Monday, October 24, 2016

Dhinamum Deiva Tamizh Malar (தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர்)

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 14

14.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

மாலேந்திய குழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோலேந்திய வரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேலேந்திய வானாடர்கள் மெலியா விதம் ஒரு செவ்
வேலேந்திய முருகா என வெண்ணீர் அணிந்திடிலே

14.2 அருணகிரிப் பெருமானின் கந்தர் அனுபூதி

உதியா  மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா-வதி
காவல சூர பயங்கரனே

14.3 அருணகிரிநாதப் பெருமானின் கந்தர் அலங்காரம்

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால்  படியில் விதனப் படார், வெற்றிவேல் பெருமான்
அடியார்க்கு நல்ல பெருமாள்,அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள், திருநாமம் புகல்பவரே

14.4 ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகளின் திருப்போரூர்
சந்நிதி முறை
.
குமரா நம என்று கூறினார் ஓர் கால்
அமராவதி ஆள்வர் அன்றி - யமராசன்
கைபுகுதார், போரூரன் கால் புகுவார்
தாய் உதரப் பை புகுதார், சேரார் பயம்.

சிவம் சுபம்  

audio-1
audio-2

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 13

13.1 திருநீற்றுப் பெருமை  - திருவருட்பா
வள்ளல் பெருமான்.

திவசங்கள் தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும்
பவசங்கடம் அறும் - இவ்விக பரமும் புகழ் பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ ஷண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே

13.2  வேலும் மயிலும் துணை - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் பொழுதும் வேலும் மயிலும் என்பேன்
செந்திலே ! வேலவனே ! செந்தில் வேலவனே !

13.3.திருப்போரூர் சந்நிதி முறை - ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்

கன்று அழைக்கும் முன்னே கருதி வரும் ஆ-போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர் தோன்றி -
ஒன்றினுக்கும் அஞ்சாதே, வா என்று அழைப்பாய்
தென் போரூரா ! எஞ்சாத பேர் அருளால் இன்று

13.4 திருச்செந்தூர் திருப்புகழ் - ஸ்ரீ அருணகிரிநாதப் பெருமான்

இயலிசையில்  உசித வஞ்சிக்  ......கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித்            துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது உள்  அறியும் அன்பைத் ...... தருவாயே

மயில் தகர்கல் இடையர் அந்தத் ...... தினை காவல்
     வனசகுற மகளை வந்தித்து  ......  அணைவோனே

கயிலைமலை யனைய செந்தில்  ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சிவம் சுபம்



தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 12

திருப்பரங்குன்றத் திருப்புகழ் **

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது 
அருள் மாறா

உ(ள்)ளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் 
மலைபோலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி 
தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிற அடு கதை கொடு 
பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம்
 உறும் பொழுது அளவை கொள்கணத்தில் என் பயம்
 அற மயில் 
முதுகினில் வருவாயே

வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள
விழுக்கு உடைந்து மெய்
 உகு தசை கழுகு உ(ண்)ண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை 
அமர் புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை 
முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத 
புய வரை உடையோனே

தினம் தினம் சதுர் மறை 
முநி முறை கொடு
புனல் சொரிந்து அலர் 
பொதிய விண்ணவரொடு
சினத்தை நிந்தனை 
செயு(ம்) முநிவரர் 
தொழ மகிழ்வோனே

தெனத் தெனந்தன என 
வரி அளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரி தனில்
 உறை
சரவண பெருமாளே.

அய்யன் அருணகிரிநாதர் அடிமலர் போற்றி 

சிவம் சுபம் 



நாளுமொரு தெய்வத் தமிழ் மலர் 10

நோயை ஓட்டும் பெரியாழ்வார் திருமொழி 

உற்றவுறு பிணி நோய்கள் 
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,  
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் 
திருக் கோயில் கண்டீர், அற்றம் உரைக்கின்றேன்
இன்னம் ஆழ்வினைகாள் உமக்கிங்கு ஓர் 
பற்றில்லை கண்டீர், நடமின் 
பண்டன்று பட்டினங்காப்பே 

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

சிவம் சுபம் 

audio - 1

மோஹனம்

ரோஹம் தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்  - பவ
ரோஹம்  தீர்க்கும்  ராகவேந்திர நாமம் சொல்லுவோம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
நையாமல்,
மன மந்த்ராலயத்தில் ஐயனை இருத்தித் தொழுது

கங்கையிலும் புனிதமாய துங்கையில் நீராடி
மஞ்சாலம்மையின் கஞ்ச மலர் பதம் பணிந்து
அங்கையில் கனிபோல் அருள் மழை பொழியும்
பிருந்தாவன ராயரை பக்தியுடன் வலம் வந்து

சிவம் சுபம்

audio


தெய்வத் தமிழ் மலர் 9

தசாவதாரத் துதி

மீனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கல்கியாய் மற்றும்
மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
நானா யுருவம் கொண்டு நல்லபடியோர்
வானாரின்பம் இங்குற வருதி.

(ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகப் பெருமான்
அருளிய மும்மணிக்கோவையில் இருந்து)

சிவம் சுபம்

audio


தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் - 8

குமாரகீதம்**

சிவ...குஹ ..குமர..பராசல....பதியே...சீரலைவாய்...குருநாதா..

செந்தூர..செந்தளிர்...பழனாபுரி...வாழ்...திருவேரகம்...உறை ...கந்தா

செங்கதிர்...நிகர்...தணிகாசலம்...வென்றாள்..
செம்பழம்..உதிர்..உறை
எந்தாய்

தவ..முறை...ஆராதாரா...
தவமுனிவோர் பணி பாதா...
தா தா...தருண..சுபோதா.

ஜெய ஜெய சங்கர பாலக மணியே தாரக மந்திர வினோதா

சிவமே சிவமே சிவமே ஹ ஹர சிவமே....சுபமே..

**ஸ்ரீ வாரியார்.. சுவாமிகள்...அருளியது...
(ஜன.. கன..மன...மெட்டு)

சிவம் சுபம்

ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் போற்றி பரவும் திருமுருக
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் எளிய but அரிய பாடல்.


audio 


தினமொரு தெய்வத் தமிழ் மலர் 7

இராம நாம பதிகப் பாடல் (திருவருட்பா)

அறம்பழுக்கும் தருவே, என் குருவே, என்றன்
ஆருயிருக் கொரு துணையே,  அரசே,  பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே, வெய்ய மறம் பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர் வாளினாற் பணிகொண்ட மணியே, வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றி மற்றோர் செயலி லேனே.

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் மலர் 6

6.1.   வேலும் மயிலும் துணை

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
தொழுதே உருகி அழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
அடியேன் உடலம் விழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்.
செந்திலே! வேலவனே!
செந்தில் வேலவனே !

6.2. ஆறெழுத்து உண்மை

பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும்,
இகத்தில் முத்தி தந்து அனுதினம்
முழுப் பலன் நல்க, சத்தியம்
ஆவது "ச ர வ ண ப வ" வே .

ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச ஸ்வாமிகள்

சிவம் சுபம்

audio

தினம் ஒரு தெய்வத் தமிழ் மலர் 4

திருமகள் துதி மலர்கள்**

திருமகளே! திருப்பாற் கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே,
உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும் ஒருமகளே,
நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே,
தமியேன் தலைமீது நின் தாளைவையே.

தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால்,
வெம்தரணி முதல் கோளைவன் தீவினைப்
 பேயோடு வென்று குலாவுவன் காண்,
வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி
அப்பால் வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச்செய் மின் கொடியே.

**ஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள்
அருளிய "திருமகள் அந்தாதி"யிலிருந்து இரு மலர்கள்.

சிவம் சுபம்

audio

தினமொரு தெய்வத் தமிழ் அமுதம் - 3

(அன்பே சிவம்)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே - அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குட்படு பரம்பொருளே - அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே - அன்பெனும் உயிர் ஒளி  அறிவே

அன்பெனும் அணுவுள்  அமைந்த பேரொளியே - அன்புருவாம் பர சிவமே

வடலூர் வள்ளல் பெருமான்
ஸ்ரீ ராம லிங்க ஸ்வாமிகள்

சிவம் சுபம்

(பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த அன்பு/பக்தி மலர்)

audio


தினமொரு தமிழ் அமுதம் - 2

மண்ணுலகத்தினிற்...பிறவி...மாசற....
எண்ணிய...பொருள்...எல்லாம்....
எளிதிற்....முற்றுறக்
கண்ணுதல்...உடையதோர்...
களிற்று..மா..முகப்
பண்ணவன்..மலரடி...
பணிந்து...போற்றுவாம்....

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்...(கந்தபுராணம்)

சிவம் சுபம்

audio




1 comment:

  1. Can you please add my name to your mailing list venkatraman051@ gmail.com

    ReplyDelete