Thursday, July 9, 2020

Nrusimha Stuthi (Revati) கருணையே வடிவான தெய்வம்



ரேவதி

கருணையே வடிவான தெய்வம்
கல் தூணில்  தோன்றிய தெய்வம்
பாற்கடலை விட்டு வந்த தெய்வம்
பறவைக்கும் முன் வந்த தெய்வம்

அழைக்குமுன் வந்த தெய்வம்
அன்பனுக்காய் ஓடி வந்த தெய்வம்
மணந்தாளை மறந்து வந்த தெய்வம்
மடி அரக்கனுக் கீந்த தெய்வம் 

தாயன்புக்கு ஏங்கிய தெய்வம், (பின்)
தாய்மார்கள் பல கொண்ட தெய்வம்
தாய் பெருமை உணர்த்தும் தெய்வம்
நம  தாய் தந்தையாம் தெய்வம் 

தன்னை நிகர் இல்லா நரசிம்ஹ தெய்வம்.... லக்ஷ்மி நரசிம்ஹ தெய்வம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment