Sunday, May 13, 2018

கடலமுதே செங்கரும்பே (Bhoopalam)

 உ     பூபாளம்.

கடலமுதே செங்கரும்பே,
அருட் கற்பகக் கனியே, 
உடல் உயிரே, உயிர்க்குள் உணர்வே, உணர்வுள் ஒளியே, அடல் விடையார் ஒற்றியார் இடங் கொண்ட அருமருந்தே, மடலவிழ் ஞான மலரே,
வடிவுடை மாணிக்கமே
- வள்ளல் பெருமான்.

அயன் தேடும் முடியனே
அரி காணா பாதனே - உன் அடிமலர் சரணே

ஆலத்தை விழுங்கிய கண்டனே 
குஹனைத் தாங்கும்  தோளனே
அவன் அண்ணனை அணைத்த கரத்தனே,
தன்னையே தந்திடும் த்யாகனே - உன் அடிமலர் சரணே.
 
கங்கையைத் தாங்கும் சிரத்தனே,
மங்கையைத் தாங்கும் மேனியனே  
காமனை எரித்த (முக்) கண்ணனே,
காலனை உதைத்த காலனே - உன் அடிமலர் சரணே.

பாதாதி கேசம் தொழுதிடுவேன், என் பாவம் களைந்து  கரை யேறிடுவேன், (உன்)
பர்தோஷ வலத்தில் நெகிழ்ந்திடுவேன், (என்) பிறவிப் பிணியைக் களைந்திடுவேன்  
  
சிவம் சுபம்
5/13/18, 2:54 AM - Appa: PTT-20180513-WA0000.opus (file attached)

அயன் தேடும் முடியனே (Bhoopalam)

உ     பூபாளம்.

அயன் தேடும் முடியனே
அரி காணா பாதனே

ஆலத்தை விழுங்கிய கண்டனே 
குஹனைத் தாங்கும்  தோளனே
அவன் அண்ணனை அணைத்த கரத்தனே,
தன்னையே தந்திடும் த்யாகனே
 
கங்கையைத் தாங்கும் சிரத்தனே,
மங்கையைத் தாங்கும் மேனியனே  
காமனை எரித்த (முக்) கண்ணனே,
காலனை உதைத்த காலனே, 

பாதாதி கேசம் தொழுதிடுவேன், என் பாவம் களைந்து  கரை யேறுவேன், (உன்)
பர்தோஷ வலத்தில் நெகிழ்ந்திடுவேன், (என்) பிறவிப் பிணியைக் களைந்திடுவேன

Linga NaamaavaLi Bhajan

OM  

Linga NaamaavaLi Bhajan

Anthar Lingaa Aathma Lingaa 
Aadhi Linga  Aananda Lingaa 
Raama Lingaa Ramya Lingaa 
Easa Lingaa Easaanya Lingaa (1)

Ugra Lingaa Oordhva Lingaa
Saantha Lingaa Sakthi Lingaa 
Yaeka Lingaa Anaeka Lingaa 
Pancha Lingaa Paavana Lingaa (2)

Sidhdha Lingaa Chinmaya Lingaa
Naaga Lingaa Nardhana Lingaa
Swara Lingaa Laya Lingaa 
Jwara Lingaa Vaidya Lingaa (3)

Sankara Lingaa  SthaaNu Lingaa
Jyothi Lingaa Spatika Lingaa
Swayambu Lingaa Sookshma Lingaa
Sathya Lingaa Nithya Lingaa (4)

BaaNa Lingaa PraaNa Lingaa
Loka Lingaa Uloka Lingaa
Dharma Lingaa Karma Lingaa 
Bhaktha Lingaa Gnana Lingaa (5)

Veda Lingaa Aagama Lingaa
Yoga Lingaa Dyaana Lingaa
Theertha Lingaa Vibhoothi Lingaa 
Sandana Lingaa Soundarya Lingaa (6)

Ashta Lingaa Sahasra Lingaa
Koti Lingaa Kubera Lingaa 
Bootha Lingaa Buvana Lingaa 
Kailaasa Lingaa KaaruNya Lingaa (7)

Maathru Lingaa Pithru Lingaa
Guru Lingaa Deva Lingaa
Sakhaa Lingaa Sarva Lingaa
Prathosha Lingaa Prathyaksha Lingaa 

Siva Lingaa Suba Lingaa    (8)

Sivam Subam
5/12/18, 9:42 AM - Appa: AUD-20180512-WA0015.m4a (file attached)

அம்மையப்பா என்று விழித்தெழுவோம்... (For Children Home)

5/11/18, 10:07 AM - Appa: உ 


For a Children Home


அம்மையப்பா என்று விழித்தெழுவோம், ஆனைமுகா வென்று பணியைத் துவங்குவோம்
ஐய்யப்பா என்று நெறியில் நிலைப்போம்,  பைரவா என்று பயத்தை தள்ளுவோம்.

சிவானுஜா என்று கல்வியில் திளைப்போம், ஆலடியா என்று  ஞானம் பெறுவோம், திரு-மாலைத் தொழுது செல்வம் ஈட்டுவோம்,  மாருதியைப் பணிந்து மரணத்தை வெல்வோம்.

சிவம் சுபம்
5/11/18, 10:07 AM - Appa: Siva-anuja is Maathaa Saraswathi.
Aaladiyaa - Sri Dkashinamurthi.
5/11/18, 10:07 AM - Appa: AUD-20180511-WA0004.opus (file attached)

Kaamaakshi Karunaa- kataakshi kadayan ennaiyum kaaththu rakshi

OM

Kaamaakshi Karunaa- kataakshi kadayan ennaiyum kaaththu rakshi

Pambaa Dheeran kaaval seyya Kambhaa dheeraththil kadum thavam puri Annai....

Un paarvai padum dhikkellaam Panjaak-karanai vaiththae parinth-aruL pozhiyum Paraa    Sakthiyae, Yaekaambareswaran udan uRai Devi, yaekaagra chiththathodu thozhum anbar uLLam urai Aadhiyae....

Sivam Subam

ஸ்ரீரங்க நாமாவளி (Sri Ranga Naamavali)

5/4/18, 3:42 PM - Appa: OM

ஸ்ரீரங்க நாமாவளி

இராமன் குலதனம் ரங்கன்
சங்கரர் அர்ச்சித்த ரங்கன்
மத்வர் பூஜித்த ரங்கன் 
உடையவர் உடனுறை ரங்கன் (1)

ஆண்டாளை ஆண்ட ரங்கன்
ஆழ்வார்கள் பரவும் ரங்கன்
அன்பர்கள் உள்ளுறை ரங்கன்
வேதாந்த தேசிக ரங்கன் (2)

புரந்தரவிடலன் ரங்கன்
த்யாகைய்யர் இசைத்த ரங்கன்
குருகுஹன்* மாமன் ரங்கன்
வண்ணச்சரப ரங்கன்**
(3)

ஸ்வாதித் திருநாளன் ரங்கன்
ஸ்ரவண நாயகன் ரங்கன்
ஸுலப நாமன் ரங்கன்
ஸுக்கிரனும் வணங்கும் ரங்கன்(4)

காவேரி வருடும் ரங்கன்
கம்பருக்கருளிய ரங்கன்
வீடணன் கொணர்ந்த ரங்கன் 
விண் மாரி பொழியும் ரங்கன்(5)

அரவணை துயிலும் ரங்கன்
அனந்த சயன ரங்கன்
அன்னையர் மருவும் ரங்கன் 
அகிலாண்டேஸ்வரி சோதரன் ரங்கன்(6)

தமிழின் சுவை அரங்கன்
ஸமுஸ்க்ருத ஸார ஸ்ரீ ரங்கன்
பாதுகா ஸஹஸ்ர ரங்கன்
பரமபத நாதன் ரங்கன்(7)

பூலோக  வைகுண்ட ரங்கன்
நம் கலி தீர்க்க வந்த ரங்கன்
பிரமனும் வணங்கும்  ரங்கன்
ப்ருந்தாவன சா- ரங்கன்(8)

சிவம் சுபம்

*தீக்ஷிதரின் முத்ரை குருகுஹன். (ரெங்க புர விஹார)

**வண்ணச்சரப தண்டபாணி ஸ்வாமிகள் அரங்கனுக்கு "ஸ்ரீ ரங்கத்து ஆயிரம்"  ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கு "திருமகள் அந்தாதி"யும் சூட்டி யிருக்கிறார்.

Sri Ranganatha Astakam

ஸ்ரீ ரங்கநாதாஷ்டகம்

(ஸ்ரீ அதி சங்கர பகவத்பாதாள் அருளிச் செய்தது)

ஆநந்தரூபே நிஜபோதரூபே பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
ஸஸாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே

காவேரிதீரே கருணாவிலோலே மந்தாரமூலே த்ருதசாருகேலே
தைத்யாந்தகாலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே

லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப வாஸே க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே

ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே

ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம் யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம்

ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்
5/4/18, 12:33 AM - Appa: PTT-20180504-WA0000.opus (file attached)
5/4/18, 12:33 AM - Appa: PTT-20180504-WA0001.opus (file attached)

கொடியிடையாள், கோலவிழியாள் (Gambhira Naatai)

உ


கம்பீர நாட்டை

கொடியிடையாள், கோலவிழியாள் அருள்பொழிவாள் (மெய்) அன்பருக்கே.

முண்டகக்கண்ணி, முக்கண்ணி,
மருந்தீஸ்வரி அவள் வடிவுடையாள்.

மல்லீஸ்வரி அவள் காரண காரியம் அறிந்தருள்வாள்,
வெள்ளீஸ்வரி அவள் காமாட்சி, சரபேஸ்வரி அவள் சூலினி மாலினி, காபாலீஸ்வரி கற்பக நாயகி பொற்பதம் பணிந்து நற்கதி பெறுவோம். 

சிவம் சுபம் 
5/3/18, 7:53 PM - Appa: PTT-20180503-WA0015.opus (file attached)

சதுர்ததியின் நாயகன் வருகின்றார்

5/2/18, 11:43 PM - Appa: உ  

சதுர்ததியின் நாயகன் வருகின்றார், நம் சங்கடம் களைய வருகின்றார்

கணபதி தாளம் இசைத்திடுவோம்,  (நாம்) கண நாதன் நடனம் கண்டின்புறுவோம்

கணபதி நடனம் கண்டவர்க்கு  சுரபதி ஏவல் செய்திடுவார்,  தேவசேனாபதி காவல் இருப்பார், வாக்பதி விதி மாற்றி அருளிடுவார், ஸ்ரீபதி போஹம் எல்லாம் பொழிந்திடுவார்.

ஸ்ரீ சிவ-சக்தி மனம் நெகிழ்வார், சிவ குடும்பத்தினுள் நம்மை இணைத்திடுவார், இனி என்றும் எங்கணும் மங்கலமே,  மரணம் என்பதே நமக்கில்லையே.

ஜெய ஜெய கணபதி
ஹர ஹர கணபதி,
ஜெய சிவ கணபதி
ஜெய சுப கணபதி.

சிவம் சுபம்.
5/2/18, 11:43 PM - Appa: PTT-20180502-WA0017.opus (file attached)
5/3/18, 6:40 AM - Appa: PTT-20180503-WA0000.opus (file attached)

அன்னை ஊரு அழகனூரு

உ
அன்னை ஊரு அழகனூரு
ஆலவாய் அண்ணலூரு 
இறையூரு இசையூரு
ஈசனூரு ஈகையூரு
உணவூரு
எழிலூரு
கோவிலூரு
கோபுர ஊரு
கோவிந்தனூரு
குழந்தை ஊரு
தேரூரு
திருமணக் கோல ஊரு***
திருவிழா ஊரு
திருவிளை யாடலூரு 
திருமுறை ஊரு
திருமுகப்பாசுர ஊரு**
திருக்குறள் அரங்கேறிய ஊரு.
சங்கத்  தமிழூரு
கூடலூரு
பாடலூரு
பல்லாண்டூரு*
ரமணர் ஊரு
மல்லி யூரு
மருக்கொழுந்தூரு
முருகனூரு
முத்தமிழூரு
திருநீற்று ஊரு
திரு நிறை மதுரை யூரு.
நம்ம ஊரு
நல்ல ஊரு.

சிவம் சுபம்.

* எங்கள் கூடல் அழகர் தான் பெரியாழ்வாரின் பல்லாண்டு பெற்ற பெருமான்.
** பன்னிரு திருமுறையில் ஒரு பாசுரம் சொக்கநாதப் பெருமான் வரைந்தது.
*** அன்னை மீனாக்ஷி, அழகன் முருகனின் திருமண ஊரு.

மாதவன் எடுத்தான் பல அவதாரம் (Neelamani)

5/2/18, 2:19 AM - Appa: OM  (Neelamani)

மாதவன் எடுத்தான் பல அவதாரம், மாதேவன் கொண்டான் ஒரே அவதாரம். (மஹா பெரியவா அவதாரம்).

ஆலடி காலடி காமகோடி இறைவன், காலத்தை வென்ற ஸர்வஞ்ஞன்.

இருவர் காணா பாதமதை இப்புவியில் பதித்து நடந்தாரே, இமயம் முதல் குமரி வரை திருவருள் மழை பொழிந்தாரே.

ரமணரைக் கண்டு வியந்தாரே, சேஷாத்ரி ஆவேனா என்றாரே, தவம் செய் தக்ஷிணா மூர்த்தி அவரே நம் அவம் களையும் கருணா மூர்த்தி

பசிப் பிணி நீங்க பிடி அரிசி திட்டம், ஞானப் பசி தூண்ட வேதாகம பாடம், அநாதைக்கும் முக்தி அளிக்கும் கருணை,  அடி பணிந்தோர்க்கு அவரே அருணை.

சைவ வைணவ பாலம்,
ஸர்வ ஸம்மத பரமாச்சார்யம், ஸகலரும் உய்ய ஆறாம் வேதம், ஸர்வ மங்கள சந்திர சேகரம்.  

சிவம் சுபம்.
5/2/18, 6:16 AM - Appa: PTT-20180502-WA0003.opus (file attached)

ஸ்ரீ பரமாச்சார்ய கீதம்.

OM

ஸ்ரீ பரமாச்சார்ய கீதம்.

ஈச்சங்குடி அன்னை அளித்த இறைவா, ஈடிலா காம கோடீசா,
விழுப்புரம் அளித்த மெய்ப்பொருளே எங்கள் வினை களையும் அரும் பொருளே,
மலைமகள் வடிவே கலைமகள் ஞானமே,
திருமகள் அருளே பொழி வா.

நடமாடும் தெய்வமே வா வா, அத் தெய்வத்தின் குரலே வா வா,  அக் குரல் வழி எம்மை ஆள் வா(ய்).

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சந்திர சேகர சிவமே சரணம்...  
சரணம் சரணம் சரணம்,
பதகமலமே சரணம்,
இ...றை...வா.

சிவம் சுபம்
5/1/18, 1:32 PM - Appa: PTT-20180501-WA0025.opus (file attached)

Chandrasekari Chandrasekari Sankari Saaradhae Paahimaam (Amruthavarshini)

OM

AmruthavarshiNi

Chandrasekari  Chandrasekari  Sankari Saaradhae Paahimaam

Kamakoteeswari KaaruNya-amrutha varshini, Kaamaskshi Rakshsmaam 

Adhishtaana Maheswari Aacharya roopiNi, Paramaesi, Para-brahma swaroopiNi, Jaya-Vijayendra poojithae, Jaganmaathae, Jaya Jaya Sankara gosha priyae paalayamaam. 

Sivam Subam

எம்மிடை வாழும் தெய்வம் சந்த்ரசேகரர். (Aahir Bhairav)

 உ 
ஆஹிர்பைரவ்

எம்மிடை வாழும் தெய்வம் சந்த்ரசேகரர்.
ஏழுலகும் போற்றும் குரு
சந்த்ரசேகரர் 

அனுஷத்திற் கனுக்ரஹித்த சந்த்ர சேகரர்
ஆறாம் வேதம் உரைத்த சந்த்ரசேகரர் 

காம கோடீஸ்வரர் சந்த்ர சேகரர்
ஒப்பிலா மறைக்காடர் சந்தர் சேகரர்  
காமாக்ஷியின் கருணை சந்த்ர சேகரர்  
ஏகானேகர் சந்த்ர சேகரர்

அத்வைத சாகரம் சந்த்ர சேகரர்
ஸநாதன சாதகர் சந்த்ர சேகரர் 
ஷண்மத போஷகர் சந்த்ர சேகரர் 
எம்மதத்தார்க்கும் இறைவன் சந்த்ர சேகரர்

தமிழ் மறை ஞானி சந்த்ர சேகரர்
த்ராவிட பூஷணர் சந்த்ர சேகரர்.
தென்னாடு கண்ட சந்த்ர சேகரர் 
எந்நாட்டிற்கும் இறைவர் சந்த்ர சேகரர்.  

சிவம் சுபம்
5/1/18, 10:31 AM - Appa: PTT-20180501-WA0024.opus (file attached)

கள்ளப்பயல் எனையும் செல்லப் பிள்ளை

உ

கள்ளப்பயல் எனையும் செல்லப் பிள்ளை என்றே மடி வைத்து கொஞ்சினளே, மதுரம் பொழிந்தனளே

திரிபுரசுந்தரி எனும் பெயர் தாங்கி வந்தனளே, திருவாய் மலர்ந் தவளே திருவருள் பொழிந்தனளே

ஆடியிலும் தையிலுமே
மடி ஏந்தி வருவாளே, மங்கலப் பொருளை ஏற்று என் குலம் காப்பாளே, முழு நிலவு நந்நாளில் அபிஷேகம் கொள்வாளே, அருள் மாரி பொழிவாளே

சந்திரசேகரரும் சங்கர குரு தேவரும் போற்றிடும் காளி யவள், தங்கத் தேரில் வருவாள், சிம்ஹ வாஹினி அவள்

சிவம் சுபம்

கொடியிடையாளே, கோலவிழியாளே,

உ 

கொடியிடையாளே,  கோலவிழியாளே, வா என எனை அழைத்து  வரமழை பொழிந்தாளே...  

பாவி என்றென்னை தள்ளாத உமையவளே, தன் பாதம் தனைக் காட்டி, என் பவமதைக் களைந்தாளே 

மயிலை வாழ்பவளே, மரகத மேனியளே,
இச்சை க்ரியை ஞான சக்தியாம்  தாயவளே,
செவ்வாய் மலர்ந்தாளே,
செந்தமிழ் கவிதை ஒன்றை பாடெனப் பணித்தாளே, பரிந்தருள் புரிந்தாளே... 

சிவம் சுபம்.

(கோயில் வளாகத்தில் உள்ள பாடலொன்றை எனக்குத் தெரிந்த வரையில் ராகமாலிகை விருத்தமாய் பாடும் வாய்ப்பளித்தாள், அன்னை)
5/1/18, 2:57 AM - Appa: PTT-20180501-WA0016.opus (file attached)

மதுர காளி மதுர காளி

OM

மதுர காளி  மதுர காளி  
மதுரம் பொழியும் மதுரைக் காளி  

தினமும் உன்னைத் தொழுவேன் தாயே, திங்கள் வெள்ளியில் காட்சி தரும் மாதே

திரிநயனி, திரி லோக ஜனனி, திரிபுர ஸுந்தரி,
திரிசூலினி, அதர்மத்தை அழிக்கும் அக்கினிப் பிழம்பே, அன்பரை அணைக்கும் குளிர் நிலவே

பெருநகர் மதுரை விடுத்து நீயே சிறுவாச்சூரில் வந்தமர்நதாயே, பெரியவர் சந்திர சேகரின் உள்ளொளிர் காமாக்ஷி  அன்னையே

தலைமகனை அருகில் வைத்த தாயே, அலைமகள் கலைமகள் பணி ஏற்கும் மாயே, சிறந்ததையே அருளும்
சிம்ஹ வாஹினியே, சிரம் தாழ்த்திப் பணிந்தேன், (உன்) பதம் தருவாயே.

சிவம் சுபம்.
4/29/18, 5:24 AM - Appa: PTT-20180429-WA0000.opus (file attached)

Sathya NaaraayaNam Shaantha NaaraayaNam (SubapanthuvaraaLi)

உ

SubapanthuvaraaLi

Sathya NaaraayaNam
Shaantha NaaraayaNam 
Vadu NaaraayaNam
Vaishya NaaraayaNam

Vradha NaaraayaNam 
Varatha NaaraayaNam 
Vaikunta NaaraayaNam
Vathsalya NaaraayaNam 

Veda NaaraayaNam
Vyaasa NaaraayaNam 
Theertha NaaraayaNam 
Dravya NaaraayaNam 

Naadha NaarayaNam
Geetha NaaraayaNam 
Kathaa NaaraayaNam 
Kaavya NaaraayaNam 

Shanka NaaraayaNam 
Chakra NaaraayaNam 
Sriman NaaraayaNam
Sri Lakshmi NaaraayaNam

Sradhdhaa NaaraayaNam 
Bhakthi  (Bhaktha) NaaraayaNam 
Badri NaaraayaNam 
Pathitha Paavanam 

Pathitha Paavanam 
Sathya NaaraayaNam 
Sathya NaaraayaNam
Pathitha Paavanam 

Sivam Subam

எம் பெருமான், நம் பெருமான், நம் பெருமான், நரசிங்கப் பெருமான்

4/28/18, 9:12 AM - Appa: OM

எம் பெருமான், நம் பெருமான், நம் பெருமான், நரசிங்கப் பெருமான்.

கல் தூணுக்கும் பெருமை சேர்த்தான், கல் நெஞ்சனையும் தன் மடி வைத்த கனவான்.

அழைக்கும் முன் வந்த அனந்தன், பிழை செய்தோன் சந்ததியை காத்த தயாபரன், வேடுவப் பெண்ணை மணந்த சன்மார்க்கன், நாடி வந்தோரைத் தேடி வந்து அருள்வான்.

அஹோபிலத்தான் அவன் அன்பருள்ளத்தான்,
கடிகாசலன் அவன் கடும் தவத்தான்,
பரிக்கலான் அவன் பரம தயாளன், ஊர்க்காடன் அவன் கற்பக வ்ருக்ஷன்.

சிவம் சுபம்.
4/28/18, 9:12 AM - Appa: PTT-20180428-WA0004.opus (file attached)


நினைக்கும் நாளெல்லாம் (அய்யன்)

உ

நினைக்கும் நாளெல்லாம் (அய்யன்) பிறக்கும் நாளே.... அவனை நினையா நாளெல்லாம் நாம் பிறவா நாளே

காணும் அனைத்தையும் படைத்தவனை, ஒரு கல் தூணுள் மட்டும் தேடுதல் சரியோ ?

பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்தவனை, தோன்றும் அனைத்துள்ளும் வ்யாபித்திருப்போனை, 
தூயவர் மனத்தினுள் சுடர் விடும் பேரோளியை, அன்னையை மடிவைத்த அருள்மிகு நரஹரியை.....     

சதுர்தசியில் அவனை செபித்துக் கொண்டாடுவோம், ஸ்வாதியில் அவனை வலம் வந்து பலம் பெறுவோம், ப்ரதோஷ வேளையில் திருமஞ்சனம் செய்தே பிறவிக்கடலை கடந்தேறுவோம்.

சிவம் சுபம்.
4/27/18, 6:47 PM - Appa: PTT-20180427-WA0036.opus (file attached)
4/27/18, 6:47 PM - Appa: PTT-20180427-WA0037.opus (file attached)

கயற்கண்ணால் கவர்ந்திழுத்தாள்

உ

கயற்கண்ணால் கவர்ந்திழுத்தாள்
கயிலை நாதனை வரவழைத்தாள்

மதுரையில் அவனை மணம் முடித்தாள்
மகுடமும் சூட்டி (உலகை) ஆள வைத்தாள்.

ஆடல் அறுபத்தி நான்கு புரிய வைத்தாள்  
கூடலை சிவராஜதானி யாக்கி, 
உக்கிர வழுதியை ஈன்றெடுத்தாள்.
அவனை அரசு ஆளவைத்து
தான் மறைந்தாள். தண்ணருள் பொழிந்தாள்

சிவம் சுபம்
4/27/18, 6:13 PM - Appa: PTT-20180427-WA0031.opus (file attached)

KalyaaNa Sundaran Valam varugiraan & காந்திமதி காந்திமதி

PoorvikalyaaNi

KalyaaNa Sundaran Valam varugiraan - KayaR kaNNi karam pidiththu Valam varugiraan

Nandthi Devan mael Valam varugiraan  - NallaruL pozhinthae Valam varugiraan

Kaanthimathi Naathaan Valam varugiraan, Kumbhaa-bishekam yaetru Valam varugiraan,
ThaaLa vaadhyam muzhanga Valam varugiraan.
ThaNNaruL pozhinthu Valam varugiraan..

Siva Siva Siva endru jebithuduvom, Bava bayamindri vaazhnthiduvom, 
Sivai patham siram thaangi kaLiththiduvom, 
Subamellaam petru niRaivuRuvom.

Sivam Subam

4/27/18, 12:05 AM - Appa: AUD-20180427-WA0007.opus (file attached)
4/27/18, 3:29 AM - Appa: 

உ 

காந்திமதி  காந்திமதி 
அருள்வாய் எமக்கே மன நிம்மதி 

அருள் மழை பொழியும் வான்மதி 
ஆனந்தம் அருளும் நிறைமதி 

அஞ்ஞான இருளகற்றும் சுடர்மதி 
அகம் குளிரவைக்கும் எழில்மதி 
அறம் தழைக்கச் செய்யும் நீதிமதி 
அடைந்தோம் உந்தன் சரணாகதி 

நெல்லையில் ஒளிரும் விண்மதி 
தொல்லைகள் நீக்கும் குணமதி 
எல்லையில்லாக் கருணை முழுமதி 
எம் வாழ்வில் இணைந்த சாரமதி 

சிவம் சுபம் 

இன்று கும்பாபிஷேகம் கொண்ட அன்னைக்கு சமர்ப்பணம். (Of course She heard this several times at Her Nellai abode). Sivam Subam
4/27/18, 3:29 AM - Appa: PTT-20180427-WA0008.opus (file attached)

தொல்லை யெலாம் தீர்க்கும் நெல்லையப்பன் (Saraswathi)

உ  ஸரஸ்வதி

தொல்லை யெலாம் தீர்க்கும் நெல்லையப்பன் - எல்லையிலா கருணை அம்மையப்பன்

பரணிக் கரை வாழும் பரம தயாளன், இத்தரணி ஆளும் அய்யன், சாலிவாடீசன்

ஞானகாந்தி மதிநாதன்
தீன தயாபரன்,
ஆறுமுகத் தேவனை ஈன்ற பஞ்சாக்ஷரன்,
முக்குறுணி யானும் தொழும்
முக்கண் முதல்வன், 
தாமிர சபை யாடும் காமித பல நாதன்.

சிவம் சுபம்

வா வா வா வா வா நரசிம்மா (Kaapi)

4/26/18, 12:03 PM - Appa: OM

காபி

வா வா வா வா வா நரசிம்மா - வந்தெமைக் கா வா நரசிம்மா

அன்று ஒரே ஒரு இரணியன், இன்று எண்ணற்ற எத்தனையோ இரணியர்.

ஊழல் செய்து உத்தமரை அழித்து பாமரரை வதைக்கும் பாதகர்களை நீ பாரினில் விட்டு வைத்தல் முறையோ ?
பெண்களை சிறுமியரைக் கொடுமைப் படுத்தும் கயவரை நீ கிள்ளிக் களைய வேண்டாமோ

கூப்பிடும் முன்னே வருபவன் அன்றோ ? 
நல்லோரைக் காக்கும்
நாதன் அன்றோ ?
பறந்தோடி வா எங்கள் கருட வாஹனனே, பாரினில் உமையன்றி யாரெம் துணை அய்யா?

சிவம் சுபம்