உ
தினசரி ப்ரார்த்தனை 35
விருத்தம் - அருள் விளக்க மாலை* வள்ளல் பெருமான்
(அற்புதமான சிவ குரு துதி)
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள்அமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வ நடத் தரசே நான் செய்மொழிஏற் றருளே.
பராபரக்ண்ணிகள் - தாயுமானவ ஸ்வாமிகள்
இராக மாலிகா
ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்
பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4.
எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே. 7.
அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே. 14.
பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை
தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே. 28.
ஓயாதோ என்கவலை உள்ளேஆ னந்த வெள்ளம
பாயாதோ ஐயா பகராய் பராபரமே. 29.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே. 35.
எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச்
சிந்தைகுடி கொண்டருள் தேவே பராபரமே. 123.
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே.155.
சிவம் சுபம்
*பொருளுரை
அருள் விளக்கமும் அருட் சுடருமாகிய அருள் சோதி உருக்கொண்ட சிவ பரம்பொருளே! ஞான அருள் அமுதமே! அருளே நிறைந்த அருள் வடிவப் பொருளே! மனத்திற் படியும் இருளைப் போக்கி என் உள்ளம் முழுதும் இடம் கொண்ட தலைவனே! எனக்கு அறிவும், உயிரும், இனிய உறவுமாகிய பெருமானே! மயக்கத்தை நீக்கி யருளிய பெரிய மாணிக்க மணியே! மாற்றுக் காண மாட்டாத பொன் போன்றவனே! அம்பலத்தில் கூத்தாடுகின்ற ஞான மணவாளனே! எனக்கு ஞான விளக்கம் தந்த திருவருளை ஆள்பவனும், ஞானத் திருவுருவை உடையவனும், தெய்வ நடம் செய்பவனுமாகிய பெருமானே! நான் தொடுக்கின்ற சொல் மாலையை ஏற்றருளுக.
----------------
உ
சதுர்த்தி நாயகன் சரணம்
விருத்தம் - அபிராமி பட்டர் பெருமான்
உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும், ஒரு தொழிலினை பண்ணும் . பகரும் பொழுதும்
நின் பாதத்திலே நண்ணும் கருத்து என்றைக்கு நல்குவையோ, விண்ணும் புகழ் திருக் கடவூர் வாழ் கள்ள விநாயகனே
**
வினை களையும் விநாயகன் இருக்க பயம் வேண்டாமே
மூவரூம் தேவரும் வணங்கும் முதல்வன், தடைகளைத் தகர்த்து
தளர்வின்றி காப்பான்
பரிபூரணமாய் நம்பிப் பணிந்தால்
நோயற்ற வாழ்வெனும் குறைவற்ற
செல்வம் தந்திடும் மோதஹ கரனை,
நாளும் பொழுதும் துதித்திடுவோம்,
நலமெல்லாம் பெற்று நிறை-வுறுவோம்
,
எளிமையின் வடிவம், கருணையின் பிறப்பிடம், எங்கும் நிறைந்த ஏக தெய்வம், வெற்றி வேழன் பாதம் பற்றி அகவல் இசைத்து அறுகு சூட்ட
பகவன் அவனே நேரில் தோன்றி
பவமதைக் களைந்து சுபம் அருள்வானே
சதுர்த்தியின் நாயக போற்றி போற்றி
சங்கட ஹரனே போற்றி போற்றி
மங்கள மூருதி போற்றி போற்றி
மஹா கணபதி போற்றி போற்றி
சிவம் சுபம்
--------------
உ
அளப்பறியா
அனுமனின் மஹிமை
வீடணனுக்கு
இலங்கை,
சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை,
குஹனுக்கு ஓட யாத்திரை,
சத்ருக்கனனுக்கு பரத சேவை,
பரதனுக்கு பாதுகை,
இலக்குவனுக்கு பாத சேவை,
இலக்குமி சீதைக்கு தன் மனம் தந்து
அமர்ந்தான் அண்ணல்
நிலையாக
அனுமன் இதயத்தில்.
அனுமனை நினைந்தால் போதுமே அண்ணல் நெகிழ்வானே!
அனுமனை வலம் வந்தால் போதுமே,
நூற்றெட்டும் வலம்
வந்த பயனே !
சிவம் சுபம்
உ
நம் இசைத தெய்வத்திற்கு
குரு பூர்ணிமா சமர்ப்பணம்
விருத்தம் - தோடி
அன்னையே,
ஆரமுதே,
இசையே, இரக்கமே
ஈகையே,
உண்மையே, உழைப்பே, உபாசனையே, உயர்வே,
ஊக்கமே,
எழிலே, எளிமையே,
ஏற்றமே,
ஐயமே இல்லாத பக்தியே,
ஒப்பிலாமையே,
ஓம்காரமே,
ஓளதார்யமே ,
அருள்வாய் சுபமே சிவமே, சுபமே சிவம்
சிவமே சுபம்.... சிவம் சிவம் சிவம்
சுபம் சுபம் சுபமே
**
ஈவதெற்கென்றே இசைத் தாயே
இசையுள் இறையை கண்ட தாயே
பக்தியுடன் பண்பை வளர்த் தாயே
கண்டத்தால் கண்டங்களை இணைத் தாயே
படி யளப்போனுக்கே படி (பாடி) அளந் தாயே
பாடும் (பாமரர்) அனைவர்க்கும் குரு நீயே
பாரத ரத்தினமே ! பார் புகழ் ஸுநாதமே!
சிவத்துள் கலந்த சுபமே!
சூரிய சந்திரர் உள்ளவரை**
உன் புகழ் என்றும் ஓங்குமே !ஒளிருமே !
சிவம் சுபம்
**
"சூரிய சந்திரர் உள்ளவரை உன் புகழ் இருக்கும் - is the blessing our Amma got from our Mahaa Periyava when He listened to Amma's soulful rendering of the Mela Raaga Chakra Maalikaa (in 72 ragas) composed by Sri Mahaa Vaidyanaadha Sivan (1844-1892). As usual, Amma used to sing this72 Raaga Maaligaa also, without any notes or reference.
உ
குரு மஹா ஸ்வாமிகளுக்கு குரு பூர்ணிமா சமர்பப்பணம்
ஸரஸ்வதி
வேத ஸரஸ்வதி ஸாஸ்த்ர ஸரஸ்வதி
ஷண்மத ஸரஸ்வதி ஸநாதன ஸரஸ்வதி
தர்ம தபோநிதி, தயாசாகர நிதி
காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி சரணம் ப்ரபத்யே
***
வேதமும் நீயே வேதாந்தமும் நீயே
தர்ம ஸ்வரூபமே தயா நிதியே
ஸரஸ்வதியே ஞான ஸரஸ்வதியே
தபோ நிதியே ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியே
பாரினுள் வந்த பரமேஸ்வரனே, காவியில் ஒளிரும் காம கோடீசனே, தவம் செய் தெங்கள் அவம் போக்கிடும் மதி சேகரனே, ஸ்ருதி ஸாகரனே
இருவர் காணா பதம் பதித்து நடந்தாய், இன் சொல்லால் எம் இதயம்
கவர்ந்தாய், ஆறாம் வேதம் உரைத்த கண்ணனே, நாராயண ஸ்ம்ருதி செய் நமசிவாயனே
**
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஆலடி சங்கர காலடி சங்கர
காலடி சங்கர காஞ்சி சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர
காமாக்ஷி சங்கர ஸ்ரீ சந்த்ர சேகர
சிவம் சுபம்
OM
Sri Gurubyo Namah
ஸ்ரீ குருப்யோ நமஹ
Sarva Guru Sannidhi aruLum
Sakala kaarya Sidhdhi
சர்வ குரு சந்நிதி அருளும் சகல கார்ய சித்தி
Nirai mathiyodu nimmathiyim aruLum
நிறை மதியோடு நிம்மதியும் அருளும்
Kurai kaLainthu GuNam aruLum
குறை களைந்து குணம்
அருளும்
Ulaguyirai oru kudumbam aakkum.
உலகுயிரை ஒரு குடும்பம் ஆக்கும்
Karai saerkkum, irai kaZhal serkkum.
கரை சேர்க்கும் இறை கழல் சேர்க்கும்
Jaya Guru Devaa
Suba Guru Devaa
ஜெய குரு தேவா
சுப குரு தேவா
Jaya Guru Devaa
Suba Guru Devaa
ஜெய குரு தேவா
சுப குரு தேவா
Sivam Subam
சிவம் சுபம்
உ
குரு (பூர்ணிமா) வந்தனம்
ஸ்ரீ குருப்யோ நம:
ஆலடி ஆலிலை காலடி
காமகோடி ச்ருங்கேரி
உடுப்பி ஸ்ரீ ரங்கம் துங்காதீரம்
க்ஷீரடி அருணை
பர்த்திபுரி
தக்ஷிணேச்வரம் தர்மபுரம்
ஊஞ்சலூர் வடலூர் அரசரடி
திருவையாறு திருக்கோவிலூர்
மற்றும் உலகெங்கும் வாழும் உன்னத
ஸத்குரு நாத தெய்வங்களே
சரணம் சரணம் சரணம் சரணம்
தரணும் தவ பத கமலங்களே !
தரணும் தவ பத கமலங்களே !
சிவம் சுபம்
ஓம்
தினசரி பிரார்த்தனை 35
அருணகிரி நாதர் திருவடிகளே சரணம்
திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி
விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்
பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று
கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்
திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.
**
கந்தர் அலங்காரம்
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
கந்தர் அலங்கார நூல் பயன் $$$
சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார் கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
குருவாக வந்து அருள்வான் கந்தன் - கந்தர் அனுபூதி**
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
** மஹா பெரியவர் வாக்கு
இந்த அற்புத மங்களப் பாடலை தினமும் பக்தியோடு இசைத்தால், "முருகப் பெருமான் குருவாய் வருவான், வருவாயும் தருவான்" - அதாவது, முருகன் குருவருளோடு திருவருளும் பொழிவான் என்கிறார் நமது காஞ்சி மஹா பெரியவர் அவர்கள். நம் குழந்தைகள் தினமும் இந்த ஒரு பாடலையாவது காலை/மாலை வேளைகளில் பாராயணம் செய்து அனைத்து நலன்களும் பெற்று முன்னேறலாம்.
சிவம் சுபம்
PS
Covid or for that matter, all physical or mental health issues will vanish n will never ever come near us, if we chant or recite these hymns with sradhdhhaa n bhakthi, at least once a day.
Humble appeals to our younger members of our MS group to please recite at least some of the above Divine Hymns daily and also train their children in singing some of the Hymns shared by all in the Group n post the audio recordings in due course. Sivam Subam
$$$
சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; இயமனுடைய
போருக்கும் அஞ்சமாட்டார்கள்; இருண்ட நரகக் குழியை அடைய
மாட்டார்கள்; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள்; புலி கரடி யானை
முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள்;
கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய
கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும்
கற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர்.
உ
தினசரி ப்ரார்த்தனை 34
அய்யன் அருணகிரிநாதர் குரு பூஜை தின வந்தனங்கள்.
திருப்புகழின் நூற் பயன் (பலஸ்ருதி)
ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந்நாளும் வர்னம் அரசாள் வரம்பெறலாம், மோனவீ
ஏறலாம் யானைக்கு இளையர்ன் திருப்புகழைக்,
கூறினார்க்கு ஆமேஇக் கூறு.
***
திருஎழுகூற்றிருக்கை**
இராகமாலிகை
ஓர் உருவாகிய தாரக பிரமத்து
ஒரு வகைத் தோற்றத்து இரு மரபு எய்தி
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை
இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை
ஓராச் செய்கையின் இருமையின் முன் நாள்
நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
மூவரும் போந்து இரு தாள் வேண்ட
ஒரு சிறை விடுத்தனை
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம் செய்தனை
நால் வகை மருப்பின் மும்மதத்து இரு செவி
ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினில் இரு வகைத்து ஆகிய
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால் வாய் முகத்தோன் ஐந்து கைக் கடவுள்
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்து எழுத்து அதனில் நான் மறை உணர்த்தும்
முக்கண் சுடரினை இரு வினை மருந்துக்கு
ஒரு குரு ஆயினை
ஒரு நாள் உமை தரு இரு முலைப் பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நால் கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறு முகன் இவன் என
எழு தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறு மீன் பயந்தனை ஐந் தரு வேந்தன்
நான் மறைத் தோற்றத்து முத்தலை செம் சூட்டு
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
காவிரி வட கரை மேவிய குரு கிரி இருந்த
ஆறு எழுத்து அந்தணர் அடி இணை போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே
சிவம் சுபம்
இந்த ஒரு துதியைப் பாடினாலே அனைத்து திருப்புகழையும் பாடிய பலன் என்று என் பெற்றோர்கள் என் சிறுவயதில் அறிவுறுத்தியதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த text (பாடல் வரிகள்) நம் பாராயணத்திற்காக பதம் பிரித்து அமைந்திருக்கிறது. Original text is a bit too tough for us.
பெரியதாக (lengthy ஆக) இருக்கிறது என்று நாம் பயப்பட வேண்டாம். ஓரிருமுறை படித்தால்
எளிமையாக மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் பாராயணம் செய்து விடலாம். முயற்சி செய்து குரு (அருணகிரி) மற்றும் குஹன் அருளையும் பெற்று உய்வோம்.
பொருள்
வரிசை 1
ஓருருவாகிய தாரகப் பிரமத்து
ஓர் உருவாகிய = ஒரு பொருளாகிய ( ப்ரம்ம ஸ்வரூபமாம் பெருருவ
மாகிய ஓர் உருக் கொண்ட)
தாரக = பிரணவமாகிய.
பிரமத்து = முழு முதற் பொருளில்.
ஒரு வகைத் தோற்றத்து இரு மரபெய்தி ஒன்றாய்
ஒரு வகைத் தோற்ற = ஒரு வகையான உதயத்தில்
இரு மரபு எய்தி = சக்தி, சிவம் என்னும் இரண்டின் ஸம்ப்ரதயாத்தில்
( வழியில்)
ஒன்றாய் = ஒரே வடிவாமாக
ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை இரு பிறப்பாளரில் ஒருவன் ஆயினை
ஒன்றி = அமைவுற்று (பொருந்தி)
இருவரில் தோன்றி = அந்தச் சத்தி-சிவம் எனப்படும் இருவராலும் உண்டாகி
மூவாது ஆயினை = மூப்பு இல்லாத இளையவனாக விளங்குகின்றவன் ஆனாய்
இரு பிறப்பாளரின் =
இரு பிறப்பாளர் என்னப்படும் அந்தணர் மரபில்
ஓருவன் ஆயினை =
ஒப்பற்றவனாகத் திகழ்ந்தாய்
ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள் நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை
ஓராச் செய்கையின்
ஓரா = (பிரணவத்தின் பொருளை) அறியாமல்.
செய்கையின் = (பிரமன்) விழித்தக் காரணத்தால்
இருமையின் = பெருமையுடன்
முன்னாள் = முன்பு ஒரு நாள்
நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
நான் முகன் =
பிரமனுடைய.
குடுமி = குடுமியை
இமைப்பினில் = இமைப் பொழுதில்
பெயர்த்து = கலையச் செய்து
மூவரும் போந்து = சிவன், விஷ்ணு, இந்திரன் ஆகிய மூவரும் உன்னிடம் வந்து
இரு தாள் வேண்ட = உனது இரண்டு திருவடிகளைப் பணிந்து முறையிட்டு வேண்ட.
ஒரு சிறை விடுத்தனை = (நீ இட்ட) சிறையினின்றும் அந்தப்
பிரமனை விடுவித்தாய்.
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர்
உடுத்த நானிலம் மும்மதத்து இரு செவி ஒரு கைப்
பொருப்பன் மகளை வேட்டனை
ஒரு நொடி அதனில் = ஒரு நொடிப் பொழுதில்
இரு சிறை மயிலில் = இரு பெரிய சிறகுகளை உடைய
மயில் மீது ஏறி.
முந்நீர் உடுத்த = (ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் மூன்றும் கலக்கும்) கடலை ஆடையாக உடுத்துள்ள
நானிலம் அஞ்ச = குறிஞ்சி,
முல்லை, மருதம்,
நெய்தல் எனப்படும் நால் வகைத்தான பூமி
அஞ்ச நீ வலம் செய்தனை = பயப்படும்
படி நீ அதை வலம் வந்தாய்
நால் வகை மருப்பின் = நான்கு வகைத் தந்தங்களையும
மும்மதத்து = கர்ண, கபோல, பீஜ மதங்கள் என்னும் மூன்று
வகை மதங்களையும்
இரு செவி = இரண்டு காதுகளையும்
ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒரு கை = ஒப்பற்ற துதிக்கை ஒன்றையும் கொண்ட
பொருப்பன் = மலை போன்ற ஐராவதத்தை உடைய
இந்திரனுடைய
மகளை = மகளாகிய தேவசேனையை
வேட்டனை = மணம் செய்து கொண்டாய்
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன்
தனக்கு மூத்தோன் ஆகி நால்வாய் முகத்தோன ஐந்து கைக் கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்து எழுத்து அதனில் நான் மறை உணர்த்து முக்கண் சுடரினை இரு வினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை
இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
ஒரு வகை வடிவினில்
ஒரு வகை வடிவினில் = ஒரு வகையான யானை வடிவில்
இரு வகைத்து ஆகிய = முது களிறு,
இளங்களிறு என இரண்டு
வகையாகவும் வந்து காட்சி தந்த
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
மும்மதன் தனக்கு = மும்மதத்துடன் வந்த யானைக்கு.
மூத்தோனாகி = மூத்தவனாகி விளங்கி.
நால் வாய் முகத்தோன் = தொங்கும் முகத்தை உடையவனாகிய
ஐந்து கைக் கடவுள் = ஐங்கரக் கடவுள்
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
அறுகு சூடிக்கு = அறுகம் புல்லைத் தரித்தவனாகிய கணபதிக்கு
இளையோன் ஆயினை = தம்பியாக திகழ்கின்றாய்
ஐந்து எழுத்து அதனில் = ஐந்தெழுத்தாகிய பஞ்சாக்ஷரத்தின்
மூலமாக
நான் மறை உணர்த்தும் = நான்கு வேதங்களும் பரம்பொருள்இவரே
என உணர்த்தும்
முக்கண் சுடரின் = சூர்யன், சந்திரன், அக்னி என மூவரையும் தமது
கண்களாகக் கொண்ட
ஐ = தனிப்பெரும் தலைவரும்
இரு வினை மருந்துக்கு
இரு வினை = நல் வினை, தீ வினை (புண்யம், பாபம்)
என்னும் இரண்டு வினைகளையும் ஒழிக்கும்
மருந்துக்கு = மருந்தாய் விளங்கும் அருமருந்தான சிவபெருமானுக்கு
ஒரு குரு ஆயினை
ஒரு = ஒப்பற்ற
குரு ஆயினை = குருவாக அமைந்தாய்
ஒரு நாள் உமை இரு முலைப்பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக்
கிழவன் அறுமுகன் இவன் என
எழில் தரு அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான் மறைத் தோற்றத்து முத்தலை செம் சூட்டு அன்றில் அங்கிரி
ஒரு நாள் = முன்னர் ஒரு நாளில்
உமை இரு முலைப்பால் = உமா தேவியின் பெருமை வாய்ந்தமுலைப் பாலை
அருந்தி = பருகி
முத்தமிழ் விரகன் = இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவனாய்
நாற் கவி ராஜன் = ஆசு, மதுரம்,
சித்திரம், விஸ்த்தாரம் என்னும்நான்கு
விதமான கவி பாடுவதிலும் வல்லவனாய்
ஐம்புலக் கிழவன் = சுவை, ஒளி, ஸ்பரிசம், சப்தம், மணம்முதலியவற்றை அறியும் ஐம்புலன்களையும் தன் வசத்தில் உடையோனாய்
(ஜிதேந்திரியனாய்)
அறு முகன் இவன் என = ஆறுமுகக் கடவுளே இவன் என்றுயாவரும்
சொல்லிப் பரவும் படியாக
எழில் தரும் அழகுடன் = இளமை விளங்கும் அழகுடனே.
(எழுத அரும் - எழுதுவதற்கு அரிய, ஓவியர்களால் வரையவொண்ணாத)
கழு மலத்து உதித்தனை = (பெயர் சொல்வதின் மூலம்
மும்மலங்களையும் கழுவ வல்ல) சீகாழியில்(ஞான சம்பந்தராகத்)
திரு அவதாரம் செய்தனை
அறுமீன் பயந்தனை
அறு மீன் = கார்த்திகை மாதர்களாகிய ஆறு நட்சத்திரங்களை
பயந்தனை = தாயாக்கிய பேறு பெற்றாய்
ஐந்தரு வேந்தன் = ஐந்து வகையான ( ஹரிச்சந்தனம்,
ஸந்தானம், மந்தாரம், பாரிஜாதம்,
கபகம்) தருக்களை உடைய பொன்னுல கத்துக்கு அரசனாக
நால் மறைத் தோற்றத்து = நாலு வகை தோற்றங்களுள்
ஒன்றானதும்
(ஸ்ராயுஜம், உத்பீஜம்,
அண்டஜம், ஸ்வேஜதம்)
(அண்டஜம் - முட்டையில் தோன்றுவன - பறவைகள், மீன்கள், பாம்புகள், முதலியன; சுவேதஜம் - அழுக்கில், வேர்வையில் தோன்றுவன பேன், கிருமி முதலியன; பீஜம்- விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றுவன, மரம், செடி, கொடி முதலியன; சராயுஜம்- கருப்பையில் தோன்றுவன விலங்கு, மனிதர், முதலியவை;)
முத்தலைச் செம் சூட்டு அன்றில் அங்கிரி
முத்தலை = முப்பிரிவுகளைக் கொண்ட ( சூலத்தை போன்று)
செம் சூட்டு = செவ்விய உச்சிக் கொண்டையை உடையதுமான
அன்றில் = அன்றில்
பறவையின் பெயர் கொண்ட அங்கிரி = கிரௌஞ்ச மலை
(கிரரெளஞ்ச மலை ஒரு பறவையின் பெயரைக்கொண்டது. அந்த பறவை பிறப்பு வகை நான்கில் ஒன்றான முட்டையிலிருந்து வெளி வந்தது)
இரு பிளவாக
இரு பிளவாக = இரண்டு பிளவு ஆகும்படி
ஒரு வேல் விடுத்தனை = ஒப்பற்ற வேலைச் செலுத்தினாய்
காவிரி வட கரை மேவிய = காவிரியின் வட கரையில் உள்ள
குரு கிரி = குரு மலை எனப்படும் சுவாமி மலையில்
இருந்த = வீற்றிருக்கும்
ஆறு எழுத்து அந்தணர் = ‘குமாராய நம’ என்ற சடக்கர மந்திரம் ஓதும்
அந்தணர்கள்
அடியினைப் போற்ற = உனது திருவடிகளைப் போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே = திருவேரகத்து இறைவன் என
வீற்றிருக்கிறாய்
அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்
சிவம் சுபம்
OM
Anusha Pradhosham - 02-07-2020
சிவன் வேறு குரு வேறு இல்லை
இவ்வுண்மை உணர்ந்தோரே
பெறுவார் கயிலை திருவருளை !
ஆலடி அமர்ந்து காலடி வந்து காமகோடியில்
நிலைகொண்ட சந்த்ரமௌலீசா, சந்த்ர சேகரா
ஸத்குருநாதா, சரணம் சரணம் சரணம்
***
பிறை மறைத்து வந்தாயே சந்த்ர மௌலீசா, எங்கள்
பிழை பொறுத்து காப்பாயே சந்த்ர சேகரா 1
விடை மறைத்து வந்தாயே, சந்த்ர மௌலீசா
நடை பயின்று வென்றாயே சந்த்ர சேகரா 2
மறை உரைத்த ஆருத்ரா, சந்த்ர மௌலீசா
மறை வளர்த்த அனுஷ நாதா சந்த்ர சேகரா 3
புலி யாடையில் மிளிரும் சந்த்ர மௌலீசா
காவி யாடையில் ஒளிரும் சந்த்ர
சேகரா 4
சூலம் ஏந்தும் காலகால சந்த்ர மௌலீசா
ஞான தண்ட கனகக்கர சந்த்ர
சேகரா 5
பாதம் தூக்கி ஆடிடும் சந்த்ர மௌலீசா
பாதம் பதித்து நடமாடும் சந்த்ர
சேகரா 6
கயிலை வாழும் ஆதியே சந்த்ர மௌலீசா
காஞ்சி வாழும் ஜோதியே சந்த்ர சேகரா 7
ஆலடி அமர் குருவே சந்தர மௌலீசா
காமகோடி அலங்கரிக்கும் சந்த்ர சேகரா 8
மௌன யோக நாதனே சந்த்ர மௌலீசா
தெய்வக் குரல் நாதமே சந்த்ர
சேகரா 9
ப்ரதோஷ தாண்டவனே சந்த்ர மௌலீசா
ப்ரத்யக்ஷ சிவனே சந்த்ர சேகரா 10
ஹரிஹர ப்ரஹ்ம ருத்ர(னே) சந்த்ர மௌலீசா
ஷண்மத ஸநாதனா சந்த்ர சேகரா 11
பாப நாசன பந்த மோசன சந்த்ர மௌலீசா
பக்த பாலன பரம தயாள சந்த்ர சேகரா 12
சந்த்ர மௌலீசா சந்த்ர சேகரா
சந்த்ர சேகரா சந்த்ர மௌலீசா
சந்த்ர மௌலீசா சந்த்ர சேகரா
சந்த்ர சேகரா சந்த்ர மௌலீசா
சிவம் சுபம்
உ
எகாதசிக் கண்ணனும் விசாகக் கந்தனும் !
விருத்தம்
வஸுதேவ சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்,
தேவகி பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.
வாமதேவ ஸுதம் தேவம் சூர ஸம்ஹார மூர்த்தினம்,
பார்வதி ஹ்ருதயானந்தம் ஸ்கந்தம் வந்தே குருகுஹம்.
**
கந்தனைக் கண்ணனைத் தொழுதிடுவோம்.
கவலைகள் மாய்ந்து நிறைவுறுவோம், (மன நிறைவுறுவோம்)
கண்ணனைப் பணிந்திட ஞானம் சுரககும் -
கந்தனைத் தொழுதிட ப்ரணவமும் புரியும்.
கண்ணன் அருளால் சகுனிகள் மறைவர்,
கந்தன் க்ருபையால் சூூரரும் திருந்துவர்
கண்ணன் அருளால் நல் யுக்திகள் உதிக்கும்,
கந்தன் துணையால் வெற்றிகள் குவியும்.
திவ்யப்ரபந்தம் இசைத்திடுவோம்
திருவருள் கடலில் நீந்திடுவோம்.
திருப்புகழ் தினமும் ஓதிடுவோம்,
குருகுஹ க்ருபையால் கடைத்தேறிட்வோம் .
ஏகாதசியில் மாமனுக்கு வ்ரதம் எண்ணிய தெல்லாம் கைகூடும்
சஷ்டியில் மருகன் நோன்பு நம்
இஷ்டம் பூர்த்தி செய்திடும்
திர்வோண மாமன் திருவருள் பொழிவார்.
விசாக மருகன் வாழ்வாங்கு வாழவிப்பான்.
மாவிளக்கேற்றி மாமனைத் தொழுவோம்
பால் குடம் தாங்கி மருகனைப் பணிவோம்
சக்கரம் சங்கடம் களைந்திடுமே.
சக்தி வேல் சஞ்சலம் போக்கிடுமே.
வேங்கட சுப்பிரமணியனை நாம்
வேண்டி தினமும் பணிந்திடுவோம்,
மாமன் மருகன் துணையோடு
காமனைக் காலனை வென்றிடுவோம்.
சிவம் சுபம்.
உ
ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி (ஆனிச் சித்திரை)
விருத்தம்
சக்கரத்தமர்ந்த திருமாலே
சஞ்சலம் சங்கடம் தீர்க்கும் பெருமாளே
பவபயம் போக்கும் நரஹரி அமரும்
திகிரியே
சுபமெலாம் அருளும் சுதர்சன ஹரியே
சரணம் சரணம் சரணம்
***
சுதர்சன சக்கர தேவா
சுடராழிச் சக்கரமே வா
ஆனிச் சித்திரை அவதரித்தாய்
அரி மாதவன் கரம் அலங்கரித்தாய்
நரஹரியின் நகமானாய்
பரதாழ்வானாய் பாதுகை
தாங்கினாய்.
சிசுபாலனின் சிரம் அறுத்தாய்
கோபாலன் கரம் அமர்ந்தாய்
முதலையின் கதை முடித்தாய்
கஜேந்த்ரனை விடுவித்தாய்
துருவாசர் செறுக்கழித்தாய்
அம்பரீசன் உயிர் காத்தாய்
சற்றே சூரியனை மறைத்தாய்
சடுதியில் பார்த்தன் உயிர் காத்தாய்
நல்லவர் கண்ணுக்கு ஆபரணம், நீ
பொல்லாதார்க்கு சிம்ம சொப்பனம்
சுத்தியுடன் தொழும் அன்பருக்கு, நீ
குலம் காக்கும் அரி கவசம்
திகிரியாம் திருமாலின் சக்கரமே
திருமோகூர் உறை அற்புதமே
இரு கரம் கூப்பி தொழுவோர்க்கு
எண்ணிலா கரம் கொண்டு அருள்பவனே
கவிதார்க்கித சிம்ஹம் தொழுதிட்ட
கவின் மிகு கருணா சாகரமே
நரஹரி அமர்ந்தருள் புரிந்திடும்
சுபகர சுதர்சன ஸ்வாமியே
ரோஹ நிவாரண மா மருந்தே
உடல் மன பலமருள் விண்ணமுதே
சுற்றி வந்தேன் அய்யா உன்னை
பற்றிப் பணிந்தேன் பாதம் தன்னை
மூவுல கெங்கும் மங்கலம் பொங்க
திருவருள் பொழிந்தருள் திருமால் வடிவே.
சிவம் சுபம்
உ
அழகென்றால் நடராஜன்
ஆடல் என்றால் நடராஜன்
இசைந்தருள்பவன் நடராஜன்
ஈஸ்வரன் அவன் நடராஜன்
உயர் வேதன் நடராஜன்
ஊர்த்வ தாண்டவ நடராஜன்
எழில் குஞ்சித பாதன்
ஏழு ஸ்வர லய நாதன்
ஐந்து சபை நடராஜன்
ஒப்பில்லா கலை ராஜன்
ஓம்காரத் தொளிர் ராஜன்.
ஔதார்ய சிவ ராஜன்.
அகிலம் காக்கும் சுப ராஜன்
சிவம் சுபம்
உ
அதிகாலை கடவுள் வாழ்த்து - ஒரே நிமிடம்
கருவில் எனைத் தாங்கிய தாயே சரணம்
கருத்தில் எனை வைத்த தந்தையே சரணம்.
இருளை ஓட்டும் குருவே சரணம்
இதயத்தமர்ந்த என் இறையே சரணம்
கல்வியருள் கலைமகளே சரணம்
செல்வமருள் அலைமகளே சரணம்
திடமருள் மலைமகளே சரணம்
பதமருள் மதுரை மீனாள் சரணம்
அன்புருவான இராமா சரணம்
அறவழி கீதை கண்ணா சரணம்
பக்கதுணயாம் நரசிங்கா சரணம்
செயற்கரிய செய் அனுமா சரணம்
தடைகள் தகர்க்கும் தந்தா சரணம்
பகையை முடிக்கும் கந்தா சரணம்
சீலம் சேர்க்கும் ஐயப்பா சரணம், என்
சீவனாம் சிவ சக்தியே சரணம், என்
சீவனாம் சிவ சக்தியே சரணம்.
சிவம் சுபம்
உ
'குருவே இறை'
அருவாம் இறையின் உருவே குருவாம்
அருளாம் இறையின் மனமே குருவாம்
வேதமாம் இறையின் சாரமே குருவாம்
தருமமாம் இறையின் நெறியே
குருவாம்
ஞானமாம் இறையின் குரலே குருவாம்
அன்பாம் இறையின் கரமே
குருவாம்
குருவைத் துதிப்போம் இறையைக் காண்போம்
குருலைப் பணிவோம் இறையுள்
நிலைப்போம்
சங்கரனே சங்கரர்
சங்கரரே சந்த்ரசேகரர்.
ஆலடி காலடி
காமகோடியும் ஒன்றே
சிவம் சுபம்
For today's darshan of our Divine Mother
உ
அழகுச் சிலையே மீனாக்ஷி
அருள் வடிவே
மீனாக்ஷி
அம்ருத கலசமே
மீனாக்ஷி
ஆதி சிவையே
மீனாக்ஷி
கயற்கண்ணால்
என்னைப் படைத்-தாய்
தளிர் கரத்தால்
என்னை
அணைத்-தாய்.
என் மழலையை
ரசிக்கும் தாய்
ஏக்கம் தவிர்த்து
காக்கும் தாய்
ஆயிரம் தெய்வங்கள்
இருந்தாலும் அவை
உனக்கு ஈடாகுமோ
பேசும் பொற்சித்திரமே
உன் பெருமையை
முழுதாய் அறிந்தவர் யார்.
பொற்றாமரைக்
குளக்கரையில்
பொன் வேய்ந்த
கோபுர நிழலில்
காட்சி தரும்
தடாதகையே, என்
மூச்சுள்ளவரை உனை
மறவேன்.
என்னை விட்டுப் பிரியாது
என் நினைவை விட்டு
அகலாது
எக் கணமும் எனை காக்கும்
உன் திருவருளை நான்
என் சொல்வேன்.