Sunday, March 26, 2017

அமிர்த கடேஸ்வரி அபிராமி

விருத்தம் - அபிராமி  அந்தாதி

“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு
வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம்
பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”


அமிர்த கடேஸ்வரி அபிராமி,
அடிமலர் தொழுதேன் அருள்வாயே

அன்பர் வாக்கில் ஒளிர்பவளே, அவர்
துன்பம் துடைக்கும் மலை மகளே

அந்தாதி கொண்ட அருள் வடிவே
அகயிருள் போக்கும் முழு நிலவே
பக்தன் குரல் கேட்டு வந்தவளே
தாடங்க பூஷணத் தண்ணருளே

காலனை உதைத்தோனின் காதலியே
கடையூர் வாழும் காருண்யமே
தடைகளைத் தகர்க்கும் தடாதகையே
மடைத் திறந்த வெள்ளப் பேரருளே

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:

Post a Comment