Tuesday, April 7, 2015

கண் சிமிட்டும் நேரத்திலே (Sivaranjini-Neelamani)

 நீலமணி/சிவரஞ்சனி

கண் சிமிட்டும் நேரத்திலே கவலைகள் தீர்ப்பவரே, கண் சிமிட்டீ பாருமைய்யாயா எங்கள் நந்திகேஸ்வரரே

சிவ ராஜதானியின் காவலர் நீர் தானே, சிவ குடும்பத்தையே தாங்கிடும் இடபரே

அரி அயன் வேண்டிடவே ஆலம் உண்ட வாயனுமே, சனிவார நாளிலே த்ரயோதசி திதியினிலே, உன் கொம்பின் இடைவெளியில் நர்த்தனம் புரிந்தானே, என்ன தவம் செய்தீரோ, ப்ரதோஷ நாயகரே!

ஐந்தெழுத்து மந்திரத்தை அனவரதம் ஜெபிப்பீரே, அருகம் புல் ஏற்று அருள் மழை.பொழிவீரே, நந்தனார் வேண்டிடவே நயந்து விலகினீரே, பந்தபாசம் அறுக்கும் ஆதிகுருநாரே

audio
audio another recording
another recording



No comments:

Post a Comment