உ
ஓம்
ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹ ஸ்வாமி ஸஹாயம்.
ஸ்ரீ நரசிம்மர் கும்மி
கம்பக் குழந்தையாய் வந்தான்டீ
கஞ்சன் வயிற்றை கிழித்தான்டீ
பாலன் சந்ததி காத்தான்டீ
பக்த வத்ஸல சிம்மனடி 1
சட்டென வந்த தேவனடி
பட்டென செயல்
முடித்தான்டி
இட்ட வரத தாயகன்டீ
துட்டருக்கு காலனடி 2
சதுர்த்தசியில் வந்தவன்டீ
சந்தி வேளை மன்னன்டீ
ஸ்வாதி நட்சத்தர
தேவனடி
ஸ்வாதீனமாய் வாழ வைப்பான்டீ 3
உக்கிரம் தணிய
சரபேசன்
மடியிலே வீழ்ந்தானடி
கெட்ட ரத்தத்தை
சிவன் உரிஞ்ச
மீண்டும் நாரணன்
ஆனான்டீ 4
செஞ்சுலக்ஷ்மி நாயகன்டீ
கஞ்சமலர் தாள்
பணிவோம்டீ
வச்சிர தேகம் பெருவோம்டீ
வாழ்வாங்கு நாம்
வாழ்வோம்டீ 5
முணு குருவும் போற்றிப் பணிந்த
முக்கண்ணு கொண்ட
சாமியடி
கம்பரும் ஆழ்வாரும்
கோதையும்
பாடிப் பரவிய தேவனடி 6
சக்கரத்தமர்ந்த யோகனடி
சஞ்சலம் சங்கடம்
தீர்ப்பான்டீ
சுத்தும் சுதர்சன சோதியடி
சூது வாதை எரிப்பான்டீ 7
நவ நவ நர சிம்மனடி
பவ வினையைப்
போக்குவான்டி
கடிகாசலம் ஊர்க்காடு
உலகம் முழுதும்
கோவிலடி 8
அரக்கனுக்கே மடி தந்த
அனுக்ரஹ சாமியடி
அக்காரக்கனி இவனடி
அன்பருக்கு தன்னை
தருவான்டீ. 9
மந்திர ராஜ பாதனடி
தந்திரம் செய்யும் மாயனடி
ஊக்கம் உயர்வு தருவானடி
நல்ல நோக்கம் பூர்த்தி செய்வான்டீ 10
நினைக்கும் முன்னே வருவான்டி
நினைச்ச தெல்லாம் தருவான்டி
முகம் மவர்ந்த சாமியடி
நம் அகம் நிறையும் சாமியடி 11
துளசி மாலைகள் சூட்டுவோம்டீ
பானகம் வச்சு பாடுவோம்டீ
கம்பக் குழந்தையாய் வந்தவனை
நம்பக் குழந்தையாய் கொஞ்சுவோம்டீ
நல்லருள் பெற்று உய்வோம்டீ 12
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய சுப லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய சுப லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
சிவம் சுபம்
ஓம்
ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹ ஸ்வாமி ஸஹாயம்.
ஸ்ரீ நரசிம்மர் கும்மி
கம்பக் குழந்தையாய் வந்தான்டீ
கஞ்சன் வயிற்றை கிழித்தான்டீ
பாலன் சந்ததி காத்தான்டீ
பக்த வத்ஸல சிம்மனடி 1
சட்டென வந்த தேவனடி
பட்டென செயல்
முடித்தான்டி
இட்ட வரத தாயகன்டீ
துட்டருக்கு காலனடி 2
சதுர்த்தசியில் வந்தவன்டீ
சந்தி வேளை மன்னன்டீ
ஸ்வாதி நட்சத்தர
தேவனடி
ஸ்வாதீனமாய் வாழ வைப்பான்டீ 3
உக்கிரம் தணிய
சரபேசன்
மடியிலே வீழ்ந்தானடி
கெட்ட ரத்தத்தை
சிவன் உரிஞ்ச
மீண்டும் நாரணன்
ஆனான்டீ 4
செஞ்சுலக்ஷ்மி நாயகன்டீ
கஞ்சமலர் தாள்
பணிவோம்டீ
வச்சிர தேகம் பெருவோம்டீ
வாழ்வாங்கு நாம்
வாழ்வோம்டீ 5
முணு குருவும் போற்றிப் பணிந்த
முக்கண்ணு கொண்ட
சாமியடி
கம்பரும் ஆழ்வாரும்
கோதையும்
பாடிப் பரவிய தேவனடி 6
சக்கரத்தமர்ந்த யோகனடி
சஞ்சலம் சங்கடம்
தீர்ப்பான்டீ
சுத்தும் சுதர்சன சோதியடி
சூது வாதை எரிப்பான்டீ 7
நவ நவ நர சிம்மனடி
பவ வினையைப்
போக்குவான்டி
கடிகாசலம் ஊர்க்காடு
உலகம் முழுதும்
கோவிலடி 8
அரக்கனுக்கே மடி தந்த
அனுக்ரஹ சாமியடி
அக்காரக்கனி இவனடி
அன்பருக்கு தன்னை
தருவான்டீ. 9
மந்திர ராஜ பாதனடி
தந்திரம் செய்யும் மாயனடி
ஊக்கம் உயர்வு தருவானடி
நல்ல நோக்கம் பூர்த்தி செய்வான்டீ 10
நினைக்கும் முன்னே வருவான்டி
நினைச்ச தெல்லாம் தருவான்டி
முகம் மவர்ந்த சாமியடி
நம் அகம் நிறையும் சாமியடி 11
துளசி மாலைகள் சூட்டுவோம்டீ
பானகம் வச்சு பாடுவோம்டீ
கம்பக் குழந்தையாய் வந்தவனை
நம்பக் குழந்தையாய் கொஞ்சுவோம்டீ
நல்லருள் பெற்று உய்வோம்டீ 12
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய சுப லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய சுப லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
சிவம் சுபம்
No comments:
Post a Comment