Thursday, July 9, 2020

ஸ்ரீ ராம நாம(மே) வேதம்



ஸ்ரீ ராம நாம(மே) வேதம்

அன்னையர் மனம் கோணாது
தந்தையின் சொல் காத்து
தம்பியரை ஆற்றுபடுத்தி
கரம்  பிடித்தவளை மட்டுமே நேசித்து
குரு வழி நடந்து
அரக்கனுக்கும் இரங்கி,
அனைத்துயிரையும் தன் குடும்பம் என கொண்டு
தான் இறை என்று மார் தட்டாது
சிவனார் அருள் கொண்டு
அரங்கனை ஆராதித்து
அற நெறி வழுவாது
அகிலத்தை ஆண்டு
மானுட தேவனாக
அனுமனின் இதயாலயத்தில் இன்றும் வாழும்
அண்ணலின் ஈறெழுத்து
இனிய 'ராம' நாமமே
நமக்கு வேதம், வான் அமுதம்
நம் குலம் காக்கும் கவசம்.

ராம ராம ராம ராம.....

சிவம் சுபம்

No comments:

Post a Comment