சமய நல்லூரில் தோன்றினார் (Brindavana Saranga)
பிருந்தாவன சாரங்கா
சமய நல்லூரில் தோன்றினார், (தக்க) சமய மறிந்தருள் புரிகிறார், ஐயன்
ராஜ மாதங்கியின் அமுதுண்டார், ராஜாதி ராஜர்கள் தொழ வாழ்கின்றார்
மகரகண்டிகை பூணும் மஹனீயர், மஹான்களும் போற்றிய மஹா ஞானி, மா மேரு ப்ரதிஷ்டை செய்த மா சாக்தர், மாண்டவரையும் மீட்டுத் தந்த மா தவத்தார்
சிவலிங்கத் திருமேனி கொண்டு ஐயன், சிவ ராஜ தானியில் நிலை கொண்டார், நவா வர்ண பூஜையில் மனம் நெகிழ்வார், நாடும் வீடும் வாழ நலம் பொழிவார்
audio
No comments:
Post a Comment