Monday, November 27, 2017

கூப்பிடும் முன்னே அன்று வந்தவன் (Behaag)

உ  பெஹாக்

கூப்பிடும் முன்னே அன்று வந்தவன், (எத்தனை முறை) கூப்பிட்டாலும் இன்று வருவதில்லை.. ஏனோ ?

தூணைப் பிளந்து வந்தான், லிங்கத்திருந்தும் வந்தான்,  அந்த   எங்கும் நிறைந்தோன் எங்கு மறைந்தான்

பக்தி நம்முள் துளிர்த்தால் சக்தி நேரில் வருவாள், நேர்மையில் நாம் ஒளிர்ந்தால், அரன் நம்முள்  ஒளிர்வான், நெறியில் நாம் நிலைத்தால், அரியும்  நம்முள் நிலைப்பான்,

சிவம் சுபம்

சங்கரநாரணன் ஸுதனே வா வா



சங்கரநாரணன் ஸுதனே வா வா
சபரிகிரீஸனே வா வா வா வா

ஐந்துமலைக் கதிபதியே வா வா
ஐய்யப்ப தேவனே வா வா வா வா

திருமலையானைத் தாயாய்க் கொண்டாய்,
ஸ்ரீ ராமனைப் போல் கானகம் புகுந்தாய்,
மஹிஷியை ஆட்கொண்ட மணி கண்ட  தேவா, மஞ்ச மாதா தொழும் மங்கள ரூபா

புலித்தோலணிவோன் புத்திரனே வா,
புலி வாஹனனே, புண்ணியனே வா, பதினெட்டுப் படி மேல் ஒளிர்வோனே, உத்தர நட்சத்திர மகர ஜோதியே

சிவம் சுபம்.

MS Amma 108 Potri


இசை தேவதைக்கு நூற்றெட்டு போற்றி

மதுரையில் தோன்றினாய் போற்றி
கயற்கண்ணி அளித்த கலைவாணியே போற்றி
ஷண்முக வடிவமே  போற்றி
பரணியில் உதித்தாய் போற்றி 
தரணி ஆண்ட இசையே போற்றி  5

கானக்  குயிலே போற்றி
வீணையின் நாதமே  போற்றி
ஸுஸ்வர லயமே போற்றி
சிவத்துள் இணைந்தாய் போற்றி
சிவ சுபம்  ஆனாய்  போற்றி  10

பரமகுரு பதம் பணிந்தாய் போற்றி
பக்தி மகரந்தம் ஆனாய்   போற்றி
முசிரி அய்யன் முத்தே போற்றி
செம்மங்குடி பாணியே  போற்றி
அரியக்குடி அன்பு கொண்டாய் போற்றி 15

பாவ ராக தாள விநோதினியே போற்றி
அமரும் பொலிவே போற்றி
இசைக்கும் பாங்கே போற்றி
காண மங்கலமே போற்றி 
கருத்தினில் நிலைத்த இசையே போற்றி 20

கேட்கத் திகட்டா அமுதே போற்றி
இன்னும் கேட்கத் தூண்டும் இன்பே போற்றி 
ஸத்குரு வழி உபாசனையே  போற்றி
குருகுஹ மந்த்ர செம்மையே போற்றி
ஸ்யாம க்ருஷ்ண அமுதமே போற்றி  25
 "பாவயாமியின்" பாவமேபோற்றி.
 சுப்ரபாத சுநாதமே போற்றி
ஸஹஸ்ரநாம சங்கீர்த்தனமே போற்றி
அன்னமய்யாவின் அகம் கவர்நதாய்   போற்றி
பஞ்ச ரத்ன மாலை சூட்டினாய் போற்றி  30

படியளப்போனுக்கே பாடி/படி அளந்தாய் போற்றி
இறையை எழுப்பும்/துயிலச் செய்யம்  கனிவே போற்றி
ஷண்மத சங்கீதமே  போற்றி 
தமிழிசை முதல்வியே  போற்றி 
அனைத்து இசை மேதையே போற்றி  35

தன்னை மறந்தாய் போற்றி
இறையைக் கண்டாய் போற்றி
இறையைக் காட்டுவித்தாய் போற்றி
இறையுள் கலந்தாய் போற்றி
இறை இசை தேவதையே போற்றி  40

அல்லா ஏசு புகழ் இசைத்தாய்  போற்றி
அருள் நானக்கையும் வணங்கினாய் போற்றி
பண்டிதரைக் கவர்ந்தாய் போற்றி
பாமரரை ஈர்த்தாய் போற்றி 
பக்தி வழி சமைத்தாய் போற்றி  45

நாத்திகரையும் கவர்ந்தாய் போற்றி
நல் வழி சமைத்தாய் போற்றி
மதங்களை கடந்தாய் போற்றி
வேற்றுமை களைந்தாய் போற்றி
மனங்களை இணைத்தாய் போற்றி  50

பன்மொழிப் புலமையே போற்றி
பரிந்து உள்ளுணர்ந்த இசையே போற்றி
பத உச்சரிப்பில் செம்மையே போற்றி
புரந்தர வசந்தியின் ஸோதரியே போற்றி
பகட்டில்லா பட்டம்மையின் தோழியே போற்றி   55

சக கலைஞர்களுக்கு   ஊக்கமே போற்றி
எவரிடமும் கற்கும் ஏற்றமே போற்றி
எவருக்கும் கற்பிக்கும் கனிவே போற்றி
குறை காணா நிறையே போற்றி
நலிந்தோர்க்கு உதவும் பண்பே   போற்றி   60

இசையை இறைக் கற்பணித்தாய் போற்றி
விளைந்த பயனை நாட்டிற்களித்தாய் போற்றி 
மஹாத்மா மனம் கவர்ந்தாய் போற்றி
தேசபக்திக் கீதமே  போற்றி
தெய்வ பக்திச் சுடரே போற்றி  65

மீராவின் மறு வடிவே  போற்றி
காமகோடிக் கனியே போற்றி
சத்ய சாயி மனம் கவர்ந்தாய் போற்றி
நிலைத்த பேரருள் கொண்டாய் போற்றி
இங்கித பண்பின் இமயமே  போற்றி  70

கண்டத்தால் கண்டங்களை இணைத்தாய் போற்றி
உலக அரங்கில் ஒளிர்ந்தாய் போற்றி
சதா சிவ பதிவ்ரதையே போற்றி
இல்லறத் துறவியே போற்றி
நல்லற நாயகியே போற்றி
  75

பட்டங்களுக்கு பெருமை சேர்த்தாய் போற்றி
சிவன் சார் மெச்சிய எளிமையே போற்றி
ஈவதற்கென்றே தோன்றினாய்  போற்றி
ஈவதற்கென்றே இசைத்தாய்  போற்றி
இன்றும் ஈந்து இசை பட வாழ்கிறாய் போற்றி  80

கள்ளமில்லா உள்ளமே போற்றி
காற்றினில் வரும் கீதமே போற்றி
காலத்தை வென்ற இசையே போற்றி
இல்லம் தோறும் ஒலிக்கும் மங்கலமே  போற்றி
நல் உள்ளங்களில் நிலைத்த உருவே போற்றி   85

குறை ஒன்றுமில்லாய் போற்றி
ஓம்கார நாதமே போற்றி
ஔதார்ய குணமே போற்றி
பாரத ரத்னமே போற்றி
பார்புகழ் பாரதப் பெருமையே  போற்றி 90

பெண்மையின் இலக்கணமே போற்றி
இன்முக மந்தஹாஸமே போற்றி
சுப சௌபாக்யமே போற்றி
பண்பின் சிகரமே போற்றி
எளிமையின் எழிலே போற்றி  95

பிரதோஷ மாமாவின் துணை கொண்டாய் போற்றி
பெரியவருக்கு மணி மண்டபம் சமைத்தாய் போற்றி
உருவாய் எம்முடன் வாழ்ந்தாய் போற்றி
அருவாய் எம்முள் நிறைந்தாய் போற்றி
மரணத்தை வென்ற மாண்பே போற்றி  100

மண்ணோர் செய்த மாதவமே போற்றி
விண்ணோர் செய்த பாக்கியமே போற்றி
எம் எஸ் அம்மா போற்றி
எம் இசை அம்மா போற்றி
சிவமருளிய சுபமே போற்றி
சுபம் பொழி சிவமே போற்றி
சுபமே சிவமே போற்றி
சிவமே போற்றி சுபமே போற்றி  108

சிவம் சுபம்

சங்கரநாரணன் ஸுதனே வா வா (Behag)



Behag

சங்கரநாரணன் ஸுதனே வா வா
சபரிகிரீஸனே வா வா வா வா

ஐந்துமலைக் கதிபதியே வா வா
ஐய்யப்ப தேவனே வா வா வா வா

திருமலையானைத் தாயாய்க் கொண்டாய்,
ஸ்ரீ ராமனைப் போல் கானகம் புகுந்தாய்,
மஹிஷியை ஆட்கொண்ட மணி கண்ட  தேவா, மஞ்ச மாதா தொழும் மங்கள ரூபா

புலித்தோலணிவோன் புத்திரனே,
புலி வாஹனனே, புண்ணியனே, பதினெட்டுப் படி மேல் ஒளிர்வோனே, உத்திர நட்சத்திர மகர ஜோதியே

சிவம் சுபம்.

மனமெனும் சிம்மாசனத்தில் உனை வைத்தேன் (Simhendramadhyamaam)


Simhendramadhyamaam

(என்) மனமெனும் சிம்மாசனத்தில் உனை வைத்தேன், உன் மனமிரங்கி அருள்வாய் அன்னை லலிதையே,

அகந்தையை சுட்டெரிக்கும் அக்கினிப் பிளம்பே, அருங் கருணை பொழியும் அகிலாண்டேஸ்வரி

ஐந்தொழில் புரியும் சதா சிவையே,  ஐயிரண்டு அவதார நாராயணியே,
ரோஹ நிவாரணி, கால பைரவி, வேத ரூபணி காயத்ரீ

தவம் செய் காமாக்ஷி,
அவம் நீக்கும் விஸாலாக்ஷி, மங்கல  மங்கையர் தொழும் மீன லோசனி, ஸ்ரீ சக்ர வாஸினி, ஸ்ரீ சிவசக்தி

அயக்ரீவ அகத்தியர் பரவும் பராசக்தி, கூத்தனூர் தேவியும் நாச்சியார் அன்னையும் பணியும் மஹா சக்தி,
திருமீயச்சூர் வாழ் திரிபுர ஸுந்தரி,(தக்க) தருணம் இதம்மா உன் தனயனை ஆதரி..

சிவம் சுபம்

இந்து என்றாலே அன்பு (Shanmugapriya)



இந்து என்றாலே அன்பு
இந்து என்றாலே பண்பு

இந்து என்றாலே வேத பரம்.
இந்து என்றாலே தர்ம மார்க்கம்.

இந்து என்றாலே யாகம் யோகம்
இந்து என்றாலே த்யானம் ஞானம்.
இந்து என்றாலே பக்தி பாவம்.
இந்து என்றாலே சாந்தம் சத்வம்.

இந்துக்கள் காண்பர் வேற்றுமையில் ஒற்றுமை
இந்துக்கள் என்றுமே விட்டுக் கொடுப்பார்.
விட்டுக் கொடுப்போர்
கெட்டுப் போகார். 
விட்டுக் கொடுப்போரே உலகை ஆள்வர்.

குருநாதன் வருவார் (Amrutha Varshini)



குருநாதன் வருவார்
குறை களைவார்

அருள் பொழிவார்..  நம்
மனம் நிறைவார்

குரு உரையே வேதம் ஆகும்.
குரு நாமமே நம் கவசம் ஆகும்
குரு வடிவே இறை வடிவம்
குரு பாதமே நம் பவம் களையும்

இறையை மறந்தால் குரு காப்பார்
குருவை மறந்தால் இறை தாளார்.
குருவுருவை சிந்திப்போம்
குருவருளும் இறையருளும் பெற்றுயுவோம்

சிவம் சுபம்.

மரகத மேனியளே (Kaambothi)

Kaambothi

மரகத மேனியளே
மலையத்வஜன் மகளே
மாதேவன் மனம் கவர்ந்தவளே
மா மதுரை மீனாளே
மலரடி தந்தருள்வாயே

அனலில் விளைந்த அருட்புனலே, அன்பர் மனத்தில் நிறைந் தொளிர் தமிழ் மகளே

சிவராஜ தானி ஆள்பவளே, சுப சௌபாக்ய மெலாம் அருளபவளே, இபமா முகனை ஈன்றவளே, 
இடபவாகனத் தமர்ந்தின்னருள் பொழிபவளே....

சிவம் சுபம்

நரசிம்ஹ தரிசனமே (Thodi)

Thodi

நரசிம்ஹ தரிசனமே... நம் வாழ்வில் நாம் செய்த புண்ணியமே

ஆசார்யர் மூவரும் தொழுத தேவன், அன்னை ஆண்டாளும் ஆழ்வாராதிகளும் போற்றும் வரதனாம்..

பால ப்ரஹ்லாதனின் தவப் பயனால் பாரினில் வந்த புருஷோத்தமன், சீலம் மிகுந்தோரைக் காத்திட விரைந்தோடி வந்திடும்
பரம தயாளனாம்...

திருப்புகழ் அருணகிரி போற்றிடும் தேவன், திருமகளை மடி வைத்த
சாந்த முகன்,  பரிக்கலில் வாழும் பர வாஸுதேவன், ஸ்ரீதரன் மாலோலன், ச்ரித ஜன பாலன்....

சிவம் சுபம்

Jaya Jaya Narasimhaa Jaya Vijayee Bava Narasimaa



Jaya Jaya Narasimhaa
Jaya Vijayee Bava Narasimaa

Parakaala Narasimhaa
Parama dayaaLa Narasimhaa

Vyaasa vandhitha Narasimhaa - mano vyaakoola nivaaraNa Narasimhaa
Kanaga Vallee Samaetha Narasimhaa

Parakaalaasura samhaaaa
Baktha "Vasantha" Priya Narasimhaa, (any dhina)
Abhisheka Priya Narasimhaa, Sadhaa Shaantha Suba Moorthae Narasimhaa

Sivam Subam

துதித்தால் அருள்வான் இறைவன்.



துதித்தால்  அருள்வான் இறைவன்.
அவர் வழி நடந்தால் அருள்வார் குருநாதன்.
சொல் செவி மடுத்தால்
அருள்வார் தந்தை.
(கன்று) நினைக்கும் முன்னமே பசியாற்றுவாள் நம் அன்னை.

அன்னை :

நாம் குடியிருந்த கோயில்.
நம்மை உலகறியச் செய்த கொடிமரம்**.
தன்னுயிரைப் பணயம் வைத்து நம்மைக் காத்த பலி பீடம்.
 என்றும் நம்மை வாழ வைக்கும் தெய்வம்.

** த்வஜஸ்தம்பம்.

சிவம் சுபம்

நீ அமரும் இதயம் அல்லவோ

2

நீ அமரும் இதயம் அல்லவோ, பழுதடையாது பாது காத்துக் கொள் அய்யா

ஹ்ருதயாலீஸ்வரா என் ஹ்ருதய கமலேஸ்வரா..

என் அன்னையினும் பெருங் கோயிலோனே, என் தந்தை சொல் மிக்க
மந்திர ரூபனே, ஆலடி அமர் என் குரு நாதனே, உன் காலடி தந்தென்னை ஆள் தெய்வமே

கையளவே ஆன கோயில் அல்லவோ, அதனுள் வாழ் கருணைக் கடல் நீ அல்லவோ, சிறியேன் நானுன் பெருமை சொல்லவோ, அடியேன் என்னைக் காத்தருள் வல்லவன் அல்லவோ..

சிவம் சுபம்.

ஒருசில வரங்கள் கேட்பேன் (Behag)



ஒருசில வரங்கள் கேட்பேன், தந்தருள் வாய் எனக்கே தந்த முகனே

(என்) தேகாபிமானம் குறைய வேண்டும் - தெய்வாபிமானம் குன்றாமை வேண்டும்

உன் போல் பெற்றோரை வணங்கிடல் வேண்டும், உன் சோதரரைப் போல் தவம் சிறந்திட வேண்டும், சைவ வைணவரும் போற்றும் தந்தி முகனே,  (எங்கணும்)  கொலை புலை  இன்றி  அன்பலை வீச வேண்டும்.

வெயில் மழை பாரா மரத்தடி வாசனே , அருகம் புல்லுக்கே அகம் குழைவோனே, எளியோர்க்குதவும் மனம் பெருக வேண்டும், எங்கணும் மங்கலம் பொழிந்திட வேண்டும்.

சிவம் சுபம்.

அன்னையினும் பெரும் கருணாமயன்



அன்னையினும் பெரும் கருணாமயன்-
ஆயிரம் பிறை கண்ட சந்திரசேகரன் -
இன்சொல் அமுதன் -
ஈசனின் மறுவுருவாம் சங்கரன்-
உயர் வேதக் காவலன்  -
ஊருலகம் போற்றிப் பணி ஞான ஸரஸ்வதி -
எம்மிடை என்றும் நடமாடும் தெய்வம் -
ஏழுலகும் ஒலிக்கும் தெய்வக் குரலோன் -
ஐங்கரனை ஒத்த ஞானக் கனியோன் -
ஒப்பிலா ப்ரணவ குருகுஹன் -
ஓங்காரத் தொளிர் பர ப்ரஹ்ம ரூபன் -
ஔவியம் தீர்த்து நம்மை ஆட் கொள்ளும் அம்மையப்ப குருபரன்.

சிவம் சுபம்

அவளுக்கென்ன அழகுச் சிலை (in film tune)

Appa: my friend sent this Gandhimathi AmbaaL (above) n asked me to compose few lines  in a cine tune.  My immediate response was.....

Appa: அவளுக்கென்ன அழகுச் சிலை
அருள் ஒழுகும் அன்புச் சிலை, ஐந்தொழிலோன் உள்ளுறையும் உயர் ஞான வடிவச் சிலை.....

உயர் ஞான வடிவச்சிலை.....

(மூ) உலகிற்கவள் அரசிதான்



(மூ)  உலகிற்கவள் அரசிதான் - எனக்கவள் அன்னையாவாள்

அனலில் அவள் தோன்றினாலும் அருட் புனலாய்க் கருணை  செய்வாள்

கணபதிக்கு கனி தந்தாள்
கந்தனுக்கு வேலீந்தாள்
கணவனுக்கு (பாதி) உடல் அளித்தாள்
கடையன் எனக்கோ தனையே ஈந்தாள் 

(அழுத) பிள்ளைக்கு பால் கொடுத்தாள்
ஊமைக்கு பாட்டளித்தாள்
கண்ணனையும் காத்தவள் தான்,  தனயன் எனை அணைப்பவள் தான்

OM SIva KaNmaNikku Jeya MangaLam

OM

SIva KaNmaNikku Jeya MangaLam
Sivai kara Velarukku   Suba MangaLam

Aaru Mugathaarukku Jeya MangaLam
Aarirandu Vizhiyaaruku Suba MangaLam

Visaagathu Uthithaarukku Jeya MangaLam
Sri Kaarthikeyarukku Suba MangaLam
Sooranai aatkondaarukku Jeya MangaLam
Subramanya Saamikku Suba  MangaLam

Aaru padai Veetaarukku Jeya MangaLam
Aarirandu karathaarukkku Suba MangaLam
SaravaNabavarukku Jeya MangaLam
Shanmuga Naatharukku Suba MangaLam

Sevalukkum Mayilykkum Jeya MangaLam
Sri VaLLi Devasanaikku Suba MangaLam
VishNuvin Marugarukku Jeya MangaLam
Veerath Thiru Murugarukku Suba MangaLam

Thiruppugazh Naatharukku Jeya MangaLam
Thiru-Arutpaa VaLLalukku Suba MangaLam
Thiruporoor adiyaarukku Jeya MangaLam
Ayyan Thiruvadi Thaamaraikku Suba MangaLam

Sivam Subam

மூவிரு முகங்கள் போற்றி (Kandha Puraanam)

விருத்தம் -

கந்த புராணம் - ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்யப் பெருமான் அருளியது

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி, அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

சிவம் சுபம்

கணபதியைத் தொழும் வல்லீ பதியே



கணபதியைத் தொழும் வல்லீ பதியே
சுரபதி தொழும் தேவ சேனாபதியே... சரணம் சரணம் சரணம்

சிவைபதி அருளிய அறுமுக நிதியே
வாக்பதி வலம் வரும் ஸ்ருதி பதியே சரணம் சரணம் சரணம்

பசுபதி தோளமர் குருகுஹ நிதியே
ரமாபதியின் மருக நிதியே
இச்சை க்ரியை மருவும் ஞான நிதியே
பச்சை மயிலேறும் அருள் நிதியே சரணம் சரணம் சரணம்.

சிவம் சுபம்

படைத்தாள் நம்மை அங்கயற்கண்ணி



படைத்தாள் நம்மை அங்கயற்கண்ணி
பாலூட்டினாள் திரிபுர சுந்தரி

உணவளித்தாள் அன்ன பூரணி, உயர் ஞான மளித்தாள் காந்திமதி

அழகளித்தாள் வடிவுடை நாயகி, ஆரோக்யம் காப்பாள் தையல் நாயகி, கனகம் பொழிவாள் கற்பக நாயகி,  தவசீலம் சேர்ப்பாள் காமாக்ஷி

அறம் வளர்ப்பாள் தர்ம ஸம்வர்த்தினி, அச்சம் தவிர்ப்பாள் அபயாம்பிகை, தோஷம் போக்குவாள் பர்வத வர்த்தினி, மதுரம் பொழிவாள் மதுர காளி.

காலனை வெல்வாள் அபிராமி, கலைஞானம் ஊட்டுவாள் சிவகாமி, ஞால மளிப்பாள்** விஸாலாக்ஷி,  மங்கலம் காப்பாள் ஸ்ரீ லலிதை,

சிவம் சுபம்.

** உலகையே நம் வசமாக்குவாள் என்று கொள்க.

அகிலத்தின் பசி தீர்க்கும் அம்மை & அன்னம் பாலிக்கும் அன்னையே!




அகிலத்தின் பசி தீர்க்கும் அம்மை யப்பருக்கு ஐப்பசி முழு நிலவில் அன்னாபிஷேகம்

அன்னம் பாலிக்கும் தில்லை அம்பலருக்கு அறுசுவை காய் கனியோடு அபிஷேகம்

ஊர் மக்களுக்கெல்லாம்  படி யளக்கும் பாண்டியற்கு, உன்னத மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு, உண்ணாமுலையாளின் அண்ணாமலை யார்க்கு, எந்நாளும் நமை காக்கும் (அன்ன) பூரணற்கு அபிஷேகம்

அய்யனின் ப்ரசாதம் அறியாமை இருள் நீக்கும். வயிற்றுப் பசி தீர்த்து ஞானப் பசி தூண்டும், வாதாதி ரோஹ நிவாரணம் செய்யும், வானோரைப் போல் வாழ்வாங்கு வாழ வைக்கும்.

சிவம் சுபம்.


அன்னம் பாலிக்கும் அன்னையே! எப்பொழுதும்
முழு நிறைவே,
சங்கரனின் உயிர் துணையே,  எமக்கு
பற்றற்ற மனமும் ஞானமும்  ஈய வேண்டும் தாயே,
பர்வதராஜன் மகளே,
பார்வதியே, என்னை ஈன்றவளே, என் அப்பனாம் மகேசனின்
அடியாரே எனக்கு உற்றார் (அம்மா), அவன் ஆளும்  மூவுலகோரும் சுகமாய் வாழ அருள்வாயே.

சிவம் சுபம்

ஞான சம்பந்த ஸ்வாமிநாதர்.

ஓம்

ஞான சம்பந்த ஸ்வாமிநாதர்.
ஞான குருகுஹ
ஸ்வாமிநாதர்

ஞான பண்டித
மஹாஸ்வாமி நாதர்
ஞான போதஹ
மஹாதேவ நாதர்

ஞான சக்தி வடிவ
மஹா ஸ்வாமி நாதர்
ஞான சரஸ்வதியாம்
ஸ்ரீ சந்த்ரசேகரர்.

குருவும் அவரே
குஹனும் அவரே
குருகுஹ ஸ்வாமிநாத
பரமாச்சார்ய பரமேஸ்வரரே.

சிவம் சுபம்

பால க்ருஷ்ணன் பக்த பரிபால க்ருஷ்ணன்



பால க்ருஷ்ணன்
பக்த பரிபால க்ருஷ்ணன்

வேங்கட க்ருஷ்ணன்-  திரு வேங்கட க்ருஷ்ணன், திருவடி தொழுவோம், திருவருள் பெறுவோம்

வண்ணப் பட்டாடடையில் மிளிரும் அய்யனே, யாழி மேல் தோன்றும் காளியும் ஆவான். அருணகிரி பாடும் பால முருகனே திருமலை உறையும் பாலா-ஜீ ஆவான்

கண்ணனும் கந்தனும் ஒன்றென்றுணர்ந்தால்
பேதங்கள் மாயும், (அவன்) மோஹன ரூபம் தெரியும், அவரவர்க்கேற்ப உருவம் கொண்டு அருள் மழை பொழியும் ஆனந்த வடிவம் புரியும்

சிவம் சுபம்.

அருள் வடிவே அம்மா (Sahana)

சஹானா

அருள் வடிவே அம்மா 
ஆகம வேத கலாநிதியே அம்மா
இருள் நீக்கி யருள் அம்மா
ஈசமனோஹரி மீனாக்ஷி  அம்மா

உனதடியே சரணம்மா
ஊக்கமளிப்பாய் அம்மா
என்னுயிரல்லவோ அம்மா, என்
ஏக்கம் தவிர்த்தருள் அம்மா

ஐந்தொழில் புரியும் அம்மா
ஒப்பிலா ராஜமாதங்கியே அம்மா
ஓங்காரத் தொளிர் அம்மா
ஔதார்யக் கழலிணைத் தந்தாள் அம்மா... மீனம்மா

சிவம் சுபம்.

இறை வழி பாடு இறை பதம் நாடு (Revathi)



இறை வழி பாடு
இறை பதம் நாடு
இரையையும் தேடு
நெறியோடு வாழு

ராம ராம என்றால் போதாது
ராமனின் நெறியைப் பின்பற்றாது

க்ருஷ்ண க்ருஷ்ண என்றால் போதாது,
க்ருஷ்ணனின் கீதையை செவி மடுக்காது

சிவாலயம் அமைத்தால் போதாது,
பூசலாரைப் போல் பக்தி செய்யாது

குன்றுதோறும் சென்றால் போதாது
குமரனை மனத்தில்
நம்பித் தொழாது

தேங்காய் உடைத்தால் தடை விலகாது, ஐங்கரனை உருகிப் பணிந்து தொழாது

சாயி பஜனை செய்தால் போதாது,
சகலர்க்கும் அன்புடன் உதவி செய்யாது

பூசை புனஸ்காரம் பலித்திடுமே இறை பாதத்து அன்பு மெய்யாய் இருந்தால்.

நாம ஜெபம் ஒன்றே போதும் நமக்கு, காமனைக் காலனை வென்று வாழலாம். 

சிவ சாயி நாரண பராசக்தி,
கந்தா கணபதி ஐய்யப்பா
என்றால் போதும் இந்தா என்றே அருள் பொழியும், அகம் நிறையும்

சிவம் சுபம்

கண்ணாரக் காண வேண்டும் -



கண்ணாரக் காண வேண்டும் - காஞ்சி வாழ் தயா பரனை -
கை கூப்பி வணங்க வேண்டும் காமகோடி ஈசனை,

நெஞ்சாரப் பாட வேண்டும் பரமாச்சார்ய
பரம்பொருளை -
செவியாரக் கேட்க  வேண்டும் அந்த தெய்வத்தின் குரலை தினமும்.

தப்பாமல் நடக்க வேண்டும் அக்குரல் சொல்லும்  நெறி தனிலே,
(இனிப்) பிறவியற இதை விட சிறந்த மார்க்கம் இல்லை புவியிலே.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
ஆலடி சங்கர காலடி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர
காமகோடி சங்கர
காமாக்ஷி சங்கர
காமாக்ஷி சங்கர
ஸ்ரீ சந்தர் சேகர

சிவம் சுபம்.

மனமெனும் மந்த்ராலயத்தில் உமை வைத்தேன்

மனமெனும் மந்த்ராலயத்தில் உமை வைத்தேன். அன்று ப்ரஹ்லாதனாய்
நரசிங்கனைக் கொணர்ந்தீர், பயமறுத்தீர். பவம் களைந்தீர்.
இன்று துங்கைக் கரையில் ப்ருந்தாவனத்தில் ஒளிரும் புனிதரே,
என் உடல் பிணி தீர்ப்பீர்,   உள்ளம் குளிரச் செய்வீர்,
மலர் பாதம் பிடித்தேன் 
குரு ராயரே, உம் அபய கரம் கொடுத்தென்னை காப்பீர், காற்றின் மகவை எதிர் வைத்தருளும் எங்கள் கற்பக வ்ருக்ஷமாம் காமதேனுவே, ஸ்ரீ ராகவேந்திர பரப்ரஹ்மமே!

சிவம் சுபம்

(குரு) பகவானே பகவானே



(குரு) பகவானே பகவானே பதம் தந்தருள்வாய் பகவானே

கடைக் கண்ணால் என்னைப் பார்த்திடுவாய், கவலைகள் யாவும் தீர்த்திடுவாய்

இருகரம் கொண்டெனை அணைத்திடுவாய், இக புரத்திலும் என்னைக் காத்திடுவாய், அதரம் மலர்ந்து ஆசி கூறி என் இதயத்துள்ளே நிலைத்திடுவாய்

ச்ருங்கேரி காமகோடி ஷீரடி பர்த்தியில் ஒளிர்நதிடுவாய், சேஷாத்ரி ரமணராய் குழந்தையாய் காட்சித் தந்தே (என்) சஞ்சலமெல்லாம் தீர்த்திடுவாய்,  சங்கட மெல்லாம் போக்கிடுவாய்

சிவம் சுபம்

மழை பொழிய வேண்டும் தாயே (Revathi)



மழை பொழிய வேண்டும் தாயே ...  மக்கள் வாழ்ந்திட மகிழ்ச்சி யுற்றிட...

தருணம் அறிந்து பொழிந்திட வேண்டும் தக்க அளவே பொழந்திட வேண்டும்

குளம் நிறைய வேண்டும் தாயே, மக்கள் கண்கள் குளமாக வேண்டாம் தாயே, கால் நடைகளும் வாழ்ந்திட வேண்டும், இதை கவனத்தில் கொள்வாய் கயற்கண்ணி நீயே

பயிர் செழித்திட வேண்டும், உயிர் வாழ்ந்திட வேண்டும், தனம் பெருக வேண்டும்  தானமும் சிறக்க வேண்டும்.. தாயே

சிவம் சுபம்

மங்கள வாரம் வாரம் (Yemen Kalyani)

உ (y/k)

மங்கள வாரம் வாரம்
மங்கலம் பொழியும் வாரம்

துர்கா தேவியின் சுப வாரம்,
நம் துக்கமெலாம் துகளாகும் வாரம்

செவ்வேள் முருகனும்
செவ்வாய் மலர்ந்து அருளும் வாரம்,
தனயனை மடிவைத்து
தாயும் முகமலர்ந் தருளும் வாரம்

ரோஹ நிவாரண வைத்திய நாதனும்,
பாப ஸமன பாலாம்பிகையும்,
தன்வந்த்ரி மாமனும்
முத்துக் குமரனும்
முன்னின்றருளும்....

சிவம் சுபம்

எல்லாம் உனது பதம்



எல்லாம் உனது பதம்
எல்லாம் உனது செயல் எல்லாம் உனதருளே என்றிருந்தால், பொல்லாத மா துயரம்
நீங்கும் மருவும் உனதடிக்கே ஆதரவாய் சொக்கநாதா

-- சொக்கநாத வெண்பா

சோமன் அணி சுந்தரா
சொக்கநாதேஸ்வரா, சொக்கினேன் உன் அழகில் மீனாக்ஷி சுந்தரா

கயிலையை விட்டு   மதுரை வந்தாய்,  கயற் கண்ணி கரம் பிடித்து சிங்காதனம் அமர்நதாய் கடம்பவனத் தினையே கையிலாயமாக்கி மூவுலகும் ஆளும் முத்தமிழ் வேந்தனே

அங்கிங்கெனாதபடி எங்கும் உன் இடது காலை தூக்கி ஆடி அயர்ந்து விட்டு, மதுரையிலே தானே உன் காலெடுத்து ஆடி உள்ளம் பூரித்தாய், உனதடியாரின் உள்ளம் புகுந்தாய்.

கால் பதித்து நடந்து இங்கே  பிட்டுக்கு மண் சுமந்தாய்,  நின் திருப் பாத மண்ணே திருநீறு ஆகும், என்னிரு வினை களைந்து உன் பாதம் சேர்க்கும்.

சிவம் சுபம்

Siva Bhajan - Meenaakshi pathi Sundareswaraa

OM

Meenaakshi pathi Sundareswaraa
Kaamaakshi pathi
Yekaambareswaraa
Visaalakshi pathi
Viswesvaraa
Virainth-AruL purivaa
Paavathi Parameswaraa

Karpagaambikai Naatha KaapaLee-swaraa
Vadivudainaayagi Naathaa Otriyooreaswara
Thripurasundari Naathaa
Vaalmeekeeswara
Kai koduth-aaL  vaa
KaaLi Kacchabeswaraa

Kaanthimathi Sametha
Saalivateeswaraa
Gomathi Sametha
Sankaralingeswaraa
Kuzhal-vaaimozhi-yaaL Sametha Kutraaleeswara
VantharuL puri vaa
Oppilanaayagi Samaetha
Vaithyapureeswara

Sivakami Priya
Natarajeswaraa
Abiraami priya
Amirthakateswaraa
Akilaandeswari Priya
Jambookeswsraa
Adimalar thanthaaL
Artha-Naareeswaraa

Sivam Subam

பக்தி செய்வோம் வாரீர் (Brindavana saranga)

B/S

பக்தி செய்வோம் வாரீர்
பரமனை பக்தி செய்வோம் வாரீர்

பக்தி செய்தால் நம் புத்தி தெளியும், நற் சிந்தனை மலரும், செயலும் சிறக்கும்

ஆழ்வாரைப்  போலே, அறுபத்தி மூவரைப் போலே, அனுமனைப் போலே, மீராவைப் போலே, நம்மிடை வாழும் சுபத் தாயினைப் போலே, நாதோபாசனை செய்திடுவோமே, நமனை வென்று வாழ்ந்திடுவோமே

சிவம் சுபம்