அன்னையின் கருணைக்கு இணை உண்டோ (Hindholam)
Hindholam
அன்னையின் கருணைக்கு இணை உண்டோ, அவள் அடி மலர் பணிந்தோர்க்கு இறப்புண்டோ.... ஐந்தொழில் புரியும்.....
இச்சை க்ரியை ஞான சக்தி அவளே, ஈறேழுலகும் ஆள் மீனாளே!
கயற்கண்ணால் நம்மை படைத்தவள், கலை ஞானம் அளித்து வளர்ப்பவள், கனக தாரை பொழிந்து காப்பவள், தன் கழல் இணை தந்து ஆள்பவள்
சிவையாய் கயிலையில் ஆடுவாள், நாரணியாய் பாற்கடலில் மிதந்திரு- ப்பாள், சத்திய லோக ஸரஸ்வதி அவளே மா மதுரை வாழ் சகல கலா வல்லி
audio
No comments:
Post a Comment