Thursday, July 9, 2020

சித்திரை நிலவு - மீனாக்ஷி



சித்திரை நிலவு - மீனாக்ஷி

அழுகு நிலா அன்பு நிலா
சித்திரை நிலா  சிவ சக்தி நிலா
அனலில் தோன்றிய குளிர் நிலா
ஆலவாயில் ஒளிரும்  நிலா

மூவலகிற்கும் ஒரே நிலா
முத்தமிழ் வளர்த்த சங்க நிலா
தேயா புகழ் மா மதுரை நிலா
ஓயாதருள் பொழி தேன் நிலா

சித்திரைத் திருவிழா கண்ட நிலா
இத்தரை ஆளும்  மரகத நிலா
கயற்கண் கொண்ட கன்னி நிலா
சூரியனை மிஞ்சும் சுடர் நிலா

மவயத்வஜன் மடி தவழ்ந்த நிலா
காஞ்சனமாலை அணைத்த நிலா
கையில் கிளி வைத்த கருணை நிலா
கல்யாண சுந்தரன் மருவும் நிலா

சிவம் சுபம்

No comments:

Post a Comment