Sunday, March 26, 2017

மூலத்தில் உதித்த முத்து (Saraswathi)

ஸரஸ்வதி

மூலத்தில் உதித்த முத்து,  ஆதி மூலமாம் அண்ணலைக் கவர்ந்த சித்து (சொத்து)

அஞ்சனையின் அருந் தவமாருதி,   அன்னை சீதையின் அருள் பெற்ற வாரிதி

தாசரதி குலம் காத்த தபோநிதி
மாசற்ற மனமுறை தயாநிதி
ராம காவிய சுந்தரன், (ராம) நாம ஜெப ப்ரிய பாகவதன்

பர(ம) சிவனார் அளித்த ஆஞ்சனேயம்,
பரமனை உள் வைத்த ஆலயம்,
பக்தனாய் தோன்றி பகவன் ஆன அற்புதம்,  ஜீவன்
முக்தராய் நம்மை வாழ வைக்கும்
அமுதம், அருளமுதம்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

பெற்ற தாய் தந்தையரைப் பேணாது (Naadanamakriya)

நாதநாமக்ரிய

(பெற்ற) தாய் தந்தையரைப் பேணாது
தாயுமானவனைத் தொழுது பயன் என்ன?

ஈன்றவரைத் தொழாது இராம நாம ஜெபம் அருள் தருமா ?

(தன்) உதிரத்தால் நம் உயிர் வளர்த்தாளை உதாசீனம் செய்யலாமா ?
(உருவாய்) இருந்த போது உணவிடாது
இறந்த பின் பிண்டம் பெரும் தண்டமே .

(நம்) கண் கண்ட தெய்வம் பெற்றோரே,
விண்ணவரும் இதை ஏற்பாரே,
பெற்றோரை வலம் வரும் பிள்ளைகளே,
பிள்ளையாரைப் போலே முழு முதலாவாரே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்

விருத்தம்

காற்றின் மகவானான், வானளாவிப் பறந்தான்,
அகன்ற கடல் கடந்தான், புவி மகள் உயிர் காத்தான்,
அதர்மத்தை எரித்தான், கண்டேன் அன்னையை என்று அண்ணல் அடி பணிந்தவன் பதம் பணிந்து உய்வோம்

சுபமெல்லாம் அருளும் சுந்தர காண்டம்,
சொல்லின் செல்வனின் திறல் விளங்கு காண்டம்

ஜெகம் புகழும் புண்ணியனின் வீர தீர காண்டம்,
ஜெகன்மாதா சீதை மனம் மகிழ்ந்த காண்டம்

ராம பக்த மாருதியின் மகிமை நிறை காண்டம்,
ராமனே நெகிழ்ந்து நின்ற ரசமிகு காண்டம்,
படிப்பவர் கேட்பவர் பதினாறும் பெற்று,
நிறை வாழ்வு வாழ அருளும் காண்டம்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

ஒருவனே இறைவன், அவனே நம் தலைவன் (Sudda Dhanyasi)

சுத்த தன்யாசி

ஒருவனே இறைவன், அவனே நம் தலைவன்

ஹரி என்பார் ஹரன் என்பார் அவனை, இரண்டுமே நான் என்பான் அவனே

வடகோடியில் சிவனாய் "ராம" ஜெபம் செய்வான், தென் கோடியில் ராமனாய் சிவாலயம் சமைப்பான், விழி கொடுத்து மாலாய் சிவனை துதிப்பான், சக்கரம் ஈந்து சிவனாய் மாலைக் காப்பான்

விஷ்ணு துர்க்கையாய் நம் அன்னை  யாவான், சிவ பரனாய் அவனே நம் தந்தையும் ஆவான்,
ஒரு தேவனே பல உருவில் தோன்றி அருள்வான்,  இதை உணர்ந்தோரின் உள்ளத்திலே ஜோதியாய் ஒளிர்வான்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

அபிராம புரத்தானே (Brindavana Saarangana)

பி/சாரங்கா

அபிராம புரத்தானே
ஆதித்யன் சீடனே
இராம தாரகனே
ஈஸ்வராம்சனே

உன்னத வானரனே
ஊழை வென்றவனே
என்றும் வாழ்பவனே
ஏற்றமிகு நைஷ்டீகனே

ஐந்து முகத்தோனே
ஒப்பிலா சொல்லோனே
ஓங்கார மாருதியே
ஔஷத சஞ்சீவியே

அடிமலர் சரணே!

சிவம் சுபம்

நெஞ்சே நினைத்துருகு நட மாடும் தெய்வமதை,



நெஞ்சே நினைத்துருகு நட மாடும் தெய்வமதை,
செவியே கேட்டொழுகு அத் தெய்வத்தின் குரலதனை.

கண்ணே கண்டுருகு காம கோடீ சங்கரரை,
நாவே செபித்துருகு ஜெய ஜெய சங்கர என்றவரை.

நுதலே பூண்டொளிரு அய்யன் திரு நீற்றதனை,
மூக்கே நீ முகரு அய்யன்
பாத மலர் தனையே.

காலே வலம் வந்து பணி
அய்யன் அதிஷ்டானமதை,
வாயே குடித்துய்வாய்
அய்யன் தீர்த்த ப்ரசாதமதை.

கரமே குவித்து தொழு
சந்திர சேகர ஸரஸ்வதியை,
சிரமே சூடி ஒளிர் அவர்
திரு பாதுகைகள் தனையே

பரம சிவனாராம் நம்
பரமாச்சார் யரிடம்
சரணம் அடைந்திடுவோம்
மரணம் வென்று வாழ்வோம்

சிவம் சுபம்

ஸரஸ்வதி மாதா, உன் சரணகமலம் தா (Saraswathi)

ஸரஸ்வதி

ஸரஸ்வதி மாதா, உன் சரணகமலம் தா

வெண் தாமரை வளர் வேதக் கருவே, வீணை மீட்டும் நாத உருவே

கூத்தனூர் வாழும் கோமளமே,  கம்பனுக் கருளிய கலைத் தெய்வமே, நாரதனை ஈன்ற நா மகளே,
(எனக்கும்) நல் கலை ஞானம் அருள்வையே

எண்ணும் எழுத்தும் ஆனவளே, பண்ணும் பரதமுமாய் ஒளிர்பவளே,
மண்ணும் விண்ணும் தொழும் தேவி, கண்ணும் கருத்துமாய் (எனைக்) காப்பவளே

சிவம் சுபம்

அன்னை மீனாக்ஷியே அன்பரின் மன சாக்ஷி

அன்னை மீனாக்ஷியே அன்பரின் மன சாக்ஷி,
இவ்வகில மெங்கும் அவள் அரசாக்ஷி

ஆலத்தை அமுதாய் மாற்றியவள், ஆலவாயனை மணந்த அருள் ஊற்று அவள்

மீன் விழியாள், தேன் மொழியாள், மான் இனத்தாள்,  தமிழ் வளர்த்தாள், "தான்" அகன்றால்  தாள் பணிந்தால், தன்னைத் தருவாள்...... தன்னையே தருவாள்

சிவம் சுபம்

பராசக்தி பரதேவதே (Shankarabharanam)

சங்கராபரணம்

பராசக்தி பரதேவதே
பரிந்தருள் புரி ஈஸ்வரி

பரமேசன் பவள மேனியில்
பசுமை சேர்க்கும் தேவியே,
பங்கய வல்லியும் பல கலை வல்லியும்
போற்றிப் பரவும்.....

ஸ்ரீ புர வாஸினி, ச்ரித ஜன பாலினி,
பாலா த்ரிபுர சுந்தரி, பவரோஹ நிவாரணி,
சங்கராபரண சௌந்தரி, சௌபாக்ய தாயினி,
திருமயச்சூர் வாஸினி,  தீனன்  எனை ஆதரி

சிவம் சுபம்

சோம சுந்தரா (Siva Ranjani)

சிவரஞ்சனி

சோம சுந்தரா
சொக்க நாதா
ஆலவாய் அழகா
அருள்புரி அய்யா

அன்னை மீனாக்ஷியின் அருட் கரம் பற்றி அகிலம் ஆளும் ஈசனே, அருள் புரி நேசனே

வைகையின் இருகரையின் மண் பட நடந்தாய், கால் மாறி ஆடினாய், கல் யானைக்கும் கரும்பூட்டினாய், திருமுகப் பாசுரம் வரைந்தளித்த இறைவனே, நின் திருவடி நிழலை எனதாக்கு மெய்யனே

சிவம் சுபம்

ஆலவாய் என்றிட ஆலமும் அமுதாகும் (Navarasa Kannada)

நவரச கன்னடா (?)

ஆலவாய் என்றிட ஆலமும் அமுதாகும்...... திரு....

அன்னை அமுதூட்டுவாள்,
அய்யன் அகமணைப்பான், அகிலமும் நம் வசமாகும்

முக்குறுணிப் பிள்ளை முன்  நின்றருள்வான், குன்றக் குமரன் குறைகள் களைவான், பெரியாழ்வார் மருகனாம் நம் தாய் மாமன்
"பல்லாண்டு வாழ்" என்று மனம் நெகிழ்வான்.

சிவம் சுபம்

"நாளை" கடத்தா நாயகன் (Mohanam)

மோஹனம்

"நாளை" கடத்தா நாயகன்,
தாமதியா தருளும் நர சிங்கன்

தாயின் மடி புகுந்தால் தாமதம் ஆகுமே என்று
தூணைத் தாயாய்க் கொண்டவன்

அவசரக் கோலத்தில் அவதரித்தான், அன்பனைக் காக்க தூண் புகுந்தான், மூச்சு முட்ட நின்றிருந்தான், அன்பன் வேண்ட தூண் பிளந்து அருள் பொழிந்தான்

வம்பருக்கோ அவன் கால காலன், அன்பிற் குருகும் இளிச்ச வாயன், துன்பம் துடைத்திடும் ஆதி மூலன், (இனி) ஜென்ம மில்லாது
ஆட்கொள்ளும் அஹோபிலன்

சிவம் சுபம்

இறையே வா! என் துரையே வா (Bhajan)



இறையே வா!  என்
துரையே வா!
துரையே வா! என்
இறையே வா!

முறை கேள் வா - என்
முறை கேள் வா -
குறை தீர்  வா -
நிறை வாழ் வருள் வா!

சடை முடியா!
விடை மேல் வா! வெள்ளை
விடைமேல் வா - பிரியா
விடையுடன் வா!
விடை பகர் வா! நல்
விடை பகர் வா!

மதி சேகரனே!
விதி மாற்று! என்
விதி மாற்று.
நிறை மதி தா!
நிம் மதியும் தா

சிவமே வா ! என்
சீவனே வா!
சிவையுடன் வா!
சுப மருள் வா!

சிவம் சுபம்.

பக்தி செய்வோரைக் காப்பதுன் (Sahana)

ஸஹானா

பக்தி  செய்வோரைக் காப்பதுன் கடமை யன்றோ சிவமே! அவர் தம் நலம் பேணுவது உமக்கு பெருமை யன்றோ சிவையே!

நல்லோரை நலிய விடலாமோ அய்யனே, அவர் வாழ்வில் சலிப் படைய செய்யலாமோ, அன்னையே

அன்பரின் மங்கலம் காத்தருள் தேவா! அவர் தம் விதி மாற்றி பார்த்தருள் தேவி!  (உமைப்) பாடுவோர் சிறந்தாலே உம் புகழும் சிறக்கும், உமைப் பணிவோர் உயர்ந்தாலே ஆன்மீகம் தழைக்கும், இறையே!

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

தென் மதுரை மீனாளே (Hamsanandi)

ஹம்ஸானந்தி

தென் மதுரை மீனாளே,
ஏழுலகை ஆள்பவளே,
என் மனதை அறியாயோ
ஏனிந்த தாமதமோ ?

உனையன்றி யாரம்மா
ஏழை முறை கேட்பவரே,
அவர் குறை தீர்ப்பவரே.

முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கித் தொழும்,
முக்கண்ணன் பாதியே,
முக்கூடல் தேவியே கயற்கண்ணால் பாரம்மா, கரம் கொடுத் தாளம்மா

தாய் நீ மனம் வைத்தால்
சேய் என் குலம் சிறக்கும்,
உனைப் பாடும் திறன் பெருகும்,
உன் பத மலரிணை நிழலும் நிலைக்கும், இந்த வரம் ஒன்றே போதும் அன்னையே, சுகித்திருப்பேன் நான் உன்னை எண்ணியே

சிவம் சுபம்

வைகுந்த வாசா (Brindavana Saaranga)

வைகுந்த வாசா!  உன் வர மழை போதும், பத மலர் தந்தாள் அரங்கா, பூலோக

(ஏகாதசி) நோன்பிருந்தால்
சொர்க்கம் திறக்கு மென்பாரே,  சொர்க்கம் எனக்குனது பதமலரே அரங்கா!

நாரதர் கானம் இசைக்க, நல்லோர் நால் வேதம்  முழங்க, ஸ்ரீஜய விஜயர் "வா" என்று வரவேற்க,  அம்மையர் இருவருன் பத மலர் இணை வருட, அரவணை மேல் துயிலும்  உன் பொற்பத நீழலில் (நானும்) நிலைத்திட வேண்டும் ....... ரங்கா!

சிவம் சுபம்

பார்வதி சுகுமாரன், (Kedara Gowla)

கேதார கௌள

பார்வதி சுகுமாரன்,
பதுமநாபன் மருகன்,
பழவங்காடி அமர்ந்தானே

ஞானக்கனி வென்ற ஞால முதல்வன், அனந்தபுரியில் நிலை கொண்டானே

பழனிமலையன் தொழும்
பாவன மூர்த்தி,
சபரீசன் பணி சங்கட ஹர மூர்த்தி,
பெற்றோரே உலகென்ற பெருங்குண மூர்த்தி, பெருங்கருணைப் பொழி ஐங்கர அன்பு மூர்த்தி

வ்யாச பாரதத்தை எழுதிய "தந்த" மூர்த்தி
நேசமே வடிவான ஏக தந்த மூர்த்தி,
தடைகளைத் தகர்த் தெறியும் வக்ரதுண்ட மூர்த்தி,
படைக்கலமாய் நம்மைக் காக்கும் மஹா கணபதி

சிவம் சுபம்

(அந்த) ரங்க நாதன், என் அந்தரங்க நாதன் (Bhagesri)

பாகஸ்ரீ

(அந்த)  ரங்க நாதன், என் அந்தரங்க நாதன், அந்தரங்க நாதன், என் அன்புடை நாதன்

(பூலோக) வைகுந்த வாசன்,  வானோரும் ஏத்தும் பரம பத வாசன்

யோக நித்ரேசன், பாக ஸ்ரீ பூ- நேசன், அரவிந்த நயனன், பவ பந்த விமோசனன்,  ஆழ்வார்கள் அனைவரின் பாட்டுடைத் தலைவன், பத்து அவதார பரிமள ரங்கேசன்

சிவம் சுபம்

சொக்க வாசல் திறந்த தம்மா (surutti)

சுருட்டி

சொக்க வாசல் திறந்த தம்மா, பூலோக சொர்க்க வாசல் திறந்த தம்மா

அரங்கனும் அவன் மா தேவியும் அரவணையில் அமர்ந்து அருள் பொழிந்தாரம்மா

ஆழ்வார்கள் கண்டு தொழுதாடும் அய்யனை அம்மையைக் கண்டேனம்மா, பரம பத நாதனின் பதமலரை என் சிரம் மேல் வைத்துக் கொண்டாடி னேனம்மா

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்த மென்று நெக்குருகி மெய் மறந்தேனம்மா, விழி நீர் துடைத்தே  கண் மலர்ந் தேனம்மா, கண்டது கனவென்று (மனம்) உடைந்தேனம்மா, கனவு நனவாக கரியவன் கழல் பணிந்தேனம்மா

சிவம் சுபம்

புண்ணிய நாள் இது புண்ணிய நாள் (siva ranjani)

சிவரஞ்சனி

புண்ணிய நாள் இது புண்ணிய நாள்

உருவாய் நம்மிடை நடமாடிய தெய்வம் அருவாய் எங்கும் நிறைந்த நாள்

காமகோடீசராம் பரமாச்சார்யர் பரமேசனாய் மீண்டும் கயிலை புகுந்தாரே,
மாதவம் செய் மஹா  பெரியவர் மஹா தேவராய் நம் மனம் நிறைந்தாரே

அய்யனின் "தெய்வக் குரல்" செவி மடுப்போம், அவரவர் வழியில் இறை வழி படுவோம்,
"நான்"அதை களைவோம்,
நாம் ஒன்றாய் இணைவோம்,
நாதனவர் பத மலர் நிழலில் நிலைப்போம்

சிவம் சுபம்

காமனைக் காய்ந்தவனின் கண் மணியே (Shanmukhapriya)

ஷண்முகப்ரிய

காமனைக் காய்ந்தவனின் கண் மணியே,
கார்த்திகேயக் கருணை ஷண்முக மணியே

காருண்ய சிவை கர வேலு மணியே, கரியவன் மனம் கவர் மருக மணியே

கரிமுகனைத் தொழும் தூயமணியே, (சிவ)
குருவின் தோளமர்ந்த குஹ மணியே,
பிரமன் செறுக்கழித்த ஞான மணியே
சூரனை ஆட் கொண்ட மயில் மணியே

தேவசேனாபதியாம் வீர மணியே
நங்கையர் இருவரின் நாத மணியே,
அவ்வைப் பாட்டியின் அருந் தமிழ் மணியே,
ஆதி சங்கரரின் புஜங்க மணியே,

அருணகிரியின் திருப்புகழ் மணியே,
அருட்ஜோதி வள்ளல் கண்ட தெய்வ மணியே
பாம்பனாரைக் காத்த குமர மணியே
தேவராயரின் சஷ்டி கவச மணியே

பத்தரைக் காக்கும் பன்னிரு கண்மணியே
பவவினை களையும் பன்னிரு கரமணியே
சுப மெலாம் அருளும் சுந்தர மணியே, உன் பத மலர் தந்தாள் சுப்பிரமணியே

சிவம் சுபம்

சிவ சிதம்பர சங்கீர்த்தனம் 



audio1
audio2
audio3
audio4
audio5



l

அருட்ஜோதி வள்ளல் பிரான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் அருளிய

சிவ சிதம்பர சங்கீர்த்தனம்
Siva Sitampara Saṅkīrttaṉam

எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
றுலவு கின்றபே ருலகம் என்பதும்
கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
திலகம் என்றநங் குருசி தம்பரம்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

2. வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
மனம டங்குசிற் கனந டந்தரும்
உரமு றும்பதம் பெறவ ழங்குபே
ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
பரம மாகியே பரவு மாமறைச்
சிரமு றும்பரம் பரசி தம்பரம்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்

3. நித்தி யம்பரா பரநி ராதரம்
நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
சத்தி யம்கனா கனமி குந்ததோர்
தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
வித்தி யஞ்சுகோ தயநி கேதனம்
விமலம் என்றுநால் வேத முந்தொழும்
சித்தி யங்குசிற் கனசி தம்பரம்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

4. அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

5. பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
பேத மாயதோர் போத வாதமும்
சுத்த முந்தெறா வித்த முந்தரும்
சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
சித்த முஞ்செலாப் பரம ராசியம்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்


Sri Nataraajarukku Jeya NangaLam

Sri Nataraajarukku Jeya NangaLam
(Sri) Sivakaama Sundarikku Suba MangaLam

Kanaga Sabesarukku Jeya MangaLam
Kaal thookki aaduvorkku Suba MangaLam

Kaalmaari Aaduvorkku Jeya MangaLam
VeLLi Ambalarukku Suba MangaLam
Kutraa koothanukku Jeya MangaLam
Chiththira Sabesarukku Suba MangaLam

Aalangaattu Ayyanukku Jeya MangaLam
Athbutha Oorthvarukku Suba MangaLam
Thaamira Sabesarukku Jeya MangaLam
(Thiru) Nelveli Naatharukku Suba MangaLam

Uththira kosarukku Jeya MangaLam
Unnatha Maragatharkku Suba MangaLam
Aathirai Naatharukku Jeya MangaLam. - avar
Adiyavar anaivarukkum Suba MangaLam

Sivam Subam

பால விநாயகர் ஆலயம் (Bilahari)

Bilahari

பால விநாயகர் ஆலயம், பக்தி செய்வோருக்கு வைகுண்ட கைலாயம், நந்தவன

காமாக்ஷி நாதனும் கமலாக்ஷி நாதனும் இணைந்தருள் பொழியும்
ஈடில்லாத் தலம்

திருப்பாவையும் திரு வெம்பாவையும் இணைந் தொலிக்கும் இங்கே !
நடராஜ மயிலாட கோவிந்தக் கார் வண்ணன் மயங்கி சயனிக்கும் அற்புதமும்  இங்கே !

துளசியும் துளவமும் ஆட்சி செய்யும் தலம், கந்தனும் கண்ணனும் அருளும் திருத்தலம், சைவ வைணவத்தை இணைக்கும் சேது - இதற்கிணையான தலம் வேறு ஏது

சிவம் சுபம்

Viveka-Anandham Vilaindha Naal

Sri RamaNam Siva RamaNam



Sri RamaNam Siva RamaNam
Siva RamaNam Bava HaraNam

Thiruchuzhi RamaNam thalai chuzhi maatrum,
Thiru Madurai RamaNam Yama bayam
pokkum
Thiru AruNai RamaNam uL-oLi perukkum
uL oLi perukki, uy-Gathi aruLum

Venkata RamaNam Seshaadri RamaNam
Seshaadri RamaNam Shanmuga RamaNam
Shanmuga RamaNam Shanmatha RamaNam
Shanmatha RamaNam Sarva Sammatha RamaNam

Dhyaana RamaNam Gnana RamaNam
Veda RamaNam Vedhaantha RamaNam
Aathma RamaNam
Advaitha RamaNam
Bhagavan RamaNam
Jyothir RamaNam

Jaya Jaya RamaNa
Hara Hara RamaNa
Hara Hara RamaNa
Bhagavan RamaNa

Sivam Subam

கண்ணுக்குத் தெரிந்த கடவுளைத் தொழுது (Shuba bandu varali)

சுப பந்துவராளி

கண்ணுக்குத் தெரிந்த கடவுளைத் தொழுது 
கண் பெற்ற பயனை அடைவோமே

தனக்கு தணலையும் நமக்கு அருளையும்
பொழியும் தயாகரனை .... திவாகரனைப்  பணிவோமே

அவன்றி ஓர் அணுவும் தோன்றுமோ.....அவன்
அருள் இன்றி உயிர்தான்  பிழைக்குமோ, தழைக்குமோ
அகத்தியன் போற்றும் ஆதித்ய தேவனை
அண்ணலும் வணங்கிய அந்த சூர்யனை
நாளும் தொழுவோம்.. நலமுடன் வாழ்வோம்

சிவம் சுபம்
த்யாகு 

ஆரூரன் அளித்த நாத ப்ரஹ்மம் (Mohana Kalyani)

மோஹன கல்யாணி (?)

ஆரூரன் அளித்த நாத ப்ரஹ்மம்,
ராம ப்ரஹ்ம தனயனாம் த்யாக ப்ரஹ்மம்

ஐயாறப்பன் மடி தவழ்ந்தார்  - அண்ணல் ராமனை கண்டு கலந்தார்

வால்மீகியின் மறு அவதாரம்
வான்மழையாய் பொழிந்தார் அம்ருத கானம்
த்வைதாத்வைதம் கடந்து உயர்ந்தார் - ராம
பக்தி சாம்ராஜ்யம் ஸ்தாபித்தார்

ஆனைமுகன் துடங்கி ஆஞ்சநேயன் வரை
அனைத்து தேவரையும் பாடிப் பரவினார்
நரஸ்துதி மறுத்து இறை ஸ்துதியில் லயித்தார்
ஸத்குருவாய் அன்பர் மனத்தில் நிலைத்தார்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

கச்சி ஏகம்பனே



கச்சி ஏகம்பனே
கடம்பவன சுந்தரனே
காசி விஸ்வ நானே
நின் தாள் சரணே

தில்லை யம்பலனே
நெல்லை யப்பனே - திரு
மயிலை கயிலையனே
எல்லையிலா  கருணையே

ஒற்றீயூர் ஈசனே
சைல மல்லீசனே
ஆருர் த்யாகேசனே
அடைந்தேன் உன் சரணே

ஆடலில் வல்லானே
பாடல் வரைந்தோனே
நாடகம் நடத்துவோனே
நின் பாதமே சரணே

ஆலம் உண்டோனே
அமுதம் அளித்தோனே
அகிலம் காத்தோனே
அடி மலர் சரணே

காமனை எரித்தோனே
கதிர்காமனை ஈன்றோனே
காலனை உதைத்த நின்
காலடி சரணே

மனையாளுக்கு பாதியுடல்
மைத்துனர்க்கு சக்கரம்
மித்திரர்க்கு செல்வம்
பத்தருக்கு தன்னையும் தந்திடும் த்யாகனே

சக்தி பாகனே
சரஸ்வதி சோதரனே
"திரு"வருள் பொழிவோனே
(நின்) திருவடி சூடுவேனே

அம்மை யப்பனே
ஆதி குரு மூர்த்தியே
அரி தேடும் இறைவனே
அன்பருள் உறைவோனே

கால் தூக்கி ஆடுவாய்
கை கொடுத் தருள்வாய்
மனத்துள் ளமர்வாய்
மங்கலம் பொழிவாய்

சிவம் சுபம்

திருப் பாவையின் மறு வடிவா .... (on MS Amma)

 உ
மதுரையில் அவதரித்த மாதரசி
காமாக்ஷி அருள் பெற்ற இசையரசி
இக் காசி-னி புகழும் கொடையரசி
தனக்கென வாழா பேரரசி
ஸ்ரீ சந்த்ரசேகர சதாசிவ சாயியுள் கலந்த சுப அரசி
புகழ் வாழிய வாழியவே!
சிவம் சுபம்.                

    
[1:22 PM, 1/17/2017] Appa Cell: திருப் பாவையின் மறு வடிவா, இல்லை அந்த மீராவின் இன்னொரு உருவா ! நீ....

இசைக்க வென்று அவதரித்தாயா அல்லது கொடுப்ப தற்கென்றே இசை பொழிந்தாயா

ஆண்டாளும் மீராவும் பக்தி செய்தார்கள் தாயே, ஆனால் நீயோ இசையை இறைவனுக்கும், விளைந்த பயனை உலகிற்கும் அர்ப்பணித்தாய் அன்னையே, இல்லறத் துறவியாய் நல்லறத் தொளிர்ந்த தேவி, உன் குரல் அமுதுண்டு உய்யும் என் ஆவி.

சிவம் சுபம்

Siva Hara KAILAAYAM ..... (Bhajan)

OM

Siva Hara KAILAAYAM
Sri Hari VAIKUNTAM
Siva Hara CHITHAMBARAM
Sri Hari SRI RANGAM

Siva Hara KAALA HASTHI
Sri Hari THIRUPATHI
Siva Hara SRI SAILAM
Sri Hari AHOBILAM

Siva Hara THIRIVAARUR
Sri Hari THIRUMOHUR
Siva Hara THEN MADURAI
Sri Hari VADA MADURAI

Siva Hara THIRU MAYILAI
Sri Hari THIRU ALLIKAENI
Siva Hara THIRUVOTRIYUR
Sri Hari THIRUKOSHTIYUR

Siva Hara VAARANAASI
Sri Hari ANANTHAPURI
Siva Hara RAAMESWARAM Sri Hari Hara KANCHEEPURAM.

Sivam Subam

மஹா பெரியவா சரணம் (Gowla)


⁠⁠[5:49 AM, 1/22/2017] Appa Cell: ⁠⁠⁠Gowla (ஸ்ரீ) அனுஷ மஹா பெரியவா சரணம், திரு ஆதிரை மஹா தேவா சரணம், சரணம் சங்கராச்சார்ய ஜகத் குரோ சரணம், ஸ்ரீ சந்த்ர சேகர மஹா குரோ சரணம் பரமாச்சார்ய பர ப்ரஹ்மமே சரணம் - ஸ்ரீ பரமேஸ்வர ஸ்வரூபமே சரணம், அம்பலத்துள் ஆடும்  தெய்வமே சரணம், அன்பரிடை நடமாடும் தெய்வமே சரணம் நால் வேத ஸ்ருதியே சரணம் நாராயண ஸ்ம்ருதியே சரணம். காமகோடி ஸர்வக்யமே சரணம், ஸ்ரீ காமாக்ஷி ஏகமே சரணம் தர்ம ரக்ஷணமே சரணம், ஸ்வதர்ம போஷகமே சரணம், பாத கமலமே சரணம், எம் பாதக மலம் அகற்றும் பாத கமலமே சரணம்.

அருளரசி, மனயிருள் நீக்கும் மங்கையற் கரசி (Amruthavarshini / amritavarshini)

அமிர்தவர்ஷிணி

அருளரசி, மனயிருள் நீக்கும் மங்கையற் கரசி

அனலில் தோன்றிய அன்பரசி, கையில் கிளி வைத்தருளும் பெண்ணரசி

சங்கத் தமிழரசி,  மதுரை மரகதச் சிலையரசி, ஆலவாயனின் மன அரசி, மூவுலகாளும்
முக்கண் ணரசி, தேவரும்
தொழும் தென்னரசி

வைகைக் கரை வாழ்வரசி,
பிள்ளைத் தமிழ் கொண்ட பேரரசி, அலை கலை தொழும் மலையரசி, இல்லையெனாதருளும் கயற் கண்ணரசி.

சிவம் சுபம்

சிவனை நினைந்தார் எவர் தாழ்ந்தார் (Hindolam)

ஹிந்தோளம்

சிவனை நினைந்தார் எவர் தாழ்ந்தார், அரனை மறந்தார் எவர் வாழ்ந்தார்

அரி நாரணனின் அந்தரங்க நாதனை, நம் அம்மையப்பனாம் ...

ஆலம் உண்ட அமுதனை,
அகிலம் காத்த மெய்யனை,
வேத நாயகனை, நாத வடிவனை, நந்தி வாஹனனை, ஜோதி ஸ்வருபனை, ஆதி அந்தமில்லா பரம......

சிவனை நினைந்தே வாழ்ந்திடுவோம், அரனை மறவா துய்ந்திடுவோம்.

சிவம் சுபம்

வாயு புத்ரன் மாருதி



வாயு புத்ரன் மாருதி
வற்றாக் கருணை வாரிதி

சொல்லின் செல்வன் மாருதி - சொல்லுள் அடங்கா கீருதி (கீர்த்தி)

அன்னையைக் காத்த மாருதி
தன்னையே தரும் தயாநிதி

அவன் உள்ளமே ஆலயமாம்,
அதனுள்ளே ராமராம்

மாருதி என்றே சொல்லுவோம்.
தாசரதி அருள் பெறுவோம்

சிவம் சுபம்

புண்ணிய பூமி பாரதம். (Revathi)



புண்ணிய பூமி பாரதம்.
கண்ணிய பூமி பாரதம்.

இறை நடந்த பாரதம்.
இறை வாழும் பாரதம்.

வேதம் விளைந்த பாரதம்.
நாத மய பாரதம்
தருமத்தில் சிறந்த பாரதம்.
கரும பூமி பாரதம்.

கலைகளில் வல்ல பாரதம்
(பல்) காப்பியம் போற்றும் பாரதம்.
தாய்மையை மதிக்கும் பாரதம்.
வேற்றுமையில் ஒற்றுமை பாரதம்

அஹிம்சையின் சிறப்பே பாரதம்
அளப்பறியாக் கருணை பாரதம்.
அகிலம் போற்றும் பாரதம்.
எங்கள் அன்னை நாடு பாரதம்.

சிவம் சுபம்

நமசிவாயனை நரசிங்க தேவனை (Mohanam)

மோஹனம்

நமசிவாயனை நரசிங்க தேவனை நாளும் பொழுதும் தொழுதுய்வோமே

ஆதியந்தமில்லா அருட் பெருஞ்ஜோதியை, தூணிலும் துரும்பிலும் நிறைந்த பரம்பொருளை...

ப்ரதோஷ தாண்டவ நடராசனை, ப்ரதோஷத் துதித்த ப்ரஹ்லாத வரதனை,  உமையொரு பாகனை, திரு நிறை மார்பனை, சங்கர நாரணனை சரணடைந்திடுவோம்

சிவம் சுபம்
ந்ருசிம்ஹம் நிர்பயம்.

எத்தனை மஹான் களோ, அத்தனை மஹனீயருக்கும் வந்தனம்

:58 AM, 1/26/2017] Appa Cell: ⁠⁠⁠ஓம் - குருவருளே திருவருள்  எத்தனை மஹான் களோ, அத்தனை மஹனீயருக்கும் வந்தனம் ஆலடியானுக்கு, காலடியானுக்கு, காமகோடி தேவருக்கு, காமாக்ஷி சேஷாத்ரிக்கு, ஷண்முக ரமணருக்கு,  பன்முக ராம க்ருஷ்ணருக்கு, அன்னை  சாரதைக்கு,  அகிலம் போற்றும்  விவேகானந்தருக்கு நமஸ்காரம் த்யாகச் செம்மலாம் ராமானுஜ தேவருக்கு,  த்வைத மத்வாச்சார்யாருக்கு  ப்ருந்தாவன ராயருக்கு, பிதாமகர் புரந்தர தாசருக்கு,  ஸ்வாமி தேசிகப் பெம்மானுக்கு நமஸ்காரம் சங்கீத மூவருக்கு, சந்தத் தமிழ்  நால்வருக்கு ஆழ்வார்களுக்கு,  அறுபத்தி மூவருக்கு, அருணகிரி நாதருக்கு, அபிராமி பட்டருக்கு,  அருட் ஜோதி  வள்ளலுக்கு நமஸ்காரம்.

அமிர்த கடேஸ்வரி அபிராமி

விருத்தம் - அபிராமி  அந்தாதி

“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு
வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம்
பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”


அமிர்த கடேஸ்வரி அபிராமி,
அடிமலர் தொழுதேன் அருள்வாயே

அன்பர் வாக்கில் ஒளிர்பவளே, அவர்
துன்பம் துடைக்கும் மலை மகளே

அந்தாதி கொண்ட அருள் வடிவே
அகயிருள் போக்கும் முழு நிலவே
பக்தன் குரல் கேட்டு வந்தவளே
தாடங்க பூஷணத் தண்ணருளே

காலனை உதைத்தோனின் காதலியே
கடையூர் வாழும் காருண்யமே
தடைகளைத் தகர்க்கும் தடாதகையே
மடைத் திறந்த வெள்ளப் பேரருளே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழுதே



நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழுதே - நின்னடி சேர விழையுதே,
அம்மா நின்னை

கடைக்கண் பார்வை போதுமே,  பதினாறும் பெற்று நான் உய்வேனே

கள்ள விநாயகன் தாயே
(திருக்) கடையூர் வாழும் பைரவியே, அனல் மேல் உருகிய அன்பரின், அந்தாதி தமிழ் உண்ட அபிராமீ, நின்னை

அம்மா என் ஆசை அறியாயோ, உன் தாடங்க மஹிமை காட்டாயோ,
(என்) மனயிருளை நீக்கி நீயே, முழு நிலவாய் அதனுள் ஒளிராயோ

சிவம் சுபம்                        

kai vidaathey ennai (Behaag)

behaag

kai vidaathey ennai... Kadamba vanesaaa kaaruNya Sundaresaa ...

கைவிடாதே என்னை கடம்பவனேசா, காருண்ய சுந்தரேசா

paavi endrennai thaLLaathey
saavi endrennai igazhaathey

பாவி என்றென்னைத் தள்ளாதே, சாவி என்றென்னை இகழாதே,

paadal petra Koodal nagar Arasae, aadal arubaththi naalu puri Paer-arsae, Kaal maari yaadum Velli ambalath-arasae, Maal Ayanum kaaNaa adi-mudi Arasae.....

பாடல் பெற்ற கூடல் நகர் அரசே, ஆடல் அறுபத்தி நாலு புரி பேரரரசே, கால் மாறி யாடும் வெள்ளி யம்பலத்தரசே, மால் அயன் காணா அடி-முடி அரசே

Sivam Subam
சிவம் சுபம்

அன்பருள்ளமே அஹோபிலம் (Madhyamaavati)

மத்யமாவதி

அன்பருள்ளமே அஹோபிலம், அதனுள் உறையும் நர சிம்ஹம், நவ சிம்ஹம்.

ப்ரஹலாத வரத உக்ர சிம்ஹம், பக்தி  ஞான மருளும் யோக சிம்ஹம், தடைகளைத் தகர்க்கும் ஜ்வாலா சிம்ஹம், ராஜ வாழ்வளிக்கும் பார்க்கவ சிம்ஹம்

சோதனைகள் தீர்க்கும் க்ரோட சிம்ஹம், அருளுடன் அமைதி தரும் பாவன சிம்ஹம், மனமகிழ்ந் தருளும் மாலோல சிம்ஹம், பொரு ளாதாரம் சேர்க்கும்  சத்ரவட சிம்ஹம்

எண்ணம், எழுத்து, செயல் சிறப்புற அருளி, எதிரிகளை அழிக்கும் காரஞ்ச சிம்ஹம், நவகோள்களும் தொழும் நவ சிம்ஹம்,  நாளும் நமைக் காக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹம்

ஜெய ஜெய சிம்ஹம்
ஹரி ஹரி சிம்ஹம்
நர ஹரி சிம்ஹம், நம்
லக்ஷ்மி ந்ருசிம்ஹம்.

சிவம் சுபம்

திருநீறு அணிவதின் பலன் (Vallalar)



திருநீறு அணிவதின் பலன்

பாடற்கினிய வாக்களிக்கும், பாலும் சோறும் பரிந்தளிக்கும், தேடற்கினிய அடியவர் தம் கூட்டம் அளிக்கும், குணம் அளிக்கும்,  ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல், என் மேல் ஆணை கண்டாய், தேடற் கினிய சீர் அளிக்கும், சிவாய நம என இடு நீறே.

வடலூர் வள்ளல் பெருமான்.
சிவம் சுபம்.

பால விநாயகனே, பக்த போஷக (Hindolam)

hintholam

பால விநாயகனே, பக்த போஷக ஸ்ரீ....

ஆதி விநாயகனே, ஆதி அந்தம் இல்லான் தலை மகனே

சதுர்த்தி நாயகனே, சங்கட ஹர ஸுமுகனே, நல்லோர் மனமெனும் நந்தவனம் உறை காமாக்ஷி ஸுதனே, கதிர் வேலன் தமயனே

ஞானக் கனி வென்ற ஞால முதல்வனே, சீலம் மிகுந்தோரின் வாழ்க்கைத் துணைவனே, பாதம் பணிந்தோரின் பாவம் களைவானே, நற்கீதம் இசைத்தால் ஆடி நெகிழ்வானே

சிவம் சுபம்

Vedavathi sudha Vedaachaarya (Siva Ranjani)

Siva Ranjani

Vedavathi sudha Vedaachaarya,
Maanava roopa Madhva acharya

Udippi UdhdhaarNa Lokaachaarya
Duritha nivaaraNa
Dvaithaacharya

Vaauyu Deva
vamsaacharya
PuraaNa purusha
PuNyaachaarya
Bheemasena
Avatharaachaarya
Mukya PraaNa
Bhakthaachaarya

Sivam Subam

அண்ணலும் வணங்கிய ஆதித்யன் (Hindolam)

ஹிந்தோளம்

அண்ணலும் வணங்கிய ஆதித்யன், அகத்தியன் துதி கொண்ட திவாகரன்

 தினம் தினம் நமக்கருளும் தினகரன், திரி லோகமும் தொழும் சுபகரன்

அவனே கந்தன், அவனே கண்ணன், அவனே முக் கண்ணன், கண்ணதாசன் போற்றும் கருணாமயன், மண்ணும் விண்ணும் கண்டு தொழும் தேவன்

அனைத்துயிருக்கும் ஆதாரம் அவனே, அக யிருள் நீக்கும் ஜோதி ஸ்வரூபனே, மக மாயையாம் பரா சக்தியும் அவனே, ஜெகமெங்கும் நிறைந்த சூரிய பக(ல)வனே

சிவம் சுபம்

அழகென்றால் நரசிம்மன்



அழகென்றால் நரசிம்மன்,
அருளென்றால் நரசிம்மன்,
அஹோபில நரசிம்மன், நம்
அம்மையப்பன் நரசிம்மன்

சிம்ம முகம் கொண்டிருப்பான்,
சின்னக் குழந்தை மனத்த னவன்,
அசுரர்களின் காலனவன்
அன்பர்களின் காவலன்

ஸ்வாதியிலே தோன்றியவன், ஸ்வாதீனமாய் வாழ வைப்பான், (அவன்)
இல்லாத துரும்புமில்லை,
(அவன்) அருளுக்கோ அளவில்லை

ஆறுமுக வேலவனே வா வா



ஆறுமுக வேலவனே வா வா
ஆடும் மயில் ஏறியே வா வா
பாடும் குரல் கேட்டே வா வா (என்) பவ வினை களைந்திட வா வா

தைப்பூசத் திரு நாள் அல்லவோ
பாலபிஷேகம் உனக்கல்லவோ!
மெய் சிலிர்க்கும் காட்சி அல்லவோ, (என்) பிறவிப் பிணி தீருமல்லவோ

திருப்புகழ் மாலை சூட்டியே, உனக்
கலங்காரம் செய்வேன், கந்தா !
அருட்பா அமுது படைத்தே,  உன்
அனுபூதி பெற்று உய்வேன்

இருகரம் கூப்பி தொழுதால்,
பன்னிரு கரம் கொண்டே அருளும்
வள்ளல் பெருமான் அல்லவோ!
உன் வற்றாக் கருணை நான் சொல்லவோ!

அருட் பெரும் ஜோதி அளித்த
தனிப் பெருங் கருணையே வா வா
என் அகயிருள் தன்னை நீக்கி
அதனுள் ஒளிர் வா, இறைவா

சிவம் சுபம்

சிதம்பரம் அளித்த வள்ளல் (Neelamani Siva Ranjani)



Neelamani (?)

சிதம்பரம் அளித்த வள்ளல்
(திருச்) சிற்றம்பலவன் அருள் பெற்றுத் தரும் வள்ளல்

திருமுறை சாரமதனை, திருவருட்பா அமுதாய் அளித்த வள்ளல்

தணிகை வேலனை கண்ட வள்ளல்,
தண்ணீர் விட்டு விளக்கெறித்த தவ சீல வள்ளல்,
அகவலாம் அருமறை ஈந்த வள்ளல்
அனைத்துயிருக்கும் அன்பு பொழியும் வள்ளல்

அன்னை சக்தி அருள் கொண்ட வள்ளல்
அரி அர அபேத ராம-லிங்க வள்ளல்
சமரச சன்மார்க்க வள்ளல்
சத்வ குண போத சுத்த சிவ வள்ளல்

பூசத்துப் புண்ணியராம் வள்ளல், (பந்த) பாசமற வழி சமைத்த வள்ளல், (இறை)
திருவடிப் புகழ்ச்சியில் லயித்த வள்ளல்,
திருவருட் ஜோதியுள்  நிலைத்த வள்ளல்

சிவம் சுபம்                        

ஆலவாய் அழகனே (Suddha Dhanyasi)

உ   (சுத்த தன்யாசி)

ஆலவாய் அழகனே 
அங்கயற்கண்ணி நாதனே
ஆடலில் வல்லானே
கூடலின்  அரசனே
(நான் மாடக் கூடலின் அரசனே)

வெள்ளியம்ப லேசனே - அருளை
அள்ளி வழங்கும் ஈசனே
கால் மாறி ஆடு வோனே
கை கொடுத்துக் காப்போனே

கல்யானைக்கும் கரும்பு
ஊட்டிய வள்ளலே
நின்னடித் திருமண்னே
என் சிரத்  திருநீறே

சௌந்தர பாண்டியனே
சொக்க நாத சுந்தரனே
தென்மதுரை நாதனே
ஏழுலகத் திறைவனே

சிவம் சுபம் 

A --> Auw (Sri Varadaraja)



அருளே வடிவான ராஜா
ஆனந்த வைகுண்ட ராஜா
இருள் நீக்கும் இளையராஜா
ஈடில்லா அழகு ராஜா
உலகேளும் ஆளும் ராஜா
ஊழ்வினை அறுக்கும் ராஜா
எம் கண்மணியாம் ராஜா
ஏழுமலை வாழும் ராஜா
ஐந்தாம் வேத கீதை ராஜா
ஒப்பிலா அப்பனாம் ராஜா
ஓங்கார நாத ராஜா
ஔதார்ய வேங்கட ராஜா

அடி பணிந்துய்வோம்.

சிவம் சுபம்                        

"அன்னை நாமாவளி அட்டகம்"



"அன்னை நாமாவளி அட்டகம்"

கயற்கண்ணால் படைக்கும் மீனாக்ஷி,
தவ வலிமை சேர்க்கும் காமாக்ஷி
மூவுலகாளும் விசாலாக்ஷி, முக் கண்ணி அவளே நம் மன சாக்ஷி

பவ வினை களையும் பவானி, யம
பயமதை விரட்டும் பைரவி,
சிவனருள் கொழிக்கும் சிவகாமி,
சுபமழை பொழியும் அபிராமி

தாமதியாள் அவள் கோமதி,  நல்
ஞானமளிப்பாள் காந்திமதி
மன நலமளிக்கும் மனோண்மணி
உயிர் நலம் பேணும் மருந்தீஸ்வரி

வேழனை ஈன்ற விக்னேஸ்வரி, வடி
வேலனை அணைத்த கௌமாரி
சபரீசனை அளித்த (ஜெகன்) மோஹினி
சகலத்தையும் படைக்கும் குமரியாம் கன்னி

அழகுப் பெட்டகம் வடிவாம்பாள்
அருள் பொக்கிஷம் கற்பகாம்பாள்
அரணாய் காக்கும் காளிகாம்பாள்
அகிலாண்டேஸ்வரி த்ரிபுராம்பாள்

உலகுயிரை இயக்கும் இசக்கியம்மன்
பேச வைக்கும் பேச்சியம்மன்
வான் மழை பொழி மாரியம்மன்
வம்சம் பாலிக்கும் கரு மாரியம்மன்

அலையா மனமருள் அலைமகள்
நிலையான ஞானமருள் கலைமகள்
வீர விவேகமருள் மலை மகள்
திரிசூலியாம்   தலை மகள்

கண்ணனை மறைத்த துர்கா தேவி,
முக் கண்ணனைக் காத்த உமா தேவி,
வேதனும் தொழும் வேத மாதா**
வேண்டுமுன் னருளும் ஸ்ரீ லலிதா

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

** காயத்ரி


A -> Auw (Meenakshi)



அன்புடை(த்) தாய் மீனாக்ஷி
ஆலவாய்  தாய் மீனாக்ஷி
இன்பத் தாய் மீனாக்ஷி
ஈடிலா தாய் மீனாக்ஷி
உலகத் தாய் மீனாக்ஷி
ஊழ் அறு(த்) தாய் மீனாக்ஷி,
 (என்) எண்ணம் செயல் தாய் மீனாக்ஷி
ஏழிசை  ஸ்வர-லயத் தாய் மீனாக்ஷி
ஐயமிலாதருள் (சுரந்)தாய் மீனாக்ஷி
ஒப்பிலா சுபத் தாய் மீனாக்ஷி
ஓங்காரத் தாய் மீனாக்ஷி
ஔஷத அம்ருதத் தாய் மீனாக்ஷி

சிவம் சுபம்

OMKAARA NAATHA SWAROOPAA

SAI RAM

OMKAARA NAATHA SWAROOPAA
HREEMKAARA SAAYI BAABAA
YEESWARAAMBAA PRIYA THANAYAA
YEESA HARI BRAHMA AVATHAARAA

PARTHI PUREE PAAVANAA
BHAKTHA PRIYA GAJAANANAA
CHITHRAVATHI THADA VIHAARAA
CHITHRA MAYOORA VELAA

SATHYA NAARAAYANA SUNDARAA
NITHYA MANGALA VIDHAARAA
BASMA VIBHOOTHI DHAARAA
BAKTHA HRUDYA MANDHAARAA

SIVAM SUBAM

ஷீரடி கண்ட தேவா நமோ நம (Naadha Namakriya)



நாத நாம க்ரியா

ஷீரடி  கண்ட தேவா நமோ நம,
சிறந்ததை அருளும் சாயீ நமோ நம,
பர்த்தி வாழும் பகவன் நமோ நம,
பக்த வாத்ஸல்ய ஜலதி நமோ நம,

நல் மனமருளும் நாதா நமோ நம
அதனுள் ஒளிரும் ஜோதி நமோ நம
நாத நாம க்ரியனே நமோ நம
சேவையில் லயிப்போர் துணையே நமோ நம

சாதி சமய சேதுவே நமோ நம
சமரச சன்மார்க்க நெறியே நமோ நம
அகிலத்தை இணைத்த அன்பே நமோ நம
அடிமலர் தந்தாள் இன்பே நமோ நம

மறை மகுடம் தரித்தானே (Sankarabharanam)

சங்கராபரணம் 

மறை மகுடம் தரித்தானே,
பிறை மறைத்து புவி வந்த
சந்திர சேகர தேவன்

விடை விடுத்து வந்தானே
நம் முறை கேட்டு நல் விடை பகர

காமகோடி அமர்ந்தானே, நம் பாவமெல்லாம் தீர
தவக்கோலம் பூண்டானே,
இருவர் தேடும் பாதம் பதித்து இப்  
புவியைப் புனித மாக்கிய  புண்ணியன்

அரி அர அபேத ஞான போதன்
வெறுத்தோரையும் தன்பால் ஈர்த்த வித்தகன்
(தன் ) தெய்வக்குரலால் ஆறாம் வேதம்
உறைத்த மஹா ஸ்வாமி(யாம்) நாதன்

சிவம்  சுபம்                         

அலைமகளின் மகவாய் (Brindavana Saaranga)



அலைமகளின் மகவாய் அவதரித்தார், வேதக்
கலைமகள் போல் நெடிதுயர்ந்தார்

மலைமகள் காமாக்ஷியின் பீடம் அமர்ந்தார், காமகோடி பீடம் அமர்ந்தார்

அன்னை கோமதி போல் தவம் புரிந்தார்,
அரி-அர பேதம் தனை களைந்தார்,
அங்கயற் கண்ணியின்
அருட் பார்வை கொண்டார்,
இக் காசினி ஆளும் விசாலாக்ஷி நாதர்

சிவ ஷண்முக ஸ்வாமி நாதன், நம் பவ வினை களையும் மஹா ஸ்வாமி நாதர்,
குருவருள் பொழியும் சந்திர சேகரர்,  இக்குவலயம் போற்றும் பரமாச் சார்யர்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

சங்கர, சிவன் சாரை ஈன்ற தாயே (Ataana)

அடாணா

சங்கர, சிவன் சாரை ஈன்ற தாயே, உன் தவத்திற் கிணை யிந்த புவி கண்ட தில்லையே

இரு மஹனீயரை அளித்த  தேவியே,  ஈச்சங்குடி கண்ட ஈடீல்லா இலக்குமியே

பூசத்தி லொரு   இல்லறத் துறவி, அனுஷத்தி லொரு அற்புத  தபஸ்வி, இந்த லோகம் கண்டிரா  பதித பாவனியே,  கோசலை யசோதையும் புகழ்வார் உனையே....

மாந்தரை ஏணிப் படிகளில் ஏற்றி உய்விக்க வந்த இளையோனும்,
வேத நெறி வழுவா தருமம் காத்த தெய்வக் குரலோனாம் பெரியோனும்,  குடி  யிருந்த கோயிலே, உன் அடி பணிந்துய்யும் உலகமே

சிவம் சுபம்

Anushatth-uthiththavarkku Namaskaaram

audio
OM

Anushatth-uthiththavarkku
Namaskaaram
Aadhiraiyan Avathaararukku
Namaskaaram

Kaamakoti Devarukku
Namaskaaram
Kaamaakshi samaanarukku
Namaskaaram

Maasi Moola Sanyaasikku
Namaskaaram
Maasillaa Thavathirkku Namaskaaram.

Veda naayaga(n) vadivinarkku Namaskaaram
Veda dharma Paalanarkku Namaskaaram

Dvaithaa Advaitha Sethuvirku Namaskaaram
Paramaachaarukku Namaskaaram

Nadamaadum Deivathirkku Namaskaaram - antha
Deivaththin kuralukku Namaskaaram

Jaya Jaya Sankararkku Namaskaaram
Hara Hara  Sankararkku
Namaskaaram

Sri Chandramouleesarkku Namaskasram
Sri Chandrasekarendarukku
Namaskaaram

Sivam Subam
[21/02, 07:56] s thiagarajan: ஓம்

அனுஷத் துதித்தவர்க்கு நமஸ்காரம்
ஆதிரையன் அவதாரர்க்கு நமஸ்காரம்

காமகோடி தேவருக்கு நமஸ்காரம்
காமாக்ஷி ஸமானருக்கு நமஸ்காரம்

மாசி மூல ஸன்யாசிக்கு நமஸ்காரம்
மாசில்லா தவத்திற்கு நமஸ்காரம்.

வேதநாயக(ன்) வடிவினற்கு நமஸ்காரம்
வேத தர்ம பாலனற்கு
நமஸ்காரம்

த்வைதாத்வைத சேதுவிற்கு நமஸ்காரம்
பரமாச்சார்யர்க்கு நமஸ்காரம்

நடமாடும் தெய்வத்திற்கு நமஸ்காரம் - அந்த
தெய்வத்தின் குரலுக்கு நமஸ்காரம்

ஜெய ஜெய சங்கரர்க்கு நமஸ்காரம்
ஹர ஹர சங்கரர்க்கு நமஸ்காரம்

ஸ்ரீ சந்த்ரமௌலீசர்க்கு நமஸ்காரம்
ஸ்ரீ சந்த்ர சேகரர்க்கு நமஸ்காரம்

சிவம் சுபம்.

Shiva Bhajan

OM

ARTHA NAAREESAM
MAATHRU BHOODESAM
SARVA JAGATH GURUM
SAMASTHA DEVA VANDHYAM (1)

PANCHA MUKESAM
PANCHA KRUTHYESAM
PANCHA BHOOTHESAM
PANCHA AKSHARAM (2)

RAMA NAATHESAM
KRISHNA SAHASRESAM
NARASIMHA SARABESAM
NAARAAYANA-HRUDA-YESAM (3)

KAALA KAALAM
KAAMA DHAGANAM
KATHIR KAAMA JANAKAM
KARUNAA SAMUDRAM(4)

VEDA SWAROOPAM
NAADA THANUM-ANISAM
JYOTHI PRAKAAASAM
GNANA BAASKARAM(5)

THRI NETHRAM
THRI SOOLA DHARAM
THRI MOORTHI ROOPAM
THRI LOKA POOJITHAM(6)

NANJUNDA KANTAM
AMRUTHA KATESAM
PRATHOSHA MAHESAM
PRANA-DHAARTHI-HARAM(7)

RUDRAAKSHA MAKUTAM
BHASMA DEGAM
BILVA MAALAA DHARAM
BRAHMAANDA NAAYAGAM(8)

NANDHI VAAHANAM
NAAGA BHOOSHANAM
DHAYAA SAAGARAM
THIAGA RAAJESAM(9)

ATHMA LINGAM
PARAMAATHMA LINGAM
JYOTHIR LINGAM
DVAADASA LINGAM(10)

SAMBANDA PITHARAM
SUNDARAMURTHY MITHRAM
NAAVUKKARASA SEVITHAM
MANIVAASAGA NAATHAM (11)

HAALAASYA SUNDARAM
KAANCHI EKAAMBARAM
KAASI VISWESAM
KAILAASA GOWREESAM (12)

NA MA SI VAA YAM
NAA MA MANGALAM
SADHAA SIVAM
SARVA NANGALAM(13)

SIVA RAATHRI NAATHAM
SIVA SAKTHI LALITHAM
BAVA BAYA HARANAM
"SUBA" PALA DHAATHAM (14)

SIVAM SUBAM
SUNDARAM THIAGARAJAN

சிவராத்திரி சிந்தனை அமுதம் (Shiva Raathri Songs) - Thiru Vallalar Songs

சிவராத்திரி சிந்தனை அமுதம் 3


திருச்சிற்றம்பலம்

audio1
audio2

வடலூர் அருட்ஜோதி வள்ளல் அருளிய

A . அம்பலத்தரசே - நாமாவளி


1. சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா.
2. சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.


3. அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
4. பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
5. மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.
6. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.
7. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
8. படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.
9. அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.
10. இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
11. என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
12. நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
13. ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
மானந்த போனகம் கொண்டோ மே.
14.. சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
15.. சங்கர மும்சிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.
16.. அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.
17. நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே.
18. அருட்பொது நடமிடு தாண்டவ னே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
19. நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
20. நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வது (திரு) அம்பல மே.
21.. நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
22. சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
25. அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
26. அம்பல வாணணை நாடின னே
அவனடி யாரொடும் கூடின னே.
27.. தம்பத மாம்புகழ் பாடின னே
தந்தன என்றுகூத் தாடின னே.
28. நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
ஞான சிதம்பர நாட்டா ரே.
29. இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
என்குரு மேல்ஆணை இட்டே னே.
30. இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
31. நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
32.. நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
நல்வரம் ஈயும் தயாநிதி யே.
33. நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே.
34. சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
35. சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
36. இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே.y
37. என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே.
38. சிற்சபை அப்பனை உற்றேனே
சித்திஎ லாம்செயப் பெற்றேனே.
39. அம்பல வாணர்தம் அடியவ ரே
அருளர சாள்மணி முடியவ ரே.
40. அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
41. இருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
42. கருணா நிதியே குணநிதி யே
கதிமா நிதியே கலாநிதி யே.
43. தருணா பதியே சிவபதி யே
தனிமா பதியே சபாபதி யே.
44. கருணா நிதியே சபாபதி யே
கதிமா நிதியே பசுபதி யே.
45. கனக சபாபதி பசுபதி நவபதி
அனக உமாபதி அதிபதி சிவபதி.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

------------------------

சிவராத்திரி சிந்தனை அமுதம்  - 2


 வள்ளல் பெருமானின் "நடேசர் கும்மி" 

காமம் அகற்றிய தூயனடி - சிவா காம சவுந்தரி நேயனடி
மா மறை ஒது செவ்வாயானடி - மணிமன்றமெனும்
ஞானாகாயனடி

ஆனந்த் தாண்டவ ராஜனடி - நம்மை ஆட்கொண்டருளிய தேஜனடி
கல்லைக் கனிவிக்கும் சுத்தனடி - முடி கங்கைக் கருளிய கர்த்தனடி

தில்லைச் சிதம்பர கூத்தனடி - தேவ சிங்கமடி உயர் தங்க மடி
பெண்ணொரு பால்வைத்த மத்தனடி - சிறு பிள்ளைக் கறி கொண்ட பித்தனடி

அம்பலத் தாடல் செய் ஐயனடி - அன்பர் அன்புக் கெளிதரும் மெய்யனடி
தும்பை முடிக்கனி தூயனடி - சுயஞ் ஜோதியடி பரஞ்சோதியடி

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

---------------------
சிவ ராத்ரி சிந்தனை அமுதம்  - 1

வள்ளல் பெருமானின் "ஊதூது சங்கே"

1. கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
கனக சபையான்என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.

2. தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.

3. பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.

4. என்உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
பொன்உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

5. சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.

6. நாத முடியான் என்று ஊதூது சங்கே
ஞானசபையான் என்று ஊதூது சங்கே
பாத மளித்தான் என்று ஊதூது சங்கே
பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.

7. எல்லாம்செய் வல்லான் என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.

8.. கருணா நிதியர் என்று ஊதூது சங்கே
கடவுள் அவனே என்று ஊதூது சங்கே
அருள்நா டகத்தான் என்று ஊதூது சங்கே
அம்பலச் சோதி என்று ஊதூது சங்கே.

9. தன்னிகர் இல்லான் என்று ஊதூது சங்கே
தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன் என்று ஊதூது சங்கே
பொதுநடம் செய்வான் என்று ஊதூது சங்கே.

10. ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே
அருளுடை அப்பன் என்று ஊதூது சங்கே
தானந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே
தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.

11. பொய்விட் டகன்றேன் என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே
மெய்தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே
மேல்வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்                      




Nalla thuvakkam Iyngaran (Kaapi)

Kaapi

Nalla thuvakkam Iyngaran,
Perum Ookkam Iyyappan

Bayam pokkum Bairavan
Vetri kuvikkum Vadivelan

Gnana pravaagam KalaimagaL
Nilaitha selvam AlaimagaL
Veera vivegam MalaimagaL
Paapa nivaaraNam Paranthaaman  Kazhal

Asaadhya saathagam Aanjaneyan,
Amirtha kalasam Dhanvanthri
Dhayaa mayam Thiaga rajam
Sarva MangaLam Sadhaa Sivam

Sivam Subam

Deiva Darisanam (Revati)

ரேவதி

தெய்வ தரிசனம், தெய்வ தரிசனம், வார்த்தையுள் அடங்குமோ அதன் கரிசனம்

(ஞான) தண்டபாணியா ! ஸ்வாமி நாதனா! காவி யுடுத்த கைலாச வாசனா!

திருமேனியோ திருச் சிற்றம்பலம்,
இரு கண்களோ இரவி சந்திரன்,
நிறை மனமோ காமகோடி பீடம்,
நெற்றிக் குங்குமம் அன்னை காமாக்ஷி இருப்பிடம்

திருவாய் மொழி நால் வேத சாரம்,
திருக்கரமோ பொழியும் அனைத்து மங்கலம், திருப்பாதமோ கைலாய வைகுண்டம், திருவடி மண்ணோ மரணம் மாய்க்கும் அமுதம்

ஜெய ஜெய சங்கரா  ஹர ஹர சங்கரா, ஹர ஹர சங்கரா ஸ்ரீ சந்த்ர சேகரா!

சரணம் சரணம் ஸ்ரீ சந்த்ர சேகரா!

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

Annayai Ulam Vaithha Aiyan (suddha dhanyasi)

சுத்த தன்யாஸி

(நம்) அன்னையை உளம் வைத்த அய்யன், (தன்)  அன்பனை மடி வைத்த மெய்யன்

ப்ரஹ்லாத வரதன், ப்ரஸன்ன வதனன், பரந்தாமன், பரம கருணா மயன்

நினைக்குமுன் தோன்றுவான், வேண்டுமுன் அருள்வான், (நம்) குறைகளையும் குணமாய் கொள்வான், நிறை வாழ்வருள்வான்,
நம் உள்ளம் உறைவான்

சிவம் சுபம்

திருவருட்பா, திருவருட் ப்ரகாச வள்ளலாரின் மாண்பு

திருவருட்பா, திருவருட் ப்ரகாச வள்ளலாரின் மாண்பு

ஒருதரம் படிக்கின் உடல்பொறி
கரணம்ஓய்ந்து உயிர்அனுபவம் கூடும்
இருதரம் படிக்கின் எண்ணிலா
சித்திஓந்து அருள்அனுபவம் கூடும்
மறுதரம் அதையே முத்தரம்
படிக்கின் மண்ணிறை அனுபவம்கூடும்
கருதரும்வள்ளல் கனிவுடன் உரைத்த
கவின்அருட்பாவில் ஓர்கவியே. (11)

வாராத வல்வினை நோய் வந்தாலும் வன்மையொடு
சேராத பாவமெலாம் சேர்ந்தாலும் - தீராதென்று
யார்சொன்னார் எங்கள் அருட்பிரகாச பெருமான்
பேர்சொன்னால் போமே பிணி. (35)

கூடலூர் அருள் திரு சிவ துரைசாமி தேசிகர் அவர்கள்

வேண்டுமுன் அருள்வான்

விருத்தம் - சொக்கநாத வெண்பா


எல்லாம் உனது பதம் எல்லாம் உனது செயல் எல்லாம் உனதருளே என்றிருந்தால் - பொல்லாத மா துயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே ஆதரவாய்ச் சொக்க நாதா

----

வேண்டுமுன் அருள்வான் வெள்ளி  யம்பலத்தான்

கால் மாறி ஆடு ஆவான், கை கொடுத்து காப்பான்

திருமுகப் பாசுரம் வரைந்த சௌந்தரன், திருமுறை போற்றும் அருமறை நாதன், அறுபத்தி நாலு ஆடல் நாயகன், அங்கயற் கண்ணி நாதன், ஆலவாய் அழகன்

நால்வேத கோபுர வாயில் கொண்ட நான் மாடக் கூடல் உறையும் ஈசன், தான் அகன்றோர் உள்ளம் வாழும் நேசன், சோம சுந்தர சொக்க நாதன்

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்    

                                           

வள்ளல் பெருமானின் (Agaval - 1)

வள்ளல் பெருமானின்  அருட்ஜோதி அகவல் மலர் - 1

எங்கே கருணை இயற்கையின் உள்ளன - அங்கே விளங்கிய அருட் பெருஞ்சிவமே

யாரே என்னினும் இரங்குகின்றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே

பொய்நெறி அனைத்தினும் புகுத்தா தெனையருள் செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குரு வருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே

சிவம் சுபம்

அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை (Agaval)

அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை - அருளுற முயல்கவென்று அருளிய சிவமே

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்றெலாம் இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே

அருள்பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும் தெருளிது என செப்பிய சிவமே

அருளே நம்மியல் அருளே நம் உரு
அருளே நம் வடிவாம் என்ற சிவமே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

audio

Somavaara Sundaran (Kalyani)

Kalyani

Somavaara Sundaran engaL Madurai Meenaskshi Soudaran

சோமவார சுந்தரன், எங்கள் மதுரை மீனாக்ஷி சௌந்தரன்

Aalavaai Azhagan Kal-azhaganin maithunan

ஆலவாய் அழகன் கள்ளழகனின் மைத்துனன்

VeLLiambalath Iraivan, Panniru thirumurai Thalaivan, Vaigaik karai Kaavalan, AruLai vaaRi vazhangum Arputhan

வெள்ளியம்பலத் திறைவன், பன்னிரு திருமுறைத் தலைவன், வைகைக் கரை காவலன், அருளை அள்ளி வழங்கும் அற்புதன்.

சிவம் சுபம்


ஓதி நின்று உணர்ந் துணர்ந்து - Agaval

அருட்ஜோதி அகவல் மலர் -3

ஓதி நின்று உணர்ந் துணர்ந்து உணர்தற்கு அரிதாம் ஆதி சிற்சபையில்
அருட்பெருஞ்ஜோதி

வாரமும் அழியா வரமும் தருந்திரு ஆரமுதாம் சபை அருட்பெருஞ்ஜோதி

இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள் சிற் சபை அருட்பெருஞ்ஜோதி

கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி

எனைத்தும் துன்பு இலா இயலளித்து  எண்ணிய அனைத்தும் தருஞ்சபை
அருட்பெருஞ்ஜோதி

சிவம் சுபம்


A -> Aauw (Hanuman Potri)



அடியவனாய் தோன்றினாய் போற்றி
ஆண்டவனாய் உயர்ந்தாய் போற்றி
இரகு குல காவல போற்றி
ஈஸ்வராம்சனே போற்றி
உத்தமன் சேவக போற்றி
ஊழினை வென்றாய் போற்றி
என்றும் வாழ்வோய் போற்றி
ஏற்றம் அளிப்போய் போற்றி
ஐமுகம் கொண்டோய் போற்றி
ஒப்பிலா அஞ்சனை செல்வா போற்றி
ஓர் நாமமே ஜெபிப்போய் போற்றி
ஔஷத சஞ்சீவியே போற்றி

அன்னை சீதையின் அருள் பெற்ற அசாத்ய சாதகா போற்றி போற்றி

Paramasivam Parama KaruNaa mayam Namaami (Mohanam)

Kaanadaa

Paramasivam Parama KaruNaa mayam Namaami

Sivam Subam Chithaananda Bhaaskaram, Hari Brahmaathi Sevitham Smaraami

Neelakantam, Amrutha katesam, athyathbuda Sundaram, Haalaasya vaasam, Hathyaathi paapa kshayakaram namaami

Pancha mugam. Pancha bhoodhesam, Pancha kruthyam, Panchaaksharam, Yaekam. Anekam, Prathosha naatham, PraNathaarthi Haram Bhakaami.

Sivam Subam

Malai mel uraibavarkku malaraal abhishekam (Mohanam)

mohanam

Malai mel uraibavarkku malaraal abhishekam, malar magaL naathanukku malaraal abhishekam (yezhu)

(anbar) manathuL urai-bavarkku malaraal abhishekam, alamelu mangai manaalarukku malaraal abhishekam, yezhu

aravinda lochanarkku,
aanada nilayarukku,
aazhvaargal thalaivarukku,
aandaaLin naatharukku
vaikundha vaasarukku
varamazhai pozhiba-varukku andralarntha malargalaaL
adhbudha abhishekam
aananda vaibhogam

sivam subam

audio

Raaman Kudiyirukkum Koyil (Hindolam)

ஹிந்தோளம்

இராமன் குடியிருக்கும் கோயில், இரகு குல  காவலனின் இதய வாயில்

அஞ்சனை செல்வன், அரனார் அம்சன், ஆதித்யன் சீடன், அவன் உள்ளமே உயர் கோயில்

இராம நாமமே அவன் மூச்சு, இராமன் புகழே அவன் பேச்சு, இராமன் குலம் காத்த சஞ்சீவி, கண்ணன் கீதையும் கேட்டு வாழும் சிரஞ்சீவி

சிவம் சுபம்

Karnaataka Raajadhaaneeswari (Bilahari)

Bilahari

கர்நாடக ராஜ தானீஸ்வரி, கலி கல்மஷ நாசினி, காத்யாயினி, கைவல்ய ஸுக தாயினி, நமோஸ்துதே

Karnaataka Raajadhaaneeswari. kali kalmasha naasini, Kaathyaayini, Kaivalya suga dhaayini namosthuthe

சண்ட முண்டாஸுர நிஷுதினி, சந்த்ர கலாதரி, சாமுண்டீஸ்வரி, சரணம் ப்ரபத்யே

Chandamundaasura nishoothini, Chandra kalaadhari Chaamundeeswari saranam prabathyae

துர்கா தேவி, துரித நிவாரணி,
காளி, கால பைரவி, அஹோபில ஹரி ஸோதரி, அஸுர பயங்கரி, ஆச்ரித ஜன ரக்ஷகி,  அம்ருதானந்த மயி....

Durgaa devi, duritha nivaarani, KaaLi, Kaala Bairavi, Aho-bila-Hari sothari, asura bayangkari, aasritha jana rakshagi, Amruthaananda mayee..

சிவம் சுபம்
Sivam Subam

audio

அன்னைக் காமாக்ஷியின் (Shanmugapriya)



அன்னைக் காமாக்ஷியின் அருள் வடிவே போற்றி
ஆலடி காலடி வழித் தோன்றலே போற்றி

இணையில்லா ஸ்வாமி நாதரே போற்றி
ஈச்சங்குடி அன்னை ஈன்ற இறையே போற்றி

உயர் வேதக் காவலரே போற்றி
ஊருலகம் வியக்கும் எளிமையே போற்றி
எம்மிடை நடமாடும் தெய்வமே போற்றி
ஏழூலகும் ஒலிக்கும் தெய்வக் குரலே போற்றி

ஐந்து கண்டமும் தொழும் ஆச்சார்ய போற்றி
ஒப்பிலா காமகோடிக் கருணையே போற்றி
ஓங்காரத்தொளிர் ரீங்காரமே போற்றி
ஔஷதாம்ருத வாரிதியே போற்றி

audio


தெளிவு குருவின் (Slokham)

திருச்சிற்றம்பலம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

திருச்சிற்றம்பலம்

audio

எழும் போது வேலும் மயிலும் (Slokham)

எழும் போது வேலும் மயிலும் என்பேன், எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன், தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன், அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்

audio

நின்னையே நினைந்துருக (Aarabhi)

ஆரபி

நின்னையே நினைந்துருக வேண்டும், நின்னையன்றி வேறொன்றை நினையாதிருக்க
வேண்டும்....

என் அன்னையே, ஆலவாய் உறையும் அங்கயற் கண்ணியே!

நின் திருக் கோயிலை வலம் வர வேண்டும், அஃதன்றி வேறிடம் செல்லாமை வேண்டும்,
மூடர் முன் சென்றவர் முகமதனைப் புகழாமல், முக்கண்ணி உன் திருவடிப் புகழே இசைக்க வேண்டும்

நின் நாதன் திருநீறும், நின் மங்கலக் குங்குமமும் எந்நாளும் எந்நேரமும் என் நெற்றியில் ஒளிர வேண்டும், தமிழ் பண்ணால் உனை துதித்து, உன் பதமலர் நிழலில் எந்நாளும் நிலைத்திருக்கும் வரமதனைத் தரு தாயே!

சிவம் சுபம்

audio