சாவேரி
எத்தனை பிறவி எடுத்தாலும், அத்த்னையிலும் உம் பதம் மறவா வரம் அருள்வீரே.,
நாதரே, ஸ்வாமி நாதரே..
மஹா ஸ்வாமி நாதரே
அலைகடல் துரும்பாய் அலையும் மனத்தை ஒரு நிலைகக்குள் நிறுத்தி, நல் வழி காட்டி....... நான்..
காஞ்சி வாழ் ஏகரே,
காமகோடி சங்கரரே,
உம் நாம ஜெபம் செய்யும் நல் மனம் அருள்வீரே, காம மோஹக் குழியில் வீழ்ந்து அழியாது, உம் பதமலர்
பணிந்துய்யும் வரம் அருள்வீரே
ஆகம, வேத ஸாஸ்த்ர நிதியே, எம் அன்னையாம், தந்தையாம், குருவாம் தெய்வமே, ஏதும் அறியா பாமரன் எனக்கும் பரிந்ருள் புரியும் பரமேஸ்வரரே!
audio
No comments:
Post a Comment