உ பூபாளம். அயன் தேடும் முடியனே அரி காணா பாதனே ஆலத்தை விழுங்கிய கண்டனே குஹனைத் தாங்கும் தோளனே அவன் அண்ணனை அணைத்த கரத்தனே, தன்னையே தந்திடும் த்யாகனே கங்கையைத் தாங்கும் சிரத்தனே, மங்கையைத் தாங்கும் மேனியனே காமனை எரித்த (முக்) கண்ணனே, காலனை உதைத்த காலனே, பாதாதி கேசம் தொழுதிடுவேன், என் பாவம் களைந்து கரை யேறுவேன், (உன்) பர்தோஷ வலத்தில் நெகிழ்ந்திடுவேன், (என்) பிறவிப் பிணியைக் களைந்திடுவேன
No comments:
Post a Comment