Tuesday, April 28, 2015

assorted bhajans - various raagaas

1. ஸ்ரீ கணேச பஜன் -  SRI GANESH BHAJAN

கணேச சரணம் சரணம் கணேச - கணேச சரணம் சரணம் கணேச 
GANESA SARANAM - SARANAM GANESA - GANESA SARANAM - SARANAM GANESA 

மூஷிக வாகன சரணம் கணேச - மோதக ஹஸ்த சரணம் கணேச 
MOOSHIGA VAAHANA SARANAM GANESA - MOTHAGA HASTHA SARANAM GANESA 
சாமர கர்ண - சரணம் கணேச - விளம்பித சூத்ர சரணம் கணேச 
CHAAMARA KARNA SARANAM GANESA - VILAMBIHA SOOTHRA SARANAM GANESA 

வாமன ரூப சரணம் கணேச - மஹேஸ்வர புத்ர சரணம் கணேச 
VAAMANA ROOPA SARANAM GANESA - MAHESWARA PUTHRA SARANAM GANESA 
விக்ன விநாயக சரணம் கணேச - பாத நமஸ்தே சரணம் கணேச 
VIGNA VINAAYAKA SARANAM GANESA - PAATHA NAMASTHE SARANAM GANESA 

2. SRI சுப்பிரமணிய பஜன் -  SRI SUBRAMANYA BHAJAN 

வேல் முருகா மால் மருகா ....ஓடி ஓடி வா வா 
VEL MURUGAA, MAAL MARUGAA - ODI ODI VAA VAA 
மால் மருகா, வேல் முருகா ... ஆடி ஆடி வா வா 
MAAL MARUGA.... VEL MURUGA..... AADI ADDI VAA VAA 

பால் தருவேன் பழம் தருவேன் .. பழனி ஆண்டவா,
PAAL THARUVAEN, PAZHAM THARUVAEN, PAZHANI AANDAVAA...... UN 
கால் பிடித்தேன், தாள் பணிந்தேன்  - ஓடி ஓடி வா
KAAL PIDITHTHEN, THAAL PANINTHEN - ODI ODI VAA 

உன் திருப்புகழே பாடுவேன் - கேட்டு ஓடி வா 
UN THIRUPPUGAZHE PAADUVEN - KAETTU ODI VAA 
மயில் மீது ஏறி  வா - சூர சம்ஹார 
MAYIL MEETHU YAERI VAA - SOORA SAMHAARA 

3. DURGA LASKHMI SARASWATHI BHAJAN  -    RAAG : SINTHU BAIRAVI 

சுந்தரி ...திரிபுர....சுந்தரி -  ஸுவாசினி...ஸூ-மதுர பா-ஷி-ணி  
SUNTHARI THRIPURA SUNTHARI - SUVAASINI ..SU-MATHURA BAASHINI 

பவானி....பரம பாவனி .....பைரவி...சிந்து பைரவி 
BHAVAANI... PARAMA PAAVANI........ BAIRAVI SINTHU BAIRAVI 

ரூபிணி விஷ்ணு ரூபிணி - பாரதி....கலா பாரதி...
ROOPINI VISHNU ROOPINI - BHAARATHI  KALAA BHAARATHI
காளி ...மதுர காளி - அருள்வாய் ...பதம் தந்தருள் வாய் 
KAALI ... MATHURA KAALI -  ARULVAAI...PATHAM THANTH--ARULVAAI 

4.  BHAJAN ON SRI  MEENAAKSHI - RAAG : HAMSAANANDHI 

ஸ்ரீகரி சுபகரி மீனாக்ஷி - ச்ரித ஜன பாலினி மீனாக்ஷி 
SRI-GARI SUBA-GARI MEENAAKSHI..... SRITHA JANA PAALINI MEENAAKSHI 
மதுரா வாசினி மீனாக்ஷி - மங்கள  காரிணி மீனாக்ஷி 
MATHURAA VAASINI MEENAAKSHI - MANGALA KAARINI MEENAAKSHI 

திருமூர்த்தி ரூபிணி மீனாக்ஷி - திரிசக்தி ரூபிணி மீனாக்ஷி 
THRIMOORTHI ROOPINI MEENAAKSHI - THRISAKTHI ROOPINI MEENAAKSHI 
த்ரிபுரேசி மீனாக்ஷி - த்ரி நயனி  மீனாக்ஷி 
THRI-PURAESI MEENAAKSHI - THRI-NAYANI MEENAAKSHI

மரகத வல்லி  மீனாக்ஷி - மாணிக்ய வல்லி  மீனாக்ஷி 
MARAGATHA VALLI MEENAAKSHI - MAANIKYA VALLI MEENAAKSHI
ராஜ மாதங்கி மீனாக்ஷி - ராஜ ராஜேஸ்வரி மீனாக்ஷி 
RAAJA MAATHANGI MEENAAKSHI - RAJA RAJESWARI MEENAAKSHI

ஸ்ரீ சக்ரேச்வரி மீனாக்ஷி - ஸ்ரீ சுந்தரேஸ்வரி மீனாக்ஷி 
SRI CHAKRESWARI MEENAAKSHI - SRI SUNTHA-RESWARI MEENAAKSHI
ஸ்ரீ லலிதே மீனாக்ஷி - ஸ்ரீ சிவ சக்தி மீனாக்ஷி 
SRI LALITHE MEENAAKSHI - SRI SIVA SAKTHI MEENAAKSHI

பங்காரு தல்லி  மீனாக்ஷி - பக்த வத்சலே மீனாக்ஷி 
BANGAARU THALLI MEENAAKSHI - BAKTHA VATHSALE MEENAAKSHI
(நீ) பாதமு பட்டிதி மீனாக்ஷி - (மமு) பரிபாலிஞ்சு  மீனாக்ஷி 
(NEE)  PAATHAMU PATTITHI MEENAAKSHI - (MAMU) PARI PAALINCHU MEENAAKSHI 

5. BHAJAN ON LORD SIVA

SIVAAYA NAMA OM - NA MA SI VAA YA
NA MA SI VAA YA - SI VAAYA NAMA OM

SIVA SIVA SIVA SIVA SIVAAYA NAMA OM 
SIVAAYA NAMA OM - NA MA SI VAA YA 

HARA HARA HARA HARA HARAAYA NAMA OM 
HARAAYA NAMA OM - NA MA SI VAA YA 

BHAVA BHAVA BHAVA BHAVA - BHAVAAYA NAMA OM 
BHAVAAYA NAMA OM - NA MA SI VAA YA

SIVAAYA NAMA OM - HARAAYA NAMA OM 
HARAAYA NAMA OM - SIVAA YA NAMA OM 

BHAVAAYA NAMA OM - SIVAA YA NAMA OM 
SIVAA YA NAMA OM - BHAVAAYA NAMA OM 

SIVAAYA NAMA OM - NA MA SI VAA YA 
NA MA SI VAA YA - SI VAA YA NAMA OM 


6. SIVA MANGALAM - BHAJAN

OM MANGALAM OMKAARA MANGALAM 
OM NA MA SI VAA YA GURUVE MANGALAM

"NA" MANGALAM -NA-KAARA MANGALAM 
NAAMA ROOPA NILAYAA-YA GURUVAE MANGALAM 

"MA" MANGALAM - MA-KAARA MANGALAM 
MAHAA DEVA NILAYAA-YA GURUVE MANGALAM 

"SI" MANGALAM - SIVAA YA MANGALAM 
SIDHTHA BUDHDHA NILAYAA-YA GURUVE MANGALAM 

"VA" MANGALAM - VA-KAARA MANGALAM 
VAA-MA ROOPA NILAYAA-YA GURUVE MANGALAM 

"YAA" MANGALAM - YA-KAARA MANGALAM 
YALLAA ROOPA NILAYAA GURUVE MANGALAM 

AANANDA GURUVE MANGALAM 
GNAANANDA GURUVE MANGALAM 











திருமுருகாற்றுப் படை வெண்பாக்கள் (Raaga Malika)




குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் 
அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் 
கைவிடா நின்றதுவும் கல் பொதும்பில் காத்ததுவும் 
மெய் விடா வீரன் கை வேல் 


வீர வேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட 
தீர வேல் செவ்வேள் திருக் கைவேல் - வாரி 
குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும் 
துளைத்த வேல் உண்டே துணை 


உன்னை ஒழிய ஒருவரையும்  நம்புகிலேன் 
பின்னை ஒருவரை யான் பின் செல்லேன் - பன்னிருகைக் 
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் 
வேலப்பா செந்தி வாழ்வே 


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன் 


முருகனே செந்தி முதல்வனே மாயோன் 
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன் 
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 
நம்பியே கைத் தொழுவேன் நான் 


பரங்குன்றின் பன்னிரு கைக் கோமான் தன பாதம் 
கரம் கூப்பிக் கண் குளிரக் கண்டு - சுருங்காமல் 
ஆசையாய் நெஞ்சே அணி முருகாற்றுப் படையைப் 
பூசையாக் கொண்டே புகல் 


நக்கீரர் தாம் உரைத்த நன் முருகாற்றுப் படையைத் 
தற்கோல நாள் தோறும் சாற்றினால் - முற்கோல 
மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளித் 
தான் நினைத்த தெல்லாம் தரும் 




Tuesday, April 7, 2015

ஸ்ரீ மஹா பெரியவா (Naatai)

நாட்டை

ஸ்ரீ மஹா பெரியவா...... இந்த மஹிதலம் கண்ட. ஒரே.......

மானுட ரூபம் தரித்த மஹாதேவா...அந்த மாதவனும் தேடும் மலர் தாளா!....... ஸ்ரீ.....

காஞ்சி ஏகாம்பர, காலடி சங்கர, காமகோடி சந்த்ர சேகர, உம் கழல் இணை என் சிரம் வைத்தாள், இறைவா

அனுஷத் தலைவனே, அனுக்ரஹ நிபுணனே, அமரருக்கும் கிட்டா ஆன்மீக அற்புதமே,  அடியவர் உள்ளம் உறை ஆண்டவனே, உன் அடி மலர் என் சிரம் வைத்தாள் பரம்பொருளே

audio

அன்னையை அப்பனை மதியாது

அன்னையை அப்பனை மதியாது, ஆண்டவனைத் துதித்து பயனில்லை, பெற்ற. . .

உருவாய் வந்த தெய்வத்தை பேணாது, அருவான தெய்வத்தைப் பணிந்து பயனென்?

(நாம்) குடியிருந்த கோயிலை மறந்து ஊர்க்கோயிலை சுற்றி பயன் உண்டோ,  காணும் தெய்வங்களை பட்டினியில் வாட்டி, காணா தெய்வங்களுக்கு நைவேத்யம்  ஏனோ?

அம்மைப்பனே உலகம்
என்றான் ஆனைமுகன், அவர் ஆணை ஏற்றே இராமன் அழியாப் புகழ் கொண்டான், பெற்றோரைப் பணிவோம், பேரருள் பெறுவோம், பொன், பொருள், போகமுடன் புகழும் பெறுவோம்

audio


எத்தனை பிறவி எடுத்தாலும் (Saaveri)

சாவேரி

எத்தனை பிறவி எடுத்தாலும், அத்த்னையிலும் உம் பதம் மறவா வரம் அருள்வீரே.,

நாதரே, ஸ்வாமி நாதரே..
மஹா ஸ்வாமி நாதரே

அலைகடல் துரும்பாய் அலையும் மனத்தை ஒரு நிலைகக்குள் நிறுத்தி, நல் வழி காட்டி....... நான்..

காஞ்சி வாழ் ஏகரே,
காமகோடி சங்கரரே,
உம் நாம ஜெபம் செய்யும் நல் மனம் அருள்வீரே, காம மோஹக் குழியில் வீழ்ந்து அழியாது, உம் பதமலர்
பணிந்துய்யும் வரம் அருள்வீரே

ஆகம, வேத ஸாஸ்த்ர நிதியே, எம் அன்னையாம், தந்தையாம், குருவாம் தெய்வமே, ஏதும் அறியா பாமரன் எனக்கும் பரிந்ருள் புரியும் பரமேஸ்வரரே!

audio


Durgaa Devi namosthuthey (Durga)

Durga

Durgaa Devi namosthuthey, duritha nivaaraNi namosthuthey

Krishna sothari namosthuthey, Kamsa bayankari namosthuthey

Maayaa devi namosthuthey, mamatha mardhana Soolini namosthuthey, Chandi Chaamundi namosthuthey, Sath Jana Rakshagi namosthuthey

KaaLi Kalaa maalini Namosthuthey, Kaalidaasa vandithey namosthuthey, Renukaa Devi namosthuthey, Rakshitha Bhuvani namosthuthey

Paraa Sakthi namosthuthey, Baktha vasankari namosthuthey, Maathru Bhoodeswari namosthuthey, Mangala kaariNi namosthuthey

audio part 1
audio part 2





(பவ) ரோகம் தீர (Mohanam)

மோஹனம்

(பவ) ரோகம் தீர (குரு) ராகவேந்த்ர நாமம் சொல்லுவோம்

நினைந்து நைந்து உருகும் உள்ளமே, ஸ்ரீ ராகவவேந்த்ரர் வாழும் மந்த்ராலயமே

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனம் நோகாமல், பண்ணாலே துதிப்போரின் கண்முன்னே தோன்றுவார், குருராயர் நம் கண்முன்னே தோன்றுவார்,வேண்டுவோர் வேண்டுமுன் வர மழை பொழிவார், இனி வேண்டுதற் கொன்றுமிலா மனநிறைவை தருவார்

audio


கண் சிமிட்டும் நேரத்திலே (Sivaranjini-Neelamani)

 நீலமணி/சிவரஞ்சனி

கண் சிமிட்டும் நேரத்திலே கவலைகள் தீர்ப்பவரே, கண் சிமிட்டீ பாருமைய்யாயா எங்கள் நந்திகேஸ்வரரே

சிவ ராஜதானியின் காவலர் நீர் தானே, சிவ குடும்பத்தையே தாங்கிடும் இடபரே

அரி அயன் வேண்டிடவே ஆலம் உண்ட வாயனுமே, சனிவார நாளிலே த்ரயோதசி திதியினிலே, உன் கொம்பின் இடைவெளியில் நர்த்தனம் புரிந்தானே, என்ன தவம் செய்தீரோ, ப்ரதோஷ நாயகரே!

ஐந்தெழுத்து மந்திரத்தை அனவரதம் ஜெபிப்பீரே, அருகம் புல் ஏற்று அருள் மழை.பொழிவீரே, நந்தனார் வேண்டிடவே நயந்து விலகினீரே, பந்தபாசம் அறுக்கும் ஆதிகுருநாரே

audio
audio another recording
another recording



கண்ணன் என்றிட கவலைகள் மாயும் (Mohanam)

மோஹனம்

கண்ணன் என்றிட கவலைகள் மாயும், க்ருஷ்ணா என்றிட க்ருபை  பொழியும்

மாதவ என்றிட மனம் நிலையுறும், முகுந்தா என்றிட மும்மலம் விலகும்

கோபால என்றிட பயமது போகும், கேசவ என்றிட விதியும் மாறும், கோவர்தன என்றால் சுமைகள் நீங்கும், கோவிந்தா என்றே இறவாது வாழுவோம், இனி பிறவாது வாழுவோம்

audio


சிவ குடும்பமே அருளும் சகல சௌபாக்யமே (Sankarabharanam)

சங்கராபரணம்

சிவ குடும்பமே அருளும் சகல சௌபாக்யமே

சிவையே நம்மை படைத்த தாயே, சிவனாரே நம்மை பாலிக்கும் தந்தையே

தலைமகன் வேழனே தடைகளை தகர்ப்பானே, இளையோன் அழகு வடிவேலவனே வெற்றிகள் குவிப்பானே, இவரைப் பணிவோரை தாய் மாமன் காப்பானே, அவன் தன்n மகனும் (தலை) விதி மாற்றி அருள்வானே

audio


இருவர் காணா இறைவன் (Kalyani)

கல்யாணி

இருவர் காணா இறைவன் திருத் தாள் தொழுதுய்வோம்,  வாரீர், உலகீரே

மால் அயன் காணா மலரடி காண, மானுடர் நாம் என்ன தவம் செய்தோமோ

காமகோடி கருணாலயன் பாதம், மதியணி சேகரரின் மஹிமை மிகு பாதம், பாவ மூட்டைகளை களைந்தெறியும் பாதம், ஜீவ கோடிகளை கடைத்தேற்றும் பாதம்

audiolink

ராம ராம ராமனே (Revathi)

ரேவதி

ராம ராம ராமனே, ராமனுக்கிணை அந்த ராமனே

அன்னை தந்தை அடி பணிந்தான், அகிலமே அவன் அடி பணிகிறதே

வேடனை, குரங்கினை அரக்கனையே, சோதரராகக் கொண்டானே, ஆணவத்தை அழித்தானே, அகிலம் வணங்கப் பெற்றானே

ஒரு பெண்ணின் உயிர் மீட்டான், மற்றொருவளுக்கு வீடளித்தான்,
மாருதிக்கு தன்னையே தந்தான், மாதேவனுக்கு கோயில் சமைத்தான்

அன்பே அவனது திருவுருவம், அறமே அவனது வாழ்க்கை தர்மம், பண்பே அவனது ப்ரஹ்மாஸ்த்ரம், பணிவே அவனது வெற்றி ரகசியம்

audiolink



கை விடமாட்டாள் கயற் கண்ணி (MalayaMarutham)

மலைய மாருதம்

கை விடமாட்டாள் கயற் கண்ணி,  கழலிணை பணிந்தவன்  கசடனே ஆனாலும். ..

மலைய  மாருதப்  புனல் அவளே, மந்த மாருதமாய்
அன்பரை வருடிடுவாள்

கிளியேந்தும் மரகத மயில் அவளே, நம் மொழி கேட்டு உள்ளம் நெகிழ்ந்திடுவாள், தளிர் கரம் கொண்டு (நம்மை) அரவணைத்தே, விதி மாற்றி நற்கதியில் வைத்திடுவாள்

audiolink

அனலில் தோன்றிய அருட் புனல் (Aahir Bhairav)

ஆஹிர் பைரவ்

அனலில் தோன்றிய அருட் புனல் ஒன்னு ஆட்சி புரியுது மதுரயில

கயில கிளி வச்ச கயற் கண்ணி, அவ மரகத மேனி மனோண்மணி,

கயில மலையானை வரவழைச்சு, அவன் கைபிடிச்சாழுது மூவுலக,
சிவ குடும்பமே வாழும் பூமி, யம பயம் இல்லா புண்ய பூமி

ஆயிரம் கோயிலு இருந்தாலும், அழகுக் கோயிலு மீனாட்சிக்கே,    நாளொறு திருவிழா, பொழுதொறு  வைபவம், நித்ய கல்யாணம், பச்ச தோரணம்,

சிவ சக்தி ஆடல் புரிஞ்ச ஊரு, திருவீதி மண்ணே திருநீறு, மாமன் அழகனும் வாழும் தலம், (பூலோக) கைலாய வைகுண்டம் இது தானே

audiolink



மதுரை எனும் ஒரு சிவ ராஜதானி

(மா) மதுரை எனும் ஒரு சிவ ராஜதானி,  அந்த சிவ ராஜதானியில் ஓர் கௌரி லோகம்

அந்த கௌரீ லோகத்தில் ஓர் பொன்னூஞ்சல், அந்த பொன்னூஞ்ல் ஆடினார், மீனாக்ஷி சௌந்தரர்

ஆடிக்கொண்டே அன்பரின் வேண்டுதல்களை, அய்யனுக்ககு உறைத்தாளே,  அன்னை மீனாள், வேண்டுவோர் வேண்டுமுன் வரமருளும் ஈசன் "ததாஸ்தூ" என்றுரைத்து நிஷ்டை கூடினான்

ஆராரோ ஆராரோ அம்மையப்பரே, அகிலம் உய்ய பள்ளிகொள்ளும் அம்மையப்பரே, மீண்டும் காலை வருவேன் நான் அம்மையப்பரே, நான் வேண்டுவதெல்லாம் பூர்த்தி செய்வீர் அம்மைப்பரே !!

audiolink


அம்மா என்றழைக்க நாவில் (Madhyamavati)

மத்யமாவதி

அம்மா என்றழைக்க நாவில் அமுதூறுதே! அகம் குழையுதே! ஆனந்தம் பெறுகுதே!

இச்செகத்தில்.அன்னைக்கு ஈடிணை உண்டோ? ஈசனுக்கும் கிட்டா பெறும் பேறிதுவன்றோ?

என்ன தவம் செய்தேனோ "தங்கமே" எனை ஈன்றாயே,  என் சொல்வேன் "மதுரமே" எனை பேணி காத்தாயே, கைமாறென்ன செய்வேன் "(சிவ)சுபமே"  உன் கானக் (ஞானக்) கருணைக்கே,  கழலிணை மறவேன் தாயே மதுரை மீனாளே!

audiolink

பக்தி செய்யும் வரம் அருள்வாயே (Bilahari)

பிலஹரி

பக்தி செய்யும் வரம் அருள்வாயே,  பராசக்தி உன்னையே...

நின்றாலும் கிடந்தாலும் என்ன செய்தாலும், நின்னையே நினைந்து நைந்துருகி....

நாவாற உன் புகழ் பாட வேண்டும், கண்ணாற உன் பொலிவை வியந்திட வேண்டும், கரம் குவித்துன்னை தொழுதிட வேண்டும், (என்) சிரம் கொண்டுன் பதம் தாங்கிட வேண்டும்

உன் அன்பர் குழாமில் நிலைத்திட வேண்டும், அமுதவர்க் களித்துன்னை மகிழ்விக்க வேண்டும், உயிருள்ள வரை உன்னை மறவாமை வேண்டும், (என்) உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாமை வேண்டும்

audiolink

படைப்பவள் நம்மை (Vasantha)

வசந்தா

படைப்பவள் நம்மை அங்கயற்கண்ணி, (ஞானப்)
பாலூட்டி வளர்ப்பவள் த்ரிபுரசுந்தரி

பசிப் பிணி தீர்ப்பவள் அன்னபூரணி, நல் வழி காட்டுவாள்                    தர்மசம்வர்த்தினி

ஞானமளிப்பாள் காந்திமதி, தவநெறி கூட்டுவாள் காமாக்ஷி, பொலி-வேற்றிடுவாள் வடிவுடை நாயகி,  (மனை) மங்கலம் காப்பாள் கற்பக நாயகி

உடல் நலம் பேணுவாள் தையல்நாயகி, மனநலம் தருவாள் மனோண்மணி, சந்ததி காப்பாள் கரு-கருகா நாயகி, தன்னையயே தந்திடுவாள் விசாலாக்ஷி

audiolink

த்ரிபுர ஸுந்தரி தாயே! (Suddha Saveri)

சுத்த சாவேரி

த்ரிபுர ஸுந்தரி தாயே! தீனன் எனைக் காப்பதுன் கடமையே

அலைகடல் துரும்பாய் அலையும் என் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்தியே..,

சபலம், சஞ்சலம் போக்கியே, சன்மார்க்க வழியதை காட்டியே, உன்னருள் அமுதை ஊட்டியே,  எப்போதும் உன் துணை கூட்டியே,

audiolink

ஐயனைக் காண வாருங்கள் (Hamsanadhi)

Hamsanadhi

ஐயனைக் காண வாருங்கள், அழகு மெய்யனைக்.காண வாருங்ள்

உள் உருகி பாடுவோம் வாருங்கள், நல் உறவு சமைப்போம் வாருங்கள்

(மண்டல) நோன்பிருப்போம் வாருங்கள், (மெய்)
நைந்துருகுவோம் வாருங்கள், (ஹரிஹர) பேதம் களைவோம் வாருங்கள், (உயர்) போதம் பெருவோம், வாருங்கள்

இருமுடி தாங்குவோம் வாருங்கள், இணைந்திருப்போம் வாருங்கள், (சபரி) மலை ஏறிச் செல்வோம் வாருங்கள், ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்!

audiolink

Jebamae jeyam, Jebam pokkum bayam (Thillang)

Thilang

Jebamae jeyam, Jebam pokkum bayam - Irai...

Raama Raama Raama endru Raaman naamam solluvom - Raaman naamam solluvom,  Anumanaai uyaruvom- Anumanaai uyaruvom,  endrumae vaazhuvom

KrishNa KrishNa KrishNa endru KaNNan naamam solluvom,  KaNNan naamam solluvom, Raadhaiyaai maaruvom - Raadhaiyaai maaruvom , KaNNanuL iNaivom

Saayi Saayi Saayi endru Saayi naamam paaduvom, Saayi naamam paaduvom, thalai saayaathu vaazhuvom

audiolink

அங்கயற் கண்ணியை !


அங்கயற் கண்ணியை !
ஆடல் அறுபத்தி நாலு புரிந்தாளை!
இச்சை க்ரியை ஞான பரா சக்தியை!
ஈசன் உயிர் காத்த கரத்தாளை!
உண்மைப் பொருளை!
ஊமையைப் பாட வைத்தாளை!
எங்கும் நிறைந்தாளை!
ஏகனுக்கு தன்னில் பாதி ஈந்தாளை!
ஐங்கரனை படைத்தாளை!
ஒப்பிலா முதல்வியை!
ஓம்கார ஹ்ரீங்காரியை!
ஔதார்ய பரம்பொருளை! அடிபணிந்துய் வோமே.

audiolink

Mantha-haasa vathani (Bhairavi)

Bairavi

Mantha-haasa vathani, Maathu Sironmani,  Mangala kaariNi,  Meenaakshi

Suntharesuni RaaNi, Suvaasini, Sudhaa mathura baashiNi, Meenaakshi

Mathuraa puri vilaasini, Maragatha syaamala varNini, Meenaakshi, Bairavi, Baktha ManonmaNi, Siva Suba RoopNi, Meenaakshi

audiolink

என்ன தவம் செய்தனை (Kaapi)

காபி

என்ன தவம் செய்தனை, காஞ்சன மாலை, இக்-ககன மனைத்தையும் படைத்த கயற்கண்ணி, அம்மா என்றழைக்க..

அலைமகள், கலைமகள் பணி ஏற்கும் மலைமகளை,
மடிவைத்துக் கொஞ்சி முத்தாட...நீ

ஐந்தொழில் புரி ஆலவாய் அழகனையே  மருகனாய் கொண்டு மணிமுடி சூட்டிட..,நீ

ஞான கணேசனை, ஞான ஸ்கந்தனை, பேரனாய் பெற்ற பெருமாட்டியே., நீ

audio

சபலம் சஞ்சலம் மாய்த்திடுவான் (Mohanam)

மோஹனம்

சபலம் சஞ்சலம்  மாய்த்திடுவான், சங்கட ஹர சதுர்ததியின் நாதன்

ஜெகஜ் ஜெனனி அளித்த ஜெகத் பாலனன், ஜெகன் மோஹன கணநாதன்

பாலரும் விருத்தரும் வணங்கும் தேவன், தீவிர வைணவரும் பணியும்  சைவன், கடி மணம் தம்பிக்கு முடித்து வைத்தவன், அடி பணிந்தோரைக் காப்பதில் முதல்வன்

அய்யனின் கணங்களை வழி நடத்திடுவான், அன்னையின் தவத்திற்கு காவல் இருப்பான், மாமனின் காதையை எழுதித் தந்தவன், மெய் அன்பருக்கோ அவன் தன்னையே தருவான்

audiolink

மீனாக்ஷி அம்மையின் திருமணமே (Ananda Bhairavi)

ஆனந்த பைரவி

மீனாக்ஷி அம்மையின் திருமணமே, காணக் கிடையா வைபோஹமே

கருநீல வண்ணன் தாரை வார்க்க, பவளமேனியன் மரகத மேனியளை ஏற்கும்.

பவ்யமாய் பரந்தாமன் வேண்டிடவே,  கம்பீரமாய் கயிலையன் களித்திருக்க
நாணி அன்னை முகம் சிவக்க, நான்முகாதியர் சென்னிமேல் கரம் குவிக்க

தொழுத இளைஞருக்கு நல் மண வாழ்க்கை அமையும், கண்ட மற்றோர்க்கு மங்கலம் நிலைக்கும், பசி பிணியின்றி உலகம் சிறக்கும், ஆன்மீகத்தில்
அகிலம் திளைத்து உயரும்

audiolink

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து (Thodi)


தோடி

மீனாக்ஷி ரக்ஷி, மனமுவந்து, கயற் கண்ணால் எனை கடை கணித்து...

பிழை பொறுக்கும் தாயல்லவோ, நீ, என் குறை களையும் தந்தையும் அல்லவோ.,

என்னை (நல்) வழி நடத்தும் குருவல்லவோ, என்னுள் கொலுவிருக்கும் தெய்வம் அல்லவோ, இதற்கு மேலும் நான் சொல்லவோ, இனியாகிலும் மனதிரங்கி,

audiolink

கடவுளைக் கண்டேன் (சிவரஞ்சனி)

சிவரஞ்சனி

கடவுளைக் கண்டேன், என் கண் குளிர, மனம் நெகிழ.

காஞ்சி எனும் தலத்தே, காமகோடி பீடத்தே.. நான்..

அமர்நதால் அன்னை காமாக்ஷியாய், நின்றால்
விபூதி சங்கரனாய், கிடந்தால் ஸ்ரீ ரங்கநாதனாய்,  முகம் மலர்ந்தால் முழு ஞான ஸரஸ்வதியாய்

விழி மலர்ந்தார், என் வேதனை மாய்ந்தது, கரம். அசைத்தார், கனக தாரை ,பொழிந்தது, திருவாய் மலர்ந்தார், தெய்வத்தின்  குரல் ஒலித்தது, திருவடி பணிந்தேன், (மீண்டும் பிறவா) பெறு-வாழ்வடைந்தேன்

audiolink