Thursday, July 9, 2020

ஸத்குரு ஸ்வாமினஹ (Song on Thiagaraja Swaami)



ஸத்குரு ஸ்வாமினஹ

இராம ப்ரஹ்ம தனயரே
த்யாக ப்ரஹ்மமே
இராம பக்தி சாம்ராஜ்ய சக்ரவர்த்தியே

மன்னன் நிதி துறந்தீர்
அண்ணல் துதி செய்தீர்
விண்ணும் புகழ
ஐயாற்றில் இன்றும் வாழ்கிறீர்.

நாரதரைக் குருவாய் பெற்ற யோகீந்த்ரரே
நாத இராமாயணம் இயற்றினீரே

ஷண்மத சங்கீத ஸாகரமே
ஸர்வ லோக சம்மத
ஸத்குருவே

கோடி இராம நாமம்
ஜெபித்த தவ  சீலரே
தேடி வந்தாரே இராமர் உம் இல்லமே

சரணம் சரணம் வால்மீகி  அவதாரரே
தரணும் தரணும் சங்கீத  ஞான பக்தியே

அவம் செய்யும் அற்பருக்கும் நல் மதி தந்து ஆன்மீகம் தழைத்தோங்க அருள் செய்வீரே

இராம இராம இராம இராம நாத ராமா
இராம இராம இராம இராம
த்யாக ராஜ ராமா

சிவம் சுபம்

No comments:

Post a Comment