வா
முன்னின்றருளும் முதல்வா வா வா

வைத்யநாதன் கண்மணியே வா
வைர முடி சிகாமணியே வா
தையல் நாயகி சிவை மணியே வா
சந்தன களப மண மணியே வா வா

சூரனை ஆட்கொண்ட சுந்தரா வா  வா
அவனை மிஞ்சிய   பாவியா நான் ?
 (நீ)  பன்னிருகண்ணன் அல்லவோ
என்னைப் பார்க்கா திருத்தல் முறையோ, சொல்.

தர்மபுரத் தலைவனே வா
சிரமாறு கொண்ட மன்னனே வா
பதம் பணிந்தேன் வள்ளலே வா வா - உன்
கரம் கொடுத்தாள் ஐயனே வா வா

மயில் மீதே ஏறி வா வா
மனமிரங்கி ஓடி (ஆடி) வா
இருவருடன் இணைந்து வா வா
(என்) இருவினை களைந்து ஆட்கொள் வா.

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

சிவம் சுபம்.

Sivaguru Thanayaa Paahimaam (Bhajan)



Sivaguru Thanayaa Paahimaam
Siva Sankaraa Paahimaam
Aaryaambaa sudha
Paahimaam
Aadhi Sankaraa Paahimaam

Advaithaacharya Paahimaam
Akilaachaarya Paahimaam
Maathru Bhakthaesa
Paahimaam
Mruthyunjaya
Paahimaam

Kaaladi Avathaara Padhimam
Kaamakoti Sarvagya
Paahimaam
Shanmatha sthaapaga
Paahimaam
Sarva Sammathaa Paahimaam

Bhaja Govindaa Paahimaam
Siva Panchaakshara
Paahimaam
Hari Hara Sethu Paahimaam
Bava Hara Suba Hara Paahimaam

Srunga-gireesa Paahimaam
Saaradha Sankara
Paahimaam
Kaamakoteesa Paahimaam
Kaamaskshi Sankara Paahimaam

Bhagavath Paatha Paahimaam
Bhaktha PraaNa
Paahimaam
Prathama Guru Naadha
Paahimaam
Prathyaksha Deva
Paahimaam

Sivam Subam

Sankara Guroh Namo Namaha (Bhajan)

OM

Sankara Guroh Namo Namaha
Sadhaa Sivaaya Namo Namaha
Gnana Baaskaraaya Namo Namaha
Gnaneswaraaya Namo Namaha

Sruthi  Smruthi PuraaNaaya Namo Namaha
Aalaya KaruNaalaya
Namo Namaha
Bhagavath Paathaaya Namo Namaha
Loka Sankaraaya Namo Namaha 

Sathya sankalpaaya Namo Namaha
Sathyaathmanae Namo Namaha
Amaanushyaa Namo Namaha
Aadhi Sankaraaya Namo Namaha 

Vyaasa Darsagaaya Namo Namaha
Viswava rakshakaaya Namo Namaha
Vaakeesaaya Namo Namaha
Visaala Keerthae  Namo Namaha

Chathur Vedhaaya Namo Namaha
Chathur Mata Sthaabakaaya Namo Namaha
Sarvagyaaya Namo Namaha
Kaamakoteesaaya Namo Namaha

Chithaanandaaya Namo Namaha
Chinmayaathmanae Namo Namaha
Chinmudraa karaaya Namo Namaha
Kshema dhaayinae Namo Namaha

Kailaasa darsagaaya Namo Namaha
Sivaananda Nilayaaya Namo Namaha
Sowntharya lahari Vidhaayagaaya Namo Namaha
Bhaja Govinda prachaarakaaya Namo Namaha

Dhik-Vijaya Prathaaya Namo Namaha
Thriloka Vandhithaayaa Namo Namaha
Jagath Guravae Namo Namaha
Shanmatha-achaaryaa Namo Namaha

Sivam Subam

அத்வைதாச்சார்யரே சரணம் (Sri Sankara Jeyanthi)



அத்வைதாச்சார்யரே சரணம்
ஆதி சங்கர பகவத் பாதரே சரணம்

காலடியில் அவதரித்தோய் சரணம்.
முன்பு ஆலடியில் உபதேசித்தோய் சரணம்.

சிவானந்த லஹரியில் திளைத்தோய்  சரணம்,
சௌந்தர்யலஹரி புனைந்தோய் சரணம்.
அரிக்கற்புத மாலைகள் சூட்டினோய் சரணம்
ஷண்மத ஸ்ருதி ஸ்ம்ருதி நாதா சரணம்

நால் மடம் அமைத்தோய் சரணம்.
நால் வேதப் பொருள் உரைத்தோய் சரணம் 
புராண ஆகம நிதியே சரணம்.
கர்ம தர்ம சீலமே சரணம்

காமாக்ஷி உக்ரம் தணிவித்தோய் சரணம்
காமகோடி ஸர்வஞ்னே சரணம்.
தானே அதுவான தேவா சரணம்.
"நான்" அகன்றோர் உள்ளம் உறைவோய் சரணம்.

முழு முதல் குருவேசரணம்
முக்தி மார்க்கம் சமைத்தோய் சரணம்
பரத கண்டம் கண்ட பகவனே சரணம்
இந்துக்களின் இதயத் துடிப்பே சரணம்

ஈடிணையில்லா இறை வடிவே சரணம்

சிவம் சுபம்

அழகென்றால் ரங்கனே அருளென்றால் அருள்வனே (With Sri Sankararin Viruttham)



Sa Chitra saayee bhujagendra saayee nandaanga sayee kamalaanga saayee
Ksheerabhi saayee vatapathra saayee Sri Ranga saayee ramathaam manomay

Sri Bhagavath Paathaar.

அழகென்றால் ரங்கனே
அருளென்றால் அருள்வனே

அரவணையில் துயில்வானே - அகிலத்தைக் காப்பவனே

அகிலாண்ட ஈஸ்வரியின் அன்பு நிறை சோதரனே,
மலர் மகளை மனம் வைத்த மங்கலத் திருமாலவனே,
பாற்கடலில் துயில்வோனே, பூக்கடலில் மிதந்தானே,
சுப பந்துவராளியில்  புகழ் மாலை சூட்டுவோமே.

சிவம் சுபம்

பாவி என்றிகழாது பரம கருணை பொழிவார் (Thillang)



Thilang

பாவி என்றிகழாது பரம கருணை பொழிவார், காவி உடுத்த காம கோடி சங்கரர்

தவறை உணர்ந்தாலே தயை புரிவார், மறை வழி நடக்கும் மார்க்கமும் பகர்வார்

கவிஞனின் உயிரை மீட்ட அய்யன், அர்த்தமுள்ள இந்து மத
நெறிகளை,
எளிய தமிழில் எழுதப் பணித்தார்,  திரைப்பட கவிஞனை மறை வழி நெறி விளக்கும் மா பெரும் "தாசனாய்" ஒளிரச் செய்தார். .... கண்ணை தாசனாய் ஒளிரச் செய்தார். 

சிவம் சுபம்

பிள்ளையாரப்பனே, பிள்ளையாரப்பனே

உ 

பிள்ளையாரப்பனே, பிள்ளையாரப்பனே, என் பிழை பொருத் தருள்வாய் அப்பனே...

கள்ளமில்லா உள்ளம் தருவாயே, அதில் திடமாய் அமர்ந்தென்னை கணிப்பாயே

அன்பைப் பொழிவதில் நீ அம்மை யல்லவோ, அருள் பொழிவதில் நீ அய்யனல்லவோ,
பொருள் தருவதில் நீ மாமனல்லவோ, பகை யறுப்பதில் நீ வேலனல்லவோ

ஷண்மதர் தொழுதிடும் வேழனல்லவோ,
சைவ வைணவர்க்கும் நீ முதல்வனல்லவோ, எளிமையில் நீ காஞ்சி மஹானல்லவோ,
எங்கும் நிறைந்த பரம் பொருளல்லவோ

சிவம் சுபம்

தலைமகனின் வடிவம்.



தலைமகனின் வடிவம்.
இளையோனின் ஞானம்.
அன்னையின் அன்பு.
அய்யனின் அரவணைப்பு.
மாமனின் காவல்.
மாமியின் கனக மழை
கலைவாணியின் கலை நயம்.
மாண்டவரை மீட்கும் அனுமன்.
மங்கலம் பொழி குழந்தையானந்தன். 

வேறு தெய்வம் தேடிச் செல்லவேண்டாம். வேண்டுவோர் வேண்டுமுன் அருளும் நம் குழந்தையானந்த குருபரர் நம்முள்/நம்மிடை இருக்க.

சிவம் சுபம்

கயற்கண்ணி செல்வமே வா

உ   (வாராயோ வெண்ணிலாவே...tune)

கயற்கண்ணி செல்வமே வா  - எங்கள் கற்பகத் தருவே வா

அனு க்ஷணம் உன்னை நினைந்தே - உன் அடி மலர் தன்னை தொழுதேன், கனவிலும் உன்னை மறவேன்,   உன் கழலிணை காட்டி அருள் வா

அன்பர் உள்ளத் திறைவா, அமானுஷ்ய
அஸகாயா,     மந்தஹாஸ வதனா, தந்தம் மறைத்த கஜவதனா..

ராஜ கோபால நாமா - ராஜ ராஜார்ச்சித தேவா, தாமதம் செய்யாதே வா, தண்ணருள் பொழிந்தே வா வா

அரசரடி வாழும் குருவே, அமரரும் தொழுதிடும்  இறையே, ஸ்ரீ சக்கரம் வடித்த தேவா, சிதானந்த ரூபனே வா வா

உன்னை வலம் வந்தே நான்,
உள்ளம் நெகிழ்வேன் ஐயா, உலகுயிர் யாவும் உய்ய உன்னடி இறைஞ்சுவேன் மெய்யா.

Sivam Subam

காந்திமதி அளித்த ஞான சூரியன் (Mohanam)



மோஹனம்

காந்திமதி அளித்த ஞான சூரியன்,
திருபெரும் புதூரில் தோன்றிய முழு நிலவு

விசிஷ்டாத்வைத வீர குரு நாதன், வைணவத்தை வாழ்விக்கும் வரத தாசன்

அரவணையாய் அரியைத் தாங்குவான், 
அனுஜனாய் ராமனைக் காத்து நிற்பான்,
குருவாய் ரங்கனைக் கண்முன் கொணர்வான்,
உலகுயிர் உய்ய தன்னுயிர் தருவான்.

ஜெய ஜெய ஸ்ரீ ராம அனுஜா
ஜெய ஜெய ஸ்ரீராமானுஜா.

சிவம் சுபம்

மதுரை யென்றாலே நாவில் மதுரம் ஊறும் (Revati)

உ  ரேவதி

மதுரை யென்றாலே நாவில் மதுரம் ஊறும்,  மரணம் தவிறும், மங்கலம் நிறையும்.

ஈடிணை உண்டோ தென் மதுரைக்கே, பாடல் பல கொண்ட நான் மாடக் கூடலுக்கே..

இறைவி உதித்த ஊர்,
இறைவனை மணந்த ஊர்,
இருவரும் ஆளும் ஊர்,
அழகனும் வாழும் ஊர்.

குமரன் மணந்த குன்றத்தைக் கொண்டவூர், திருவாதவூரரை ஈன்ற மூதூர், திருச்சுழி ரமணர் ஞானம் பெற்ற ஊர்,  அய்யன் திருமுகப் பாசுரம் வரைந்த சங்கத் தமிழூர்

ஊமை பாடிய ஊர், (குழந்தை) நீரில் நடந்த ஊர், திரு நீற்றுப் பெருமையூர்,  திருவருள் பொழியும் த்வாதசாந்தப் பெருவெளி யூர்.

இசையரசி பிறந்த ஊர், ஈகையில் சிறந்த ஊர்,
மணமிகு மல்லிகையூர்
மரிக்கொழுந்து சூடும் மங்கையர்கரசி யூர்.

சிவம் சுபம்

Nithya KalyaaNa Sundareswari (Amruthavarshini)

உ   

Nithya  KalyaaNa Sundareswari,
Niravathi  suka-daayani, Ninnae nammithini... Meenaakshi

Kathambavana Vaasini, kaarunya-Amrutha varshini, kaivalya suka dhaayini
Nee pathamulae pattithi, Meenaakshi

Hayagreevudu pogadae Aadhi Sakthi Lalithae, Haalaasya kshethra RaaNi, Hari Brahmaathi saevithae, Hathyaaathi paapa kshayagari, Hara Sokkanaatha Pattamahishi... Meenaakshi.

Syaama KrushNa sothari, Thiagaraja manohari, Guruguha Bhaktha vasankari, KUZHANTHAI-YAANANDA Priyakari, Sri Chakra roopiNi, Sritha Jana paalini, Meenaakshi..

Sivam Subam

ஆலடிவாழ் குருநாதா (Mahaperiyavaa)



ஆலடிவாழ் குருநாதா
ஆதி அந்தம் இல்லா குருநாதா 
வேத வடிவ குருநாதா
ஜ்யோதி வடிவ குருநாதா

ஆலிலை தாங்கும் குருநாதா
அகிலமே வணங்கும் குருநாதா
கீதாச்சார்ய குருநாதா
தர்மஸ்வருப குருநாதா

மீனவர் தவமே குருநாதா
வேத வ்யாஸ குருநாதா
பாரதாச்சார்ய குருநாதா
பவவினை களையும் குருநாதா

காலடித் தோன்றலே குருநாதா
வேத உத்தாரண குருநாதா
அத்வைத ஷண்மத குருநாதா
சநாதன சங்கர குருநாதா

உடுப்பி வாழ் உத்தம குருநாதா
"இரண்டே" என்ற குருநாதா
இணையில்லா மத்வ குருநாதா
த்வைத சத்வ குருநாதா

பெரும்புதூர் அளித்த குருநாதா
பெரும் த்யாகச் செம்மலே குருநாதா
விசிஷ்டா த்வைத குருநாதா
விசேஷ ராமானுஜ குருநாதா

துங்கா தீர குருநாதா
தூய ராகவேந்தர குருநாதா
ப்ரஹ்லாதன் வடிவே குருநாதா
பேரரருள் பொழி குருநாதா

வங்காளச் செம்மலே குருநாதா
விவேக ஆனந்தம் அருள் குரு நாதா
அகண்ட அத்வைத சார நாதா (சாராதா நாதா)
அற்புத ராமக்ருஷ்ண குருநாதா

மதுரையின் மாதவமே குருநாதா
மரணத்தை வென்ற குருநாதா
மீனாக்ஷி செல்வமே குருநாதா
குழந்தையானந்த குருநாதா 

காஞ்சி அளித்த குருநாதா
காமாக்ஷி செல்வமே
குருநாதா
ரமணரை அளித்த குருநாதா
ரம்ய சேஷாத்ரி குருநாதா 

திருச்சுழித் தவமே குருநாதா
திருவண்ணாமலை குருநாதா
நான் யார் என்ற குருநாதா
நானிலம் தொழும் ரமண குருநாதா

வடலூர் வள்ளலே குருநாதா
சமரச சன்மார்க்க குருநாதா
ஜீவ காருண்ய குருநாதா
ஜோதி ப்ரகாச ராமலிங்கா

ஷிரடி வாழும் குருநாதா
சிறந்ததை அருளும் குருநாதா
சமயம் கடந்த குருநாதா
சமயம் அறிந்தருள் சாயீ நாதா

பர்த்தி வாழும் குருநாதா
ப்ரேம ஸ்வரூபா குருநாதா
பக்தவாத்ஸல்ய குருநாதா
சேவானந்த சாயி நாதா 

மதுர  (மதுரை) கண்ட இசையரசி
மறைந்தும் மறையாத கொடை அரசி
பாடுவோர்க்கெல்லாம்
குரு மாதா
சிவத்துள் கலந்த சுப மாதா

விழுப்புரம் கண்ட மெய்ப்பொருளே
விண்ணோர்க்கும் கிட்டா  அரும்   பொருளே
நடமாடும் தெய்வமே பரமேசா
நம்பிப் பணிந்தேன் பரமாச்சார்ய. 

குருநாதா ஸத் குருநாதா 
குருநாதா ஸத் குருநாதா 
குருநாதா ஸகல குருநாதா 
குருநாதா ஸர்வ குருநாதா 

பதம் தந்தாள் ஸர்வ குருநாதா.

சிவம் சுபம்.

Sai bhajan - Parthi Vasan

OM

Parthi vaasan
Parama DayaaLan
Nithya Maheswaran
Sathya NaaraayaNan

Sakthi Hrudayan
Prema Swaroopan
Sevaanandan
Saayi Naathaan

Ninakkum munnae
Naeril thondruvaar (Naam)
Ninaiththa thellaam
Ninaikku-mun mudippaar
(Ayyan) Kuraiyillaa
Vaazh-varuLi
Koodavae iruppaar...
Kuthoo-galippaar.

Saayi NaaaraayaNam
Sathya NaaraayaNam
Saayi Sadhaa Sivam
Saayi Sadhaa Subam.

Sivam Subam

நரசிம்மன் வருவானே (Hamsanandhi)

உ ஹம்ஸாநந்தி

நரசிம்மன் வருவானே
நல்லோரைக் காப்பானே

தாயின் வயிறு புகுந்தால் தாமதமாகு மென்று தூணுள் புகுந்தானே, வெளிவந்து துஷ்டனை வதைத்தானே

ஸ்வாதி கூடிய ப்ரதோஷ வேளையில் மீண்டும் வருவானே, ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய்வோருககு அருளைப் பொழிவானே, அகம் அணைப்பானே

கடினத் தவம் ஏதும் வேண்டான், கணமே நினைத்தாலும் காட்சி தருவான், கண் இமைக்கும் முன்னே கவலைகள் தீர்ப்பான், நமனையும் உதைத்து நல்லோரைக் காப்பான்.

சிவம் சுபம்

வா வா வா வா வா நரசிம்மா (Kaapi)

OM

காபி

வா வா வா வா வா நரசிம்மா - வந்தெமைக் கா வா நரசிம்மா

அன்று ஒரே ஒரு இரணியன், இன்று எண்ணற்ற எத்தனையோ இரணியர்.

ஊழல் செய்து உத்தமரை அழித்து பாமரரை வதைக்கும் பாதகர்களை நீ பாரினில் விட்டு வைத்தல் முறையோ ?
பெண்களை சிறுமியரைக் கொடுமைப் படுத்தும் கயவரை நீ கிள்ளிக் களைய வேண்டாமோ

கூப்பிடும் முன்னே வருபவன் அன்றோ ?
நல்லோரைக் காக்கும்
நாதன் அன்றோ ?
பறந்தோடி வா எங்கள் கருட வாஹனனே, பாரினில் உமையன்றி யாரெம் துணை அய்யா?

சிவம் சுபம்

தொல்லை யெலாம் தீர்க்கும் நெல்லையப்பன் (Sarasvati)

உ  ஸரஸ்வதி

தொல்லை யெலாம் தீர்க்கும் நெல்லையப்பன் - எல்லையிலா கருணை அம்மையப்பன்

பரணிக் கரை வாழும் பரம தயாளன், இத்தரணி ஆளும் அய்யன், சாலிவாடீசன்

ஞானகாந்தி மதிநாதன்
தீன தயாபரன்,
ஆறுமுகத் தேவனை ஈன்ற பஞ்சாக்ஷரன்,
முக்குறுணி யானும் தொழும்
முக்கண் முதல்வன்,
தாமிர சபை யாடும் காமித பல நாதன்.

சிவம் சுபம்

காந்திமதி காந்திமதி

உ 

காந்திமதி  காந்திமதி 
அருள்வாய் எமக்கே மன நிம்மதி

அருள் மழை பொழியும் வான்மதி
ஆனந்தம் அருளும் நிறைமதி

அஞ்ஞான இருளகற்றும் சுடர்மதி
அகம் குளிரவைக்கும் எழில்மதி
அறம் தழைக்கச் செய்யும் நீதிமதி
அடைந்தோம் உந்தன் சரணாகதி

நெல்லையில் ஒளிரும் விண்மதி
தொல்லைகள் நீக்கும் குணமதி
எல்லையில்லாக் கருணை முழுமதி
எம் வாழ்வில் இணைந்த சாரமதி

சிவம் சுபம்

இன்று கும்பாபிஷேகம் கொண்ட அன்னைக்கு சமர்ப்பணம். (Of course She heard this several times at Her Nellai abode). Sivam Subam

KalyaaNa Sundaran Valam varugiraan (Poorvi Kalyani)

OM
PoorvikalyaaNi

கயற்கண்ணி என்றிட கருணை பொழியும்.
காந்திமதி என்றிட
ஞானம் சுரக்கும். 
மீனாக்ஷி என்றிட ராஜ வாழ்வு நிலைக்கும்.
காந்திமதி என்றிட இந்திய பதவி கிட்டும்.
மீனாக்ஷி என்றிட மங்கலம் நிலைக்கும்.
காந்திமதி என்றிட காலனையும் வென்று வாழலாம்.

சிவம் சுபம்.

KalyaaNa Sundaran Valam varugiraan - KayaR kaNNi karam pidiththu Valam varugiraan

Nandthi Devan mael Valam varugiraan  - NallaruL pozhinthae Valam varugiraan

Kaanthimathi Naathaan Valam varugiraan, Kumbhaa-bishekam yaetru Valam varugiraan,
ThaaLa vaadhyam muzhanga Valam varugiraan.
ThaNNaruL pozhinthu Valam varugiraan..

Siva Siva Siva endru jebithuduvom, Bava bayamindri vaazhnthiduvom,
Sivai patham siram thaangi kaLiththiduvom,
Subamellaam petru niRaivuRuvom.

Sivam Subam

கயற்கண்ணால் கவர்ந்திழுத்தாள்



கயற்கண்ணால் கவர்ந்திழுத்தாள்
கயிலை நாதனை வரவழைத்தாள்

மதுரையில் அவனை மணம் முடித்தாள்
மகுடமும் சூட்டி (உலகை) ஆள வைத்தாள்.

ஆடல் அறுபத்தி நான்கு புரிய வைத்தாள் 
கூடலை சிவராஜதானி யாக்கி,
உக்கிர வழுதியை ஈன்றெடுத்தாள்.
அவனை அரசு ஆளவைத்து
தான் மறைந்தாள். தண்ணருள் பொழிந்தாள்

சிவம் சுபம்

நினைக்கும் நாளெல்லாம் (Nrusimhar Song + Aadi Aadi Viruttham)


Viruttham
Song


நினைக்கும் நாளெல்லாம் (அய்யன்) பிறக்கும் நாளே.... அவனை நினையா நாளெல்லாம் நாம் பிறவா நாளே

காணும் அனைத்தையும் படைத்தவனை, ஒரு கல் தூணுள் மட்டும் தேடுதல் சரியோ ?

பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்தவனை, தோன்றும் அனைத்துள்ளும் வ்யாபித்திருப்போனை,
தூயவர் மனத்தினுள் சுடர் விடும் பேரோளியை, அன்னையை மடிவைத்த அருள்மிகு நரஹரியை.....   

சதுர்தசியில் அவனை செபித்துக் கொண்டாடுவோம், ஸ்வாதியில் அவனை வலம் வந்து பலம் பெறுவோம், ப்ரதோஷ வேளையில் திருமஞ்சனம் செய்தே பிறவிக்கடலை கடந்தேறுவோம்.

சிவம் சுபம்.

எம் பெருமான், நம் பெருமான்

OM

எம் பெருமான், நம் பெருமான், நம் பெருமான், நரசிங்கப் பெருமான்.

கல் தூணுக்கும் பெருமை சேர்த்தான், கல் நெஞ்சனையும் தன் மடி வைத்த கனவான்.

அழைக்கும் முன் வந்த அனந்தன், பிழை செய்தோன் சந்ததியை காத்த தயாபரன், வேடுவப் பெண்ணை மணந்த சன்மார்க்கன், நாடி வந்தோரைத் தேடி வந்து அருள்வான்.

அஹோபிலத்தான் அவன் அன்பருள்ளத்தான்,
கடிகாசலன் அவன் கடும் தவத்தான்,
பரிக்கலான் அவன் பரம தயாளன், ஊர்க்காடன் அவன் கற்பக வ்ருக்ஷன்.

சிவம் சுபம்.

Sathya NaaraayaNam (Shubapanthuvaraali)



SubapanthuvaraaLi

Sathya NaaraayaNam
Shaantha NaaraayaNam
Vadu NaaraayaNam
Vaishya NaaraayaNam

Vradha NaaraayaNam
Varatha NaaraayaNam
Vaikunta NaaraayaNam
Vathsalya NaaraayaNam

Veda NaaraayaNam
Vyaasa NaaraayaNam
Theertha NaaraayaNam
Dravya NaaraayaNam

Naadha NaarayaNam
Geetha NaaraayaNam
Kathaa NaaraayaNam
Kaavya NaaraayaNam

Shanka NaaraayaNam
Chakra NaaraayaNam
Sriman NaaraayaNam
Sri Lakshmi NaaraayaNam

Sradhdhaa NaaraayaNam
Bhakthi  (Bhaktha) NaaraayaNam
Badri NaaraayaNam
Pathitha Paavanam

Pathitha Paavanam
Sathya NaaraayaNam
Sathya NaaraayaNam
Pathitha Paavanam

Sivam Subam

மதுரம் பொழியும் மதுரைக் காளி

OM

மதுர காளி  மதுர காளி  
மதுரம் பொழியும் மதுரைக் காளி  

தினமும் உன்னைத் தொழுவேன் தாயே, திங்கள் வெள்ளியில் காட்சி தரும் மாதே

திரிநயனி, திரி லோக ஜனனி, திரிபுர ஸுந்தரி,
திரிசூலினி, அதர்மத்தை அழிக்கும் அக்கினிப் பிழம்பே, அன்பரை அணைக்கும் குளிர் நிலவே

பெருநகர் மதுரை விடுத்து நீயே சிறுவாச்சூரில் வந்தமர்நதாயே, பெரியவர் சந்திர சேகரின் உள்ளொளிர் காமாக்ஷி  அன்னையே

தலைமகனை அருகில் வைத்த தாயே, அலைமகள் கலைமகள் பணி ஏற்கும் மாயே, சிறந்ததையே அருளும்
சிம்ஹ வாஹினியே, சிரம் தாழ்த்திப் பணிந்தேன், (உன்) பதம் தருவாயே.

சிவம் சுபம்.

கொடியிடையாளே கோலவிழியாளே

உ 

கொடியிடையாளே,  கோலவிழியாளே, வா என எனை அழைத்து  வரமழை பொழிந்தாளே...  

பாவி என்றென்னை தள்ளாத உமையவளே, தன் பாதம் தனைக் காட்டி, என் பவமதைக் களைந்தாளே

மயிலை வாழ்பவளே, மரகத மேனியளே,
இச்சை க்ரியை ஞான சக்தியாம்  தாயவளே,
செவ்வாய் மலர்ந்தாளே,
செந்தமிழ் கவிதை ஒன்றை பாடெனப் பணித்தாளே, பரிந்தருள் புரிந்தாளே...

சிவம் சுபம்.

(கோயில் வளாகத்தில் உள்ள பாடலொன்றை எனக்குத் தெரிந்த வரையில் ராகமாலிகை விருத்தமாய் பாடும் வாய்ப்பளித்தாள், அன்னை)

கள்ளப்பயல் எனையும் செல்லப் பிள்ளை



கள்ளப்பயல் எனையும் செல்லப் பிள்ளை என்றே மடி வைத்து கொஞ்சினளே, மதுரம் பொழிந்தனளே

திரிபுரசுந்தரி எனும் பெயர் தாங்கி வந்தனளே, திருவாய் மலர்ந் தவளே திருவருள் பொழிந்தனளே

ஆடியிலும் தையிலுமே
மடி ஏந்தி வருவாளே, மங்கலப் பொருளை ஏற்று என் குலம் காப்பாளே, முழு நிலவு நந்நாளில் அபிஷேகம் கொள்வாளே, அருள் மாரி பொழிவாளே

சந்திரசேகரரும் சங்கர குரு தேவரும் போற்றிடும் காளி யவள், தங்கத் தேரில் வருவாள், சிம்ஹ வாஹினி அவள்

சிவம் சுபம்

எம்மிடை வாழும் தெய்வம் (Aahirbhairav)

உ 
ஆஹிர்பைரவ்

எம்மிடை வாழும் தெய்வம் சந்த்ரசேகரர்.
ஏழுலகும் போற்றும் குரு
சந்த்ரசேகரர்

அனுஷத்திற் கனுக்ரஹித்த சந்த்ர சேகரர்
ஆறாம் வேதம் உரைத்த சந்த்ரசேகரர்

காம கோடீஸ்வரர் சந்த்ர சேகரர்
ஒப்பிலா மறைக்காடர் சந்தர் சேகரர் 
காமாக்ஷியின் கருணை சந்த்ர சேகரர் 
ஏகானேகர் சந்த்ர சேகரர்

அத்வைத சாகரம் சந்த்ர சேகரர்
ஸநாதன சாதகர் சந்த்ர சேகரர்
ஷண்மத போஷகர் சந்த்ர சேகரர்
எம்மதத்தார்க்கும் இறைவன் சந்த்ர சேகரர்

தமிழ் மறை ஞானி சந்த்ர சேகரர்
த்ராவிட பூஷணர் சந்த்ர சேகரர்.
தென்னாடு கண்ட சந்த்ர சேகரர்
எந்நாட்டிற்கும் இறைவர் சந்த்ர சேகரர். 

சிவம் சுபம்

Chandrasekari Chandrasekari Sankari Saaradhae Paahimaam (Amruthavarshini)

OM

AmruthavarshiNi

Chandrasekari  Chandrasekari  Sankari Saaradhae Paahimaam

Kamakoteeswari KaaruNya-amrutha varshini, Kaamaskshi Rakshsmaam

Adhishtaana Maheswari Aacharya roopiNi, Paramaesi, Para-brahma swaroopiNi, Jaya-Vijayendra poojithae, Jaganmaathae, Jaya Jaya Sankara gosha priyae paalayamaam.

Sivam Subam