Thursday, July 9, 2020

Daily Prayers - 2020 (தினசரி ப்ரார்த்தனை)

ஓம்

தினசரி ப்ரார்த்தனை  14

சித்திரைத் திருவிழா special

அருள் வடிவான அன்னை
மீனாட்சி அம்மன் 108 போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40

ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60

ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80

ஓம் பவள வாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90

ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

சிவம் சுபம்

தயவுசெய்து நம்ம்டைய phone அல்லது gmail draft இப்பதிவை சேமித்து வைத்து நேரம் கிடைக்கும் போது அன்றைக்கு போற்றி மாலை சூட்டி அவள் அருளில் திளைப்போம்.


OM

Daily Prayer 16

Friday & ANUSHAM  special

Sri Durga Pancharathnam
By
HH Jagathguru Sri Kanchi Paramaachaarya SwaamigaL

Meaning by Sri P S Ramachander

sree durgayaii namaha!!! Salutations to Durga

te dyanayoganugata apashayan
twam eva deviim swagunair nigudaam
twam eva shakthii parameshwerasya
maam paahi sarweshvari mokshadatri
Those adopting meditation (Dhyana) and contemplation (yoga) saw,
You as the only divine Goddess hidden in her own qualities
And you are the only power behind the great God of universe,
And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

devatma shaktihi sruti vakya geeta
mahirishi lokasya pura prasanna
guha param vyoma sataha pratishta
maam paahi sarweshvari mokshadatri
You are the self power of the divine , sung about by the Vedas,
Delighted in front of great saints propitiating you,
Who have established yourselves in their hearts as Truth,
And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

parasya shaktihi vividhaiva suryaese
swetaswa vakyothitadevi durge
swbhaviki gnana bala kriya te
maam paahi sarweshvari mokshadatri
You are His Shakthi called Para, which is spoken in different ways,
You are the one who is being celebrated by Swethavatara Upanishad,
You are by your nature, the power force in all actions and wisdom,
And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

devatma shabedena shivatma Bhuta
yath kurma vayava vacho vivritya
twam pasa vicheda kari prasidda
maam paahi sarweshvari mokshadatri
Formed by Self-power of sound of Siva’s aatma
You are declared by sacred texts as the sound of Anahatha[3],
Which exists in Kurma and Vayavya[4] as Shakthi
You are known as one cutting off worldly attachments (or the rope that drags you to death),
And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

twam brahma puccha vividha mayuri
brahma pratishtasupadista gita
gyana swarupa atmataya kilanaam
maam paahi sarweshvari mokshadatri.
Hey Mayuri, you are praised as the route to Brahmam,
You are the form of Brahamam established by the Bhagwad Gita too,
You are the wisdom personified, enact the sport of creation
And so please protect me, oh goddess of all and oh giver of salvation.

**

ஆதி சங்கர பகவத் பாதாளின்  "ஸ்ரீ தேவி ஸமஸ்-தாபராத க்ஷமாபண" ஸ்லோகம்.

தமிழாக்கம் : கவிஞர் ஸ்ரீ பொன்னடியான்

ஆயிரம் பிழை குற்றம் செய்திட்ட போதும், அன்னையே குழந்தை என்னை அசட்டை செய்யாதே, மாய இருள் சூழுமிந்த மானிலம் மீது மைந்தன் நான் செய்திட்ட பிழைகளை மன்னிப்பாயே, ஆயிரம் கோடி அண்டங் கட்கும் அன்னையே, அனவரதம் என் மேல் அன்பு பொழிவாய் எனில், வியப்பு இதில் என்ன, தயைமிகும் தேவியே, துர்கையே, மாதே, துணை வருவாயே.

தென்னாடுடைய பெரியவா போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Sivam Subam












ஓம்

தினசரி ப்ரார்த்தனை 17 - பிள்ளையார் மங்களம்

விருத்தம் -  மகாகவி  ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியார்

எனக்கு வேண்டும் வரங்களை
இசைபேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம்,நூறுவயது:
இவையும் தர நீ கடவாயே.

***
தமிழ் த்யாக ப்ரஹ்மம்,
ஸ்ரீ பாபநாசம் சிவன்

ராகம்.....மத்யமாவதி 

விக்ன விநாயக மூர்த்திக்கு மங்களம்
வேழ முகமோடு தவழ்.......                    (விக்ன)

அக்கினி வைத்த நெற்றிக் கண்ணனும்......
ஆதி பராசக்தி அன்னையும்.....
என் மகன் என் மகன் என  மடி வைத்து கொஞ்சி விளையாடும் பால  (விக்ன)

ஒரு பகையில்லாத உத்தம தெய்வம்
உம்பர்  முனிவர் தொழும் கணபதி தெய்வம்
விரி .. சராசராதி மூலமாய்......மிளிர்
விதி, விஷ்ணு சிவா..காரமாய் ஒளிர் 

 (விக்ன)

சிவம் சுபம்






OM

நாச்சியார் கோவில் கருட சேவை

தினசரி ப்ரார்த்தனை 18 - Different

திருமங்கையாழ்வார் பாசுரம்

தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய், தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய்வானாய்,
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்  தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்,

மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை,  விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட,
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த,
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

Devotees! The Lord who is self-made, who made the three radiant worlds, who is the Lord of Valikunta, who himself became the Tri-murti, then also became a cowherd, resides in Tirunarayiur Manimadam, where the spear-wielding chola king Kongan offers worship. Attain Him there.

Sivam Subam

தினசரி ப்ரார்த்தனை 18

விருத்தம் - Learnt from my Mother

ஊன்  ஆனாய் உயிர் ஆனாய் உயிரில் ஊறும் உணர்வு ஆனாய்
வான் ஆதி ஐம்பூத வகையெல்லாம் நீ ஆனாய்,  தேனாறும் மலர்க் கொன்றை சிவம் என்னும் பொருளானாய்,  நான் ஆனாய், என் உயிரின் உயிரே, ஞானப் பேரொளி அன்னை மீனாக்ஷி உமையே!
,, 
Raaga :  Maaligaa

AmruthavarshiNi AnnapooraNi
Aananda Bairavi Akilaandeswari

KalyaaNi.. Kadhamba vana vaasini
Bairavi.. Sri Padmanaabha Sagodhari

Kamalaamanohari KaaruNyaamrudha saagari
MohaNa roopiNi moksha prasaadhini
Saamagaana vinodhini Sadhaasiva kudumbini
Sri Thripurasundari Meenaakshi nannu rakshi

Sivam Subam







OM

Daily Praarththanai 19a
தினசரி பிரார்த்தனை 19a
Sri Hanumath Jayanthi Vandhanams



Viruththam - Sri Kambanaattaazhwaar**
விருத்ம் -  ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூய வீரன்
வல்லவன் ராமன் வாயுறை பெற்ற அன்பன்
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும் காலை
கல்லினைப் பெண்ணாய் செய்தான் கழலிணைப் போற்றுவோம்

***

 Veera Hanumathae  - Sri Muthuswami Dikshithar kruthi - Karnataka Kaapi (Kaanada)

Pallavi

veera hanumaTe namO namo
maaruta tanayaa namO namo

anupallavi

saraseeruha vadanaa ||
shree raamacandra sharanaa ||

CaraNam

kroora raaksha saadi haraNa
sarva vidyaa dhaana nipuNa
paramantra vinaasha karaNa
kapi vinuta guruguha smaraNa

Sivam Subam

 Meaning
 of the Viruththam by Sri Kambar who wrote RaamaayaNa in Tamizh.

While singing the glory of Sri Hanuman -
one

who is an unparalleled warrior
who removes all obstacles and
who was praised by Sri Raama,

let us also worship the Lotus Feet (of Sri Ramaa) That brought back Sri Agalyaa alive from a stone.



தினசரி (செவ்வாய்) ப்ரார்த்தனை  19

மஹா கவியின் சக்தி உபாசனை

 1.  திலங்

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரண மென்று புகுந்து கொண்டேன்
இந்திரி யங்களை வென்று விட்டேன்
எனதென்ற ஆசையைக் கொன்று விட்டேன்

பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரி லாதெனைச் செய்து விட்டாள்
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கண்  உள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்

2. மாண்டு

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு - கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி- அவள்
 சந்நிதியில் தொழுது நில்லு

ஓம் சக்திமிசை பாடல் பல பாடு  -  ஓம்
சக்தி சக்தி சக்தி  என்று தாளம் போடு
சக்தி தரும் செய்கை நிலம் தனிலே - சிவ
சக்தி வெறி கொண்டு களித்தாடு

ஓம் சக்தி தனையே சரணம் கொள்ளு -  என்றும்
சாவினுக்கோர் அச்சமில்லை தள்ளு
சக்தி புகழாம் அமுதை அள்ளு  - மது
தன்னில் இனிப்பாகும் அந்தக் கள்ளு

ஓம் சக்தி  செய்யும் புதுமைகள் பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு
சக்தி திருக்கோயில் உள்ளமாக்கி - அவள்
தந்திடும் நற் குங்குமத்தைப் பூசு

ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை இதை
சார்ந்து நிற்பதே  நமக்கோர் உய்கை
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தண்ணமுத மாரி நித்தம் பெய்கை

ஓம் சக்தி  சக்தி சக்தி என்று நாட்டு- சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு
சக்தி பெற்ற நல்ல நிலை நிற்பார்- புவிச்
சாதிகள் எல்லாம் அதனைக் கேட்டு

சிவம் சுபம்





தினசரி ப்ரார்த்தனை  20

லிங்காஷ்டகம் - தமிழாக்கம்**

திருநீறு இடுவதின் பயன் -  திருவருட்பா

பாடற்கினிய வாக்களிக்கும்,
பாலும் சோறும் பரிந்தளிக்கும்,
கூடற்கு இனிய அடியவர் கூட்டம் அளிக்கும்,
குணம் அளிக்கும்,
ஆடற்கினிய நெஞ்சே அஞ்சேல்,
என்மேல் ஆணை கண்டாய்,
தேடற்கினிய சீர் அளிக்கும்,
சிவாய நம என இடு நீறே

****

லிங்காஷ்டகம் - தமிழில்

நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணி ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

சிவம்  சுபம்.

** தமிழாக்கம் செய்த பு�




ஓம்

தினசரி ப்ரார்த்தனை  21

21.1  திருமண மாலை அளிக்கும் திருப்புகழ்

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ...

நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ...

நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ...

 உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ...

 மார்பில் தங்கி விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ...

உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ...

வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,

நாலந்த வேதத்தின் பொருளோனே ...

ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,

நானென்று மார்தட்டும் பெருமாளே. ...

எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத்
தட்டிக் கொள்ளும் பெருமாளே.

***

21.2    என் நண்பர் எனக்கு அனுப்பிய "பழனி மாலையிலே துறவியுருவிலே"  என்றபாடல் photo copy  இத்துடன்  இணைத்திருக்கிறேன்.

Both the songs sung together.

சிவம் சுபம்




தினசரி ப்ரார்த்தனை  22

கவியரசு கண்ணதசன் அருளிய அன்னை விசாலாக்ஷி துதி

இராகம் :  மாலிகை

உள்ள நாள் வரையிலே நன்மை தீமையும்
ஒன்றென்றே எண்ண வரம் தா

உறவோடு பகையையும்   இரவோடு பகலையும் ஒருமித்து பார்க்க வரம் தா

வெள்ளம் போல் செல்வமும் வறுமையும் சமமென்று விளையாடும் வாழ்க்கை வரம் தா.

விதியென்றும் வலியதே மதி யென்றும்  சிறியதே வினை தீர்த்து  நல்ல துணை தா

பள்ளம் போல் இகழையும் மாலை போலப் புகழையும் பந்தாடும்   வீர நிலை  தா

பசி வாங்கும் பசியையும் பல்சுவை  உணவையும் பதறாமல் கொள்ள வரம் தா

அள்ளியிடும் கையினால் அர்த்த சாமத்திலும் அருள் செய்யும் அன்பு மயிலே !

அறமுடைய வணிகர் குலம் சிலை வைத்த தேவியே!  அழகு விசாலாட்சி உமையே!

சிவம் சுபம்











தினசரி ப்ரார்த்தனை  23a

திருமங்கையாழ்வார்

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய். 

————————————-

மாமிசம் எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் வைத்த இந்தச் சரீரத்தை விட்டு உயிர் பிரியும்போது உன்னைச் சரணடைய வேண்டும் என்று இருக்கிறேன்.

தேனிருக்கும் தாமரை மேலமர் மஹாலக்ஷ்மி நாதனே, அகன்ற ஆழமான கடலில் துயில் கொள்பவனே,  என்ன தவம் செய்து உனை அடைந்தேனோ, நைமிசாரயத்துள்ள பெருமாளே.

A kruthi in Bairavi by Thiagabrahmam

சிவம் சுபம்


ஓம்

 தினசரி ப்ரார்த்தனை- 23

விசாகனே வருவாய்

திருவருட்பா

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

திருப்புகழ்

போத கந்தரு கோவே நமோநம
 நீதி தங்கிய தேவா நமோநம
 பூத லந்தனை யாள்வாய்
நமோநம .....                       .பணியாவும்

பூணு கின்றபி ரானே நமோநம  வேடர்தங்
கொடி மாலா நமோநம
போத வன்புகழ்  சாமீ நமோநம         அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
 ஞான பண்டித நாதா நமோநம  வீர கண்டைகொள்தாளா
நமோ நம           அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
 வீறு கொண்ட விசாகா 
நமோநம     அருள்தாராய்

பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண் டயிலாலே பொராடியெ 
பார அண்டர்கள்   வானாடு  சேர்தர                              அருள்வோனே

பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
 பார திண்புயமே
சேரு சோதியர் ......              கயிலாயர்

ஆதி சங்கர னார்பா கமாதுமை
 கோல அம்பிகை மாதா மநோமணி  ஆயி சுந்தரி தாயா னநாரணி            அபிராமி

ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
 கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வான   தேவர்கள் ..    பெருமாளே.


*******

சொல் விளக்கம்

போத கந்தரு கோவே நமோநம ...

ஞான உபதேசம் தருகிற
தலைவனே, போற்றி, போற்றி,

நீதி தங்கிய தேவா நமோநம ...

நீதிக்கு இருப்பிடம் ஆன
இறைவனே, போற்றி, போற்றி,

பூத லந்தனை யாள்வாய் நமோநம ...

இந்தப் பூமண்டலத்தை
ஆள்கின்றவனே, போற்றி, போற்றி,

பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம ...

அணிகலன்கள்
அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி,

வேடர் தங்கொடி மாலா நமோநம ...

வேடர்கள் தம்குலத்தில்
அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி,
போற்றி,

போதவன்புகழ் ாமீ நமோநம ...

தாமரை மலர்வாசனாம் பிரமன்
துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி,

அரிதான வேத மந்திர ரூபா நமோநம ...

அருமையான வேத
மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித நாதா நமோநம ...

மெய்ஞ்ஞானப் புலவனான
தலைவனே, போற்றி, போற்றி,

வீர கண்டைகொள் தாளா நமோநம ...

வீரக் கழலை அணிந்த
திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,

அழகான மேனி தங்கிய வேளே நமோநம ...

அழகு நிறைந்த
திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி,

வான பைந்தொடி வாழ்வே நமோநம ...

தேவருலகில் வாழும்
பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே,
போற்றி, போற்றி,

 வீறு கொண்டவிசாகா நமோநம ...

வெற்றி நிறைந்த விசாக
மூர்த்தியே, போற்றி, போற்றி,

அருள்தாராய் ...

உனது திருவருளைத் தந்து உதவுவாயாக.

பாத கஞ்செறி சூராதி மாளவெ ...

தீவினை நிறைந்த சூரன்
முதலிய அசுரர்கள் இறக்குமாறு

கூர்மை கொண்டயி லாலே பொராடியெ ...

கூர்மையான
வேலாயுதத்தால் போர் புரிந்து,

பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே ...

பெருமை
பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள்
புரிந்தவனே,

பாதி சந்திரனேசூடும் வேணியர் ...

பிறைச்சந்திரனைத் தரித்த
ஜடாமுடியினரும்,

சூல சங்கரனார் கீத நாயகர் ...

திரிசூலத்தைத் தாங்கும்
சங்கரனாரும், இசைத் தலைவரும்,

பார திண்புயமேசேரு சோதியர் கயிலாயர் ...

வலிமையும்
திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும்,
திருக்கயிலையில் வாழ்பவருமான

ஆதி சங்கரனார்பாக மாதுமை ...

முதன்மையான
சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும்
உமாதேவியும்,

கோல அம்பிகை மாதா மநோமணி ...

அழகிய அம்பிகையும்,
உலக மாதாவும், மனோன்மணியும்,

ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி ...

அன்னையும்,
சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும்,
அதிரூபவதியுமான பார்வதிதேவி

ஆவல் கொண்டு விறாலே சிராடவெ ...

அன்பு கொண்டு
பெருமையுடன்சீராட்ட,

கோமளம்பல சூழ்கோயில்மீறிய ...

அழகு பலவாக அமைந்த
திருக்கோயில்கள் மிகுந்த

ஆவினன்குடி வாழ்வான ...

திருவாவினன்குடியில் வாழ்வாக
வீற்றிருக்கும்,

தேவர்கள் பெருமாளே. ...

தேவர்கள் போற்றும் பெருமாளே.

சிவம் சுபம்


OM

DAILY PRAARTHANA 24

Sri MAHAA PERIYAVAA ThuNai

Brundaavana Saaranga

விருத்தம்  -  தெய்வீகக் கவியரசு கண்ணதாசன் 

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம்,
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காககவந்த
கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

ஸ்ரீ பரமாச்சார்ய க்ருத ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்

SRI PARAMAACHAARYA KRUTHA SRI KAAMAAKSHI STHOTHRAM

Mangala charanae MangaLa vadhanae
MangaLa dhaayini Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Himagiri thanayae mama hruthi nilayae
Sajjana  sadhayae Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Grahanutha charanae gruha suga dhaayini
Nava Nava bhavathae Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Sivamuga vinuthae bhava suga dhaayini
Nava  nava bhavathae Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Bhaktha  sumaanasa  thaapa vinaasini
MangaLa dhaayini   Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Kaenobha-nishath vaakya vinodhini
Devi Paraasakthi Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Para Siva Jhaayae Vara muni bhaavyae
Akilaandeswari Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi

Haridhraa mandala vaasini Nithyae
MangaLa dhaayini Kaamaakshi
Guruguha Janani kuru KalyaaNam
Kunjari Janani Kaamaakshi


மங்கள சரணே மங்கள வதனே
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 1

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே
ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 2

க்ரஹநுத சரணே க்ருஹ சுக தாயினி
நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 3

சிவமுக விநுதே பவசுக தாயினி
நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 4

பக்த சுமானஸ தாப வினாசினி
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 5

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி
தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 6

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே
அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 7

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி 8

Received from Sri Manikanda Srowthigal of Tindivanam Veda Paataasala.

A rare sthuthi which when rendered with Sradhdhaa Bakthi will bless us with good (married) life with all Sowbaagyams.

Suggested to light a lamp on Fridays n Tuesdays & perform 7 Deepa Pradikshanams, reciting this Sthothram,  with Sradhdhaa n  Bhakthi to reap benefits of good life partner,  children n other benefits of life.

Sivam Subam







தினசரி ப்ரார்த்தனை  25.a


மழை யருளும் வடமொழி** மந்திரங்களும் & திருவெம்பாவை திருப்பாவை பாடல்களும்.


திருவெம்பாவை- அமிர்தவர்ஷிணி


முன்னிக் கடலைச் சுருக்கி  எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்  இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்  பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர்  எம்பாவாய்.
பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:
மழைமழையே !கடலை  முன்னிச்    சுருக்கி  எழுந்துகடலை   அணுகி, அதன் நீரைச் சுருக்கி [மேகமாக மாறி ] மேலே எழுந்து,உடையாள்  என்னத் திகழ்ந்து[ எம்மை   அடியவர்களாக] உடையவளான உமையின் மேனி போல கரு நிறமாக மாறி,எம்மை ஆளுடையாள்    இட்டிடையின்
மின்னிப் பொலிந்துஎம்மை   அடியவர்களாகக் கொண்டுள்ள உமையின் சிற்றிடை போல மின்னி , பொலிவுடன் காட்சி   அளித்து,எம்  பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித்எம்   தலைவியாகிய உமையின் திருவடிகளில் இருக்கும் பொன்னாலான சிலம்புகளின் ஒலி போல இடி   இடித்து முழங்கி ,திருப் புருவம்
என்னச் சிலை குலவிஅவளது   திருப்புருவம் போல் வளைந்த வான வில்லாகத் தோற்றமளித்துநம் தம்மை   ஆளுடையாள்எம்மை   ஆள்கின்ற உமையானவள்தன்னில்   பிரிவு இலா எம் கோமான்  அன்பர்க்குதன்னைப்   பிரியாமல் இணைந்துள்ள எம் தலைவனான சிவனின் அடியவர்களுக்குமுன்னி அவள்   நமக்கு  இன் அருளே முன் சுரக்கும் என்னப்அருகில்   வந்து, இனிய அருளைப் பொழிவது போலபொழியாய்   , ஏலோர்  எம்பாவாய்.நீ   பொழிவாயாக!



திருப்பாவை - வராளி


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


சிவம் சுபம்


**  சென்ற வருடம் எங்கள் பால விநாயகர் கோயிலில் நடந்த வருண  ஜெப ஹோமத்தில் தொடங்கி நாங்கள்  தினமும் பக்தியுடன் இசைக்கும் இரு வருண ஜெப மந்திரங்களை (zetox copies) இதனுடன் இணைத்திருக்கிறேன்.



OM

தினசரி ப்ரார்த்தனை 25

ஒற்றியூர் வடிவுடையாள்

விருத்தம்- வடிவுடைமாணிக்க மாலை (வள்ளலார்)

கடலமுதே, செங்கரும்பே, அருட் கற்பகக் கனியே, உடல் உயிரே, உயிர்க்குள் உணர்வே, உணர்வுள் ஒளியே, அடல் விடையார் ஒற்றியார் இடங் கொண்ட அருமருந்தே, மடலவிழ் ஞான மலரே, வடிவுடை மாணிக்கமே

பாடல் -  எனது நண்பர் அனுப்பி பாடப் பணித்தது. (Source F/book)

 ஆனந்தபைரவி
                                         
ஒற்றியூர் வடிவுடையாள் ஓங்கும் மதி        வடிவுடையாள்
பற்றிடும் அடியவர் பெற்றிடுமருள் வடிவுடையாள்
                                       
பற்றினேன் மலர்ப்பதம் பங்கய வடிவுடையாள்
புற்றிலுறைத் தியாகேசன் போற்றிடும் வடிவுடையாள்
                                       
அணிமணிகள் புனைந்திடும் அலங்கார வடிவுடையாள்
ஸ்ருதி சேர்ந்து ஸ்வர ராக சங்கீத வடிவுடையாள்                                      கனிவுதரும் நல் கருணைமிகு மதிவதன சுந்தர வடிவுடையாள்
முனிவரும் தேவரும் மூவரும் பணியும் மங்களவடிவுடையாள்                               
                                            *****
      “வடிவுடையம்மன்” ( திருவொற்றியூர் திரிபுரசுந்தரி)

வள்ளலார் ராமலிங்கரை உலகப் புகழ் பெறச் செய்தவள் வடிவுடையம்மன். ராமலிங்கர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்று பல மணிநேரம் அன்னையை பார்த்துக் கொண்டே இருப்பார். அவருக்கு பக்தியில் இருந்த ஈடுபாடு படிப்பில் இல்லை. ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதைச் செலவிட்டார். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணிக்குதானே சிரமம் என்று கருதிய அவர், திண்ணையிலேயே பசியோடு படுத்தார். அப்போது, “ராமலிங்கம் எழுந்திரு, சாப்பிடலாம்” என்று அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள்.


சாப்பிட்ட பிறகு அந்த திண்ணையிலேயே மீண்டும் தூங்கிவிட்டார் ராமலிங்கம். சில மணிநேரம் கழித்து யாரோ ராமலிங்கத்தை தட்டி எழுப்ப, விழித்தார். அண்ணிதான் நின்றிருந்தாள். “ராமலிங்கம் வெறும் வயிற்றோடு தூங்காதே; வந்து சாப்பிடு.” என்றாள். “இப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை” என்றார். “இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது” என்றாள் அண்ணி. அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தார் ராமலிங்கம். அன்னை தந்த உணவு அவருக்கு பெரும் ஞானத்தையும் தமிழ்ப் புலமையையும் தந்தது. ராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. பின்னர் வள்ளலார் “வடிவுடை மாணிக்கமே” என்று ஈற்றடியில் வரும் வண்ணம் வடிவுடைமாணிக்கமாலையை இயற்றினார்.

(100 அருட்பா மலர்கள் கொண்ட  மாணிக்க மாலை).

சிவம் சுபம்



OM

Daily Praarththanaa 26

Sankaram Sankaraachaaryam
Thath Kaamakoti Peetesam
Sri Chandrasekaram
Aashrayae

***

Maha Periyava’s Ramayanam

ஸ்ரீ ராமம்  ரகுகுல  திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம்  ஜெய்ஸ்ரீராம்

Sri Kanchi Periyavaa has given us a very rare treasure.  This contains only 9 lines but covers the entire Ramayanam.  This can be recited in few seconds and will give us all the benefits of reading the full Ramayanam.

Here are the 9 lines for you and for the benefit of the entire world.

Sri Raamam raghukula thilakam
Sivadhanu Saagruheetha Sitaa hasthakaram
Angulyaa bharana shobitham
Choodaamani darsanakaram
Aanjaneya Maashrayam
Vaidhei Manoharam
Vaanara Sainya Sevitham
Sarvamangala kaaryaanukoolam
Sathatham Sri Ramachandra Paalayamam
Sriram Jairam Jaisriram.

That’s all.  Full Ramayanam recitation is over.

Blessings of Mahaa Swaami n Sri Seethaa Raamaachandra  Swaami to all.

Sivam Subam




OM

Daily Prayer 27

 ஸ்ரீ ந்ருஸிம்ஹாநுஷ்டுப் மூலம்

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் 

---------'

மேலே காணும் ந்ருசிம்ஹ மூல மந்திரத்தை 12 முறை படித்து பின் கீழே உள்ள எளிய மந்திரங்களை 12 முறை ஜெபித்து (குங்கும அர்ச்சனையும் செய்து)  வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதுடன், லோக க்ஷேமமும் ஏற்படும் என்று ஒரு பெரியவர் எனக்கு சொன்னதைப் பகிர்ந்தேன்.

---------'

ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:
ஓம் பூம் பூம்யை நம:
ஓம் நீம் நீளாயை நம:

-----'

நிறைவாக கீழ் கண்ட பாசுரத்தை, மங்கள ஸ்துதியை பக்தியுடன் படித்து/இசைத்து  நமஸ்கரிக்கவும்.

நம் க்ஷேத்திற்கும் லோக  க்ஷேத்திற்கும் ஸ்ரீ பூமி நீளா சமேத நரசிம்ஹப் பெருமான் நல்லருள் நிச்சயமாக நிரந்தரமாகப் பொழிவார்.

 பாசுரம்

வேங்கடங்கள் மெய்மேல் வினைமுற்றவும்

தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்

வேங்கடத் துறைவார்க்கு நமவென்ன

லாங்கடமை அது சுமந்தார்க்கே

 மங்களம்

ஸர்வ பீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்ட்டான மூர்த்தயே |

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வ சிம்ஹாய மங்களம்.

சிவம் சுபம்









ஓம்

தினசரி ப்ரார்த்தனை 28

 திருக்குருகாவூர் வெள்ளடை

பசி  பிணி யமபயம் நீங்க தினமும் இசைப்போம்.
( 4 நிமிடங்கள் போதும்)

 ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய ஏழாம் திருமுறை பாடல் பதிகம்.

திருக்குருகாவூர் வெள்ளடை தலத்தில் இறைவன் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு  பொதி சோறும் நீரும் அளித்தருளிய போது பாடிய பதிகம். ( பாடல் 2ல் சுந்தரரே குறிப்பிடுகிறார்)

நடமாடும் தெய்வம் நமது மஹா பெரியவா இப்பதிகத்தைப் பலவாறு போற்றிப் பரவியிருக்கிறார்கள்.

இப்பதிகத்தை பக்தியுடன் சிந்திப்பவர்களுக்கு பசி, பிணி (நோய் - பாடல் 4) மட்டுமல்ல யமபயமும் இல்லை என்பது சத்தியம்.

 மாண்டு ராகம்

 பாடல் எண் : 1

இத்தனை யாமாற்றை
யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை , ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக , நீ , முத்தையும் மாணிக்கத்தையும் , பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ !

 பாடல் எண் : 2

ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங்
கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

வாவிகளில் கயல்மீன்கள் துள்ள , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய் !

 (பொதிசோறும் , தண்ணீரும் தந்து ஆவியைப் போகாமே நிறுத்தியது)

 பாடல் எண் : 3

பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக
உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக்
கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க , உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே , காடே சிறந்த அரங்காய் இருக்க , செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே , திருக் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும் , பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து , நோயைப் பற்றறுப் பாயன்றோ !

 பாடல் எண் : 4

வெப்பொடு பிணியெல்லாந்
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
ஒப்புடை யொளிநீலம்
ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி யழகாய
அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற , மலர்களையுடைய பொய்கைகளில் , மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற , அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ , என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய் !

(எல்லாப் பிணிகட்கும் முதலாய்த் தோன்றுவது வெப்பு நோயாகலின் , அதனைத் தலையாயதாக ஓதினார் . சுவாமிகளுக்குப் பிணி தீர்த்தமையாவது , வலிந்து ஆட் கொண்டமையால் நோய் அணுகாத திருமேனியராயினமையேயாம் . )

 பாடல் எண் : 5

வரும்பழி வாராமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச்
சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை
அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும் , பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே , அரும்பு களையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும் , பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே , நீயன்றோ , எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து , என்னை ஆட்கொண்டாய் !

 பாடல் எண் : 6

பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , பரவெளியின்கண் உள்ள நீ , இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு , பண்ணின்கண் இனிமையைப் போன்றும் , பழத்தின்கண் சுவையைப் போன்றும் , கண்ணின்கண் மணியைப் போன்றும் , மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ

 பாடல் எண் : 7

போந்தனை தரியாமே
நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும்
நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந்
தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ ! ஆதலின் , இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும் , யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன் .

 பாடல் எண் : 8

மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !

 பாடல் எண் : 9

படுவிப்பாய் உனக்கேயாட்
பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன்
தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க்
கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும் , நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும் , முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் , நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ !

 பாடல் எண் : 10

வளங்கனி பொழின்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே.

பொழிப்புரை :

வளப்பம் மிகுந்த சோலைகளையும் , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .

திருச்சிற்றம்பலம்





தினசரி ப்ரார்த்தனை 29

இன்று பிறந்த நாள் (24 ஜூன்) காணும் கவியரசு கண்ணதாசன் சூட்டிய

 ஸ்ரீ  மஹா பெரியவா விருத்தம் &
 ஸ்ரீ காமாக்ஷி அம்மை துதி

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம்,
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காககவந்த
கண் கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

***

ஊமைக் குழந்தைக்கு நின்மகன்
வேல் கொண்டு ஓமென்று
எழுத வில்லையோ ?
உழல்கின்ற பாண்டவர் பாரதப் போருக்கு, உன் அண்ணன் உதவ
 வில்லையோ ?

காமனைக் கண்ணாலும், திரிபுரா
சிரிப்பாலும் (உன்) கணவன் எரிக்க வில்லையோ ?
காட்டிலும் மேட்டிலும் கரையிலும் உன் பிள்ளை கவலைகள் தீர்க்க வில்லையோ ?

சாமத்தில் உன் நாதன் சிவனுக்கு எனைப்பற்றி (நீ) சரியாகச் சொல்ல வில்லையோ ?
சரிகம வென்றே பாடிப் பார்க்கிறேன் நீ இன்னும் சங்கீதமாக வில்லையோ ?

ஏமன் நெருங்காமல் என் வாழ்வு காக்கின்ற ஏகாம்பரன் தேவியே !
எழில் பொழியும் காஞ்சி நகர் அரசு புரி ராணி(யே), ஏதில் காமாக்ஷி உமையே !

சிவம் சுபம்


-------------------


ஓம்

தினசரி ப்ரார்த்தனை 30

 மாணிக்கவாசகப் பெருமான் குரு பூஜைத் திருநாள் (ஆனி மகம்)

இராகம் :   மோஹனம்

 அடைக்கலப் பத்து (பாடல் 2)

வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே

**

 போற்றித் திரு அகவல் (இறுதிப் பகுதி)

அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி

புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி

***

 மாணிக்கவாசகப் பெருமான் துதி  - வள்ளல் பெருமான் அருளியது.

மத்யமாவதி

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே!

திருச்சிற்றமபலம்
சிவம் சுபம்

e&oe





ஒம்

தினசரி ப்ரார்த்தனை 31-a (Siva Puranam)

 திருவாசக நூல் சிறப்பு

தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய

 சிவ புராணம்

(இராக மாலிகை - பூபாளம், மலையமாருதம், ரேவதி,
மோஹனம், சங்கராபரணம், ஹிந்தோளம், வசந்தா, ஷண்முகப்ரியா, திலங், மத்யமாவதி,)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

****

மாணிக்கவாசகர் துதி

(,வடலூர் வள்ளலார அருளியது)

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை நான் கலந்து  பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர் கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"

திருச்சிற்றம்பலம்







 தினசரி ப்ரார்த்தனை 31

சஷ்டி சிந்தனைகள்

 திருப்போரூர் சன்னிதி முறை**

கன்றழைக்கும் முன்னே கருதிவரு மாப்போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர்தோன்றி ... ஒன்றினுக்கும்
அஞ்சாதே வாவென் றழைப்பாய்தென் போரூரா!
எஞ்சாத பேரருளா லின்று.

 ஸ்வாமிமலை திருப்புகழ்

குமர குருபர முருக சரவண
குக சண்முக கரி ...... பிறகான

குழக சிவசுத சிவய நமவென
 குரவனருள் குரு ...... மணியேயென்று

அமுத இமையவர் திமிர்தம் இடுகடல
அதென அநுதினம் ..... உனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபயம் இடுகுரல்...... அறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட ...... வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறை
கொடமர் பொரு ...... மயில்வீரா

நமனை யுயிர்கொளும் அழலின் இணை கழல்
நதிகொள் சடையினர் ...... குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறை புகழ் ...... பெருமாளே.

****

 சொல் விளக்கம்

குமர குருபர முருக சரவண குக சண்முக ...

குமரா, குருபரா,
முருகா, சரவணா, குகா, சண்முகா,

கரி பிறகான குழக ...

 யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த
இளையோய்,

சிவசுத ... சிவ குமாரனே,

சிவய நமவென குரவன் ...

சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக்
குருவான சிவன்

அருள் குருமணியே யென்று ...

அருளிய குருமணியே என்றெல்லாம்,

அமுத இமையவர் திமிர்தம் இடுகடலதென ...

அமிர்தத்தை
தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல்,

அநுதினம் உனையோதும் ...

நாள்தோறும் உன்னை
வாயாரப் பாடி

அமலை அடியவர் ...

ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள்

கொடிய வினைகொடும் ...

தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக

அபய மிடுகுரல் அறியாயோ ...

அபயம் என்று ஓலமிடும் குரலொலி
உனக்குக் கேட்கவில்லையோ?

திமிர எழுகட லுலக முறிபட ...

இருண்ட ஏழு கடல்களும்
உலகங்களும் அழிய,

திசைகள் பொடிபட ...

எட்டுத்திசைகளும் பொடிபட,

வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ ...

போருக்கு வந






தினசரி ப்ரார்த்தனை 32

 ஆனித் திருமஞ்சனம் -  சிறப்புச் சிந்தனை

 ஆனந்த நடனப் பதிகம் - பாடல் 2 வள்ளல் பெருமான்

ஹரஹரப்ரியா

ஜோதிமணி யே
அகண்டானந்த சைதன்ய
சுத்தமணியே அரியநல்
துரியமணி யே துரியமுங் கடந் தப்பால்
துலங்குமணியே உயர்ந்த
ஜாதிமணியே சைவ சமயமணியே சச்சி
தானந்தமான மணியே
சகஜநிலை காட்டி வினை யோட்டி அருள் நீட்டி உயர்
சமரச சுபாவமணியே
நீதிமணியே நிரு விகற்பமணியே அன்பர்
நினைவிலமர் கடவுண்மணியே
நின்மல சுயம்பிரகாசங் குலவும் அத்வைத
நித்ய ஆனந்த மணியே
ஆதிமணியே எழில் அநாதிமணியே
எனக்கன்புதவும் இன்பமணியே
அற்புத சிதாகாச ஞான அம்பலமாடும்
ஆனந்த நடனமணியே.

***

ஹம்ஸாநந்தி

 சிதம்பர சங்கீர்த்தனம்  - வள்ளல் பெருமான்

உலகமுஞ் சரா சரமும் நின்று நின்றுலவு கின்ற பேருலகம் என்பதும்
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த
சிற்கனம் விளங்கு
சிற்ககனம் என்பதும்
இலக ஒன்றிரண் டெனல் அகன்றதோர்
இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
திலகம் என்ற நம் குரு
சிதம்பரம்
சிவ சிதம்பரம் சிவ
சிதம்பரம்.

சிவம் சுபம்



தினசரி ப்ரார்த்தனை 33

சம்பந்தர் அருளிய நெல்லையப்பர் தேவாரம்*

மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்
செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

**

சாரமதி**

காந்திமதி  காந்திமதி
அருள்வாய் எமக்கே மன நிம்மதி

அருள் மழை பொழியும் வான்மதி
ஆனந்தம் அருளும் நிறைமதி

அஞ்ஞான இருளகற்றும் சுடர்மதி
அகம் குளிரவைக்கும் எழில்மதி
அறம் தழைக்கச் செய்யும் நீதிமதி
அடைந்தோம் உந்தன் சரணாகதி

நெல்லையில் ஒளிரும் விண்மதி
தொல்லைகள் நீக்கும் குணமதி
எல்லையில்லாக் கருணை முழுமதி
எம் வாழ்வில் இணைந்த சாரமதி

சிவம் சுபம்

*  பாடல் விளக்கம்‬:

நல்ல நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும். மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும். மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்க முடியாத துன்பத்தைப் போக்கும். அத்திருநாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க, நெருங்கியுள்ள, பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார்.




தினசரி ப்ரார்த்தனை 33.b

ஆனி ஸ்வாதி - பெரியாழ்வார் திரு நக்ஷத்திரம்

நரசிம்மரைப்  போற்றும் பெரியாழ்வார் (திரு மொழி) **

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள் நாதனே! நரசிங்கமதானாய்!
உம்பர்கோனுலகேழும் அளந்தாய்! ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே!
காரணா! கடலைக் கடைந்தானே!
எம்பிரான்! என்னை ஆளுடைத்தானே! ஏழையேன் இடரைக் களையாயே.

***

Bhajan

ஸ்தம்போத்வா நரசிம்ஹா
ஸ்வாதி ஜோதி நரசிம்ஹா
பக்த வத்சலா நரசிம்ஹா
பரம தயாளா நரசிம்ஹா

ம்ருகேந்த்ரா நரசிம்ஹா
நரேந்த்ரா நரசிமாஹா
தைவதேந்த்ரா நரசிம்ஹா
தயாஸாகரா நரசிம்ஹா

பய நிவாரணா நரசிம்மா
பவ ரோஹ நிவாரணா நரசிம்மா
மந்தஹாஸா நரசிம்மா
ம்ருத்யூஞ்ஜய நரசிம்மா

சுதர்ஸன நிலயா நரசிம்மா
ஜ்வாலா யோகா நரசிய்மா
மங்கள மூர்த்தி நரசிம்மா
மா லோலா நரசிம்மா

சிவம் சுபம்

** பொருள்

நம்பத் தகுந்தவனே! நாவினால்  வணங்குபவர்களுக்கு அன்பனே! நரசிம்ம அவதாரம் செய்தவனே! தேவர்கள் தலைவனே! ஏழு உலகங்களையும் அளந்தவனே! பிரளய காலத்தில் இருந்தவனே! முன்பு சக்கரத்தை ஏந்தி, நடுங்கும் பெரிய யானையின் துயர் நீக்கியவனே! உலகப் படைப்புக்குக் காரணமாய் இருப்பவனே! கடலைக் கடைந்தவனே!
எனது தலைவனே! அடிமையான என்னை ஆளும் போக்கியம் உடையவனே! இந்த ஏழையின் துன்பத்தை நீக்குவாயாக!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

(நவின்று - பயிற்சி செய்து; உம்பர் - தேவர்கள்; ஊழி - பிரளயம்; ஆழி- சக்கரத்தாழ்வான்; கம்பம் - நடுக்கம்; மா கரி - பெரிய யானை; கோள்- துயரம்; காரணன் - படைப்புக்குக் காரணமானவன்)


No comments:

Post a Comment