Thursday, July 9, 2020

வைகாசி விசாகன் நாம ஜெபம்



 வைகாசி விசாகன் நாம ஜெபம்

ஸ்லோகம்**

 விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம்
க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம் 

***

முருகா என்றால் உருகி அருள்வான்b
கந்தா என்றால் உள்ளம் நெகிழ்வான்
கார்த்திகேயா என மடி தவழ்வான்
கடம்பா என்றிட மடமை அறுப்பான்  1

அறுமுகா என்றிட  அறுபகை  ஓட்டுவான்
சரவண என்றிட சகலரை இணைப்பான்
பழ(ம்) நீ என்றிட  கனிவுடன்  நோக்குவான்
பழுமுதிர்சோலைக்கு அழைத்துச் செல்வான்  2

செந்தூரா என செம்மை சேர்ப்பான்
தணிகையா என்றிட நண்பணும் ஆவான்
ஸ்வாமிநாதா எனத் தோள் மேல் அமர்வான் 
குருகுஹா என்றிட ப்ரணவம்  விளக்குவான் 3

பரங்குன்றா என மங்கலம் கூட்டுவான்
தண்டபாணி என யமனை ஓட்டுவான்
பூசத்தில் வழி பட புண்ணியம் சேர்ப்பான்
விசாகா என்றிட சந்தானம் அருள்வான்   4

மால் மருகா  என மையல்  போக்குவான்
சிவகுமரா என பவ பயம் நீக்குவான்
திருப்புகழ் இசைக்க பெரும் புகழ் சேரப்பான்
திருவருட்பாவில் தன்னை மறப்பான் 5

வேலா என்றிட  காவல் இருப்பான்
வள்ளலே என்றிட பதமும் அருள்வான்
 வேலும் மயிலும் துணை யென்றிருப்போம்
காலனை காமனை வென்று நிலைப்போம்  6

சிவம் சுபம்

** விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தவரும்
உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமானவரும், க்ருத்திகா தேவியின் புதல்வரும்,  எப்போதும் குழந்தை வடிவாய் விளங்குபவரும் ஜடையை தரித்துள்ளவரும்,  பரமேஸ்வரரின் குமாரருமான ஸக்ந்தனை நமஸ்காரம் செய்கின்றேன்.

No comments:

Post a Comment