ஆனந்த பைரவி
மீனாக்ஷி அம்மையின் திருமணமே, காணக் கிடையா வைபோஹமே
கருநீல வண்ணன் தாரை வார்க்க, பவளமேனியன் மரகத மேனியளை ஏற்கும்.
பவ்யமாய் பரந்தாமன் வேண்டிடவே, கம்பீரமாய் கயிலையன் களித்திருக்க
நாணி அன்னை முகம் சிவக்க, நான்முகாதியர் சென்னிமேல் கரம் குவிக்க
தொழுத இளைஞருக்கு நல் மண வாழ்க்கை அமையும், கண்ட மற்றோர்க்கு மங்கலம் நிலைக்கும், பசி பிணியின்றி உலகம் சிறக்கும், ஆன்மீகத்தில்
அகிலம் திளைத்து உயரும்
audiolink
No comments:
Post a Comment