Thursday, July 9, 2020

Patthu Viral Modhiram (Mahaperiyavaa)



பத்துவிரல்  மோதிரம் எத்தனை  பிரகாசமது
பாடகந்   தண்டை   கொலுசும்,
பச்சை  வைடூரியம் மிச்சையா  இழைத்திட்ட
பாதச்  சிலம்பினொலியும்
முத்து  மூக்குத்தியும்  ரத்தினப்  பதக்கமும்
 மோகன  மாலை  யழகும்,
 முழுதும்  வைடூரியம்   புஷ்பரா  கத்தினால்
  முடிந்திட்ட  தாலி  யழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற்   கம்மலுஞ்
செங்கையிற்  பொன்   கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற  முகமெலா  மொளியுற்ற
சிறுகாது கொப்பின்  அழகும்
அத்திவரதன்   தங்கை   சக்தி   சிவரூபத்தை  யடியனாற் சொல்ல  திறமோ
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
அம்மை   காமாட்சி   யுமையே.   

சிவம் சுபம்       

No comments:

Post a Comment