Monday, November 27, 2017

இறை வழி பாடு இறை பதம் நாடு (Revathi)



இறை வழி பாடு
இறை பதம் நாடு
இரையையும் தேடு
நெறியோடு வாழு

ராம ராம என்றால் போதாது
ராமனின் நெறியைப் பின்பற்றாது

க்ருஷ்ண க்ருஷ்ண என்றால் போதாது,
க்ருஷ்ணனின் கீதையை செவி மடுக்காது

சிவாலயம் அமைத்தால் போதாது,
பூசலாரைப் போல் பக்தி செய்யாது

குன்றுதோறும் சென்றால் போதாது
குமரனை மனத்தில்
நம்பித் தொழாது

தேங்காய் உடைத்தால் தடை விலகாது, ஐங்கரனை உருகிப் பணிந்து தொழாது

சாயி பஜனை செய்தால் போதாது,
சகலர்க்கும் அன்புடன் உதவி செய்யாது

பூசை புனஸ்காரம் பலித்திடுமே இறை பாதத்து அன்பு மெய்யாய் இருந்தால்.

நாம ஜெபம் ஒன்றே போதும் நமக்கு, காமனைக் காலனை வென்று வாழலாம். 

சிவ சாயி நாரண பராசக்தி,
கந்தா கணபதி ஐய்யப்பா
என்றால் போதும் இந்தா என்றே அருள் பொழியும், அகம் நிறையும்

சிவம் சுபம்

No comments:

Post a Comment