Thursday, July 9, 2020

அனுஷாவதாரரின் ஜாதகம். (suddha dhanyasi)



சுத்த தன்யாசி

அனுஷாவதாரரின் ஜாதகம்.
அனுக்ரஹ சிவனாரின்
ஜாதகம்.

ஆதிரையன் மறு வடிவின் ஜாதகம்.
ஆதி சங்கர வழித் தோன்றலின் ஜாதகம்.

நால் வேத ரக்ஷகரின்
ஜாதகம்.
நடமாடும் தெய்வத்தின் ஜாதகம், பவ ரோஹம் தீர்த்திடும் ஜாதகம் 
சிவகடாக்ஷம் கூட்டிடும் ஜாதகம்.

கோள்களை நம் வசமாக்கும் ஜாதகம்
கோவிந்தன் அருள் கூட்டும் ஜாதகம், உலகை நல்வழி நடத்திடும் ஜாதகம்,
உய்கதி அருளும்  ஜாதகம்.

காஞ்சி வாழ் தேவனின் ஜாதகம்
காமகோடி ஈசனின் ஜாதகம்.
காமாக்ஷி அருள் கூட்டும் ஜாதகம்
கனகதாரை பொழிந்திடும் ஜாதகம்

ஜெகத்குரு நாதரின் ஜாதகம்
ஜெகன் மங்களாகார
ஜாதகம்
பார்த்தாலும் பணிந்தாலும் ஜெயமே !
பக்தியோடு பேணுவோர்க்கு சுபமே !

சிவம் சுபம்

No comments:

Post a Comment