Sunday, March 26, 2017

கச்சி ஏகம்பனே



கச்சி ஏகம்பனே
கடம்பவன சுந்தரனே
காசி விஸ்வ நானே
நின் தாள் சரணே

தில்லை யம்பலனே
நெல்லை யப்பனே - திரு
மயிலை கயிலையனே
எல்லையிலா  கருணையே

ஒற்றீயூர் ஈசனே
சைல மல்லீசனே
ஆருர் த்யாகேசனே
அடைந்தேன் உன் சரணே

ஆடலில் வல்லானே
பாடல் வரைந்தோனே
நாடகம் நடத்துவோனே
நின் பாதமே சரணே

ஆலம் உண்டோனே
அமுதம் அளித்தோனே
அகிலம் காத்தோனே
அடி மலர் சரணே

காமனை எரித்தோனே
கதிர்காமனை ஈன்றோனே
காலனை உதைத்த நின்
காலடி சரணே

மனையாளுக்கு பாதியுடல்
மைத்துனர்க்கு சக்கரம்
மித்திரர்க்கு செல்வம்
பத்தருக்கு தன்னையும் தந்திடும் த்யாகனே

சக்தி பாகனே
சரஸ்வதி சோதரனே
"திரு"வருள் பொழிவோனே
(நின்) திருவடி சூடுவேனே

அம்மை யப்பனே
ஆதி குரு மூர்த்தியே
அரி தேடும் இறைவனே
அன்பருள் உறைவோனே

கால் தூக்கி ஆடுவாய்
கை கொடுத் தருள்வாய்
மனத்துள் ளமர்வாய்
மங்கலம் பொழிவாய்

சிவம் சுபம்

No comments:

Post a Comment