Sunday, May 13, 2018

மதுர காளி மதுர காளி

OM

மதுர காளி  மதுர காளி  
மதுரம் பொழியும் மதுரைக் காளி  

தினமும் உன்னைத் தொழுவேன் தாயே, திங்கள் வெள்ளியில் காட்சி தரும் மாதே

திரிநயனி, திரி லோக ஜனனி, திரிபுர ஸுந்தரி,
திரிசூலினி, அதர்மத்தை அழிக்கும் அக்கினிப் பிழம்பே, அன்பரை அணைக்கும் குளிர் நிலவே

பெருநகர் மதுரை விடுத்து நீயே சிறுவாச்சூரில் வந்தமர்நதாயே, பெரியவர் சந்திர சேகரின் உள்ளொளிர் காமாக்ஷி  அன்னையே

தலைமகனை அருகில் வைத்த தாயே, அலைமகள் கலைமகள் பணி ஏற்கும் மாயே, சிறந்ததையே அருளும்
சிம்ஹ வாஹினியே, சிரம் தாழ்த்திப் பணிந்தேன், (உன்) பதம் தருவாயே.

சிவம் சுபம்.
4/29/18, 5:24 AM - Appa: PTT-20180429-WA0000.opus (file attached)

No comments:

Post a Comment