உ
நடராஜர் பத்து - பாடல் 2
(திரு)விருத்தம் - அப்பர் பெருமான்
படைக்கல மாக வுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப் பும் உனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறணிந்து உன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.
நடராஜர் பத்து - பாடல் 2
ப்ருந்தாவன சாரங்கா
மானாட மழுவாட மதியாட புனலாட - மங்கை சிவகாமி ஆட
மாலாட நூலாட மறையாட திரையாட - மறை தந்த பிரமனாட
கோனாட வானுலக கூட்டமெல்லாம் ஆட - குஞ்சர முகத்தானாட
குண்டலம் இரண்டாட தண்டை புலியுடை ஆட - குழந்தை முருகேசனாட
ஞான சம்பந்தரோடு இந்திரரதி பதினெட்டு - முனி அஷ்ட பாலகரும் ஆட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட - நாட்டிய பெண்களாட
வினையோட உனை பாட எனை நாடி இதுவேளை - விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே
தில்லை வாழ் நடராசனே.... தில்லை வாழ் நடராசனே
சிவம் சுபம்

No comments:
Post a Comment