பூர்வி கல்யாணி
ராமஸ்வாமி அளித்த முத்துஸ்வாமி - (பாவ)
ராக தாள லய "குருகுஹ" ஸ்வாமி
திருத்தணிகையனின் அருள் பெற்ற வித்து
திருவாரூர் மும்மணியுள் ஒரு முத்து
சகல வேத சாஸ்த்ர மணி
சர்வ மந்த்ர தந்த்ர சிரோன்மணி
ஸ்ரீ வித்யா உபாசனா மணி
சிறந்த வைணீக கமக சிகாமணி
நாமத்தை நாதத்துள் அமுதெனக் கலந்து
வேத மந்த்ர சாரத்தில் தோய்த்து
மேள சக்ர ராகத்தில் மெருகூட்டி
காலத்தை வென்ற சங்கீத மணி
நவா வர்ணத்தில் கமலை நெகிழ்வாள்
நவகோள் மலர்கள் நன்மை பயக்கும்
"மீனாக்ஷி மேமுதம் தேஹி" என்று இசைத்தால்
"இதோ தந்தேன்" என்று அன்னை அருள்வாள்
(நீவீர்) பாடாத தெய்வம் இல்லை அய்யா
பொருளில் நெகிழாத உயிரில்லை அய்யா
(பாட்டின்) பொருளில் நெகிழாத உயிரில்லை அய்யா
தீப ஓளி நாளில் ஜோதியில் கலந்து
எட்டயாபுரத் தொளிர் நந்தா விளக்கே
சிவம் சுபம்
No comments:
Post a Comment