Thursday, July 9, 2020

விசாகத்துதித்த பாலன்



விசாகத்துதித்த பாலன்
விஸ்வ வந்தித வேலன்
அரனார் கண்ணில் தோன்றி
அவர் தோளில் அமர்ந்த குஹன்

கார்த்திகைப் பெண்டிரின்
மடி தவழந்தான்
காத்யாயினி அணைத்த
அறுமுகன்  -
தை பூசத்தில் வேல் கொண்டவன், 
ஷஷ்டியில் சூர சம்ஹாரம் செய்தவன்,

பங்குனி உத்திரத் திருநாளில்,
பரங்குன்றத்தில் மணம் முடித்தவன் 
குன்றுகள் தோறும்  குடி யிருப்பான்
கண்ணிமைக்கும் முன்னே கருணை பொழிவான்

வைகாசி விசாகா போற்றி போற்றி
கார்த்திகேயா கழலிணை போற்றி
பூசத்துப் புனித வேலா போற்றி
சஷ்டி  வெற்றி  பாலா போற்றி
பங்குனி உத்திர மணக்கோலா போற்றி 

சிவம் சுபம் 

No comments:

Post a Comment