Thursday, July 9, 2020

ஸ்வாதி பரதோஷ பஜன்



ஸ்வாதி பரதோஷ பஜன்

ஆதிரை நாதா நமசிவாயா
ஸ்வாதி நாதா நரசிம்ஹா
ஸ்தம்போத்வா நரசிம்ஹா
லிங்கோத்பவா நமசிவாயா 1

காலனைக் கடிந்த நமசிவாயா
கனகனை ஆட்கொண்ட நரசிம்ஹா
மார்க்கண்டேய வரதா நமசிவாயா
ப்ரஹ்லாத பாலன நரசிம்ஹா 2

தூணின் மைந்தா நரசிம்ஹா
தாய் தந்தை இல்லா நமசிவாய
மந்த்ர ராஜா நரசிம்ஹா
மறைப் பொருளே நமசிவாய 3

அஹோபிலேசா நரசிம்ஹா
அமிர்தகடேசா நமசிவாயா
நாகக் குடை நிழல்  நரசிம்ஹா
நந்தி மேலமரும் நமசிவாயா 4

அபிஷேகப்ரிய நமசிவாய
திருமஞ்சனம் கொள் நரசிம்ஹா
ப்ரதோஷ ப்ரஸன்னா  நமசிவாயா
சந்த்யா சௌந்தர்யா நரசிம்மா  5

மா லோலா நரசிம்ஹா
மலைமகள் பாகா நமசிவாயா
மாய நாராயணா நரசிம்ஹா
மாறாதொனறே நமசிவாயா 6

சாளக்ராம நரசிம்ஹா
ஸ்படிக லிங்க நமசிவாயா
துளசி அணியும் நரசிம்ஹா
தும்பையில் துலங்கும் நமசிவாயா 7

ஆழ்வார்கள்போற்றும் நரசிம்ஹா
அறுவத்து மூவர்  கண்ட   நமசிவாய
திவ்ய ப்ரபந்தா நரசிம்ஹா
திருமுறை வேதா நமசிவாயா 8

ஜ்வாலா சுதர்சனா நரசிம்ஹா
ஜ்யோதி ஸ்வரூபா நமசிவாயா
பவபய நாசனா நரசிம்ஹா
ம்ருத்யுஞ்ஜயா நமசிவாயா 9

திருநீற்றில் ஒளிர் நமசிவாயா
திருமண்ணில் ஒளிர் நரசிம்ஹா
திருவடி சரணம் நரசிம்ஹா
திருவருள் பொழியும் நமசிவாயா 10

நரஹரி நரஹரி நமசிவாய 
நமசிவாயா நரஹரி நரஹரி 
நமசிவாயா நரஹரி நரஹரி 
நரஹரி நரஹரி நமசிவாய 

ந்ருசிம்ஹம் நிர்பயம்
சிவம் சுபம்

No comments:

Post a Comment