பிலஹரி
பக்தி செய்யும் வரம் அருள்வாயே, பராசக்தி உன்னையே...
நின்றாலும் கிடந்தாலும் என்ன செய்தாலும், நின்னையே நினைந்து நைந்துருகி....
நாவாற உன் புகழ் பாட வேண்டும், கண்ணாற உன் பொலிவை வியந்திட வேண்டும், கரம் குவித்துன்னை தொழுதிட வேண்டும், (என்) சிரம் கொண்டுன் பதம் தாங்கிட வேண்டும்
உன் அன்பர் குழாமில் நிலைத்திட வேண்டும், அமுதவர்க் களித்துன்னை மகிழ்விக்க வேண்டும், உயிருள்ள வரை உன்னை மறவாமை வேண்டும், (என்) உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாமை வேண்டும்
audiolink
No comments:
Post a Comment