Thursday, July 9, 2020

சித்திரைத் திருவிழா நாயகிக்கு Bhajanai



சித்திரைத் திருவிழா நாயகிக்கு
ஒரு பஜனை

ராகம் -

அன்னையின் புகழ் பாடும் பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடல் புராணம்)

செழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று
முடிபுனைந்து செங்கோலோச்சி
முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு
நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித்
தன்மகுடம் சூட்டிச் செல்வந்த்
தழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி
அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்

***

ஸ்ரீகரி சுபகரி மீனாக்ஷி - ச்ரித ஜன பாலினி மீனாக்ஷி
மதுரா வாசினி மீனாக்ஷி - மங்கள  காரிணி மீனாக்ஷி

திருமூர்த்தி ரூபிணி மீனாக்ஷி - திரிசக்தி ரூபிணி மீனாக்ஷி
த்ரிபுரேசி மீனாக்ஷி - த்ரி நயனி  மீனாக்ஷி

மரகத வல்லி  மீனாக்ஷி - மாணிக்ய வல்லி  மீனாக்ஷி
ராஜ மாதங்கி மீனாக்ஷி - ராஜ ராஜேஸ்வரி மீனாக்ஷி

ஸ்ரீ சக்ரேச்வரி மீனாக்ஷி - ஸ்ரீ சுந்தரேஸ்வரி மீனாக்ஷி
ஸ்ரீ லலிதே மீனாக்ஷி - ஸ்ரீ சிவ சக்தி மீனாக்ஷி

பங்காரு தல்லி  மீனாக்ஷி - பக்த வத்சலே மீனாக்ஷி
(நீ) பாதமு பட்டிதி மீனாக்ஷி - (மமு)  பரிபாலிஞ்சு மீனாக்ஷி

சிவம் சுபம் 

No comments:

Post a Comment